கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label தேமுதிக. Show all posts
Showing posts with label தேமுதிக. Show all posts

06 August, 2013

இஸ்லாமிய கொள்கையோடு ஒத்துப்போகிறது தேமுதிக. - விஜயகாந்த் அதிரடி

"எனக்கும் மெக்காவிற்கும் நிறைய தொடர்பு உண்டு; அங்கிருந்து வாங்கி வரப்பட்ட, ஆல்கஹால் கலக்காத, "பெர்பியூம்' தான் பயன்படுத்துகிறேன்; பேரீச்சம் பழம் சாப்பிடுகிறேன்,'' என, இப்தார் நோன்பு திறப்பு விழாவில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்த, இப்தார் நோன்பு திறப்பு விழாவில் பங்கேற்று, விஜயகாந்த் பேசியதாவது: 
 
இப்தார் நோன்பு பற்றி நிறைய பேசவேண்டும். இஸ்லாமியர்களுக்கு, ஐந்து விதமான விஷயங்கள் உண்டு. அதில் நோன்பு திறப்பது, ஒரு முக்கியமான விஷயம். சிறு வயதாக இருக்கும்போது, மதுரையில் பள்ளி வாசல்களுக்கு சென்று நோன்பு கஞ்சி வாங்கி குடித்திருக்கிறேன்; கஞ்சி அவ்வளவு ருசியாக இருக்கும். "இயன்றதை செய்வோம், இல்லாதவருக்கே' என்ற தே.மு.தி.க., கொள்கையும், இஸ்லாமியர்களின் ஐந்து விதமான விஷயங்களும் ஒன்று தான். 
 
சில தலைவர்கள், தலையில் குல்லா போட்டு நோன்பு திறந்து படம் எடுத்து சென்று விடுவர். ஆனால், நான், 2005ல் கட்சி துவக்கியதில் இருந்து நோன்பு திறந்து வருகிறேன். கட்சி கொள்கைப்படி, பெண்களுக்காக பல உதவிகளை செய்திருக்கிறேன். 
 
என் கையை கட்டி போட்டாலும், தர்மம் செய்வதை நிறுத்த மாட்டேன். இந்தியாவில் பிறந்த நாம், வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும். மெக்காவில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித தண்ணீர், என் வீட்டில் இருக்கிறது. பலருக்கும் கிடைக்காத அந்த தண்ணீரை குடிப்பதற்கு, நான் பாக்கியம் செய்திருக்கவேண்டும். 
 
எனக்கும், மெக்காவிற்கும் நிறைய தொடர்பு உண்டு. அங்கு வாங்கிய, ஆல்கஹால் கலக்காத, "பெர்பியூம்' தான் நான் பயன்படுத்துகிறேன். என் அருகில் வந்து நுகர்ந்து பார்த்தால், அது தெரியும். அங்கிருந்து கொண்டு வரப்பட்ட பேரீச்சம் பழத்தை சாப்பிடுகிறேன். இவ்வாறு, அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், தே.மு.தி.க., மாநில நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், பார்த்தசாரதி, சந்திரக்குமார், சுதீஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

31 October, 2012

அடுத்து என்ன செய்ய போகிறார் விஜயகாந்த்...!


 

‌தேமுதிக வுக்குள் தற்போது வெள்ளம் தலைக்குமேல் சென்றுக்கொண்டிருக்கிறது....

இப்போதாவது கட்சியையும், கட்சி உறுப்பினர்களிடம் நடந்துக்கொள்ளும் அனுமுறையையும், தன்னுடைய நிலையையும் மாற்றிக்கொள்வாரா ‌விஜயகாந்த் அவர்கள்...

மற்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சரை பார்ப்பதால் என்ன ஆகிவிடப்போவதில்லை. தன் கட்சியின் மன்ற உறுப்பினர்கள் போய் தொகுதி பற்றி பேசினார்கள் என்றதும். தானும் தொகுதிப்பற்றி பேச அனுமதி கோறியிருக்கிறார். முறைப்படி பார்த்தால் இவர் அல்லவா முதலில் போயிருக்க வேண்டும்.

