கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

25 March, 2014

பேருந்து பயணமும்... மனசுக்குள் மலரும் ஆசையும்...!
குளித்துமுடித்து
எண்ணெய் தேய்த்து படியவாரிய

தலைமுடியை கலைந்துவிட்டாலும்...

நெடிக்கொருமுறை புழுதிகிளப்பி
மரம்... கெடி... கிளை.... உரசி

கண்ணில் தூசி பட்டாலும்...

பின் இருப்பவர்களைபற்றி 
கவலைப்படாத முன்னிருக்கைக்காரரின் எச்சில் 
ஆடைகளில்பட்டு தெரித்தாலும்....

சில்லூட்டும் பனிப்படலமே
முகம் நனைக்கும் மழைத்துளியோ
சுட்டெரிக்கும் வெயில் கதிரோ....


உயரத்தில் பறந்துப்போகும்
பெயர் தெரியாத பறவையோ
இல்லை வித்தியாசமான எதுவோ....


விரையும் எதிர்பேருந்தில்
புன்னகைக்கும் அடையாளம் 
தெரியாத எதோ ஒரு முகமோ...

கொய்யா வேண்டுமா அல்லது
வேர்கடலை வேண்டுமா
என பரிதாபக்குரல்கள் இம்சித்தாலும்...!


இப்படி எதாவது ஒன்று
ஒவ்வொரு பயணத்தின்போதும்
வாய்க்கிறது என்றாலும்.....


அந்த ஜன்னலோர பயணத்தைதான் 
எதிர்பார்த்து சிறகடிக்கிறது
பேருந்துப் பயணங்களில் மனசு....7 comments:

 1. ஜன்னலோர பயணம் அனைவருக்குமே பிடிக்கும்...

  ReplyDelete
 2. பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம் என்று கொஞ்ச பாவையும் இருந்தால் .....!
  த ம +1

  ReplyDelete
 3. பயணம் என்றாரே ஐன்னல் ஓரம்தான்.
  உலகத்தைக் காணலாம் அல்லவா

  ReplyDelete
 4. இப்படி சப்புன்னு முடிஞ்சுப் போச்சே!

  ReplyDelete
 5. உண்மை தான் ரசனை மிக்க உணர்வுகள் சிறப்பான படைப்பிற்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .
  த.ம .7

  ReplyDelete
 6. ஜன்னல் ஓரப் பயணங்கள் என்றும் மனசுக்கு மிகவும் பிடித்தமான பயணமே...

  அருமையான கவிதை...

  ReplyDelete
 7. உண்மை... எத்தனை துன்பங்கள் இருந்தாலும் அதன் சுகமே தனி.....

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...