கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label தமிழக அரசு. Show all posts
Showing posts with label தமிழக அரசு. Show all posts

15 February, 2013

சவால்களை சந்திக்க மன உறுதி வேண்டும் - ஜெயலலிதா அவர்கள் சொன்ன குட்டிக்கதை

சென்னையில் தனது 65-வது பிறந்தநாளை முன்னிட்டு 65 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்தி வைத்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசுகையில் இரு குட்டிக்கதைகள் கூறினார்.

’’பழிப்புக்கு இடமில்லாத வாழ்க்கையை இல்லறம் என்கிறார் திருவள்ளுவர். இப்படிப்பட்ட இல்வாழ்க்கை அமைய வேண்டும் என்றால், அன்பும், அறமும், அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை. அப்பொழுது தான் வாழ்க்கை இன்பமும், மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்ததாக இருக்கும்.

ஓர் ஏழைச் சிறுவன் வீடு வீடாக சென்று துணிகளை விற்று, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் கல்வி பயின்று வந்தான். ஒரு நாள் அவனுக்கு கடும் பசி. அவன் கையில் ஐம்பது காசு மட்டுமே இருந்தது. இந்தக் காசை வைத்து எதையாவது வாங்கிச் சாப்பிடலாம் என்று நினைத்து ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.

“யார்?” என்று கேட்டவாறே, ஒரு இளம்பெண் கதவைத் திறந்து அந்தச் சிறுவனைப் பார்த்து “என்ன வேண்டும்?” என்று கேட்டாள்.

அந்தப் பெண்ணிடம் சாப்பாடு கேட்க மனமில்லாத அந்தச் சிறுவன், “குடிக்க தண்ணீர் கிடைக்குமா?” என்று கேட்டான்.

அந்தச் சிறுவனை ஏற, இறங்கப் பார்த்த அந்தப் பெண், அவன் கடும் பசியில் இருப்பதை உணர்ந்தாள். பின்னர், ஒரு டம்ளர் பாலை கொண்டு வந்து அந்தச் சிறுவனிடம் கொடுத்தாள்.

அந்தப் பாலை குடித்து முடித்த சிறுவன், “நான் எவ்வளவு காசு கொடுக்க வேண்டும்?” என்று அந்தப் பெண்ணிடம் கேட்டான்.

அதற்கு அந்தப் பெண், “நீ எதையும் தர வேண்டாம். ஒருத்தருக்கு ஒரு பொருளை அன்பாகக் கொடுக்கும் போது காசு வாங்கக் கூடாது என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்கள்” என்று கனிவுடன் கூறினாள்.

அதற்கு அந்தச் சிறுவன், “என் அடி மனதிலிருந்து தங்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினான்.

அழகாக இருந்த அந்த இளம்பெண் திடீரென நோய்வாய்பட்டாள். அந்த ஊரில் அவளுக்கு சிகிச்சை அளிக்க முடியாததால் நகரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அந்தப் பெண்ணை அனுமதித்தனர். புகழ் பெற்ற மருத்துவ நிபுணர் வரவழைக்கப்பட்டார்.

அந்த மருத்துவர், அந்தப் பெண்ணின் விவரங்களையும் அந்தப் பெண்ணுக்கு வந்துள்ள நோயினையும் படித்து தெரிந்து கொண்டார். உடனடியாக தன்னுடைய அறைக்குச் சென்று விட்டார். அந்தப் பெண்ணுக்கு உயர் தர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்தப் பெண் குணமடைந்தாள். மருத்துவ சிகிச்சைக்கான பில்லை கொண்டு வரும்படி மருத்துவமனையின் கணக்கரிடம் மருத்துவர் தெரிவித்தார். அவ்வாறே பில்லும் வந்தது. அந்த பில்லில் எதையோ எழுதி, பில்லை அந்தப் பெண்ணிடம் அனுப்பிவிட்டார் மருத்துவர்.

அந்த பில்லின் உறையைப் பார்த்ததுமே அந்தப் பெண்ணுக்கு நடுக்கம் வந்துவிட்டது. மருத்துவச் செலவு எவ்வளவு இருக்குமோ என்ற பயத்துடன் உரையை பிரித்தாள் அந்தப் பெண்.

