கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

14 June, 2011

காதல் கடிதம்.... (இதை ரகசியமா வச்சிக்கங்க..)



“இந்தக் கல்லூரியிலே எவ்வளவோ பெண்கள் இருக்காங்க... இருந்தாலும் உங்களைத்தான் நான் விரும்பறேன்... இது நான் உங்களுக்காக எழுதின முதல்  காதல் கடிதம்...!”

“உங்களுக்குத் தெரியுமா... காதல் கடிதம் எழுதினதுலே ஓர் உலக சாதனை...!”

“தெரியாதே!”

“கனான் பில் குக் - அப்படின்னு ஒருத்தார். இங்கிலாந்து ராணுவத்திலே இருந்தார். இவர் ஹெலன் - என்கிற பெண்ணைக் காதலிச்சார். கொஞ்ச நாள்‌லே யுத்தம் ஆரம்பமாயிட்டுது... இவர் போர்முனைக்குப் போயிட்டார். சுமாரா நாலரை ஆண்டுகள் காதலியைப் பிரிஞ்சி இருந்தார். போர் முடிஞ்சி திரும்ப வந்ததும் திருமணம் அமோகமா நடந்துதாம். ‌அதுக்கப்புறம்தான் தெரிஞ்சுதாம்... பிரிவுக் காலத்துலே அவங்க எழுதிக்கிட்ட காதல் கடிதங்கள் மொத்தம் ஆறாயிரம்! இது ஒரு கின்னஸ் சாதனை!”

“இந்த முதல் கடிதத்தை நீங்க மறுக்காமே வாங்கிக்கிட்டா... என்னதலேயும் அதுமாதிரி ஒரு சாதனை நிகழ்த்த முடியும்!”

“அதுக்கு முன்னாடி நான் உங்ககிட்டே கேட்டுத் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம் ஒண்ணு இருக்கு!”

“எதுவா இருந்தாலும் ‌கேளுங்க... சொல்றேன்!”

“இவ்வளவு பெண்கள் இருக்கிற இந்தக் கல்லூரியிலே நீங்க என்னை விரும்பறத்துக்கு என்ன காரணம்?”

“எனக்கு மனைவியா வருகிற பெண் அழகா இருக்கணும்ன்னு நான் நினைக்கிறேன்... அதனாலே தான்?”

“சாரி.. நான் உங்க காதலை ஏத்துக்க முடியாத நிலை...”

“என்ன காரணம்?”

“எனக்குக் கணவனா வருகிற ஆண் அழகா இருக்கணும்ன்னு நான் நினைக்கிறேன்.. அதனாலே தான்....!” (நன்றி வாரம் ஒரு தகவல்)
பொதுவாக நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் தான் பெண் அழகாக இருக்க வேண்டும், படித்திருக்க வேண்டும், வசதியாக இருக்க வேண்டும், சொந்தங்கள் குறைவாக இருக்கவேண்டும், வரதட்சணை அதிகம் கொடுக்க வேண்டும் என்று பல்வேறு பரிமாண வளர்ச்சிக்கு பிறகுதான் ஒரு பெண் மணமேடை ஏறுகிறாள். ஆனால் காதல் திருமணங்களில் பொதுவாக பார்க்கப்படுவது அழகு மட்டுமே. ஒரு பெண் அழகாக இருந்துவிட்டால் போதும் அவளுக்கு இளைஞர்களின் காதல் பார்வைகள் பல்வேறு கோணங்களில் இருந்து அம்புகளாய் வந்து விடும். ஆனால் கொஞ்சம் அ‌ழகு குறைவாக இருக்கும் பெண்களுக்கு காதல் என்பது கொஞ்சம் தாமதமாகத்தான் கைக்கூடுகிறது.

இன்றைய இளைஞர் கூட்டம் அ‌ழகு பெண்களை தேடியே தன் காலத்தை ஓட்டிவிடுகிறார்கள். அவர்களுக்கு தன்னைப்பற்றி கவலையில்லை தன் நிலையைப்பற்றி கவலையில்லை ஆனால் காதலி மட்டும் அழகாக இருந்து விடவேண்டும். அப்படியென்றால் அழகே இல்லாமல் இருக்கும் பெண்களின் நிலையை கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். அ‌ழகு மட்டுமே வாழ்க்கையை நடத்திவிட கைகொடுத்து விடாது. நல்ல மனது மட்டும்தான் ஒரு வாழ்க்கையை வசந்தக்காலமாக்கும்.


