கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label சர்ச்சை. Show all posts
Showing posts with label சர்ச்சை. Show all posts

14 November, 2012

துப்பாக்கி படம் இஸ்லாமியத்திற்கு எதிராக உள்ளதா?


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் துப்பாக்கி தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் இஸ்லாமியத்திற்கு எதிராகவும், இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போலவும் சித்தரிக்கபட்டுள்ளதாக சில கருத்துக்கள் எழுந்துள்ளது.  சில இஸ்லாமி அமைப்புகள் விஜய் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாகவும் சில செய்திகள் வருகின்றது..


அப்படி என்ன இஸ்லாமியர்களை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று பார்ப்போம். பொதுவாக இந்தியத் திரைப்படங்கள் என்றாலே அந்த திரைப்படத்தில் தீவிரவாதி போன்ற கதாபாத்திரம் வந்தால் அதற்கு சரியான தேர்வாக ஒரு இஸ்லாமிரை காட்டுவது என்பது இத்தனை ஆண்டுகள் நீடித்து வருகிறது. அதுவும் தமிழ் படம்என்றால் தீவிரவாதியானவன் கண்டிப்பாக தீவிர இஸ்லாமியனாகத்தான் இருக்க வேண்டும் என்ற பார்முலாலை தமிழ் திரைவுலகம் கடைபிடித்து வருகிறது.


தமிழ் படத்திற்கு உள்ள பார்முலாபடி துப்பாக்கி படத்தில்  தீவிரவாதிகள் என்றால் அது இஸ்லாமியர்களைத்தான்  காட்டவேண்டும் என்று முடிவு செய்து படத்தில் வரும் அத்தனை தீவிரவாதிகளும் இஸ்லாமியர்கள் போல் காட்டப்பட்டுள்ளது. அவர்களை கொண்று நாட்டுக்கு ஏற்படும் தீமையை கதாநாயகன் போக்குவது போன்று படம் உள்ளது.



இந்த உலகிற்கு, மனித சமூகத்திற்கு, அடுத்த உயிருக்கு தீங்கு விளைவிக்கும் செயல் செய்தால் அது யாராக இருந்தாலும் தீவிரவாதியே ஆனால் உலகம் ஒரு சில சம்பவங்களை வைத்துக்கொண்டு தீவிரவாதிகள் என்றால் அது இஸ்லாமிய இனம்தான் என்ற முடிவுக்கு வருவது கொஞ்சம் அதிகப்படியாகத்தான் தெரிகிறது. 


இந்தியாவில் பெரும்பாலன இஸ்லாமிய மக்கள் வாழ்கிறார்கள். அந்த இனத்தையே தீவிரவாதிகள் போல் காட்டுவது அனைவரையும் நாம் இழிவு படுத்துவதுபோல்தான் ஆகும். இஸ்லாமியத்தில் தீவிரவாத கருத்துடைய சிலர் இருக்கிறார்கள் என்றால் தான் வாழும் நாடு நன்றாக இருக்க வேண்டும் என்ற நாட்டுப்ற்றும் அவர்களில் இருக்கத்தான் செய்கிறது. இந்தியாவுக்கா பாடும் இஸ்லாமிய இன இளைஞர்கள் இங்கு ஏராளம்.



கமல்ஹாசன் இயக்கத்தில் வெளிவந்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் கூட தீரவாதிகள் நால்வரில் ஒருவர் இந்துவாக காட்டியிருப்பார்கள். அவர்களை அழிக்கும் போலீஸ் அதிகாரிகளில் ஒருவராக ஹாரீப் என்ற ஒரு முஸ்லீம் இருப்பார். அதனால் அந்தப்படம் பொதுமைபடுத்தி காட்டப்பட்டிருந்தது. 

ஆனால் துப்பாக்கி படத்தில் தீவிரவாதியாக இருக்கும் அனைவரும் இஸ்லாமியர் என்ற போர்வையில் இருந்தது. ஆனால் அவர்கள் குரான் படிப்பது உருது பேசுவது, இஸ்லாமியத்தை உயர்த்தி பேசுவது போன்ற காட்சிகள் இல்லாமல் இருப்பது கொஞ்சம் ஆறுதல். துப்பாக்கி படம் வெளிப்படையாக இஸ்லாமியத்தை தாக்குவதாக இல்லை அதற்காக படத்திற்கு வாக்காலத்து வாங்க எனக்கு விருப்பம் இல்லை.


பொதுவாக ஒரு குறிப்பிட்ட இனத்தையோ, ஒரு சமூகத்தையோ, ஒரு குழுவையோ தவறாக குறிப்பிடுவது என்பது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. இனிவரும் இந்தியதிரைப்படங்கள் அதுபோன்ற காட்சி அமைப்பை கொஞ்சம் குறைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும். அதுவும் ஒரு இடத்தில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து அதுபோன்ற படங்கள் தொடர்ந்து எடுக்கும்போது அந்த சம்பவம் இன்னும் தன்னுடைய வடுக்களை மறக்காமல் துன்பத்திலே நீடிக்கவைக்கிற செயலாகத்தான் அது தெரிகிறது. குண்டு வெடிப்பு என்றால் மும்பை என்பது அதனுடைய மற்ற புகழ்களை மறைக்க வைப்பது போல் உள்ளது.