4 பேர் மட்டும்தானா  இன்னும் தேமுதிக கட்சிக்குள் அதிரடி காத்திருக்கிறதா..?

அடுத்த என்ன நடக்கபோகிறது பொருத்திருந்து பார்ப்போம்...

10 October, 2011

பலமுனைப்போட்டியில் மூன்றாம் இடத்தை தக்கவைப்பாரா விஜயகாந்த்...


கட்சி ஆரம்பித்த 7 ஆண்டுக்குள் தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சி அந்தஸ்த்தை அடைந்திருக்கும் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் தற்போது நடக்கவிருக்கும் உள்ளாட்சி யுத்தத்தில் தனித்து களம் இறங்குகிறது.

2006-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும், அதை தொடர்ந்து நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக-வும், அதிமுக-வும் இருக்கும் அத்தனைக் கட்சிகளையும் பகிர்ந்துக் கொண்டும் கூட்டணியுடன் களம் இறங்கியது. இந்த இரு கூட்டணியில் இடம்பிடிக்காமல் கடவுளுடன் மட்டும்தான் கூட்டணி என்று மார்த்தட்டிய விஜயகாந்த் குறிப்பிடும் படியான மூன்றாது இடத்தை பிடித்தார். மூன்று தரப்பு மட்டுமே இருக்கும் இடத்தில் மூன்றாவது இடம் என்பது அவ்வளவாக அதனுடைய தரத்தை எடுத்துக்காட்டாது. இருப்பினும் மூன்றாம் இடத்தை பிடித்து அதிமுக-வின் தோல்விக்கு காரணமாக அமைந்தார் என்று சொல்லலாம்.

அடுத்ததாக தற்போது நடந்து முடிந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் எப்படியோ கெஞ்சி கூத்தாடி அதிமுக-வுடன் இணைந்து கணிசமான இடத்தைப்பிடித்து  சாதனை படைத்தது தேமுதிக. அதைத் தொடர்ந்து வரும் இந்த உள்ளாட்சி தேர்தலில் அத்தனை கூட்டணி கட்சிகளையும் கழட்டிவிட்டு திமுக-வும் அதிமுக-வும் தனித்து களம்காண ‌போகிறோம் என்று அறிவித்துவிட்டபிறகு தமி‌ழகத்தின் இருக்கும் அத்தனைக்கட்சிகளும் ஏறக்குறைய முன்றாம் அணி என்ற சொல்லுக்கு இடம் கெர்டுக்காமல் தனித்தே களம் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டுள்ளது.


தற்போது திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், மதிமுக,  வலது இடது கம்னியூஸ்ட், பட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ‌ஜனதா கட்சி,  விடுதலை சிறுத்தைகள் என இருக்கும் அத்தனைக் கட்சிகளும் தனித்துப்போட்டி போடுகிற சூழலில் முன்பெல்லாம் இருமுனை, மும்முனை போட்டிகளாக இருந்தது தற்போது அது ஆறு முனை, ஏழு முனை போட்டி என்ற நிலையில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்நிலையில் மும்முனையில் மூன்றாம் இடம்பிடித்த தேமுதிக தற்போது பலமுனைப் போட்டியில் எந்த இடத்தைப்பிடிக்கும் என்றும், விஜயகாந்தின் பலம் பெருகியிருக்கிறாதா...? இல்லையா...? என்று இந்த தேர்தல் படம் பிடித்துக்காட்டும்.

விஜயகாந்த் எதிர்கட்சி தலைவர் பதிவிக்கு வந்தபிறகு சட்டச்சபையிலோ அல்லது வெளியிலேயோ ஏதாவது பேசியதாக எந்த தகவலும் இல்லை. அதிமுக கூட்டணியில் சேர்ந்து ஆட்சிக்கு வந்தபிறகு விஜயகாந்த் அவர்கள் வேடிக்கைப்பார்க்கும் வேலையை மட்டும்தான் செய்துக் கொண்டிருக்கிறார்.

