கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label காந்தி. Show all posts
Showing posts with label காந்தி. Show all posts

02 October, 2013

ஆச்சரியம்...! இவைகளும் காந்தியின் வாழ்வில் நடந்ததுதான்



ஒரு முறை காந்தியடிகள் பயணிகள் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது அவரைப் பிடிக்காத ஒரு ஆங்கிலேயன் அவரைப்பற்றி  அவரைப்பற்றி மிகவும் மோசமான முறையில் கவிதைகளை எழுதி அதை அவரிடமே கொடுத்தான்.

காந்திஜி அந்த கவிதைகளைப் பொறுமையாக படித்துவிட்டு அதிலுள்ள குண்டூசியை மட்டும் எடுத்துக் கொண்டு,  அந்த கவிதைகளைக் கிழித்து எறிந்து விட்டார்.

மறுநாள் அந்த ஆங்கிலேயன், நம் காந்தியடிகளைப் பார்த்து " நான் எழுதிய கவிதைகள் எப்படி?" என்றான் மிகவும் ஏளனமாக..

அதற்கு காந்தியடிகள் கையிலிருந்த அந்த குண்டூசியைக் காட்டி "சாரத்தை எடுத்துக் கொண்டு, சக்கையை எறிந்து விட்டேன்" என்றாராம்




பால கங்காதர திலகர் இறந்தவிட்ட சமயம். இறுதி யாத்திரை தொடங்குகிறது. கங்காதர திலகரின் உடலைத் தூக்கி செல்வதற்காக மகாத்மாவும் வருகிறார். 

திலகர் ஒரு பிராமணர். அவரது உறவினர்கள் காந்தியிடம் "பிராமணர்கள் அல்லாதவர்கள் பிராமணரின் பிணத்தைத் தூக்கக்கூடாது. அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்றனர்.

காந்திஜியோ " பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டவர்களுக்கு எந்த ஜாதியும் கிடையாது. அந்த வகையில் நானும், திலகரும் ஒரே ஜாதி" என்று சொல்லி பாடையைச்சுமந்து சென்றாராம்.


ஒரு லண்டன் பத்திரிகையாளர் காந்தியிடம் "இந்தியக் காடுகளில் விலங்குகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவது எனக்குப் பெரும் வருத்தத்தை அளிக்கிறது" என்றார்.

அதற்கு காந்தி "உண்மை தான், உங்கள் கருத்தை நான் மறுக்கவில்லை. அவற்றின் எண்ணிக்கை  நாட்டில் அதிகரித்து வருகிறது என்பதை நினைத்துப் பார்க்கும்போது இன்னும் அதிக வருத்தமாக இருக்கிறது" என்றாராம்



ஜூன் 15, 2007-ல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அக்டோபர் 2-ம் நாளை அனைத்துலக வன்முறையற்ற நாளாக (உலக அஹிம்சை தினம்) ஏகமனதாகத் தீர்மானித்தது. 

உலகில் வன்முறையை ஒழித்து அமைதியை நிலை நாட்ட மகாத்மா காந்தி அரும் பாடுபட்டதை கௌரவிக்கும் பொருட்டு அவர் பிறந்த நாளை சர்வதேச வன்முறையற்ற தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

தனது வாழ்நாள் முழுவதும் அகிம்சையைக் கடைப்பிடித்து அதன் உன்னதத்தை அனைவருக்கும் உணர்த்திய மகாத்மா காந்தியின் கொள்கைகளை உலக நாடுகள் அனைத்தும் பறைசாற்றி, அகிம்சையின் மகத்துவத்தை அறியச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. 

அஹிம்சை, பரந்த மனப்பான்மை, மனித உரிமை, சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றுக்கு மதிப்பளிப்பது முக்கியம் என அந்தப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

02 October, 2012

ஒரு சாமானியனே போதும் காந்தி எதற்கு..


மகாத்மா காந்தியை பிரிட்டிஷ் நிருபர் ஒருவர் பேட்டி கண்டார். அவர் காந்திஜியை மட்டம் தட்ட விரும்பி அவரிடம் “இந்திய மக்களின் சார்பாக ஆங்கிலேயே அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த உங்கள் மக்கள் உங்களை மட்டும் தேர்ந்தெடுக்க என்ன காரணம்? உங்களைவிட சிறந்த அறிவாளி யாரும் அவர்களுக்கு கிடைக்கவில்லையா..?” என்று கிண்டலாக கேட்டார்.

இதைப்புரிந்து கொண்ட காந்திஜி மெல்ல புன்னகைத்தபடி “உங்களது ஆங்கிலேய அரசை சமாளிக்க மிகப்பெரிய அறிவாளி தேவையில்லை. என்னைப்போன்ற மிகச் சாமான்யனே போதும் என்று என் இந்திய மக்கள் நினைத்திருக்கலாம்...” என்றார்.

காந்திஜி அவர்களின் வாழ்க்கை, அவருடைய நாட்கள், அவருடைய  வார்த்தைகள் அத்தனையும் இன்று வாழும் தலைமுறைக்கு வேதங்கள். இன்று உலகம் இந்தியாபைப்பார்த்து... மிகப்பெரிய வெற்றியின் ரகசியத்தை, அமைதிக்கான வழியை, அனைவரையும் வெல்லக்கூடிய தந்திரத்தை, ஆத்ம சக்தியை கற்றுக்கொண்டுள்ளது அது அஹிம்சை.

கத்தியின்றி ரத்தமின்றி ஒரு யுத்தத்தை இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தவர் உத்தமர் காந்தி. அவருடைய கொள்கைகள்.. அவருடைய போராட்டங்கள், அவருடைய வழிமுறைகளை உலகம் பின்பற்றிக்கொண்டு வருகிறது.. அதை நாம் மறந்துக்கொண்டு வருகிறோம்...

உத்தமரின் இந்த அவதார நாளில் நாமும் அஹிம்சையை அரவணைப்போம். கத்தியின்றி ரத்தமின்றி இந்தியா வல்லரசாகட்டும்...
Related Posts Plugin for WordPress, Blogger...