கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

20 August, 2018

என்னடா நினைச்சிகிட்டு இருக்கீங்க..!என்னடா நினைச்சிகிட்டு இருக்கீங்க...
உங்க மனசுல...

என்ன பார்த்த
உங்களுக்கு எப்படி தெரியுது...!

உங்க பகுதிகெல்லாம்
வரலன்னா...
ஏன் வர்லேன்னு தவியா தவிக்கிறது...

சரி போனாபோகுதுன்னு வந்தா
வா.. வான்னு பல்லகாட்றது
கவிதையா எழுதி கொல்றது...

அப்படியும் கொஞ்ச நாள்
தொடர்ந்து வந்தா
ஏன்டா வந்தேன்னு சபிக்கிறது...

இதுல என்னவச்சி
ஆளாளுக்கு சண்டவேற....
இப்ப போடுங்கடா சண்ட பார்க்கலாம்...

நான் வந்து கொஞ்சம் ஓவராத்தான்
பண்ணியிருக்கேன்...
அதற்கு காரணம் யாரு..!
நீங்க பண்ண அட்டகாசம்தான்ட...

என்னுடைய நண்பர்களை
நீங்க பழிவாங்குறீங்க...
அத பார்த்துகிட்டு நான் சும்மா
இருப்பேன்னு நினைச்சிங்களா..?

ஒரு பகுதிக்கு வந்தா
என்னை அங்கேயே
தங்க வைக்கனும்....

அதசெய்யாம
அப்படியே போக விட்றீங்க
அப்புறம் வந்து... ஐய்யோ
போய்ட்டானேன்னு கவலை படுறீங்க...

இப்படி இருந்தா எப்படிடா
நன்னாரி பயலுகளா...

சரி சரி இனிமேலாவது
பார்த்து நடந்துக்கங்க...

உங்க பகுதிக்கு
நான் வந்த தங்குறதுக்கு
சரியான ஏற்பாடு பண்ணிவைங்க....

நான் வந்து தங்குற
இடத்திலெல்லாம் நீங்க
உட்கார்ந்துகிட்டு
என்ன இம்ச பண்ணாதிங்க...

நான் வாழுற இடத்தை
ஏங்கிட்ட கொடுத்துடுங்க

என் இடம் தேடி நான் வரும்போது
ஒரு பய நிக்ககூடாது...
அப்படி நின்னா
நான் நானா இருக்கமாட்டேன்...

உங்களுக்கு புரிய
வைக்கிறதுக்குதான் நான்
இப்படி கோவமா
நடந்துக்க வேண்டி இருக்குது....

என்ன புரிஞ்தா...!

இந்த முறை என் கோவத்தை
கொஞ்சம் அதிகதமாகத்தான்
காட்டிட்டேன்
என்னை மன்னிச்சிடுங்க...

என்னை எப்படி நாசம் பன்றீங்கன்னு...
நீங்களே பாருங்க... ( கீழ்படம்)

அரசாங்கம் பண்ற தப்புக்கு
அப்பாவி பொதுமக்களுக்கு
நீங்கதான் மாட்டிக்கீறீங்க...

இப்படிக்கு...
தண்ணீர்

குறிப்பு

நண்பர்கள் - மரங்கள்
தங்குமிடம் - ஏரி, குளம், அணை.

கவிதைவீதி சௌந்தர்
20-08-2018இது கவிதை பதிவல்ல...
ஒரு விழிப்புணர்வு பதிவு

Related Posts Plugin for WordPress, Blogger...