அழகை நம்பி வாழ்க்கையை இழந்தவர்கள் கண்டிப்பாக ஏராளமாக இருக்கிறார்கள் ஆகையால் பெண்ணின் மனதுக்கு மரியாதை தாருங்கள், அழகு அடுத்த இடத்தில் வையுங்கள். அப்போதுதான் வாழ்க்கை இனிக்கும்.


இந்த பதிவு பிடித்திருந்தால் கருத்திட்டு வாக்குகளை பதிவுச் செய்யுங்கள்...
தங்கள் வருகைக்கு நன்றி..!

64 comments:

  1. //அழகை நம்பி வாழ்க்கையை இழந்தவர்கள் கண்டிப்பாக ஏராளமாக இருக்கிறார்கள் ஆகையால் பெண்ணின் மனதுக்கு மரியாதை தாருங்கள், அழகு அடுத்த இடத்தில் வையுங்கள். அப்போதுதான் வாழ்க்கை இனிக்கும்.

    உண்மை நண்பரே, இது பெண்களுக்கும் பொருந்தும்.

    மாப்பிள்ளையோ பெண்ணோ தேடும் போது குணத்திற்கு கடைசி இடம் மட்டுமே. வரன் அழகாக இருந்தால் தான் அடுத்த கட்ட பேச்சே ஆரம்பிக்கும்.

    ReplyDelete
  2. கின்னஸ் சாதனை கல்யாணத்துக்கு முன் ,அந்த கல்யாணத்துக்கு அப்புறம் ஏதும் சாதனை பண்ணாங்களா ? டவுட்டு

    ReplyDelete
  3. அழகு இருந்தா சந்தோசம் ,இல்லையுணா வருத்த பட கூடாது ...எத எதையோ விட்டு கொடுக்குறோம் இதை விட்டுக்கொடுக்க மாட்டோமா என்ன ?

    ReplyDelete
  4. காதல் கடிதம்.... (இதை ரகசியமா வச்சிக்கங்க..)//

    தலைப்பைப் பார்க்கையில்
    யாருக்கோ வலை மூலம் தூது விடுவது போல இருக்கே.
    ஹி..ஹி..
    படித்து விட்டு வருகிறேன்,
    தமிழ் மணம் 4

    ReplyDelete
  5. காதல் கடிதம் எழுதிய சாதனையாளர் பற்றிய தகவல்,
    இளைஞரிகளின் வாழ்க்கைக்குத் தேவையான குறிப்புக்கள் என உங்கள் பதிவில் அலசியிருக்கிறீங்க,
    நாம எல்லாம் நோட் பண்ணி வைச்சு காதல் செய்ய வேண்டிய பதிவு இது சகோ.

    பகிர்விற்கு நன்றி மாப்ஸ்.

    ReplyDelete
  6. /////////
    ரியாஸ் அஹமது said... [Reply to comment]

    வடை
    //////

    வாங்க...வாங்க...

    ReplyDelete
  7. ////////
    சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

    2வது மழை எனை நனைத்ததே
    ////////

    அவ்வளவு தானா....

    ReplyDelete
  8. //////
    ஜ.ரா.ரமேஷ் பாபு said... [Reply to comment]

    //அழகை நம்பி வாழ்க்கையை இழந்தவர்கள் கண்டிப்பாக ஏராளமாக இருக்கிறார்கள் ஆகையால் பெண்ணின் மனதுக்கு மரியாதை தாருங்கள், அழகு அடுத்த இடத்தில் வையுங்கள். அப்போதுதான் வாழ்க்கை இனிக்கும்.

    உண்மை நண்பரே, இது பெண்களுக்கும் பொருந்தும்.

    மாப்பிள்ளையோ பெண்ணோ தேடும் போது குணத்திற்கு கடைசி இடம் மட்டுமே. வரன் அழகாக இருந்தால் தான் அடுத்த கட்ட பேச்சே ஆரம்பிக்கும்.
    ////////
    உண்மைதான்...