விஜயகாந்த் உள்ளாட்சியில் கிடைக்கும் ஆதரவைப்பொருத்துதான் அவரின் சொல்வாக்கு கூடியுள்ளதா அல்லது குறைந்துள்ளதா என்று தெரிந்து விடும். தேமுதிக மட்டுமல்ல தமிழகத்தில் இருக்கும் அந்தனை கட்சிகளின் லட்சணமும் இன்னும் இந்த உள்ளாட்சி தேர்தலின் முடிவில் தெரிந்து விடும்.

29 September, 2011

கலைஞர், ஜெயலலிதா -வின் விஷப்பரிட்சை... பாடம் கற்க்கப்போவது யார்?

தமிழக அரசியலில் இதுவரை காணாத ஒரு புதிய திருப்பமாக அனைத்துக்கட்சிகளும் தனித்து போட்டி என்ற முடிவு வரவேற்கத்தக்கதா அல்லது  வருத்தப்பட வேண்டியதா என்று தெரியவில்லை.

தமிழகத்தின் பெரிய கட்சிகளான திமுக-வும்,  அதிமுக-வும் எந்த அடிப்படையை மனதில்வைத்து கூட்டணிக்கட்சி‌களை கழட்டிவிட்டது என்று தெரியவில்லை. சட்டமன்ற தேர்தலுக்கு உறுதுணையாக இருந்த கட்சிகளையும் தற்போது கழட்டிவிட்டு தன்னுடைய சுயரூபங்களை காட்டிவிட்டது இந்த இருகட்சிகளும். 

மூன்றாம் அணி என்ற கனவில் இருந்த தேமுதிக தற்போது தான் ஒருசில கட்சிகளை இணைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்கிறது. மீதமுள்ள கட்சிகளும் தனித்தனியாக தேர்தலை சந்திக்கிறது. இதுவும் நல்லதுக்குதான் எந்தக்கட்சி எவ்வளவு பலம் என்று தெரிந்துவிடும். பொதுவாக உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கு அங்கு நிற்க்கும் வேட்பாளரின் பலத்தை வைத்தே வெற்றி தோல்வி நிர்ணயக்கப்படுகிறது. கட்சி என்பது இரண்டாம் பட்சம்தான். ஆனால் மேயர் பதவிக்கான தேர்தலில் கட்சிகளே பிராதன இடத்தை பிடிக்கும்.

தமிழக உள்ளாட்சித் தேர்தலில், சட்டசபைத் தேர்தலை விட, போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. எல்லாம் பதவி ஆசை தான். பதவி பெறுவதெல்லாம், மக்களுக்கு உதவி செய்வதற்கே என்ற பொருள் பொதிந்த வாசகம், பொருளற்றதாக ஆகிவிட்டது. பொருள் சேர்க்க வேண்டுமா... ஒன்று, ஆன்மிகத்தில் சேர்; இல்லையேல், அரசியலில் சேர் என்ற நிலை, இன்றைய சமுதாயத்தில் ஊறித் திளைத்து விட்டது. தடி எடுத்தவர்கள், தலைதூக்கும் நிலையைக் காண முடிகிறது. 

இது ஒருபுறமிருக்க, தேர்தலில் கூட்டணி எதற்கு? சில கொள்கைகளை ஆணி வேராகக் கொண்டு, கட்சிகள் தொடங்கப் படுகின்றன. அத்தகைய கொள்கைகளை, தேர்தல் காலங்களில் மக்களிடம் எடுத்துக் கூறி, தனித்தே நிற்பது தான், மக்களாட்சியின் அசைக்க முடியாத தத்துவம். இதை விடுத்து, வெற்றிபெற வேண்டுமென்ற ஒரே நோக்கத்தோடு, கூட்டணி அமைத்து தேர்தலில் நிற்பது, மக்களாட்சிக்கு எதிரான செயல் என்றே கருத வேண்டும். வேண்டுமானால், கட்சியைக் கலைத்துவிட்டு, விரும்பும் கட்சியில் சேர்ந்து செயல்படலாம். 