அந்த பில்லில், “ஒரு டம்ளர் பாலுக்கு ஈடாக இந்தப் பில்லுக்கு முழுக் கட்டணமும் செலுத்தப்பட்டுவிட்டது” என்று எழுதப்பட்டிருந்தது. இது வாழ்வில் நிகழ்ந்த உண்மை நிகழ்வு ஆகும்.

இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துவது, அன்பின் சக்தியை, அன்பின் வலிமையை என்பதை நீங்கள் எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற பிரதிபலன் எதிர்பார்க்காத அன்பினை, மணமக்களாகிய நீங்கள் உங்கள் மனைவியிடம், உங்கள் கணவரிடம், உங்கள் பெற்றோர்களிடம், உங்கள் உற்றார் உறவினர்களிடம் செலுத்தினால், உங்கள் வாழ்வில் நிச்சயம் அமைதியும், ஆனந்தமும் நிலவும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது மட்டுமல்ல. எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் நாம் செய்கிற நல்ல காரியம், என்றாவது ஒரு நாள் நமக்கு நன்மையைத் தரும் என்பதையும் நீங்கள் உணர வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடையே மட்டுமல்லாமல், அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும்.

அன்பு செலுத்துவதால், துன்பம் வராது என்று சொல்ல முடியாது. இன்பம், துன்பம் இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. ஆனால் அந்த துன்பங்களை எதிர்கொள்ளக் கூடிய, மன வலிமை; சவால்களை சமாளிக்கக் கூடிய மன உறுதி உங்களிடம் இருக்க வேண்டும்.’’

13 February, 2013

இந்த கடிதத்திற்கு ஜெயலலிதா அவர்கள் என்ன பதில்சொல்லபோகிறார்கள்...!.!

தமிகத்தில் சில வருடங்களாக மின்பிரச்சனை மிகுந்த வேதனையை கொடுத்து வருகிறது. தற்போதுவரும் கோடையில், இன்னும் மின்வெட்டு அதிகமாகும் சூழ்நிலையில், கவர்னர் உரையில் மின்பற்றாக்குறை தீர, புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்பு இல்லாமல் போனது, கவலை தருகிறது.

நிலக்கரி கிடைப்பதும் அரிதாகி போனது. நிலக்கரி மூலம் மின் உற்பத்தியாகும் நெய்வேலியும், அணுசக்தி மூலம் மின்உற்பத்தி செய்யும் கல்பாக்கமும், கூடங்குளமும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாலும், பல மாநிலங்களுக்கு, மின் பகிர்மானம் செய்யப்படுவதாலும், தமிழகத்தின் பயன்பாட்டுத் தளம், மிக மிகக் குறைவே. 
எனவே, தமிழகம் தன்னிறைவு பெறுவதற்கான மின்சாரத் தேடலை புனல், அலை, காற்று, சூரியன் மூலம் நிகழ்த்தலாம். அதற்கான ஏதுக்கள் அதிகம் கொண்டது தமிழகம். சரியான திட்டமிடல் இருந்தால், மின் உற்பத்தி அபரிமிதமாகும்; ஆதாயமும் அதிகமாகும்.

தமிழகத்தில் சில மாவட்டங்கள் நீங்கலாக, பிற அனைத்திலும் சிறு, பெரு நீர் வீழ்ச்சிகள் அதிகம் உண்டு. தடுப்பணை கட்டி தேக்கி வைத்தால், மின்சாரமும் கிட்டும்; விவசாயத்திற்கான நீரும் கிடைக்கும். பெருவாரியான நீர் நிலைகள், வீணாக ஓடி, கடலோடு கலக்கும் நிலைதான் உள்ளது. 

மேட்டூர் போன்ற சமவெளிகளிலும், பாபநாசம், கோதையாறு போன்ற மலைகளிலும் நீரைத் தேக்கி, மின்சார உற்பத்தி செய்து வருபவர் நாம் என்பதை. மறக்கலாகாது. ஆண்டின் அத்தனை நாளும், காற்று வீசும் முப்பந்தல், கயத்தாறு, கோவை பகுதிகளை, சரிவர பயன்படுத்தினால், காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம் அபரிமிதமாகும்.