    ReplyDelete
  9. /////////
    ரியாஸ் அஹமது said... [Reply to comment]

    கின்னஸ் சாதனை கல்யாணத்துக்கு முன் ,அந்த கல்யாணத்துக்கு அப்புறம் ஏதும் சாதனை பண்ணாங்களா ? டவுட்டு
    ///////

    கல்யாணம் ஆகிட்டபிறகு எங்கிருந்து சாதனை பண்றது... ஜோக்குங்க...

    ReplyDelete
  10. நிச்சயமாக மனம் தான் அழகு. அதைப் பார்த்து வருவதுதான் உண்மையான காதல்.

    ReplyDelete
  11. ரகசியமா வச்சிக்கறதுக்கு எதுக்குய்யா லெட்டர் எழுதனும் யார்கிட்டவாவது கொடுத்தா தானே ரிப்ளை வரும்.

    ReplyDelete
  12. ஆஹா... காதல் கடிதம்ன்னு வந்தேன் .. சரி நம்ம ஆளுக்கு கொடுத்து பேர் வாங்கிடலாம்னு வந்த கவுத்துடீன்களே தலைவா?

    ReplyDelete
  13. ////
    ரியாஸ் அஹமது said... [Reply to comment]

    அழகு இருந்தா சந்தோசம் ,இல்லையுணா வருத்த பட கூடாது ...எத எதையோ விட்டு கொடுக்குறோம் இதை விட்டுக்கொடுக்க மாட்டோமா என்ன ?
    /////////

    உங்க மனசு எல்லோருக்கும் இருந்தா நல்லதுங்க...

    ReplyDelete
  14. காதல் கடிதம் ஆரம்பத்துல நல்லாத்தானே போயிட்டிருந்துது. அப்ரோச் உதாரணம் எல்லாம் நல்லாதானே சொன்னான். பிறகெதுக்கு பயபுள்ளை அழகபாத்து சொதப்பினவன்..

    ReplyDelete
  15. ////
    நிரூபன் said... [Reply to comment]

    காதல் கடிதம்.... (இதை ரகசியமா வச்சிக்கங்க..)//

    தலைப்பைப் பார்க்கையில்
    யாருக்கோ வலை மூலம் தூது விடுவது போல இருக்கே.
    ஹி..ஹி..
    படித்து விட்டு வருகிறேன்,
    தமிழ் மணம் 4
    ////////

    வாங்க நிருபன்...

    ReplyDelete
  16. ////////
    நிரூபன் said...

    காதல் கடிதம் எழுதிய சாதனையாளர் பற்றிய தகவல்,
    இளைஞரிகளின் வாழ்க்கைக்குத் தேவையான குறிப்புக்கள் என உங்கள் பதிவில் அலசியிருக்கிறீங்க,
    நாம எல்லாம் நோட் பண்ணி வைச்சு காதல் செய்ய வேண்டிய பதிவு இது சகோ.

    பகிர்விற்கு நன்றி மாப்ஸ்./////
    //////

    தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி சகோ..

    ReplyDelete
  17. //அப்படியென்றால் அழகே இல்லாமல் இருக்கும் பெண்களின் நிலையை கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.//
    யோசிக்கவேண்டிய விஷயம். இப்டி வச்சுக கூடாதா. அழகான பொண்ணுங்களா அழகில்லாத ஆம்புளைங்க பாக்கட்டும். அழகான ஆம்புளைங்கள அழகில்லாத பொண்ணுங்க பாக்கட்டும். குடும்பத்துல ஒருத்தர் அழகா இருந்தா பத்தாதா பாஸ்..:))))

    இன்று என் வலையில்
    உச்சக்கட்ட இன்பம்

    ReplyDelete
  18. பெண்ணின் மனதுக்கு மரியாதை தாருங்கள், அழகு அடுத்த இடத்தில் வையுங்கள். அப்போதுதான் வாழ்க்கை இனிக்கும்.//

    பயனுள்ள கருத்துப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  19. ///இன்றைய இளைஞர் கூட்டம் அ‌ழகு பெண்களை தேடியே தன் காலத்தை ஓட்டிவிடுகிறார்கள். அவர்களுக்கு தன்னைப்பற்றி கவலையில்லை தன் நிலையைப்பற்றி கவலையில்லை ஆனால் காதலி மட்டும் அழகாக இருந்து விடவேண்டும். /// இது தான் உண்மை ;-)

    ReplyDelete
  20. அழகு என்பது நிரந்தரமில்லை.

