கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

11 August, 2013

இது இசைஞானி விடுத்துள்ள சவால்!



“லண்டனில் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி நடக்கும் இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையிலிருந்து நேராக இங்கே வருகிறேன். அன்றைக்கு அரை மணி நேரத்தில் ட்யூன் போட்டு, இரண்டு மணி நேரத்தில் இசையமைத்து ரெக்கார்டிங் செய்யப்பட்ட பாடல்களுக்கு இப்போது நோட்ஸ் எடுக்க ஒரு நாள், இரண்டு நாளாகிறது. 
 
இந்த ரிகர்சலில் பங்குபெறும் இசைக் கலைஞர்கள் எல்லோருமே… எப்படி இது முடிந்தது உங்களால்… போகிற போக்கில் இப்படிப்பட்ட மெட்டுக்களையெல்லாம் எப்படி உருவாக்க முடிந்தது? என்றெல்லாம் வியந்து போய் கேட்கிறார்கள்…

அது நானாக யோசித்து யோசித்து உருவாக்கிய இசையல்ல. தானாக வந்தது. நான் எவ்வளவு பெரிய இசையமைப்பாளர் என்று நினைத்து இசையமைத்திருந்தால் அந்த இசை மனதில் இறங்காது… தலையில் போய் உட்கார்ந்து தலைக்கனத்தை ஏற்றிவிடும்.

ப்ரியா படத்தில் 10 நிமிடங்கள் தொடர்ச்சியாக வசனங்கள் இல்லாமல் பின்னணி இசை மட்டுமே வரும்.. சிங்கப்பூர் பூங்காக்கள், பறவைக் கண்காட்சி, டால்பின் பார்க் போன்றவற்றில் ஹீரோ ஹீரோயின் வருவது போன்ற காட்சிகளை தொடர்ச்சியாக எடுத்திருந்தார்கள். 
 


இந்தக் காட்சிக்கான இசையை நானே கண்டக்ட் செய்தேன். அதற்கு முன் கோவர்தன் மாஸ்டர் செய்து பார்த்தார். ஒன்று, இசை காட்சியை மீறிப் போய்விடும்… அல்லது காட்சி முடிந்து இசை மீதமிருக்கும். இரண்டும் பர்ஃபெக்டாக பொருந்தி வரவில்லை. இதைப் பார்த்துக் கொண்டிருந்த நான், அண்ணா நீங்கள் உள்ளே சென்று மற்ற வேலையைப் பாருங்கள். நான் இதை கண்டக் செய்கிறேன் என கூறிவிட்டு ஒரே டேக்கில் செய்து முடித்தேன்.

உலகின் மிகச் சிறந்த இசையமைப்பாளர் என்று நீங்கள் யாரைக் கருதுகிறீர்களோ அவர்களிடம் போய் அந்த இசையை… படத்தில் பத்துநிமிடம் வரும் அந்த இசைக்கு நோட்ஸ் எடுக்கச் சொல்லுங்கள்… அவர்களுக்கு குறைந்தது சில மாதங்களாவது தேவைப்படும்…. நோட்ஸ் எடுத்து முடிக்கவே குறைந்தது இரண்டு மாதங்களாகும்!”

-இது சனிக்கிழமை நடந்த லண்டன் இசை நிகழ்ச்சிக்கான செய்தியாளர் சந்திப்பில் இசை பிதாமகன் இளையராஜா.

டிஸ்னி 1 : உலகின் சிறந்த இசையமைப்பாளரா… உங்களைத் தவிர யாருண்ணே அது… உள்ளூர் இசையையும் உலகத் தரமாக்கிய தவப் புதல்வர் அல்லவா நீங்கள்!

டிஸ்கி 2: லண்டனில் முதல் முறையாக வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி பிரமாண்ட ஓ2 அரங்கில் இசைஞானியுடன் 100 கலைஞர்கள் பங்கேற்கும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடக்கிறுது. 40 பாடல்கள் வரை இடம்பெறவிருக்கின்றன. நம் இசைஞானி குறைந்தது 10 பாடல்களாவது பாடுவார் என்ற நம்பிக்கையுடன் செல்லுங்கள்!

