ஒருவன் தான் வேலை செய்யும் கம்பெனியில் இருந்து வெளியே வந்தான்.
அவன் நண்பன் நேராக இவனிடம் வந்து,
"ஒரு கட்டிங் போட்டுட்டு போலாமா" என்றான்.
"சரி", என்று அவனுடன் நடந்தான்.
வழியில் அவனுடைய செருப்பு 'சரக்' என அறுந்தது.
அவன் கண்களில் நீர் அருவியாய் பெருக்கெடுத்தது.
"டேய், ஒரு செருப்பு பிஞ்சு போனதுக்கா இப்படி கண்ணீர் விடற?" என்று சிரித்தான் நண்பன்.
"அதுக்கு இல்ல, என் மனைவி ஒரு தீர்க்கதரிசி. அது எனக்கு இப்போ தான் தெரிஞ்சுது" என்றான்.
"ஓஹோ.. அது எப்படி தெரிஞ்சுது?" என்றான் நண்பன்.
"காலைல வரும்போதே என் பொண்டாட்டி சொன்னா, 'வேலை முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வராம சரக்கடிக்க போனேனா செருப்பு பிஞ்சுடும்'-னு. இப்போ பாரு அதே மாதிரி நடந்துருச்சு."
கண்ணா ஒரு செருப்பு பிஞ்சதுக்கே இப்படி பீல் பண்றீயே இன்றும் மிச்சம் இருக்கிற இன்னோரு செருப்பும் பிய்யப்கோகுதே அப்ப என்ன செய்யப்போற...!!!
கண்ணா ஒரு செருப்பு பிஞ்சதுக்கே இப்படி பீல் பண்றீயே இன்றும் மிச்சம் இருக்கிற இன்னோரு செருப்பும் பிய்யப்கோகுதே அப்ப என்ன செய்யப்போற...!!!
*******************************
மனைவி: "என்னங்க! உங்க பொறந்த நாளைக்கு நான் ஒரு ட்ரெஸ் எடுத்திருக்கேங்க."
கணவன்: "வாவ்! சூப்பர். எங்கே எடுத்துட்டு வந்து காமி"
மனைவி: "கொஞ்சம் பொறுங்க! போட்டுட்டு வந்தே காமிக்கிறேன்."
கணவன்: ???!!!!
இது என்னங்க அநியாயம்... அவங்க பிறந்த நாளுக்கும் அவங்களே டிரஸ் எடுக்குக்குறாங்க... நமம்மோட பிறந்தநாளுன்னாலும் அவங்களே டிரஸ் எடுத்துக்கிறாங்க... இதுமட்டும் இல்லாமல் பண்டிகை, கல்யாண நாள், இப்படி எது வந்தாலும் அவங்களே டிரஸ் எடுத்துப்பாங்க... ஆனா ஆண்டு கடைசியிலே சொல்லுவாங்க பாருங்க... எனக்கு என்ன செஞ்சிங்க... ஒரு நகை இருக்கா... ஒரு டிரஸ் இருக்கா... இது எல்லா வீட்டிலும் நடக்கிற சகஜமான நிகழ்வாயிடிச்சி தானே...
*******************************
"ஆட்டோ வருமாப்பா?"
"வரும் சார். எங்க போகணும்?"
"அதோ! ரெண்டு நாய் சண்டை போட்டுகிட்டிருக்கில்ல. அதைத் தாண்டி விடணும்!"
இது மாதிரி என்வாழ்விலும் நடந்திருக்கு ஆனா நான் நாய்க்கெல்லாம் பயந்ததில்லை...
ஒரு மழைகாலத்தில நான் வேலை செய்யும் தெருவில நிறைய தண்ணி அந்த வரியே ஒரு ஆட்டோ வந்தது.... நிறுத்தி ஏறினேன்.... ஆட்டோகார் எங்கன்னு கேட்டார்.... இந்த தண்ணிய தாண்டி விடுங்கன்னேன்... நிலைமையை புரிந்த அவர் தாண்டி விட்டுவிட்டு காசு கொடுத்தா வேண்டாம் என்று சொல்லிவிட்டார்....