    நல்ல மனம்/குணம் மட்டுமே நல் வாழ்க்கைக்கு ஏற்றது என்பதை நன்றாக கூறியுள்ளீர்கள்.

    ReplyDelete
  21. மாப்ள நல்லா சொல்லி இருக்கய்யா!

    ReplyDelete
  22. தொடக்கம வேடிக்கை யாக
    இருந்தாலும் இன்றைய இளைய
    சமுதாயம் அறியவேண்டுய பயன்
    மிகு குறிப்புகள்
    தொடர்க இத்தகையன
    புலவர் சா இராமநுசம்

    ReplyDelete
  23. உண்மை சௌந்தர்.வெறும் உடல் அழகு மட்டும் இல்லாமல் உள்ள அழகுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்தான்!

    ReplyDelete
  24. காதல் கடிதம்....

    ReplyDelete
  25. ///////
    பலே பிரபு said... [Reply to comment]

    நிச்சயமாக மனம் தான் அழகு. அதைப் பார்த்து வருவதுதான் உண்மையான காதல்.
    ////////

    சரியாக சொன்னீர்கள்...

    ReplyDelete
  26. ///////
    சசிகுமார் said...

    ரகசியமா வச்சிக்கறதுக்கு எதுக்குய்யா லெட்டர் எழுதனும் யார்கிட்டவாவது கொடுத்தா தானே ரிப்ளை வரும்.///////

    வரும் ஆனா வராது...

    ReplyDelete
  27. //////
    !* வேடந்தாங்கல் - கருன் *! said...

    ஆஹா... காதல் கடிதம்ன்னு வந்தேன் .. சரி நம்ம ஆளுக்கு கொடுத்து பேர் வாங்கிடலாம்னு வந்த கவுத்துடீன்களே தலைவா?//////


    கொடுப்பீங்க கொடுப்பீங்க...

    ReplyDelete
  28. அழகும், இளமையும் நிரந்தரமல்ல. நல்ல மனது தான் முக்கியம். இதைப்பற்றிய ஒரு சிறுகதை “மறக்க மனம்கூடுதில்லையே” என்ற தலைப்பில் தயாரித்து வருகிறேன். விரைவில் வெளிவரும்.

    பெண் அழகாக இல்லாவிட்டால் போகட்டும். உங்களின் இந்தப்பதிவு அழக்காக உள்ளது.

    பாராட்டுக்கள்.

    voted also.

    ReplyDelete
  29. அட இப்படி ஒரு தகவலா ? கின்னஸ் சாதனி ... ம்ம்ம்.... உண்மை தான் - காதல் மனதினை விரும்ப வேண்டும் - உடலை அல்ல - நட்புடன் சீனா

    ReplyDelete
  30. பெண்களின் மனதிற்கும் மதிப்புக் கொடுக்கிறீர்கள்.சந்தோஷமாக இருக்கிறது !

    இன்று இலண்டன் நேரம் 11.05 க்கு சனல் 4 ல் ஈழ அவலம் பற்றின ஒரு மணித்தியாலக் காணொளி காண்பிக்கிறார்கள்.உங்களுக்குத் தெரிந்த மற்றைய நாட்டு நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.ஒரு கிழமைக்கு இணையத்திலும் பார்க்கலாமாம்.நன்றி !

    ReplyDelete
  31. உண்மையில் மனசுதானே அழகு பிரமாதம்

    ReplyDelete
  32. //////
    Ashwin-WIN said... [Reply to comment]

    காதல் கடிதம் ஆரம்பத்துல நல்லாத்தானே போயிட்டிருந்துது. அப்ரோச் உதாரணம் எல்லாம் நல்லாதானே சொன்னான். பிறகெதுக்கு பயபுள்ளை அழகபாத்து சொதப்பினவன்..
    /////

    வாங்க நண்பரே..

    ReplyDelete
  33. ///////
    Ashwin-WIN said...

