இன்னும் அறிமுகமாகாத
என் சிநேகிதியே...
தற்போதெல்லாம்
நாம் இருவரும் வெவ்வேறு
திசைகளில் பயணிக்கிறோம்
ஒரே பேருந்தில்...
ஏறுவதும்.... இறங்குவதும்...
நீ முன்வழியில்...
நான் பின்வழியில்....
வலபுற ஜன்னலோரத்தில்
அமர்ந்துக்கொண்டு
ஜன்னலுக்கு வெளியே 
சிறகடிக்கிறது உன் மனசு...
நான்... 
இடபுற ஜன்னலில்....
அருகில் அமர்ந்திருப்பது 
யாரென்று அறிந்திலர் 
இருவரும்...
நிறுத்தங்கள் பல கடந்து
நீயும் நானும்
இறங்கும் இடம் வருகிறது....
ஏறியது போலவே 
இறஙகும் போதும்
நீ முன்வழி.. 
நான் பின் வழி...
இது  தான்  வாடிக்கை
பல நாட்களாய்...
ஆனால்...!
ஊரார் மூலம் காற்று வழியில்
ஒரு செய்தி வந்துக்கோண்டிருக்கிறது.....
இருவரும்...
தினமும்....
”ஒன்னாதான் போறாங்களாம்...
”ஒன்னாதான் வாறாங்களாம்....”
என்று...
திருமணமாகாத 
ஏக்கத்தில் நீயும்....
தங்கைகள் திருமணம்..., 
வேலையின்மை
என்ற விரக்தியில் நானும்...
நடை பிணமாய் 
வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்...
ஊரார்க்கு என்ன தெரியும்....
பேருந்தில்... 
நாம் அமர்ந்து எழும்
இருக்கைகள் மட்டுமே அறியும் 
நம் மனங்கள் சுமக்கும்
வேதனைகள்.... 
(மீள்)


அடடா... அருமை...!
ReplyDeleteநன்றி... தலைவரே
Deleteஅருமை
ReplyDeleteநன்றி... ஐயா..../
Delete