கணவாய் இருக்கும் பகுதிகளில், காற்று அதிவேகத்தில் வீசும். முப்பந்தலும், கோவையும் இத்தன்மைகள் கொண்டவை. ஆனால், உற்பத்தியாகும் மின்சாரத்தை. தேக்கி வைப்பதற்கான கட்டுமானங்கள் அதிகம் இல்லாததால், காற்றாடிகள், பல நாட்கள் சுழலாமலேயே நிறுத்தப்படுகின்றன. தேக்கி வைப்பதற்கான வசதிகள் அரசால் அவசரகதியில் மேற்கொள்ளப்பட்டு, பகிர்மானம் செய்யும் இணைப்பு வசதிகளும் பெருக்கப்பட்டால், மின்பற்றாக்குறையை இல்லாமல் ஆக்கலாம்.

கோவையில், காற்றாலைகள் அதிகமாக நிறுவப்பட்டு சேமிக்கும் திறன் கொண்டவையானால், கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற தொழில் நகரங்கள் மின்சாரத்தால் தன்னிறைவு பெறும். சூரிய சக்தி பெற, தமிழகத்தில் அதிக இடமுண்டு. குஜராத் பார்முலாவை தமிழகம் பின்பற்றலாம். 
 
கதிரவன் அதிகமாக ஒளி பாய்ச்சும் வட ஆற்காடு, தென் ஆற்காடு, வேலூர், ராமநாதபுரம் மாவட்டங்களை தேர்வு செய்யலாம். சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கலன்களை நிறுவி, சேமிக்கத் துவங்கினால், ஆண்டின் பெரும்பாலான நாட்களில் சூரிய சக்தி பெறலாம். 

உற்பத்தியாகும் இடங்களை சுற்றி, தொழிற்சாலைகளும் பெருக, வேலைவாய்ப்பும் பெருகும். சிறிய தேவைகளுக்கு அரசே மானியம் கொடுக்க முன் வந்தால், வீடுதோறும் சூரிய சக்தியை பெறுவதற்கான உற்பத்தியை பெருக்க முடியும். 
சாலையோர மின்கம்பங்களில், சூரியசக்தி பெறும் கருவிகளை பொருத்தினால், அபரிமிதமான மின்சாரம் மிச்சமாகும்.தமிழகத்தின், ஒரு பகுதி கடலால் சூழப்பட்டது. 

மேற்கத்திய நாடுகளில் கடல் அலையிலிருந்து, மின்சாரம் தயாரிக்கும் நுணுக்கம் உள்ளது. அதை அறிந்து செயல்படுத்தினால், ஒவ்வொரு நாளும் கடல் அலைக்கும் பஞ்சமிருக்காது. அதிலிருந்து நாம் பெறும் மின்சாரத்திற்கும் பஞ்சம் வராது.

நன்றி : முனைவர், எஸ்.ஸ்ரீகுமார், அணுசக்தி நகரியம், கல்பாக்கம்.

27 December, 2012

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக கருணாநிதி... உண்மை பின்னணி...!

எதிர்ப்பு மாநில முதல்வர்கள் பேசப்படுவதற்கு வழங்கப்படும் நேரம் மிக குறைவு. இவ்வாறு குரல்வளையை நெறித்து, கேவலப்படுத்துவது ஏன்? இதற்கு எங்களை அழைக்காமல் இருக்க வேண்டியது தானே? 

எங்களை இந்த அளவு குறைந்த நேரம் கொடுக்கப்படுவது அர்த்தமற்றது, நான் என்னவெல்லாம் பேச வேண்டும் என் நினைத்திருந்தேனோ அதனை பேசி முடிப்பதற்குள், அதவாது 3 ல் ஒரு பங்கு தான் பேசினேன். மணி அடித்து நிறுத்தச்சொல்லி கேவலப்படுத்தி விட்டார்கள். 

மற்ற முதல்வர்களுக்கு எல்லாம் 30 முதல் 35 நிமிடம் வழங்கப்பட்டுள்ளது. 10 நிமிடத்தில் எனது பேச்சை முடித்துக்கொள்ள மணி அடிக்கப்பட்டது. இது மிகப்பெரிய அவமானம், எனக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே , தமிழக மக்களுக்கே ஏற்பட்ட அவமானம். பல மாநாடுகளில் பேசியிருக்கிறேன். இது போன்று நடந்ததில்லை. 