    //அப்படியென்றால் அழகே இல்லாமல் இருக்கும் பெண்களின் நிலையை கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.//
    யோசிக்கவேண்டிய விஷயம். இப்டி வச்சுக கூடாதா. அழகான பொண்ணுங்களா அழகில்லாத ஆம்புளைங்க பாக்கட்டும். அழகான ஆம்புளைங்கள அழகில்லாத பொண்ணுங்க பாக்கட்டும். குடும்பத்துல ஒருத்தர் அழகா இருந்தா பத்தாதா பாஸ்..:))))
    /////////

    காதல் என்பது உண்மையில் அழகில் இல்லை...

    ReplyDelete
  34. ///////
    இராஜராஜேஸ்வரி said...

    பெண்ணின் மனதுக்கு மரியாதை தாருங்கள், அழகு அடுத்த இடத்தில் வையுங்கள். அப்போதுதான் வாழ்க்கை இனிக்கும்.//

    பயனுள்ள கருத்துப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்./////


    நன்றி...

    ReplyDelete
  35. அழகை வெறுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை சவுந்தர்! ஆனால் பொண்ணு அழகாக இருக்கணும்னு எதிர்பார்க்கிற நாம மொதல்ல அழகா இருக்கோணும்!!!!!

    ReplyDelete
  36. காதல் கடிதங்களில் உலக சாதனையா....நல்ல பகிர்வு.

    ReplyDelete
  37. //“எனக்கு மனைவியா வருகிற பெண் அழகா இருக்கணும்ன்னு நான் நினைக்கிறேன்... அதனாலே தான்?”
    “சாரி.. நான் உங்க காதலை ஏத்துக்க முடியாத நிலை...”
    “என்ன காரணம்?”
    “எனக்குக் கணவனா வருகிற ஆண் அழகா இருக்கணும்ன்னு நான் நினைக்கிறேன்.. அதனாலே தான்....!”//

    நெத்தியடி ,

    ஆண்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டிய இடம் இது

    ReplyDelete
  38. இன்று தான் காதல் வீதி என் கண்ணுக்குப்பட்டது.அதில் பயணம் செய்வார் தன்மை பற்றிச் சற்று நோக்க உழ்நுழைந்தேன். கண்டிப்பாக நினைத்தது சரியாகவே இருந்தது. பெயருக்கேற்று ஆக்கம் விரிந்து கிடந்தது. உண்மையைக் கூறியிருக்கின்றீர்கள். இதை காதலிப்பவர்கள் யார்தான் ஏற்றுக்கொள்ளப் போகின்றார்கள்

    ReplyDelete
  39. ///////
    கந்தசாமி. said... [Reply to comment]

    ///இன்றைய இளைஞர் கூட்டம் அழகு பெண்களை தேடியே தன் காலத்தை ஓட்டிவிடுகிறார்கள். அவர்களுக்கு தன்னைப்பற்றி கவலையில்லை தன் நிலையைப்பற்றி கவலையில்லை ஆனால் காதலி மட்டும் அழகாக இருந்து விடவேண்டும். /// இது தான் உண்மை ;-)
    ///////

    வாங்க... நண்ப‌ரே...

    ReplyDelete
  40. //////
    முரளி நாராயண் said... [Reply to comment]

    அழகு என்பது நிரந்தரமில்லை.

    நல்ல மனம்/குணம் மட்டுமே நல் வாழ்க்கைக்கு ஏற்றது என்பதை நன்றாக கூறியுள்ளீர்கள்.
    ///////

    நன்றி..

    ReplyDelete
  41. //////
    விக்கியுலகம் said... [Reply to comment]

    மாப்ள நல்லா சொல்லி இருக்கய்யா!
    //////

    வாங்க விக்கி...

    ReplyDelete
  42. /////
    புலவர் சா இராமாநுசம் said... [Reply to comment]

    தொடக்கம வேடிக்கை யாக
    இருந்தாலும் இன்றைய இளைய
    சமுதாயம் அறியவேண்டுய பயன்
    மிகு குறிப்புகள்
    தொடர்க இத்தகையன
    புலவர் சா இராமநுசம்
    ////////

    தங்கள் வருகைக்கு நன்றி ஐயா..!

