கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

09 September, 2018

ரஜினியின் பேட்ட, முகம் சுளிக்க வைத்த பிற தலைப்புகள்...


புதுசா ஒரு ரஜினி படம்.. இன்னைக்கு பேப்பர்ல வந்திருக்கு.. என் சக நண்பர்கள் சொல்ல... ஆட அப்படியா... டேய்.. நான் பார்க்கலடா...... படம் பேரு என்ன வச்சியிருக்காங்க.. என்று நான் கேட்க அது என்னவோ வாயிலேயே நுழையல.. ஏதோ சாமியார்மாதிரி உட்கார்ந்துகிட்டு இருக்கார் என்று மழுப்ப...

போடா... ரஜினி போய் சாமியார் மாதிரியா... அவர்படமெல்லாம் செம ஸ்டைல் படமாத்தான் வரும்...  அவருபடம்போய் வாயில நுழையலையா..  நீ விஜயகாந்த் ரசிகன்ல அப்படித்தான் பேசுவ.. என்று அவனை திட்டிவிட்டு... பள்ளியில் இருந்து கூட ஒருவனை கூட்டிக்கிட்டு அந்த முனுசாமி சைக்கிள் ஸ்டாண்டுக்கு ஓடினேன்... அங்கேதான் செய்திதாள் இருக்கும்... பள்ளியில் இருந்து அதுதான் மிக அருகாமை... எனக்கு சித்தப்பா முறை...

டேய்... ஏன்டா ஸ்கூல்ல இருந்து திரும்பிவர்றீங்க என்று முனுசாமி சித்தப்பா அதட்ட.. இல்லப்பா.. பேப்பர் பார்க்க வந்தோம் இப்போ பார்த்துட்டு போயிடுவோம்... தேடி பிடித்து படத்தை படித்துபார்த்தால் அதில் ஸ்ரீராகவேந்திரா.. ரஜினியின் 100-வது படம் என இருந்தது... படம் வெளிவந்த வருடம் 1985.. நான் அப்போது 4-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறேன்.. அட என்னடா இது சாமி படத்தில நடிக்கிறாரு... சாமி மாதிரி நடிக்க ரஜினிக்கு நல்லா இருக்காதே என்று புலம்பலோடு பள்ளிக்கு வந்தேன்.. அன்று முழுவதும் படத்தைப்பற்றிதான் பேச்சு...அந்த காலக்கட்டத்தில் ஊர்பஞ்சாயத்து டிவியில் வெள்ளிக்கிழமையில் ஒளியும் ஒலியமும்... ஞாயிற்றுக்கிழமையில் ஒரு படமுமே நம்முடைய பொழுதுபோக்கு சார்ந்த நிகழ்வு... மேலும் எங்க ஊரில் இருக்கும் ஸ்ரீ கணேஷ் டென்ட் கொட்டாதான் எங்கள் சினிமா தாகத்தை போக்கும்... அப்போது புதுப்படமெல்லாம் அங்கு வருவது அரிது.. ரீல் எல்லாம் அருந்தநிலையில் படம் கொட்டாவுக்கே வந்துசேரும்... இதிலும் கண்டிப்பா ஒருபடம் பாத்துடுவேன்... என் குடும்பத்தில் இருந்து யார் படத்துக்கு போனாலும் நாட் ஒட்டிக்கொள்வேன்...

ரஜினி படங்கள் வரும் போது இந்த பெரியபஷங்க செய்யும்  பந்தாக்களை பார்த்துக்கொண்டு இருப்பதுதான் என்னை போன்ற சிறார்களின் வேலை... கலர் காதிதம் கட்டுவது, மூங்கில்களை கொண்டு ஸ்டார் போன்று வடிவமைப்பு செய்து அதில் ரஜினி படங்களை ஒட்டி தொங்க விடவுவது என பந்தாக்கள் நீளுமு...  அதை தவிர்த்து  புதுப்படங்கள் என்றால் அதற்கு யாராவது மண்டைய போடவேண்டும்.. அப்போதுதான் 16-ஆம் சடங்கு அன்று இரவு கண்விழிப்பதற்காக வீடியோ போடுவாங்க... அப்போ கண்டிப்பா  4 புதுப்படம் கண்பார்ம்.... காலம் மாறுது... ஒவ்வொறு படத்திற்கும் எதிர்பார்ப்பு வரும் அதுபோலவே படங்களின் பங்களிப்பும் இருக்கும்.. அப்போது எங்களுக்கு விஜயகாந்தை ரசிக்கும் பசங்க கூடத்தான்போட்டி கமல்படத்தை அப்பவே நாங்க போர் என்று ஒதுக்கியதுன்டு...

காலம் ஓடுகிறது... மீண்டும் அதே ஒரு சம்பவம்... ஊரில் இருந்து திருவள்ளுருக்கு டவுன்பஸ் தடம் எண் டி57-ல் வரும் போது நண்பர்கள் பேசிக்கொண்டதில்... இன்னிக்கு ரஜினி படம் பேப்பர்ல வந்திருக்கு என்று சொல்ல எனக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது... நான் அப்போது அச்சகத்தில் வேலை செய்துக்கொண்டிருக்கிறேன்... (வாசன் பிரிண்டர்ஸ்...ஆசூரித் தெரு திருவள்ளுர்..)

