2011-ல் அதிக படங்கள் நடித்த பெருமை தனுஷ்-க்கு கிடைத்துள்ளது. அந்த படங்களின் மூலம் அவருக்கு கிடைத்த பலன்களையும், அந்த படங்களைப்பற்றியும் தற்போது விவாதிப்போம்.
ஆடுகளம் (14-01-2011)
மதுரையை மண்ணில், மறைந்துபோன தமிழரின் விளையாட்டுகளில் ஒண்றான சேவல் சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்.
கருப்பு என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் ஒரு யாதார்த்தமான மதுரைக்காரர் போன்றே அங்கு பேசும் வழக்கு மொழி பேசி அசத்தினார்.
இந்தப்படத்தில் அவரின் நடிப்பு இந்தியாமுழுவதும் பேசப்பட்டது. மத்திய அரசின் 2010-ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய விரும் தனுஷிக்கு கிடைத்தது. (இப்படம் 2010 ஆண்டுக்காக தேசிய விருது போட்டியில் பங்கேற்றது) இப்படம் பேரும் புகழும் பெற்றுக்கொடுத்தது. வசூலில் மிகப்பெரிய சாதனையை ஏதும் செய்ய வில்லையென்றாலும் சன்மூவீஸ் இப்படத்தை உலகம்முழுவதும் கொண்டு சென்றது.
இந்த ஆண்டின் முதல் படமே தனுஷ்க்கு மிகப்பெரிய படமாக அமைந்தது.
சீடன் (25-02-2011)
சீடன் (25-02-2011)
லண்டன் போகப்போகும் வசதியான வீட்டு பையன் அந்த வீட்டு வேலைக்காரி மேல் காதல். அதை தனது அம்மாவிடம் சொல்லாமல் காலம் கடத்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய வைக்க ஏற்பாடுகள் நடக்கிறது. இந்த இருவரையும் சேர்த்து வைக்கும் கதாபாத்திரத்தில் நடித்தார் தனுஷ்.
இந்தப்படத்தை பொருத்தவரை தனுஷ்-க்கு சிறப்புத்தோற்றம் என்ற அளவிலே கையாளப்பட்டார். திருடா திருடி இயக்குனர் சுப்பிரமணி சிவாவுக்கு தனுஷ் செய்ய கைமாறு இந்தப்படம்.
இது இசையமைப்பாளர் தினாவுக்கு 50-வது படம். இதுமிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது.
மாப்பிள்ளை (08-04-2011)
சன் பிக்சர் கலாநிதி மாறன் சார்பாக தனுஷ் நடிக்க சுராஜ் இயக்கியிருக்கும் படம் தான் மாப்பிள்ளை. கதை பற்றி சொல்லத் தேவையில்லை பழைய ரஜினி நடித்த மாப்பிள்ளையின் கதைதான் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றார்போல் கொஞ்சம் மாற்றி படம் பார்க்க வந்தவர்களை சிரிக்கவைத்து அனுப்பியிருக்கிறார் சுராஜ்.
தனுஷ்-விவேக் கூட்டணியில் இப்படத்தின் நகைச்சுவைக்காட்சிகள் மட்டும் மனதில் நின்றது. இதுவும் தனுஷிக்கு ஒரு சுமார் படம்தான். சன் பிக்சர் வெளியிட்டும் வசூல் இல்லை.
வேங்கை(07-07-2011)
ஊரில் மிகபெரிய கையாக இருக்கும் ராஜ்கிரண் அவரது மகன் தனுஷ். அந்த ஊரில் இருக்கும் MLA பிரகாஷ்ராஜ் இந்த மூவருக்கும் இடையில் கதை பின்னப்பட்டிருக்கிறது.
இயக்குனர் ஹரி-ன் மசாலாப்படம். இதில் தனுஷ் அதிரடி ஆக்ஷன் நாயகனாக நடித்தார். இதுவும் அவருக்கு மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது.
மயக்கம் என்ன (25-11-2011)
தனுஷ் பெரிய போட்டோகிராபர் ஆக ஆசைப்படுகிறார். இவரின் கனவும், லட்சியமும் சிறந்த போட்டோகிராபர் ஆக வேண்டும் என்பதுதான். அதோடு தனுசுக்கு பிடித்த, தெரிந்த ஒரே தொழிலும் போட்டோகிராபி மட்டும் தான்.
நாயகி ரிச்சா தனுசின் நண்பனின் கேர்ள் ஃப்ரண்டாக அறிமுகமாகிறார். முதலில் தனுசும், ரிச்சாவும் முட்டி மோதினாலும் வழக்கம்போல ரிச்சா, தனுசை காதலிக்க முயற்சி செய்கிறார். நண்பனின் காதலி என்பதால் தனுஷ் தவிர்க்க முயற்சிக்கிறார் பிறகு காதலில் விழுகிறார்.