    ReplyDelete
  43. //////
    சென்னை பித்தன் said... [Reply to comment]

    உண்மை சௌந்தர்.வெறும் உடல் அழகு மட்டும் இல்லாமல் உள்ள அழகுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்தான்!
    //////////

    ஆமாம்...

    ReplyDelete
  44. ///////
    மாலதி said... [Reply to comment]

    காதல் கடிதம்....
    //////


    ரைட்டு...

    ReplyDelete
  45. ////////////
    வை.கோபாலகிருஷ்ணன் said... [Reply to comment]

    அழகும், இளமையும் நிரந்தரமல்ல. நல்ல மனது தான் முக்கியம். இதைப்பற்றிய ஒரு சிறுகதை “மறக்க மனம்கூடுதில்லையே” என்ற தலைப்பில் தயாரித்து வருகிறேன். விரைவில் வெளிவரும்.

    பெண் அழகாக இல்லாவிட்டால் போகட்டும். உங்களின் இந்தப்பதிவு அழக்காக உள்ளது.
    ////////

    தங்கள் கருத்துக்கு நன்றிங்க...

    ReplyDelete
  46. //////
    cheena (சீனா) said... [Reply to comment]

    அட இப்படி ஒரு தகவலா ? கின்னஸ் சாதனி ... ம்ம்ம்.... உண்மை தான் - காதல் மனதினை விரும்ப வேண்டும் - உடலை அல்ல - நட்புடன் சீனா
    ///////

    வாங்க ஐயா..!

    ReplyDelete
  47. /////
    ஹேமா said... [Reply to comment]

    பெண்களின் மனதிற்கும் மதிப்புக் கொடுக்கிறீர்கள்.சந்தோஷமாக இருக்கிறது !

    இன்று இலண்டன் நேரம் 11.05 க்கு சனல் 4 ல் ஈழ அவலம் பற்றின ஒரு மணித்தியாலக் காணொளி காண்பிக்கிறார்கள்.உங்களுக்குத் தெரிந்த மற்றைய நாட்டு நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.ஒரு கிழமைக்கு இணையத்திலும் பார்க்கலாமாம்.நன்றி !
    ///////

    கண்டிப்பாக...

    ReplyDelete
  48. //
    பிரபாஷ்கரன் said... [Reply to comment]

    உண்மையில் மனசுதானே அழகு பிரமாதம்
    //////

    நன்றி நண்பரே..

    ReplyDelete
  49. /////////
    ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... [Reply to comment]

    அழகை வெறுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை சவுந்தர்! ஆனால் பொண்ணு அழகாக இருக்கணும்னு எதிர்பார்க்கிற நாம மொதல்ல அழகா இருக்கோணும்!!!!!
    //////////


    வாங்க நாராயணா...

    ReplyDelete
  50. //////
    தமிழ்வாசி - Prakash said... [Reply to comment]

    காதல் கடிதங்களில் உலக சாதனையா....நல்ல பகிர்வு.
    /////////

    வாங்க பிரகாஷ்...

    ReplyDelete
  51. //////
    துஷ்யந்தன் said... [Reply to comment]

    //“எனக்கு மனைவியா வருகிற பெண் அழகா இருக்கணும்ன்னு நான் நினைக்கிறேன்... அதனாலே தான்?”
    “சாரி.. நான் உங்க காதலை ஏத்துக்க முடியாத நிலை...”
    “என்ன காரணம்?”
    “எனக்குக் கணவனா வருகிற ஆண் அழகா இருக்கணும்ன்னு நான் நினைக்கிறேன்.. அதனாலே தான்....!”//

    நெத்தியடி ,

    ஆண்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டிய இடம் இது
    ///////

    வாங்க நண்பரே..
    தங்கள் கருத்துக்கு நன்றி...

    ReplyDelete
  52. /////
    சந்திரகௌரி said... [Reply to comment]

    இன்று தான் காதல் வீதி என் கண்ணுக்குப்பட்டது.அதில் பயணம் செய்வார் தன்மை பற்றிச் சற்று நோக்க உழ்நுழைந்தேன். கண்டிப்பாக நினைத்தது சரியாகவே இருந்தது. பெயருக்கேற்று ஆக்கம் விரிந்து கிடந்தது. உண்மையைக் கூறியிருக்கின்றீர்கள். இதை காதலிப்பவர்கள் யார்தான் ஏற்றுக்கொள்ளப் போகின்றார்கள்
    ////

    தங்கள் கருத்துக்கு நன்றி...

