கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label ஏக்கம். Show all posts
Showing posts with label ஏக்கம். Show all posts

11 May, 2018

படுக்கையறை சம்பவங்கள்...!





கனவுகளின் 
தொழிற்சாலை...


ஏக்கங்களின் 
உற்பத்திக்கூடம்...


ஓடிய படகுகள் 
ஒதுங்கும் கறை...


பாடும் பறவைகளின் 
பல்லவி தேசம்...


வாழ்க்கை தேசத்து 
வசந்த மண்டபம்...


இளைய தலைமுறையின் 
அந்தப்புறம்...


பணம் படைத்தவனுக்கு
இங்கு நரகத்தின் 
அவஸ்தைகள்...


ஏழை வாசிக்கு
இங்கு சொர்கத்தின் 
சுகங்கள்...


நாணம் கொள்ள 
இது நாடகமேடை...


மோகம் கொள்ள 
இது பள்ளியறை...


குடுமபத் தலைவிக்கு 
இது விண்ணப்ப மையம்...


பெண்ணை பெற்றவனுக்கு
இது வேதனை கூடம்...


சோகங்களை சொல்லி அழுது
தலையனைகளோடு
தாம்பத்தியம் கொள்வதும் 
இங்குதான்...


மோங்களை அள்ளி அனைத்து
தலைகால் புரியாமல்
தலை சுற்றி கவிழ்வதும் 
இங்குதான்...


சீறும் சிங்கங்களை
பாயும் காளைகளை
சீறிய ரத்தத்தை 
சிறுக வைத்து
கால் கட்டு போட்டு 
கவிழ்த்தி கிடப்பதும் இங்குதான்..


கட்டில் வெறுத்து 
தொட்டில் வெறுத்து
முட்டிய காமத்தை 
முழுதாய் தீர்த்து
காவிக்கதைகள் துவங்கியதும் 
இங்குதான்...


காதல் ‌கொண்டவனுக்கு
இவ்விடம் 
முட்களை விதைக்கிறது...


காதலை ‌வென்றவனுக்கு
இவ்விடம் 
மலர்களை விதைக்கிறது...


இங்குதான் நிகழ்த்தப்படுகிறது
நிரந்தர மரணத்திற்கான
நிகழ்கால ஒத்திகைகள்...


நித்தம் நித்தம் தென்றல் வீசி
ஜன்னலோடு சில கதைகள் பேசி
வாடிய மனதை 
மலர வைக்கும்...
வாலிப மனதை 
வாட வைக்கும்...

பல்லவி வரும்
அதை பாடித் தொலைக்கும் வரை
இவ்விடம் என்னை
பாடாய் படுத்தும்...


கவிதை வரும்
அதை எழுதித் தொலைக்கும் வரை
இவ்விடம் என்னை 
எதிரியாய் நடத்தும்....


ஜீவன் சுமந்து 
ஜீரணிக்கும் வரை
படுக்கை அறை 
ஒரு சுதந்திரசிறை...


படுக்கை அறையில் 
சண்டைகள் இருக்கும்
தோற்றவர் வெல்வார் 
வென்றவர் தோற்பார்


படுக்கை அறையில் 
மௌனம் இருக்கும்
உறக்கத்தில் கொஞ்சம்... 
மயக்கத்தில் கொஞ்சம்...


இறுதியாய்...


படுக்கை அறை
ஆக்கலும் அழித்தலும் மட்டுமல்ல
காத்தலும் செய்கிறது...


படுக்கை அறை
ஓய்வையும் உறக்கத்தையும் மட்டுமல்ல
வாழ்க்கையைகூட நிர்ணயிக்கிறது... 




22 March, 2018

பஸ்ஸில் நடந்த உண்மைச் சம்பவம்



இன்னும் அறிமுகமாகாத
என் சி‌‌‌நேகிதியே...


தற்போதெல்லாம்
நாம் இருவரும் வெவ்வேறு
திசைகளில் பயணிக்கிறோம்
ஒரே பேருந்தில்...


ஏறுவதும்.... இறங்குவதும்...
நீ முன்வழியில்...
நான் பின்வழியில்....


வலபுற ஜன்னலோரத்தில்
அமர்ந்துக்கொண்டு
ஜன்னலுக்கு வெளியே 
சிறகடிக்கிறது உன் மனசு...


நான்... 
இடபுற ஜன்னலில்....


அருகில் அமர்ந்திருப்பது 
யாரென்று அறிந்திலர் 
இருவரும்...


நிறுத்தங்கள் பல கடந்து
நீயும் நானும்
இறங்கும் இடம் வருகிறது....


ஏறியது போலவே 
இறஙகும் ‌போதும்
நீ முன்வழி.. 
நான் பின் வழி...


இது  தான்  வாடிக்கை
பல நாட்களாய்...


ஆனால்...!
ஊரார் மூலம் காற்று வழியில்
‌ஒரு செய்தி வந்துக்‌‌கோண்டிருக்கிறது.....

இருவரும்...
தினமும்....
”ஒன்னாதான் போறாங்களாம்...
”ஒன்னாதான் வாறாங்களாம்....”
என்று...


திருமணமாகாத 
ஏக்கத்தில் நீயும்....

தங்கைகள் திருமணம்..., 
வேலையின்மை
என்ற விரக்தியில் நானும்...
நடை பிணமாய் 
வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்...


ஊரார்க்கு என்ன தெரியும்....

பேருந்தில்... 
நாம் அமர்ந்து எழும்
இருக்கைகள் மட்டுமே அறியும் 
நம் மனங்கள் சுமக்கும்
வேதனைகள்.... 

(மீள்)
Related Posts Plugin for WordPress, Blogger...