41 comments:

  1. வாழ்த்துவோம்... வாழ்த்துவோம்...

    ReplyDelete
  2. இசை ஞானியால்
    தமிழகம் பெருமிதம் கொள்கிறது
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அப்படியே ராஜசிங்கம் ஜெயதேவனின் தனது 15,000 பவுண்சுக்கு என்ன நடந்தது என்கின்ற கேள்விக்கும் ஒரு பதில் சொல்லிவிடச் சொல்லுங்க இளையராஜாவிடம். அவர் ஒன்றும் 15,000 பவுன்ஸை திருப்பித்தரக்கூட கேட்கவில்லை அதற்கு என்ன நடந்தது என தனக்கு ஒரு பதில் சொல்லும்படி கேட்கிறார். அந்த 15,000 பவுண்ஸ் கோயில் அறக்கட்டளை பணம் என்பதை ஆன்மீக ஞானி அறியாதவரா?

    ReplyDelete
  4. இதோ சுட்டி...

    http://dbsjeyaraj.com/dbsj/archives/23901

    ReplyDelete
  5. அன்பின் சௌந்தர் - இளையராஜாவின் திறமை அனைவராலும் அறியப் பட்ட ஒன்று. கேள்வி கேட்க இயலாத ஒன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. இன்னொரு விடயம் இவர் பிரியாவில் வரும் டார்லிங்...டார்லிங்..டார்லிங் பாடலை அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த ஸனி...ஸனி....ஸனி பாடலில் இருந்து உருவ எவ்வளவு நேரம் பிடித்தது எனவும் சொல்வார் என நினைக்கிறேன்!

    தலைக்கனத்தை எற்றிவிடுமாம் அடுத்த வரியில்
    நான் ஒரே டேக்கில் செய்தேன் என்கிறார் பின்னர் சொகிறார் உலகில் தலை சிறந்தவரிடம் கேளுங்கள் சொலமாதங்களாவது தேவைப்படுமாம்..... தலைக்கனம் என்றால் தலையில் பாறாங்கல்லை வைப்பதுதான் என ஒருவேளை நினைக்கிறாரோ?

    ReplyDelete
  7. "இன்னொரு விடயம் இவர் பிரியாவில் வரும் டார்லிங்...டார்லிங்..டார்லிங் பாடலை அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த ஸனி...ஸனி....ஸனி பாடலில் இருந்து உருவ எவ்வளவு நேரம் பிடித்தது எனவும் சொல்வார் என நினைக்கிறேன்!" -ஊர்சுற்றி .

    நெத்தியடி."sunny" boneym குழுவின் மிக பிரபலமான பாடல். அவர் அதை மட்டுமா காப்பி அடித்தார்? அதே படத்தில் வரும் அக்கரைச் சீமை அழகினிலே பாடல் பிசிறு மாறாமல் simon dupree என்ற இசைக்குழுவினரின் kites எனற பாடலின் அப்பட்டக் காப்பி.இன்னும் ஆழமாக ஆராய்ந்தால் என்னென்ன விபரங்கள் கிட்டுமோ? தன்னை புகழ்ந்துகொண்டே தலைக்கனம் எனக்கில்லை என்று சொல்லிக்கொள்ளும் ஒரு நார்சிஸ்ட் இளையராஜா. இருந்தாலும் ஊர்சுற்றி அவர்களே, "இசைஞானி"இல்லையா அவர்? அவரை இப்படி பேசலாமா?

    ReplyDelete
    Replies
    1. காரிகன் உங்க இசை பிதாதாதாதாதாதாதா மகனு விஸ்வநாதரு அடிச்ச காப்பிகளை லிஸ்ட் போட்டு தரட்டுமா ????

      Delete
  8. காரிகன் உங்க இசை பிதாதாதாதாதாதாதா மகனு விஸ்வநாதரு அடிச்ச காப்பிகளை லிஸ்ட் போட்டு தரட்டுமா ????