தனுஷ் எடுத்த புகைப்படங்களை தான் எடுத்ததாக சொல்லி தனுசை ஏமாற்றுகிறார் ஒரு பெரிய போட்டோகிராபர். திறமை இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாமலே வாழ்க்கை நகர்கிறது. இறுதியில் தனுஷ் சிறந்த புகைப்படத்திற்க்கான சர்வதேச விருது வாங்கி படத்தை சுபமாக முடித்துள்ளார்கள்.
செல்வராகவல்-தனுஷ் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் ஆனால் வருவாயில் அந்த அளவு முன்னேற்றம் இல்லை.
இந்த ஆண்டு அதிக படங்களில் ஹீரோவாக நடித்தவர் இவராகத்தான் இருக்க முடியும். அந்த வரிசையில் தனுஷ் சிறப்பான வருடம்தான் இது.
ஆடுகளம் படத்தில் கிடைத்த தேசிய விருது மிகப்பெரிய ஏற்றம், இதைதவிர வேறு எந்தபடமும் நல்ல பேரையும் வசூலையும் சேர்க்காததால் இந்த வருடம் அவருக்கு பின்னடைவாகவும் கருதப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதியில் அவருக்கு மிகவும் பேரையும் புகழையும் கொடுத்திருப்பது “3” படத்தின் கொலைவெறிப்பாடல்தான். அந்த விதத்தில் அவருக்கு மகிழ்ச்சியே. அடுத்த ஆண்டாவது தனுஷுக்கு நல்லபடியாக அமையுமா பொருத்திருந்து பார்ப்போம்.
வணக்கம் பாஸ் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களுள் நம்ம தனுஷும் ஒருவர்.எனக்கு இந்த ஆண்டில் அவர் நடித்த படங்களில் மயக்கம் என்ன பெரிதாக கவரவில்லை.ஏனைய படங்கள் சூப்பர்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteU mentioned Seedan as Dhanush 50th Film.
ReplyDeleteBut it is 18th film(Ref:wikipedia) only.
தனுஸ் நல்ல நடிகன்.. ஆனால் கதைகள் சரியில்லை... 3 ஐ எதிர்பார்ப்போம்...சீடன் 50வது படமா...
ReplyDeleteகிரிக்கெட் மொக்கைஸ்..::.. 3
தகவல் பிழைகள் இருந்தாலும், நல்ல பதிவு. எல்லாப் படங்களுமே கையைக் கடித்ததாக கேள்வி
ReplyDeleteஆடுகளம் என்னைக் கவர்ந்த படம்... மற்றவை சுமாரான படங்கள்.......
ReplyDelete/////
ReplyDeleteராம்ஜி_யாஹூ said... [Reply to comment]
இறக்கங்கள் சாமி- இரக்கங்கள் அல்ல (down not kindness)
////////
நன்றி மாற்றிவிட்டேன்
/////
ReplyDeletebala said...
U mentioned Seedan as Dhanush 50th Film.
But it is 18th film(Ref:wikipedia) only.
///////
தவரான தகவல்தான் மன்னிக்கவேண்டும்...
சீடன் தனுஷின் 50-வது படம் அல்ல..
இசையமைப்பாளர் தினாவிற்குதான் 50-வது படம்..
தகவலில் திருத்தியிருக்கிறேன்
சுட்டி காட்டியதற்கு நன்றி
தனுஷுக்கு இந்த ஆண்டு மறக்க முடியாத ஆண்டு, கொலைவெறி பாடல் ஒன்றே போதும் அதுக்கு...!!!
ReplyDeleteஇன்றைய கனவுலகில்
ReplyDeleteநடிக்கத் தெரிந்த நடிகர் இவர்..
இனிவரும் திரைப்படங்கள் வெற்றி பெறட்டும்...
ஆடுகளம்தான் நான் ரசித்த படம்
ReplyDeleteஆடுகளம் மனதில் பதிந்த படம்.என்றாலும் கொலைவெறி அதையும் தாண்டிவிட்டதே !
ReplyDeleteஒய் திஸ் கொலை வெறி ஆடுகள வெற்றியை தூக்கி சாப்பிட்டு விட்டது
ReplyDeleteஆரம்பமும் நிறைவும் அசத்தல்..குறிப்பாக மயக்கம் என்ன..படத்தை இரசித்து மகிழ்ந்த முப்பது சதவிகித மக்களுள் நானும் ஒருவன்..நான்கு முறை பார்த்தாகிவிட்டது.
ReplyDelete..நம் வலையில் கேரளத்து மண்ணில் ஐந்து அப்பாவி தமிழர்கள்..
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
ReplyDeleteநண்பரே
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
தனுசிற்கு 2011 அவருக்கு ஏற்றம் கொடுத்த ஆண்ட்டகவே அமைகிறது . தேசிய விருதும் .கொலை வெறி பாடல் வெற்றியும் . பகிர்வுக்கு நன்றி
ReplyDelete