ஒரு துணை எழுத்து
உயிர் எழுத்தாய் உயிர்ப்பித்துக்
கொண்டதைப்பற்றி....
ஒரு வறண்ட காலம்
மழைப்பார்த்து மறுபிரவேசம் கொண்டதைப்பற்றி.....
கிழமைகளில் சனி மட்டுமே எனக்கு சொந்தம்
எல்லோரும் அப்படி அழைப்பதினால்...
நாள்முழுக்க ராகுகாலமும் எமகண்டமும்
மாறிமாறி வருவது என்க்கு மட்டும்தான்....
விதி விளையாட நினைத்தால்
யோசிக்காமல் வந்து விடும் என் முகவரிதேடி...
பக்கத்து வீட்டு கருப்பு பூனை
எனைப்பார்த்து பயந்தோடும்
நான் குறுக்கிட்டு விடுவேனோ என்றஞ்சி...
படித்து விட்டு வேலையில்லாததால்
மனிதனாய் கூட ஏற்றுக் கொள்ளவில்லை வீட்டார்...
திரும்ப திரும்ப நான் மட்டுமே அன்பு காட்டினேன்
எனைப்பார்த்து ஒரு நாளும் வாலாட்டியதில்லை
அந்த நாய்குட்டி...
நான் வரும்போது மட்டும் சகுனம் சரியில்லையென
திரும்பியிருக்கிறார் அந்த ஒற்றை பிராமணர்...
திரும்பியிருக்கிறார் அந்த ஒற்றை பிராமணர்...
அதிசயமாய் என் விலாசம் வரும்போது மட்டும்
தென்றலுக்கு தடைப் போடுகிறது காலம்...
பசுமைக்கலந்த வசந்தக்காலத்தை
இதுவரையில் பார்த்திராத கால் நூற்றாண்டு நான்..
கடற்கரைக்கு சென்று
கால் நனைத்தவர்களுக்கு தெரியும்
நான் கண்ணீராய் சிந்திய உப்பின் அளவு...
காய்ந்து கருகிய
அந்த ஓலைப்பாய் மட்டுமே அறியும்
என் இதயத்தில் ஏக்கங்களை...
தப்பித்தவறிக் கூட என்னை தொட்டதில்லை
மகிழ்ச்சியும் சந்தோஷமும்...
பண்டிகைக்கு பலிகொண்ட வாழையாய்...
உயிர் இருந்தும் உணர்ச்சியற்ற கோழையாய்....
வாழ்வைத்தொலைத்த என்னை
உன்னால் மட்டும்
எப்படித்தான் முடிகிறதோ
என் அன்பே..
என்னை விரும்பித் தொலைக்க...
என் அன்பே..
என்னை விரும்பித் தொலைக்க...
அன்பான வாசகர்களே... நீங்கள் வந்துப் போனதற்கான தடயத்தை
இங்கே விட்டுச் செல்லுங்கள்...
Me the first.,
ReplyDeleteஅருமை அருமை...
ReplyDeleteகாதலர் தின வாழ்த்துக்கள்.....
//பசுமைக்கலந்த வசந்தக்காலத்தை
ReplyDeleteஇதுவரையில் பார்த்திராத கால் நூற்றாண்டு நான்..//
அடடா.....அருமை வாரே வா.....
அருமையான கவிதை
ReplyDeleteநண்பா மன்னிக்கணும்! அவசரமாக செல்வதால் வாக்குகள் மட்டும் போட்டுவிட்டு கிளம்புகிறேன்! ( ஆமாங்க இது டெம்ப்ளேட் கமெண்டுதான்! ஒத்துக்கறேன் - இன்னிக்கு மட்டும் மன்னிச்சிடுங்க )
ReplyDeleteவலியான கவிதை. வார்த்தைகளின் பிரயோகம் சிறப்பாக இருக்கிறது.
ReplyDeleteரோஜா பற்றி எரியும் அந்த படம் நல்லாயிருக்குங்க..
ReplyDeleteஅருமையான காதல் கவிதை..
ReplyDeleteவாழ்த்துக்கள்..
உன்னால் மட்டும்
ReplyDeleteஎப்படித்தான் முடிகிறதோ
என் அன்பே..
என்னை விரும்பித் தொலைக்க...////
இதுக்கு பேர்தான் காதலுக்கு கண் இல்லையோ?
sakthistudycentre-கருன் said... [Reply to comment]
ReplyDeleteMe the first.,
முதலில் வந்ததற்கு வாழ்த்து மற்றும் நன்றி..
MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
ReplyDeleteஅருமை அருமை...
காதலர் தின வாழ்த்துக்கள்.....
MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
//பசுமைக்கலந்த வசந்தக்காலத்தை
இதுவரையில் பார்த்திராத கால் நூற்றாண்டு நான்..//
அடடா.....அருமை வாரே வா.....
நன்றி.. மக்கா..
மாத்தி யோசி said... [Reply to comment]
ReplyDeleteநண்பா மன்னிக்கணும்! அவசரமாக செல்வதால் வாக்குகள் மட்டும் போட்டுவிட்டு கிளம்புகிறேன்! ( ஆமாங்க இது டெம்ப்ளேட் கமெண்டுதான்! ஒத்துக்கறேன் - இன்னிக்கு மட்டும் மன்னிச்சிடுங்க )
ஒரு ஓட்டுப் போச்சே..
காதலர் தின வாழ்த்துக்கள்
ReplyDeleteஎப்படிப்பா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க
ReplyDeleteரொம்ப வலிக்குது
>>>
ReplyDeleteநாள்முழுக்க ராகுகாலமும் எமகண்டமும்
மாறிமாறி வருவது என்க்கு மட்டும்தான்....
kalakkal
வார்த்தைகளை இன்னும் செதுக்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்... பாராட்டுக்கள்..
ReplyDeleteவெற்றிக் கனிபறித்து
ReplyDeleteமுப்பது நாளும் ப்வுர்ணமி
உங்கள் வானில் உதிக்க வாழ்த்துக்கள்!1
காதலின் மகத்துவம் கவிதையில் தெரிகிறது
ReplyDeleteடாப் கிளாஸ்
உங்களையும் விரும்பிதொலைக்க ஒருத்தி இருக்கும்போது எதுக்கு இவ்வளவு தன்னிரக்கப்படனும்?
ReplyDeleteநாள்முழுக்க ராகுகாலமும் எமகண்டமும்
ReplyDeleteமாறிமாறி வருவது என்க்கு மட்டும்தான்....
கடற்கரைக்கு சென்று
கால் நனைத்தவர்களுக்கு தெரியும்
நான் கண்ணீராய் சிந்திய உப்பின் அளவு...
வரிகள் அருமை தோழரே.. சூப்பர்
ஜெ.ஜெ said... [Reply to comment]
ReplyDeleteகாதலர் தின வாழ்த்துக்கள்
thanks
விக்கி உலகம் said... [Reply to comment]
ReplyDeleteஎப்படிப்பா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க
ரொம்ப வலிக்குது
நன்றி..
சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
ReplyDelete>>>
நாள்முழுக்க ராகுகாலமும் எமகண்டமும்
மாறிமாறி வருவது என்க்கு மட்டும்தான்....
kalakkal
நன்றி தலைவா..