கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

29 March, 2018

இது சிரிப்பு மய்யம்ஆசிரியர்: "டேய் ராமு, இன்னும் பத்து நாளில் உலகம் அழியப்போகுதுன்னு
வச்சுக்கோ. அப்போ கடவுள்கிட்டே என்ன வேண்டிக்குவே?"

ராமு: "அன்னிக்கு ஸ்கூல் லீவு விடணும்னு வேண்டிக்குவேன் சார்"

***********************
நோயாளி: டாக்டர் என் கால் நல்லா போயிடுமா டாக்டர்

டாக்டர்: இன்னும் மூனு நாளைக்குள்ளே உங்க கால் சரியாயிடும்

நோயாளி: நான் நடக்கலாமா

டாக்டர்: நல்லா நடக்கலாம். நான் கொடுத்திருக்கும் மருந்த மறக்காம தடவுங்க

நோயாளி: இந்த மருந்த தடவுனா கால் வலி போயிடுமா டாக்டர்... நான் அப்புறமா ஓடலாமா.

டாக்டர்: தாராளமா

நோயாளி: இந்த மருந்துக்கு அத்தனை பவரா..நான் சைக்கிள் ஓட்டலாமா.
டாக்டர்: ம்..ஓட்டலாமே...

நோயாளி: ஏன்னா எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது..அதான் கேட்டேன்.

டாக்டர்: ......????????

******************************

எதுக்கு சார், லஞ்சம் வாங்கும்போது உங்க கை இப்படி நடுங்குது?

ரெண்டு மாசமா லீவ்ல இருந்ததுனால டச் விட்டுப்போச்சுய்யா.
*******************************

உங்க மாப்பிள்ளைக்குப் பெரிய இடத்துல வேலையாமே!

ஆமாம். பீச்ல சுண்டல் விக்கிறார்!

*******************************

ஊர்ல நாலு பேர் சிரிக்கிற மாதிரி, எந்தக் காரியத்தையும் என் பையன் பண்ணவே மாட்டான்.

பையன் என்ன பண்றான்?

டி.வி. மெகா சீரியல் டைரக்டரா இருக்கான்..
*******************************

நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !

நபர் : ஏன்?

நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !

*******************************
என்னோட மாமியார் அவங்க பணக்காரப் புத்தியைக் காட்டிட்டாங்க.

அப்படியா... என்ன பண்ணினாங்க?

எனக்கும் அவங்களுக்கும் நடந்த சண்டையை உள்ளூர் கேபிள்ல ஒளிபரப்ப ஏற்பாடு பண்ணிட்டாங்களாம்
*******************************

நோயாளி: டாக்டர் டாக்டர். நாய் கடிச்சிடுச்சு டாக்டர்! 
டாக்டர்: எங்கப்பா கடிச்சுச்சு?

நோயாளி: விட்டுக்கு பக்கத்துக்கு தெருவில் டாக்டர்!

3 comments:

 1. நல்ல (அரசியல்) மாமியார்..!

  ReplyDelete
 2. ///ஊர்ல நாலு பேர் சிரிக்கிற மாதிரி, எந்தக் காரியத்தையும் என் பையன் பண்ணவே மாட்டான்.

  பையன் என்ன பண்றான்?

  டி.வி. மெகா சீரியல் டைரக்டரா இருக்கான்..///

  குட் ஒன்

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...