இன்னுமொறு வேலை இல்லையென...
சாப்பிட உட்காரும் போதெல்லாம்
சித்தி பரிமாறுகிறார்
சாதத்தோடு சில சவுக்கடிகள்...!
சாயங்காலம் வீடு திரும்புகையில்
என்மீது அப்பா பொழியும்
அமிலத்தில் நனைத்த வார்த்தைகளை
தவிர்த்துவிடவும்...!
தவிர்த்துவிடவும்...!
எதிர்பார்த்தே நடத்தும் சமூகம்
எப்போதும் ஏமாற்றத்தையே
திருப்பிக்கொடுக்கும் போதும்...!
வலிகொண்டு மனம்துடிக்கும்
ஒவ்வொறு சந்தர்ப்பங்களில் முயற்சித்தும்
தோற்றுதான் போகிறது
என் தற்கொலை...
என் தற்கொலை...
ஆதரவற்று தனித்திருக்கும்
என் அம்மாவுக்காக....!
கவிதை கரு : சமூகம்
படங்கள் : கூகுள்
தலைப்பை பார்த்து பயந்து போய் வந்தேன் மாப்ள
ReplyDeleteவாங்க சசி...
Deleteசெம!!!
ReplyDeleteநன்றி நண்பரே...
Deleteஏன்யா இப்படி ஒரு தலைப்பு!
ReplyDeleteஇது தலைப்பு அல்ல நண்பரே....
Deleteவறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் கிட்டதட்ட 30 கோடிமக்களின் வாழ்க்கை...
அன்றாடம் நாட்களை நகர்த்த முடியாமல் வேலையின்றி அல்லாடும் இந்திய இளைஞகளின் வேதனை...
ஆட்சியாளர்களை தேர்ந்துதெடுத்துவிட்டு இந்த நாட்டில் நல்லதுக்காக காத்திருக்கும் ஏழைமக்களின் கண்ணீர்...
நளையாவது நமக்கு நல்லது நடக்காதா என்று ஏக்கத்துடன் காத்திருக்கும் ஒரு சாமனியனின் சரித்திரம்...
நான் பார்க்கும் சமூகம் எதோ ஒரு விதத்தில்.. ஏதோ ஒரு நம்பிக்கையில்.. ஏதோ ஒரு ஏக்கத்தில் தான் தன்னுடைய தறகொலையை தள்ளிப்போட்டுக்கொண்டு இருக்கிறது...
தற்கொலை கூடாதுதான் ஆனால் அதையும் மீறி இங்கு தினம் பல நடந்துக்கொண்டுதான் இருக்கிறது...
நாம் நமக்காக அல்லாமல் மற்றவருக்காக வாழ பழகிக்கொண்டால் தற்கொலைகள் இங்கு குறை வாய்ப்பிருக்கிறது...
அதன் வெளிப்படுதான் என் கவிதையின் தலைப்பு...
வெகு நாளுக்கு பிறகு தாங்கள் வந்ததுக்கு மிக்க நன்றி..!!!
எத்தனையோ குடும்பங்களின் உண்மை நிலை... இப்படித்தான் இருக்கிறது....
ReplyDeleteஎல்லாம் வல்ல தாய்ப்பாசத்தை தாண்டி... தற்கொலை மட்டும் வந்துவிட முடியுமா என்ன?????
உண்மைதான் செவிலியன்...
Deleteஇந்த நிலை மாறவேண்டும்
மிகவும் அருமை...
ReplyDeleteஎந்த வேலையும் செய்யலாம் என்று முடிவெடுத்துவிட்டால் அம்மாவுக்கும் கவலை இல்லை . பிள்ளைக்கும் வேலை தேடும் திண்டாட்டம் இல்லை . இறங்கி வர வேண்டும் .
ReplyDeleteநல்லது...
Deleteஅருமையான தலைப்பு.., வரிகள் டாப்பு..!
ReplyDeleteநன்றி நண்பரே...
Deleteகவிதைக் குமுறல் மனதைத் தொட்டது. விக்கியுலகத்திற்கு நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கத்தின் நியாயம் புரிகிறது. நன்று.
ReplyDeleteநன்றி ஐயா...!
Deleteஅருமை அருமை..
ReplyDeleteசமூகத்தின் சவடால்களை
சட்டென்று சந்திக்கும்
ஒவ்வொரு சாமானிய மனிதனின்
நிலையை அப்பட்டமாய் தெரிவிக்கும்
அழகிய கவிதை....
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா..!
