கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label மக்கட்பேறு. Show all posts
Showing posts with label மக்கட்பேறு. Show all posts

29 August, 2011

இந்த குழந்தை என்ன செய்திருக்கிறது உங்களை...!



தயதுடிப்பில் தொடங்கி
பேரண்டத்தின் பெரும்பகுதி வரை
நிசப்தத்தை நிர்மூலமாக்குகிறது
சப்தங்கள்...!

சில சப்தங்களை தின்று
இசையாய் உமிழ்கிறது உலகம்...

ற்கால மனிதனின் சுவடுகள்
இன்னும் ஒட்டிக்கொண்டிருந்திருக்கும்
நாம் இசையால் செதுக்கப்படாமல் இருந்திருந்தால்...
kavithaiveedhi.blogspot.com
ழு  ஸ்வரங்களை வைத்துக்கொண்டு
ஏழு கோடி ராகங்களை
உற்பத்திசெய்தாயிற்று....

வீணையென மீட்டும் 
நரம்புகளின் ஓசை
என் நரம்புகளையும் தட்டிப்பார்க்கும்...

குழலில் குதித்து 
வெளியேறிய காற்று என் குதூகலத்தின் 
வாசல் வரை வந்திருக்கும்...

ப்புத்தப்பாய் அடித்தாலும்
தப்புக்கு தாளமிடால் அமைதிகாத்ததில்லை
என் கால்கள்...

னால் இவை எதுவும்
என் செவியில் நுழைந்து
என் மூளையில் மூகாமிட்டு
என் இதயத்தில் இறங்கி
என் மனதுக்குள் மலர்ந்து
என்னை பரவசப்படுத்தியதில்லை...!

ன் குழந்தையின் 
மழலைச் சொல்லைப்போல....


குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
(மக்கட்‌பேறு குறள் 66)


பொருள் :
 தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.

 தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...!

Related Posts Plugin for WordPress, Blogger...