கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label ஆரம்பம். Show all posts
Showing posts with label ஆரம்பம். Show all posts

30 October, 2013

அஜீத்தின் ஆரம்பம் - விமர்சனத்திற்கு முன் 20 - 20...


ஆரம்பம் ரிலீஸ் பரபரப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள். இப்போதே மனசுக்குள் பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கிறது அவர்களுக்கு. அல்டிமேட் ஸ்டாரின் வருகைக்காக தியேட்டர்களில் தோரணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் தல ரசிகர்கள். 


மக்கள் தியேட்டர் ரிசர்வேஷனுக்காக கவுண்டர் முன்னாலும், கம்ப்யூட்டர் முன்னாலும் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக இதோ ஆரம்பத்தின் இருபது முத்தான தகவல்கள்.

1. ஆரம்பம், அஜீத்திற்காக எழுதப்பட்ட கதை அல்ல. விஷ்ணுவர்த்தன் பொதுவாக எழுதிய ஆக்ஷன் ஸ்கிரிப்ட். அஜீத்தின் இமேஜுக்காக எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே உருவாகி இருக்கிறது.

2. 'ஆரம்பம்' படத்தின் தணிக்கை அதிகாரிகளுக்கான பிரத்தியேக காட்சி கடந்த வாரம் சென்னையில் உள்ள திரை அரங்கில் திரையிடப்பட்டது. படத்தை பார்த்து யு சான்றிதழ் வழங்கினர்.

3. படத்துக்கு 200 தலைப்புகள் எழுதி வைத்திருந்தார் விஷ்ணுவர்த்தன். அத்தனையும் அஜீத்தின் இமேஜுக்கு ஏற்ற மாதிரியான பில்டப் தலைப்புகள். அதைப் படித்து பார்த்த அஜீத். இந்த பில்டப் கொடுத்து ரசிகர்களை ஏமாற்ற வேண்டாம். கதைக்கு ஏற்ற மாதிரி ஒரு தலைப்பு கொண்டு வாங்க என்றார். 

4. அதன் பிறகு உருவான தலைப்புதான் ஆரம்பம். அதற்கு அஜீத் ஓகே சொல்ல தலைப்பை டிசைன் செய்தார் நீல் ராய். பில்லா டைட்டில் டிசைன் செய்தவர். தலைப்பில் இருக்கும் பவர் பட்டனை வடிவமைத்தவர் நீல்ராய். தலைப்பு தாமதமானதால் ரசிகர்கள் எழுதிய அனுப்பிய தலைப்பே ஆயிரத்துக்கும் கூடுதலாம்.



5. ஒவ்வொரு பைட்டுக்கும் தனி தனி ஸ்டண்ட் மாஸ்டர்கள் பணிபுரிந்திருக்கிறார்கள். அதேபோல ஒவ்வொரு பாட்டுக்கு தனித்தனி டான்ஸ் மாஸ்டர்கள் பணிபுரிந்திருக்கறார்கள். தினேஷ் மாஸ்டருக்கு மட்டும் இரண்டு பாடல்.

6. படத்தின் பைக் சேஸ் இல்லை. ஆனால் அஜீத் வேகமாக பைக் ஓட்டும் சீன் இருக்கிறது. பவர்புல்லான போட் சேசிங் இருக்கிறது. இது துபாயில் படமாக்கப்பட்டது. அஜீத்துடன் இதில் நடித்திருப்பவர் இந்தி நடிகை அக்ஷரா கவுடா.

7. ஆக்ஷன் ஏரியா அஜீத்துக்கு, ரொமான்ஸ் ஏரியா ஆர்யாவுக்கு என்று பிரித்து கொடுத்திருக்கிறார்கள். இரண்டும் சந்திக்கும் இடத்திலிருந்து பொறி பறக்க ஆரம்பிக்கும். நயன்தாரா கிளமார் குயினாகவும் வருகிறார். நடிப்பிலும் தனி முத்திரை பதிக்கிறார்.

8. அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும், ஒரு வி.ஐ-.பி கொலை தொடர்பாக வரும் ஒரு இமெயிலை வைத்து ஒரு சர்தேச நெட்வொர்க்கை பிடிக்கும் ஹாலிவுட் பாணியிலான கதை. "இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவான கதை. அந்த சம்பவம் எல்லோருக்கும் தெரிந்த சம்பவம்தான் என்கிறார் டைக்டர் விஷ்ணுவர்த்தன்.

9. மங்காத்தாவில் வரும் அதே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில்தான் வருகிறார் அஜீத். படம் முழுக்க மேக்-அப் போடாமல் நடித்திருக்கிறார். ஒரே கேரக்டரில் நெகட்டிவாகவும் நடித்திருக்கிறார். பாசிட்டிவாகவும் நடித்திருக்கிறார்.




10. அஜீத்துக்கு ஆரம்பத்தில் கோட்-சூட் காஸ்டியூம் கிடையாது. படம் முழுக்க சாதாரண இளைஞர்கள் அணியும் உடைதான். பெரும்பாலும் வி நெக் மற்றம் காலர்டு டீ சர்ட் அணிந்து வருகிறார். அதிலும் கம்பீரமாக இருப்பார். கோட்-சூட் காஸ்ட்டியூமை வேண்டுமென்றே அவாய்ட் பண்ணினார் அஜீத்.

11. ஏற்கெனவே காலில் எலும்பு முறிவுடன் உள்ள அஜீத் இந்தப் படத்திலும் ஒரு பெரிய விபத்தில் சிக்கி உயிர் தப்பினார். மும்பையில் நடந்த படப்பிடிப்பில் அஜீத்தை காரின் முன்னால் பேலட்டில் கட்டி வைத்திருப்பார்கள்.


12. ஆர்யா காரை ஓட்டுவது மாதிரி சீன். ஆர்யா காரை 70 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்ட காலை தூக்கியபடி நடித்த அஜீத்தின் கால்கள் தரையை உரச அஜீத் வலியால் துடிக்க ஆர்யா சடன் பிரேக் போட்டதால் தலயின் கால்கள் அன்று தப்பியது.

13. வெளியாகவிருக்கிறது ஆரம்பம். இந்தப் படம் வெளியாகும்போது அஜீத் ஊரில் இருக்கமாட்டார். காரணம் வருகிற 20 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை 'வீரம்' படத்தின் இடைவிடாத படப்பிடிப்புக்கு ஹைதராபாத் செல்கிறார். எனவே முன்கூட்டியே படத்தைப் பார்க்க விரும்பினார் அஜீத். அவரது விருப்பப்படி தயாரிப்பு நிறுவனம் ஒரு பிரத்தியேகக் காட்சியை போர்பிரேம்ஸில் திரையிட்டனர்.



14. மங்காத்தா படத்தில் அஜீத் கதாபாத்திரத்தின் பெயர் விநாயக் மகாதேவ். அதுபோல ஆரம்பம் படத்தில் அவரது பெயர் அசோக்.

15. டிரைலர் வெளியான 1 நாளில் மட்டும் சுமார் 8லட்சம் பேர் பார்த்துள்ளனர். தொடர்ந்து ஏராளமான பேர் ரசித்து வருகின்றனர்

16. படத்துக்காக அஜீத் எடையை குறைத்தால் நன்றாக இருக்கும் என்ற உடனே பல ஆபரேஷன் செய்துள்ள அவரது உடல் நிலையையும் மீறி ஒரு தினத்துக்கு 5 முதல் 6 மணி நேரம் வரை அயராமல் உடல் பயிற்சி செய்த அவரது கடமை உணர்ச்சி தான், அவரை இந்த உயரத்துக்கு கூட்டி சென்று இருக்கும் என தெளிவாக புரிந்தது.

17. ஆர்யாவும், அஜீத் சாருக்கும் உள்ள பரஸ்பர மரியாதை, சிநேகம் ஆகியவை தமிழில் இனிமேல் பல நட்சத்திரங்கள் இணைந்தது நடிக்கும் காலம் வரும் என நம்பிக்கை தருகிறது. அந்த காலத்துக்கு இதுதான் ஆரம்பம் என்கிறார்கள்.