08 October, 2012

நாட்டில் கோயில்களைவிட கழிப்பறைகளே முக்கியமானவை



முதலில் உங்களிடம் ஒரு கேள்வி...?
எல்லா இடத்தையும் கோவில்களாக பாவிக்கலாம் ஆனால் எல்லா இடத்தையும் கழிவறையாக பாவிக்க முடியுமா..? 

நம் நாட்டில் நடந்துக்கொண்டிருப்பது இதுதான். மக்கள் அனைத்து இடத்தையும் கழிப்பறையாக பயன்படுத்தி வருகிறார்கள். நாட்டில் கோயில்கள் இருக்கும் அளவிற்கு கூட கழிவறைகள் இருப்பதில்லை. கிராம பகுதிகளில் 100 வீடுக்கு கணக்கு எடுத்தால் 1 அல்லது 2 வீடுகளுக்குதான் கழிவறை வசதியுள்ளது. இந்திய மக்களில் 70 சதவீதத்திற்கும் அதிமான மக்கள் போதிய சுகாதர வசதியில்லாமல் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.

“கோயில்களைவிட கழிப்பறைகள்தான் நாட்டுக்கு அதிகம் தேவை” என்று கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மன்னிப்பு கேட்கக்கோரி பல்வேறு கட்சியினர் நேற்று முற்றுகையிட்டுள்ளனர். சுத்தம், சுகாதாரம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பிரசாரத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதை தடுத்து கழிப்பறைகள் கட்டும் திட்டத்தை அரசு தயாரித்துள்ளது. 

இது தொடர்பாக மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை ஜெய்ராம் ரமேஷ் அண்மையில் கூறுகையில், கோயில்களைவிட கழிப்பறைகள் முக்கியமானவை. போதுமான கழிப்பறைகள் அமைக்கப்படாதது வருத் தம் அளிக்கிறது. கோயில்களைவிட கழிப்பறைகள்தான் நாட்டுக்கு அதிகம் தேவை என்றார். இதற்கு பா.ஜ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இந்த எதிப்பு அர்த்தமற்றது, முட்டாள்தனமானது.. நானும் பல்வேறு கோயில்களுக்கு சென்றிருக்கிறேன். அனேக கோயில்களில் சரியான சுகாதரவசதிகள் செய்துகொடுப்பதில்லை. மனிதர்கள் சுத்தமாக இருந்தால் தானே அவனுடைய பக்தியும் சுத்தமாக இருக்கும். நான் அறிந்ததில் திருப்பதி தேவஸ்தானம் மட்டுமே ஓரளவுக்கு போதிய கழிப்பறை வசதிகளை செய்துக்கொடுத்திருக்கிறது.

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதிய வசதிகளை செய்துகொடுக்க வில்லை என்றால் எப்படி...? அந்த கோயிலின் சுற்றுப்புறத்தை பாருங்கள் அவ்வளவு படுகேவலமாக இருக்கும். கிராமப்பகுதிகள் என்று எடுத்துக்கொண்டால் கழிவறையாக சாலை ஓரங்கள் விவசாய நிலங்கள், காலிப்பகுதிகள் இவைகளே பயன்படுத்தப்படுகிறது. இவைகளினாலே சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகிறது. பெருநகரங்கள் பற்றி நான் சொல்லதேவையே இல்லை...
 

கிராமங்கள் தோறும் கழிப்பறை வசதியை அரசு செய்துக்கொடுக்க மானியமாக ரூ. 5000 தருகிறார்கள் அது பயணாளிகளின் கைகளில் வெறும் 3500 அல்லது 4000 மட்டுமே சென்றடைகிறது. ஒரு கழிவறை கட்ட கிட்டதட்ட 10 முதல் 15 ஆயிரம் வரை செலவுபிடிக்கும் என்பதால் கிராமப்புறங்களில் கழிவறைகளை கட்ட மக்கள் ஆர்வம்காட்டுவதில்லை. 

இந்தியாவில் மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், பள்ளிகள், திரையரங்குகள், கடைத்தெருக்கள், சந்தைகள் என எங்கும் பொது கழிப்பறைகளை காணமுடிவதில்லை அப்படி இருந்தாலும் அவைகள் பயன்படுத்தும் நிலையில் இருப்பதில்லை. இந்த அவலம் மாறவேண்டும். தற்போதுகூட உச்சநீதிமன்றம் அனைத்து பள்ளிகளுக்கும் கட்டாயம் கழிவறை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என அரசுக்கு உத்திரவிட்டது அனைவருக்கு ஞாபகம் இருக்கலாம்.

இந்நிலை மாறவேண்டும். என்னுடைய கருத்தும் இதுதான் ஒரு நாட்டுக்கு கோயில்கள் அவசியம் தான் அதைவிட கழிவறைகளே மிகமிக அவசியம். ஒவ்வொறு மக்களும் சுகாதாரத்துடன் ஆரோக்கியமாக இருந்துவிட்டாலே போதும் அதன் பிறகு பக்திக்கு வேலையிருக்காது.
Related Posts Plugin for WordPress, Blogger...