    ReplyDelete
  53. //காதல் கடிதங்கள் மொத்தம் ஆறாயிரம்! இது ஒரு கின்னஸ் சாதனை!”//
    ஹிஹி என்னுடையது ஒரு நாலஞ்சு குறையுது பாஸ் என்ன பண்ணலாம்??

    ReplyDelete
  54. சாரி பாஸ் லேட் ஆனதுக்கு...நான் காலை பதிவு போட்டு வேலை போனா..இரவு தான் வந்து மிச்சம் பார்ப்பது..
    ஆகவே கமென்ட் போடா,வாக்கிட லேட் ஆகும்..

    ReplyDelete
  55. நல்ல பதிவு...

    //ஒரு பெண் அழகாக இருந்துவிட்டால் போதும் அவளுக்கு இளைஞர்களின் காதல் பார்வைகள் பல்வேறு கோணங்களில் இருந்து அம்புகளாய் வந்து விடும்//

    காதல் என்பது ஒரு அழகான பெண்ணுக்கும் ஒரு அழகான ஆணுக்கும் இடையே வருவது!

    இப்படி யாரோ ஒரு கவிஞர் எழுதியதாக நினைவு...

    ReplyDelete
  56. எல்லாம் ஓகே. ஆனா நீங்க எப்படி?

    ReplyDelete
  57. பெண்ணுக்கு மரியாதை தாருங்கள் என்ற பதிவு அருமை ஆனாலும் அழகு தான் முதலில் மனதில் நுழைகிறது அது இயற்கை அதை தாண்டி தான் மற்றவை கண்ணுக்கு படுகிறது

    நல்ல பதிவு

    நன்றி
    ஜேகே

    ReplyDelete
  58. /////
    மைந்தன் சிவா said... [Reply to comment]

    //காதல் கடிதங்கள் மொத்தம் ஆறாயிரம்! இது ஒரு கின்னஸ் சாதனை!”//
    ஹிஹி என்னுடையது ஒரு நாலஞ்சு குறையுது பாஸ் என்ன பண்ணலாம்??
    ////////////


    அடப்பாவி அம்புட்டா எழுதியிருக்க..
    ஏதாவது சிக்கிச்சா...

    ReplyDelete
  59. ///////
    மைந்தன் சிவா said... [Reply to comment]

    சாரி பாஸ் லேட் ஆனதுக்கு...நான் காலை பதிவு போட்டு வேலை போனா..இரவு தான் வந்து மிச்சம் பார்ப்பது..
    ஆகவே கமென்ட் போடா,வாக்கிட லேட் ஆகும்..
    ////////

    பரவாயில்ல மச்சி....

    ReplyDelete
  60. //////
    யோவ் said... [Reply to comment]

    நல்ல பதிவு...

    //ஒரு பெண் அழகாக இருந்துவிட்டால் போதும் அவளுக்கு இளைஞர்களின் காதல் பார்வைகள் பல்வேறு கோணங்களில் இருந்து அம்புகளாய் வந்து விடும்//

    காதல் என்பது ஒரு அழகான பெண்ணுக்கும் ஒரு அழகான ஆணுக்கும் இடையே வருவது!

    இப்படி யாரோ ஒரு கவிஞர் எழுதியதாக நினைவு...
    //////

    தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே..

    ReplyDelete
  61. ///////
    N.H.பிரசாத் said... [Reply to comment]

    எல்லாம் ஓகே. ஆனா நீங்க எப்படி?
    ///////

    ரொம்ப தூரம்...

    ReplyDelete
  62. காதல் பிறப்பது அழகினால் மட்டும் அல்ல அப்படி பிறந்தால் அது காதலின் நோக்கத்தில் பிறந்தது அல்ல. . .பெண்மையின் குணம் அறிந்தும், ஆண்மையின் குணம் அறிந்தும் காதல் மலரட்டும். . .

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...