    ReplyDelete
  9. உலகின் சிறந்த இசையமைப்பாளரா… உங்களைத் தவிர யாருண்ணே அது//உண்மைதான்

    ReplyDelete
  10. //...காரிகன் உங்க இசை பிதாதாதாதாதாதாதா மகனு விஸ்வநாதரு அடிச்ச காப்பிகளை லிஸ்ட் போட்டு தரட்டுமா ????....//

    அண்ணை எதிகலிஸ்ற்.ஈ !
    இங்கு இளையராஜாவின் பம்மாத்து பற்றியே பேசுகிறோம். விஸ்வநாதர் பற்றி அல்ல!
    திசைதிருப்பல் ஏன்? பதில் இல்லாதவர்களின் வேலை திசை திருப்பலே !

    ReplyDelete
    Replies
    1. "விஸ்வநாதர் பற்றி அல்ல!திசைதிருப்பல் ஏன்? பதில் இல்லாதவர்களின் வேலை திசை திருப்பலே !"

      நீங்க ஊருக்கு புதுசு போல. அது இந்த பதிவுக்கு சம்மந்தமில்லாத பின்னூட்டம் என்றாலும் காரிகனுக்கு பொருத்தமான பின்னூட்டம். காரிகனுக்கும் விஸ்வநாதனுக்கும் இளையராஜாவுக்கும் என்ன தொடர்பு என்பது பலருக்கு தெரியும்.


      அவருக்கே நான் பின்னூட்டம் போட்டேன். நீங்கள் அதை தவிர்த்து விடலாம்.

      (நீங்க மட்டும் என்னவாம் இளையராஜாவின் இசை பற்றி பேசும் இடத்தில் பண விஷயத்தை பற்றி பேசலையா )

      Delete
    2. பதிவின் முதல் வசனம் படிச்சீங்களா அண்ணே!
      லண்டன் போறாராம். அங்கே உள்ள ஒருவன் கேள்வி கேட்டிருக்கிறான். காசை திருப்பித்தா என்றல்ல. கோயில் காசு. அறக்கட்டளைக்காசு. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என இருப்பதை மேற்கோள்காட்டியுள்ளார். பனத்தைக் கேட்கவில்லை அதற்கு என்ன நடந்தது. அட்லீஸ்ற் ஒரு நன்றி...துண்டுச்சீட்டு எழுதவில்லை எனத்தானே சொல்கிறார். இதில் 10 பாடேன்றாலும் படிப்பாராம் போய் கேட்கட்டாம். நெத்தியில் எப்போது பட்டையும் கழுத்தில் கொட்டையுமாய் திரிவோர் எப்படியெல்லாம் படம் காட்டுகிறார்கள் என்பதற்கு அடுத்த உதாரணம் இவர். வாயைத்திறக்கவிட்டால் போதும் விடுகிற பம்மாத்துக்கு அளவில்லை!

      Delete
  11. வயது ஆக ஆக நாவை அடக்க வேண்டும். அது உணவுக்கும் பொருந்தும் பேச்சுக்கும் பொருந்தும். legend ஆக மக்களால் மதிக்கப் படுபவர்கள் எந்த விஷயத்தியும் சொல்லும் முன் ஒரு முறைக்கு பல முறை யோசிக்க அமைய வேண்டும். இது போன்ற பெஹ்சுக்கள் அவரது மேதைமைக்கு களங்கம் விளைவிக்கக் கூடும்

    ReplyDelete
    Replies
    1. "வயது ஆக ஆக நாவை அடக்க வேண்டும். அது உணவுக்கும் பொருந்தும் பேச்சுக்கும் பொருந்தும்."

      இந்த பிரச்சினை பல legend க்களுக்கு உண்டு. சிறந்த உதாரணம் சௌந்தரராஜன்

      Delete
    2. அப்போ இவரும் அதே குட்டையில் ஊறிய மட்டையா?

      Delete
    3. இளையராஜாவின் இசையை ரசிப்பதுதான் உங்க நோக்கமா ?
      அல்லது அவரது தனிப்பட்ட குணநலன்களை விமர்சிப்பதுதான் உங்க நோக்கமா ?