18. தீம் மியூசிக் என்பது படத்தின் கதைக்கு ஏற்ப பின்னணி இசைக் கோர்ப்பு பண்ணும்போது உருவாவது. அதனால் தீம் மியூசிக், இசை ஆல்பத்தில் இடம்பெறவில்லை.  

19. ஆரம்பத்தின் வரவை தமிழ் ரசிகர்கள் வரவேற்க ஆவலாக இருக்கிறார்கள். ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கி விட்டார்கள். மீடியாக்கள் போட்டி போட்டு செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இது எதையுமே தலையில் ஏற்றிக் கொள்ளாமல் கூலாக இருக்கிறார் அஜீத். அதுதான் தல ஸ்டைல்!!


அடுத்த பதிவு... ஆரம்பம் சினிமா விமர்சனம் 
20. டிரைலர்.

02 August, 2013

அஜித் ஒன்றும் புத்தனோ காந்தியோ கிடையாது... பேட்டியளித்த பிரபல இயக்குனர்...



விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் திரைப்படத்திற்கு ஒரு வழியாக டைட்டில் வெச்சாச்சு. ’ஆரம்பம்’ என கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் இந்த டைட்டிலுக்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் ஒரு அற்புத கனெக்‌ஷன் பற்றி கடைசியாக பார்ப்போம்.




இப்போது சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் விஷ்ணுவர்தன் பேசியதை கவனிப்போம். பேட்டியில் பேசியபோது விஷ்ணுவர்தன் “ ஹீரோ நல்லவனாக மட்டுமே இருக்கண்டும். அவன் தான் நாட்டை காப்பாற்ற வேண்டும். சினிமா மூலம் சமூகமாற்றம் ஏற்பட வேண்டும் என எதிர்ப்பார்ப்பதே தவறு. எல்லா இடத்திலும் குற்றவாளிகள் இருக்கிறார்கள்.


எல்லோரையும் சுற்றி தினம் தினம் ஆயிரம் குற்றம் நடக்கின்றன. ஆனால் மக்கள் அதை கவனிப்பது இல்லை. ஆனால் ஹீரோ மட்டும் அநியாயத்தை பார்த்தால் பொங்கி எழ வேண்டும் என நினைக்கிறார்கள்.


எல்லோருக்குமே ஒரு கருப்பு பக்கம் உண்டு. யாருமே புத்தரோ காந்தியோ கிடையாது.அதனால் தான் என் படத்தில் வரும் கதாபாத்திரங்களில் கெட்டவர்களுக்கு கெட்ட முடிவு வருவது போல் அமைத்திருப்பேன். அஜித்தின் கதாபாத்திரமும் அப்படித்தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.





அஜித்தால் என்ன செய்ய முடியுமோ அதை படமாக்கி இருக்கிறோம். அவருக்காக எந்த பில்டப்பும் கொடுக்கவில்லை. தனது இமேஜை பற்றி அஜித் கவலைபட்டதே கிடையாது” என்று கூறியுள்ளார். இப்ப ரசிகர்களின் கனெக்‌ஷன் மேட்டருக்கு வருவோம்.


விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்த பில்லா திரைப்படத்தின் முந்தைய கதையாக வெளிவந்த பில்லா 2 திரைப்படத்தின் கிளைமாக்ஸில் அஜித் ”இது வெறும் ’ஆரம்பம்’ தான்” என சொல்வார்.


எனவே விட்டுப்போன பில்லா திரைப்படத்தின்(பில்லா 2-வுக்காக விஷ்ணுவர்தனும் ஒரு கதை வைத்திருந்ததாக சொல்லப்பட்டது) தொடர்ச்சியாக இந்த திரைப்படம் இருக்குமோ என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசிக்கொள்கின்றனர்.
Related Posts Plugin for WordPress, Blogger...