சரிடா... படம் பேர் என்ன... அதற்கு அவன் என்ன படம்பேரு வக்கிறாங்களோ என்று சலித்துக்கொண்டே ஏதோ படையப்பா-வாம்.. என்றான்... என்ன படையப்பா.. அப்படின்னா.. இல்ல நீ பொய்சொல்ற... என்று விவாதங்களை முடித்துக்கொண்டு நேராக பேருந்து நிலையம் வந்து பேப்பர் வாங்கி படத்தலைப்பை பார்த்ததும் எனக்கு சப்பென்று ஆகிவிட்டது...

ரஜினி, சிவாஜி நடிக்கிறாங்க... இந்த டைரக்டர் ஏன் இப்படி பெயர் வச்சிருக்கார்... என்று அவரை சபித்து விட்டு கடந்துப்போகிறோம்... ஏன் படத்தலைப்பு முக்கியம் என்று அப்போது விரும்பினோம் என்றால் அதை வைத்தே மற்ற நடிகர்கள் ரசிகர்களை கிண்டல் அடிப்போம்... இப்போது அவர்கள் முறை.. என்னடா படையப்பா சொறியப்பா என்று ஆரம்பித்து விட்டார்கள்... இது 1999-ஆம் வருடம்...  ஆனால் படம் வந்தபோது நல்லதொரு வெற்றியை பெற்றது...

ரஜினி படத்தின் தலைப்பு என்பது கதாபாத்திரன் பெயரில்தான் அதிக இடத்தை பிடித்திருக்கிறது ஜானி, பில்லா, ஆரம்பித்து  கபாலி, காலா வரை நீள்கிறது.. அப்படி இல்லை வென்றால் கதாபாத்திரத்தின் தன்னைமையை பொறுத்தும், கதாநாயகனின் குணாதிசயத்தின் அடிப்படையிலும் தலைப்புகள் மாறும் உதாரணத்திற்கு மன்னன், பாயும் புலி, தளபதி, குசேலன் இப்படியாய்... ஒருதிரைப்படத்தின் பெயர் டக்கென மனதில் நின்று விடவேண்டும் அதுவே படத்திற்கான முதல் வெற்றி... அந்த வகையில் ரஜினியின் பலபடங்கள் மக்கள் மனதில் நின்றிருக்கிறது...

தற்போதைய காலத்தில் 6.00 மணிக்கு படத்தின் பெயர் டீசர் வெளியாகிறது என்றதும்... 5.30 மணிக்கே செய்தி தளங்களையும்.. சோசியல் மீடியாக்களையும் வேடிக்கைப்பார்த்து அறிந்துக்கொள்கிறோம்... அதுபோல்தான் வந்துடிச்சா.. வந்துடிச்சா... என வெறிக்கவெறிக்க மொபைலை நோண்டி ஒருவழியாய் பார்த்தால் #பேட்ட.. அப்படின்னு படத்தலைப்பை பார்த்து இது என்ன பேட்ட கோட்டன்னுகிட்டு அப்படின்னு சப்பென்று ஆகிவிட்டது...சமீபத்தில் வந்த கபாலியும்.. சரி காலாவும் சரி... படத்தலைப்பார்த்தவுடன் இது என்ன தலைப்பு என்று கிண்டலடித்துவிடுகிறோம்... பிறகு ஊர் முழுக்க இதே பெயரை திரும்ப திரும்ப பார்த்து கேட்டு மிகவும் கம்பீரமான பெயராக மாறிவிடுகிறது... கபாலி என்ற அடிமட்டவில்லன் பெயர் தற்போது உயர்மட்ட மாஸ் பெயராக மாறிவிட்டது... அதே போல்தான் கரிகாலன் பெயரும்...

படத்தின் பெயர் ஏன்டா இப்படி வைக்கிறீங்க என்று சோஷியல் மீடியால் சத்தம்போட்டு கேட்கிறோம்... பிறகு படம்வந்தப்பிறகு அதன் கதையை அறிந்து படத்தலைப்பு சரிதான் என்ற முடிவுக்கு வருகிறோம்.. (உதாரணத்துக்கு என் ஆளோட செருப்ப காணோம்... ஏன்டா தலையில எண்ணை வைக்கல..)

சரி தலைவர் படம் தலைப்பு #பேட்ட... அப்படி என்றால் படத்தில் பகுதியையோ அல்லது கதையை சார்ந்ததாகவோத்தான் இருக்கும் அப்படி இந்தப்படமும் வந்தப்பிறகு இந்த தலைப்புக்கான நியதி புரிந்துவிடும்...

மேலும் இதில் சன்பிக்சர்ஸ்... கார்த்திக்சுப்புராஜ்... ரஜினி என வெற்றி பெற்றவர்களின் கூட்டணி என்பதால் வெற்றியின் இலக்கை கண்டிப்பாக அடைந்துவிடும்.. யாரும் இறுதில் பணத்தை திருப்பிகொடுங்கள் என்று கேட்க மாட்டார்கள் என்று நம்புவோம்...

பேட்ட டீசர்...

0 comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...