கூட்டணி அமைத்து போட்டியிட்ட பிறகு, தேர்தலில் தோல்வி கண்டவர்கள் சலிப்புற்று, "கூடா நட்பு கேடாய் அமைந்தது' எனக் கூறுவது, எந்தவிதத்தில் நியாயம்? எனவே தான், ஒவ்வொரு கட்சியும், தனித்தே தேர்தலில் போட்டியிடுவது நல்லது.

திமுக-வும் அதிமுக-வும் தற்போது ஒரு விஷப்பரிட்சையில் ஈடுப்பட்டுள்ளது. தனித்துப்போட்டி என்ற இந்த முடிவில் பாடம் கற்கப்போவது தானைத்தலைவரா அல்லது புரட்சித்தலைவியா.. பொருத்திருந்து பார்ப்போம்...

23 September, 2011

தடம்மாறுது தேமுதிக.., உள்ளாட்சியில் கூட்டணி அமைக்க காங்கிரஸிடம் திடீர் ரகசியப் பேச்சு


உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவால் கிட்டத்தட்ட கழற்றி விடப்பட்டு விட்ட தேமுதிகவுக்கும், திமுகவால் கழற்றி விடப்பட்டு விட்ட காங்கிரஸுக்கும் இடையே கூட்டணி வைத்துப் போட்டியிடுவது குறித்த ரகசியப் பேச்சுக்கள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தனித்துதான் போட்டி என்ற கொள்கையுடன் செயல்பட்டு வந்த தேமுதிக கடந்த சட்டசபைத் தேர்தல் மூலம் முதல் முறையாக கூட்டணி அரசியலில் புகுந்தது. யாருடைய வாக்குகளைப் பிரித்து வந்தது அதே அதிமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டது. கூட்டணி முடிவான பின்னர் தொகுதிப் பங்கீட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் அதிமுக தன்னிச்சையாக தான் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்து தேமுதிகவுக்கு ஷாக் கொடுத்தது.

பின்னர் சமரசப் பேச்சுக்கள் நடந்து இணைந்து போட்டியிட்டனர். அதிமுக ஆட்சியைப் பிடித்தது. தேமுதிகவுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைத்து, இன்று எதிர்க்கட்சியாகியுள்ளது.

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் இடப் பங்கீட்டுக்காக கூட்டணிக் கட்சிகள் காத்திருந்த நேரத்தில் அத்தனை இடங்களுக்கும் அதிரடியாக தனது வேட்பாளர்களை அறிவித்து கதவை மூடி விட்டார் ஜெயலலிதா. இதனால் தேமுதிக கடும் அதிர்ச்சியில் மூழ்கியது. தேர்தல் தேதி அறிவித்து, வேட்பு மனு தாக்கலும் தொடங்கி விட்டதால் என்ன செய்வது, எங்கு போவது, எப்படிப் போவது என்பது தெரியாமல் தேமுதிகவினர் குழப்பத்தில் உள்ளனர்.

தற்போது இடதுசாரிகளை மட்டும் அழைத்து அதிமுக பேசி வருகிறது. அதிலும் உடன்பாடு ஏற்பட்டதாக தெரியவில்லை.

இந்த நிலையில் தேமுதிக தரப்பிலிருந்து, காங்கிரஸ் தரப்புடன் ரகசியப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. காங்கிரஸும் திமுக கூட்டணியில் இருந்து வந்தது. ஆனால் திமுக திடீரென தனியாகப் போட்டியிடப் போவதாக அறிவித்து விட்டதால் காங்கிரஸ் குழம்பிப் போய் நிற்கிறது. இரு கட்சிகள் சார்பிலும் யார் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் பேச்சுவார்த்தை ஏற்கனவே தொடங்கி விட்டதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படி திமுக, அதிமுகவால் திராட்டில் விடப்பட்ட காங்கிரஸும், தேமுதிகவும் திடீரென பேசத் தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேச்சுக்கள் கனிந்து, புதுக் கூட்டணி உருவாகுமா, அதில் இடதுசாரிகள் இணையுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...