Deleteவேலை கிடைக்காத இளைஞனின் மனக்குமுறலை உங்க கவிதை வெளிப்படுத்தியது. வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்கள் வருகைக்கு மிக்க நன்றி அக்கா...
Deleteகடைசி வரி......மனசைத்தொட்டுட்டீங்க1
ReplyDeleteநல்லது மற்றும் நன்றி தலைவரே...
Deleteஉருக்கமான கவிதை சார் பகிர்வுக்கு நன்றி ...
ReplyDeleteநன்றி..!
Deleteமிக அருமையான கவிதை நெஞ்சத்தை தொட்டு விட்டது...
ReplyDeleteதங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி
Deleteவாசிக்கிறேன் தலைவரே..
ReplyDeleteஜெயிச்சா லக்கு, ஜெயிக்காட்டி மக்கு இதுதான் இந்த சமூகத்தின் அமைப்பு.
ReplyDeleteஉண்மைதான் பாலா சார்..
Deleteஆனால இந்த உலகத்தில் எல்லோராவும் ஜெயிக்கமுடிவதில்லை அதுதான் வேதனை...
கவிதை மனதை தொட்டது...
ReplyDeleteநன்றி ரெவெரி...
Deleteதலைப்பை பார்த்து பதறி தான் வந்தேன்.கவிதை மனதை கனக்க செய்தது.
ReplyDeleteநல்லது..
Deleteஅன்பின் சௌந்தர் - ஆதரவற்ற அம்மாவிற்காக தற்கொலை முயற்சி தோற்கடிக்கப் படுகிறது. அப்பா - சித்தி - சமுதாயம் எனப் பல வகைகளில் சொற்களாலும் செயல்களாலும் வருத்தப்படும் மனது தற்கொலையை நாடுகிறது ..... என்ன செய்வது ...... கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteதங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி ஐயா...!
Deleteகொன்னுட்டீக..
ReplyDeleteநன்றி மயிலன்...
Deleteஅருமை நண்பா !!!
ReplyDeleteநன்றி சத்தியசீலன்...
Deleteஆதரவான அம்மாவிற்கு நன்றி. தள்ளியே போகட்டும் தற்கொலை...வாழ்த்துகள் சகோதரா.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Deleteஎன்னங்க தலைப்பை இப்படி திகிலாத்தான் வைக்கணுமா?
ReplyDeleteகவிதையின் வீரியம் தலைப்பில் தெரிய வேண்டும் என்பதற்காகவே தலைப்பில் கொஞசம் அக்கறை எடுத்து வைத்திருக்கிறேன்..
Deleteநெகிழ்ச்சியான கவிதை சார்!
ReplyDeleteநன்றி தலைவரே..
Deleteஎன் இனிய தோழா!
ReplyDeleteஇந்த சோகக் கவிதையை படிக்கும் போது எனக்குள் ஒன்று தோன்றுகிறது!
இந்த விரக்தி நுனி இளைஞர்கள், தற்கொலை முயற்சி தவிர முன்னேற்றும் சில முக்கிய முயற்சிகள் எடுத்தால்,அவர்கள் வாழ்வில் ஒளி பிறக்கும் என்பது உண்மை!
வாழ்க்கை கஷ்டம் கொடுக்கும்! ஆனால், விரைவில் ஒரு விடியல் பிறக்கும்!இது நடைமுறை உண்மை!
விடிலை நோக்கியே பயணிப்போம்...
Deleteநன்றி
ஆதரவற்று தனித்திருக்கும்
ReplyDeleteஎன் அம்மாவுக்காக....!
அம்மாவுக்கு நிகர் அம்மாதான் அதில் ஐயமிலை!
என்பதை உணர்த்தும் உயர்ந்த வரிகள்!
அருமை!
சா இராமாநுசம்
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க
Deleteநன்றி ஐயா...
அருமை!
ReplyDeleteவாங்க சார்...
Deleteஒரு குடும்பத்தின் கதையே அடங்கியிருக்கு கவிதையில்.நல்லதொரு கவிதை சௌந்தர் !
ReplyDeleteஉண்மைதான் ஹேமா...
Deleteதங்கள் வருகைக்கு நன்றி..!
தலைப்பே அருமை! கவிதை கொஞ்சம் வலிக்கசொல்கிறது.
ReplyDeleteதங்கள் வருகைக்கு மிக்க நன்றி...
Deleteமுதல் வருகை-போய்விடாதே என்கிறது..
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஎம்மோடு இணைந்து கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே...
Delete