இது மாதிரி என்வாழ்விலும் நடந்திருக்கு ஆனா நான் நாய்க்கெல்லாம் பயந்ததில்லை...
ஒரு மழைகாலத்தில நான் வேலை செய்யும் தெருவில நிறைய தண்ணி அந்த வரியே ஒரு ஆட்டோ வந்தது.... நிறுத்தி ஏறினேன்.... ஆட்டோகார் எங்கன்னு கேட்டார்.... இந்த தண்ணிய தாண்டி விடுங்கன்னேன்... நிலைமையை புரிந்த அவர் தாண்டி விட்டுவிட்டு காசு கொடுத்தா வேண்டாம் என்று சொல்லிவிட்டார்....
*******************************
நண்பர் பதிவிலிருந்து.
கணவன் சோகமாக வீடு திரும்பினான்.
மனைவி: "ஏன், என்ன ஆச்சு?"
கணவன்: "மத்தியானம் லஞ்ச் முடிச்சுட்டு ஒரு தம் போடலாம்னு ஆபீசை விட்டு வெளியே வந்தேன். எதிரே இருந்த பொட்டிக்கடையில் சிகரெட் பத்தவைக்கக்கூட இல்லை, எங்க ஆபீஸ் கட்டிடம் இடிஞ்சு விழுந்து ஆபீஸ்ல எல்லாமே குளோஸ், என்னைத் தவிர"
மனைவி: "தப்பிச்சீங்க. ஆண்டவன் புண்ணியம்"
தொலைக்காட்சி: "இறந்தவர்கள் குடும்பத்திற்குத் தலா இருபது லட்ச ரூபாய் நஷ்ட ஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது"
மனைவி: "இந்த சிகரெட் சனியனை நிறுத்துன்னா கேட்கறியா?"
*******************************
"சரி, அதுக்கு என்ன இப்ப?"
"முகூர்த்த நாள் குறிச்சி கொடுங்கன்னு அவருக்கிட்ட போனோம்"
"என்னாச்சு?"
"அடுத்த முகூர்த்த நாளான்னிக்கு வாங்க. உங்க வீட்டுக்கு கல்யாணத்துக்கு நாள் குறிச்சித் தரேன்னு வாய்தா சொல்லி அனுப்பிட்டாரு!"
தம்பி கொஞ்ச நாளைக்கு சந்தோசமா இருந்துக்கோ...
தம்பி கொஞ்ச நாளைக்கு சந்தோசமா இருந்துக்கோ...
*******************************
கணவன் - மனைவிக்கு இடையே நடந்த சண்டையின் போது:-
#கணவன்: "உன்னைப் பார்த்து நான் பயப்படறேன்னு நெனச்சுடாதே!"
#மனைவி: "பொய் சொல்லாதே! என்னைப் பொண்ணுப் பாக்க வரும்போது 6 பேரோட வந்தே!
நிச்சயம் பண்ணும் போது 100 பேரோட வந்தே!!!
தாலி கட்டும் போது 500 பேரை கூட்டிட்டு வந்தே!!!"
#கணவன்: ??????
#மனைவி: "ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் நான் உன் வீட்டுக்குத் தனியாவே வந்திருக்கேன் பாத்தியா! இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு..."
உன் மாமன் பொண்டாட்டி இப்படி இல்லப்பா. அவ ரொம்ப நல்லவ.
ReplyDeleteகண்ணா ஒரு செருப்பு பிஞ்சதுக்கே இப்படி பீல் பண்றீயே இன்றும் மிச்சம் இருக்கிற இன்னோரு செருப்பும் ... ஹஹா செம கமெடி .. >> சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்
ReplyDelete