      Delete
  12. " அவர்களிடம் போய் அந்த இசையை… படத்தில் பத்துநிமிடம் வரும் அந்த இசைக்கு நோட்ஸ் எடுக்கச் சொல்லுங்கள்… அவர்களுக்கு குறைந்தது சில மாதங்களாவது தேவைப்படும்…."

    ஒருவர் போட்ட இசைக்கு நோட்ஸ் எடுக்க இன்னொருவருக்கு நீண்ட காலம் எடுக்கும் என்பதை தான் குறிப்பிடுகின்றார். அவர்களால் இதை விட பல மடங்கு சிறந்த இசை தர முடியும்.

    ஆனால் ஒருவர் போட்ட இசையை இன்னொருவர் நோட்ஸ் எடுக்கும் பொது சிக்கல்கள் வரும்

    ReplyDelete
  13. //..(நீங்க மட்டும் என்னவாம் இளையராஜாவின் இசை பற்றி பேசும் இடத்தில் பண விஷயத்தை பற்றி பேசலையா )...//

    என்னது இளையராஜாவின் இசைபற்றிப்பேசுகிறோமா?
    என்ன ஜோக்கடிக்கிறீங்களா அண்ணே?
    தலைக்கனம்....நானே கண்டக்ட் செய்தேன்...கோவர்த்ட்னன் அண்ணை சொதப்பிட்டார்....மற்ரவங்களுக்கு 3 மாசம் எடுக்கும் என கதை விட்டது யாருண்னே?
    அடுத்தவன் டியூணை உருவினதையே ஒத்துக்கொள்ளாதவர் அட்லீஸ்ட் அடுத்தவனின் கோயில் பணத்தை உருவியது பற்றிச் சொல்வாரா? எதைக்கேட்டாலும் கடுவுளை இழுப்பவர் காசுக்கு கனக்குச் சொல்வாரா?
    விஸ்வநாதர் இப்படிப் பம்மாத்து சொன்ன்னால் அவரையும் கேட்போம்! ஆனால் இங்கே கருத்தாடல் இளையராஜாவின் தலைக்கனம் பற்றியது. முதலில் அவர் காசுக்கு கனக்குச் சொல்ல வேண்டும்.
    இந்த பம்மாத்து எல்லாம் இருக்கட்டும் லண்டன் போகும் போது 10 பாடு படிக்கட்டும் அப்படியே பதிலையும் சொல்லி விட்டு வருவாரா நம்ம ஞானி?
    பிரியாவில் உருவியதையும் சொல்வாரா ஞானி கேசு?

    ReplyDelete
    Replies
    1. விஸ்வநாதர் பற்றிய பின்னூட்டம் உங்களுக்கு அல்ல.
      அது காரிகனுக்கு.

      ஏன் காரிகனுக்கு விசேட பின்னூட்டம் என்பது உங்களுக்கு புரியாது ? நீங்க ஊருக்கு புதுசு.

      Delete
    2. "நானே கண்டக்ட் செய்தேன்...கோவர்த்ட்னன் அண்ணை சொதப்பிட்டார்....மற்ரவங்களுக்கு 3 மாசம் எடுக்கும் என கதை விட்டது யாருண்னே?"

      உங்க தலைக்குள் என்ன இருக்கிறது??? இளையராஜா வெறுப்பை இங்கே வாந்தியாக எடுக்க வேண்டாம்.

      அவர் குறிப்பிட்டது பிரியா படத்தில் வரும் அந்த 10 நிமிட இசையை மட்டுமே.

      அவர் பிரியா படத்தில் வந்த பாடல்கள் பற்றி பேசவில்லை.

      இதில் எங்கே கதைவிட்டார் என்று கூறமுடியுமா ??? ஈழத்தவர்களுக்கு எதையும் சரியாக படித்து புரிந்து கொள்ளும் அறிவு கிடையாதா ????

      Delete
    3. பாடல்களை தான் சுட்டேன் / சுடவில்லை என்று சொன்னாரா ??

