கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

02 October, 2013

ஆச்சரியம்...! இவைகளும் காந்தியின் வாழ்வில் நடந்ததுதான்



ஒரு முறை காந்தியடிகள் பயணிகள் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது அவரைப் பிடிக்காத ஒரு ஆங்கிலேயன் அவரைப்பற்றி  அவரைப்பற்றி மிகவும் மோசமான முறையில் கவிதைகளை எழுதி அதை அவரிடமே கொடுத்தான்.

காந்திஜி அந்த கவிதைகளைப் பொறுமையாக படித்துவிட்டு அதிலுள்ள குண்டூசியை மட்டும் எடுத்துக் கொண்டு,  அந்த கவிதைகளைக் கிழித்து எறிந்து விட்டார்.

மறுநாள் அந்த ஆங்கிலேயன், நம் காந்தியடிகளைப் பார்த்து " நான் எழுதிய கவிதைகள் எப்படி?" என்றான் மிகவும் ஏளனமாக..

அதற்கு காந்தியடிகள் கையிலிருந்த அந்த குண்டூசியைக் காட்டி "சாரத்தை எடுத்துக் கொண்டு, சக்கையை எறிந்து விட்டேன்" என்றாராம்




பால கங்காதர திலகர் இறந்தவிட்ட சமயம். இறுதி யாத்திரை தொடங்குகிறது. கங்காதர திலகரின் உடலைத் தூக்கி செல்வதற்காக மகாத்மாவும் வருகிறார். 

திலகர் ஒரு பிராமணர். அவரது உறவினர்கள் காந்தியிடம் "பிராமணர்கள் அல்லாதவர்கள் பிராமணரின் பிணத்தைத் தூக்கக்கூடாது. அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்றனர்.

காந்திஜியோ " பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டவர்களுக்கு எந்த ஜாதியும் கிடையாது. அந்த வகையில் நானும், திலகரும் ஒரே ஜாதி" என்று சொல்லி பாடையைச்சுமந்து சென்றாராம்.


ஒரு லண்டன் பத்திரிகையாளர் காந்தியிடம் "இந்தியக் காடுகளில் விலங்குகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவது எனக்குப் பெரும் வருத்தத்தை அளிக்கிறது" என்றார்.

அதற்கு காந்தி "உண்மை தான், உங்கள் கருத்தை நான் மறுக்கவில்லை. அவற்றின் எண்ணிக்கை  நாட்டில் அதிகரித்து வருகிறது என்பதை நினைத்துப் பார்க்கும்போது இன்னும் அதிக வருத்தமாக இருக்கிறது" என்றாராம்



ஜூன் 15, 2007-ல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அக்டோபர் 2-ம் நாளை அனைத்துலக வன்முறையற்ற நாளாக (உலக அஹிம்சை தினம்) ஏகமனதாகத் தீர்மானித்தது. 

உலகில் வன்முறையை ஒழித்து அமைதியை நிலை நாட்ட மகாத்மா காந்தி அரும் பாடுபட்டதை கௌரவிக்கும் பொருட்டு அவர் பிறந்த நாளை சர்வதேச வன்முறையற்ற தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

தனது வாழ்நாள் முழுவதும் அகிம்சையைக் கடைப்பிடித்து அதன் உன்னதத்தை அனைவருக்கும் உணர்த்திய மகாத்மா காந்தியின் கொள்கைகளை உலக நாடுகள் அனைத்தும் பறைசாற்றி, அகிம்சையின் மகத்துவத்தை அறியச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. 

அஹிம்சை, பரந்த மனப்பான்மை, மனித உரிமை, சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றுக்கு மதிப்பளிப்பது முக்கியம் என அந்தப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 comments:

  1. அப்போதே நாட்டில் அதிகரித்து வருகிறது என்றால்... இன்று...? ம்...

    ReplyDelete
  2. மிகச் சிறந்த சிறப்புப்பதிவின் மூலம்
    அறியாதன சில அறிந்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சுவையான சம்பவங்களின் தொகுப்பு அருமை! நன்றி!

    ReplyDelete
  4. சுவையான சுவாரஸ்யங்கள்...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...