      Delete
    4. 10 நிமிட இசையைச் செய்தேன் எனச் சொல்லிவிட்டு உலகத்தில் யாரும் என்னைப்போல் இல்லை என கதை விடலாமா? அப்படி சொல்பவருக்குப் பெயர்/பட்டம் ‘இசை ஞானி’
      ஆஹா...ஆஹா....நான் பாடல்களைப்பற்றிப் பேசவில்லை ஏனென்றால் நான் சுட்டேன் என சொல்லிவிடுவார்கள் என்கின்ற பயமா?
      இந்த 10நிமிட பின்னணீ இசை கூட எங்கே சுட்டதோ என ஐயம் எழும்பாமல் இல்லை.

      Delete
    5. //..பாடல்களை தான் சுட்டேன் / சுடவில்லை என்று சொன்னாரா ??....//

      அதுதானே?
      பாடல்களைச் சுட்டதால் நல்ல நேரம் மிச்சமாய் இருந்திருக்கும். அந்த நேரத்தில் யோசித்து பின்னணி அமைக்கலாம். இசைஞானி பட்டம் வாங்கலாம்!
      நல்ல ஐடியா அண்ணை (எதிக்கலிஸ்ற்!)
      நானும் வேலைக்குப்போகாமல் களவெடுக்க வசதி இருந்தால் வீட்டில் இருந்து இசை அமைக்கலாம் போலிருக்கே! ஐடியாவுக்கு நன்றீ!

      Delete
  14. //...ஆனால் ஒருவர் போட்ட இசையை இன்னொருவர் நோட்ஸ் எடுக்கும் பொது சிக்கல்கள் வரும்...//

    டார்லிங்...டார்லிங்...டார்லிங், அக்கரைச்சீமை அழகினிலே அஞ்சு நிமிசத்தில உருவினது. சொந்த நோட்ஸ் என்றால் கொஞ்சம் நேரம் எடுக்கும் அண்ணே.
    ஒருவர் போட்ட இசையை இன்னொருவர் நோட்ஸ் எடுக்க சிக்கல் வரும் அதை ஏன் இவ்வளவு உலகில் இல்லாத் ஆதிசயமாய் சொல்கிறார். ஒரு உண்மையைக்கூட தனக்கு சாதகமாக திரிக்கும் நரிக்குணம் கொண்ட கேசு இவர்!

    ReplyDelete
    Replies
    1. "நானே கண்டக்ட் செய்தேன்...கோவர்த்ட்னன் அண்ணை சொதப்பிட்டார்....மற்ரவங்களுக்கு 3 மாசம் எடுக்கும் என கதை விட்டது யாருண்னே?"

      உங்க தலைக்குள் என்ன இருக்கிறது??? இளையராஜா வெறுப்பை இங்கே வாந்தியாக எடுக்க வேண்டாம்.

      அவர் குறிப்பிட்டது பிரியா படத்தில் வரும் அந்த 10 நிமிட இசையை மட்டுமே.

      அவர் பிரியா படத்தில் வந்த பாடல்கள் பற்றி பேசவில்லை.

      இதில் எங்கே கதைவிட்டார் என்று கூறமுடியுமா ??? ஈழத்தவர்களுக்கு எதையும் சரியாக படித்து புரிந்து கொள்ளும் அறிவு கிடையாதா ????

      Delete
    2. BGM க்கும் பாடலுக்கும் வித்தியாசம் தெரியாத நீங்கள் எதற்க்காக பின்னூட்டம் போட வந்தீர்கள் ?

      Delete
    3. "ஊர்சுற்றி" எதையும் சரியாக படித்து பின்னூட்டம் போடவும். முட்டாள் தனமாக உங்கள் பாசையில் மொக்கு தனமாக உளறவேண்டாம்

      Delete
    4. //...BGM க்கும் பாடலுக்கும் வித்தியாசம் தெரியாத நீங்கள் எதற்க்காக பின்னூட்டம் போட வந்தீர்கள் ?....///


      BMG சுடமுடியாதது பாடல் சுடப்படலாம். அதுவே வித்தியாசம் என என் மரமண்டைக்கு உணர்த்தியதற்கு நன்றி ! அப்படிச் செய்தால் இசைஞானி பட்டம் இலவசம்!

      Delete
    5. நீங்கள் உங்கள் கருத்து தவறை மறைக்க மீண்டும் மீண்டும் புலம்பி தள்ளுகின்றீர்கள்.

      முதலில் நீங்கள் சொன்னது ராஜா குறிப்பிட்ட இசையையே copy பண்ணினார் என்று அப்புறம் கதையை மாற்று கின்றீர்கள்

      Delete
  15. திரு ஊர்சுற்றி அவர்களே,
    இளையராஜாவைப் பற்றி ஆதாரமில்லாமல் உண்மையில்லாமல் என்ன புகழ்ந்து எழுதினாலும் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.ஆனால் அவரை விமர்சித்து விட்டாலோ அவ்வளவுதான் ஒரே கும்பலே வந்துவிடும்.இப்போதுகூட வாயில் சுருட்டு வைத்துக்கொண்டு ஒருவர் தனக்குத் தெரிந்த "அழகான"தமிழில் எப்படி கூச்சல் போடுகிறார் பாருங்கள். இளையராஜா காப்பி அடித்தார் என்று ஆதாரத்தோடு சொன்னால் ஏன் அவர் செய்யவில்லையா இவர் செய்யவில்லையா என்று திசையை திருப்பும் மூன்றாந்தர மோசடித்தனம் இது. இளையராஜா மாதிரி வேறு ஒருவர் இங்கே உலகத்திலேயே இல்லை டார்ஸான் ரேஞ்சுக்கு என்று மார் தட்டும் ராஜா ரசிகசிகாமணிகளே முடிந்தால் பலவகைப்பட்ட இசையை கேட்டுவிட்டு பிறகு கருத்து கூற வாருங்கள். இளையராஜாபோன்று உலகத்திலேயே வேறு எந்த இசை அமைப்பாளரும் இல்லை என்பது போன்ற அபத்தமான cliche க்களை தவிர்ப்பது நலம். மேலும் இளையராஜாவின் தலைக்கனம் யாரும் மூடி மறைக்கவே முடியாத அளவுக்கு மிகவும் பிரசித்தி பெற்றதாயிற்றே.அவர் வாயாலேயே அவர் கெட்டுப்போகிறார் என்று கூட பலர் சொல்வதுண்டு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க விசுவநாதரின் ரசிகசிகாமணிமணிமணிமணிமணி

      Delete
    2. "இளையராஜாவின் தலைக்கனம் யாரும் மூடி மறைக்கவே முடியாத அளவுக்கு மிகவும் பிரசித்தி பெற்றதாயிற்றே.அவர் வாயாலேயே அவர் கெட்டுப்போகிறார் என்று கூட பலர் சொல்வதுண்டு."

      அவர் தலைக்கனம் உலகம் அறிந்தது. யாருக்கு தலைக்கனம் இல்லை ????

      ஜெயகாந்தனுக்கு இல்லாத தலைக்கனமா ??? சௌந்தரராஜனுக்கு இல்லாத தலைக்கனமா ?? இப்படியே லிஸ்ட் போட்டுக்கொண்டே இருக்கலாம் . (தகுதியே இல்லாமா சாருநிவேதிதா என்று ஒருவர் தலைக்கனம் பிடிச்சு அலைகின்றார் )

      "அவர் கெட்டுப்போகிறார் என்று கூட பலர் சொல்வதுண்"

      போகின்றார் என்பெதெல்லாம் தேவையில்லை. போய் விட்டார் என்பதே சரியானது.

      ஆனால் எமக்கு தேவை என்ன ?? ராஜாவின் இசையா அல்லது தலைக்கனமா ?
      ரோஜாவில் தான் முள்ளும் இருக்கின்றது.

      இசையை ரசிப்போம் அவரின் தலைக்கன பேச்சுகளை சிரித்துக்கொண்டே விளகிச்செல்வோம்.

      Delete
    3. " இளையராஜா காப்பி அடித்தார் என்று ஆதாரத்தோடு சொன்னால் ஏன் அவர் செய்யவில்லையா இவர் செய்யவில்லையா என்று திசையை திருப்பும் மூன்றாந்தர மோசடித்தனம் இது. இளையராஜா மாதிரி வேறு"

      ராஜா காப்பி பண்ணினார் என்பதில் மாற்று கருத்து இல்லை. (ஆனால் அதை நீங்க கூற கூடாது. விஸ்வநாதன் அடிச்ச காப்பிகளை பற்றி என்றாவது பேசி இருக்கின்றீர்களா ?? அப்படி யாராவது பேசினால் அவர்களின் வாயை அடைபதுதான் உங்களை வேலை )

      நீங்க விஸ்வநாதனின் மகாரசிகசிகாமணிமணிமணிமணிமணி என்று எமக்கு தெரியும். விஸ்வநாதனின் காப்பிகளை பேசாத நீங்க அப்படி யாராவது பேசினா அடிச்சு வெரட்டுற உங்களுக்கு மற்றவன் முதுகில் உள்ள அழுக்கு பற்றி பேச என்ன அருகதை இருக்கு என்பதுதான் எமது ஆதங்கம் ஆதங்கம்கம்கம்கம்கம்கம்கம்கம்கம்.

      Delete
  16. "பலவகைப்பட்ட இசையை கேட்டுவிட்டு பிறகு கருத்து கூற வாருங்கள். இளையராஜாபோன்று உலகத்திலேயே வேறு எந்த இசை அமைப்பாளரும் இல்லை "

    உங்களை விட அதிக இசைகளை கேட்டுவிட்டோம். உங்கள் இலவச ஆலோசனைக்கு நன்றிகள் உரித்தாகட்டும்.

    "இளையராஜாபோன்று உலகத்திலேயே வேறு எந்த இசை அமைப்பாளரும் இல்லை "

    இப்படி யார் கூறினார்கள். ராஜா கூட இப்படி கூற முடியாது. இந்தியாவிலேயே சிறந்த இசையமைப்பாளர் என்று கூற முடியாது.

    இந்தியாவின் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் என்று கூறலாம். (one of the )

    ReplyDelete
  17. வாருங்கள் இதிகாளிஸ்ட்,
    எனக்கு எம் எஸ் வி யைப் பிடிக்கும் என்பது உங்களுக்கு ஏன் முள் போல குத்துகிறது என்று தெரியவில்லை.எம் எஸ் வி-டி கே ராமமூர்த்தி,கே வி மகாதேவன், சுதர்சனம்,எ எம் ராஜா போன்றே பலரையும் எனக்குப் பிடிக்கும்.அவர்கள் கொடுத்த பாடல்கள் போல இளையராஜா இனிமையான காலத்தை தாண்டிய பாடல்களை தரவில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதில்லை.

    "உங்களை விட அதிக இசைகளை கேட்டுவிட்டோம். உங்கள் இலவச ஆலோசனைக்கு நன்றிகள் உரித்தாகட்டும்."
    என்னை நன்றாகவே மதிப்பீடு செய்துள்ளீர்கள்.அப்படியானால் நன்றி. ஆனால் பலவிதமான இசையை கேட்டவர்கள் இளையராஜாதான் சிறந்தவர் என்று அறிவிலிகள் போல கருத்து கூற மாட்டார்கள் என்பது என் எண்ணம்.

    "இப்படி யார் கூறினார்கள். ராஜா கூட இப்படி கூற முடியாது. இந்தியாவிலேயே சிறந்த இசையமைப்பாளர் என்று கூற முடியாது.
    இந்தியாவின் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் என்று கூறலாம். (one of the )"

    மிகச் சரியான கருத்து.நானும் இதையேதான் சொல்கிறேன்.இப்படி எல்லோரும் சொல்லிவிட்டால் பிறகு எதற்கு வாதம் செய்யவேண்டும்? என்ன ஒன்று நீங்கள் இப்படி சொன்னதால் உங்கள் மீதும் சில ராஜா ரசிக சிகாமணிகளுக்கு கோபம் வரலாம். உண்மையை கூறியதற்காக உங்களைப் பாராட்டுகிறேன்.

    ReplyDelete
  18. மேலும் இதையும் படிக்கவும்.

    http://www.soundcameraaction.com/ilayaraja-london-concert-cancel/

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...