குறிப்பாக 10 நிமிடத்தில் தமிழகத்தின் தேவையை எடுத்து வைக்க முடியாது, இது பயனற்றது. தெரிவித்தார். நான் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளேன். இவ்வாறு ஜெ., கூறினார்.


தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தில் தமிழக முதல்வரை அவமானப்படுத்தியிருந்தால் அது கண்டிக்கத்தக்கது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேசிய கருணாநிதி இதனையை தெரிவித்தார். அப்போது, தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த முதல்வர் ஜெயலலிதா, தன்னை அவமானப்படுத்தி விட்டதாக கூறியுள்ளாரே? என்ற செய்தியாளர்கள் கருணாநிதியிடம் கேட்டதற்கு 'அவமானப்படுத்தி இருந்தால் கண்டிக்கத்தக்கது' என்று கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், நடந்தது என்ன என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். தான் பலமுறை தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளதாகவும் அப்போது, கூட்டங்களில் பங்கேற்கும் முதல்வர்கள், தங்கள் உரை அடங்கிய புத்தகத்தை கவுன்சிலில் முன்னதாக கொடுத்து விடுவார்கள் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.

மேலும் முதல்வர்களுக்கு ஒதுக்கப்படும் நேரத்தில் வாசிக்கும் வரை வாசிப்பார்கள் என்று கூறிய கருணாநிதி மீதமுள்ள கருத்துகள் அந்த முதல்வரால் வாசிக்கப்பட்டதாக பதிவு செய்யப்படும் என்று விளக்கம் அளித்தார். 

தான் 5 முறை முதல்வராக இருந்தபோதும் இந்த நடைமுறைகள்தான் கடைபிடிக்கப்பட்டது என்று கூறிய அவர் இன்று நடந்த கூட்டத்தில், ‘பெல் அடித்தாலும் தொடர்ந்து 10 நிமிடம் பேசலாம்' என்று கூறினார். இது போன்று சம்பவம் தனக்கும் நிகழ்ந்துள்ளதாக கூறிய கருணாநிதி அந்த சூழ்நிலையில் பெல் அடித்தாலும் தொடர்ந்து நான் பேசியிருக்கிறேன் என்று கூறினார்.

24 December, 2012

40 தொகுதியும் வெல்ல ஜெயலலிதா சபதமும்..! திருமணம் செய்துகொண்டதற்கு வருந்தும் கமலும்...!

 
2014-ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூட தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் என்று எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் தொண்டர்கள் புடைசூட முதல்வர் ஜெயலலிதா உறுதிமொழியில் கேட்டுக்கொண்டார். 
 
அதிமுகவின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ராமச்சந்திரன் 25-வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு இன்று காலை 10 மணிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 
 
நினைவிடம் அருகே அமைக்கப்பட்டு இருந்த மேடைக்கு வந்தார். அங்கு உறுதி மொழி ஏற்கும் நிகழச்சியில் கலந்து கொண்டார் எம்.ஜி.ஆருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உறுதி மொழியை வாசிக்க கூடியிருந்த நிர்வாகிகள், தொண்டர்கள் உறுதி மொழி எற்றுக் கொண்டனர். 
 
உறுதிமொழிகளை வாசித்த, அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட முயற்சி மேற்கொண்ட முதல்வருக்கு பாராட்டு தெரிவித்தார். 
 
40 நாடாளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்றும் வகையில் கட்சித்தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் என்றும் உறுதிமொழி ஏற்பின்போது அவர் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
 
 *************************************
 
தான் திருமணமே செய்திருந்திருக்கக் கூடாது என்று உலக நாயகன் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து அவர் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், 
 
எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கையே இல்லை. நான் திருமணமே முடிக்காமல் இருந்திருக்கணும். ஆனால் வாணி, சரிகாவின் வசதிக்காக திருமணம் செய்து கொண்டேன். 
 
வாணி லிவ் இன் முறைக்கு ஒப்புக்கொள்ளவே மாட்டார். அவரை சம்மதிக்க வைக்க நான் அப்போது தயாராக இல்லை. இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகும் நானும், சரிகாவும் ஒன்றாக ஹோட்டலில் தங்கினால் ஒரு மாதிரி பேசும் சமூகமாக இருந்தது. 
 
சரிகாவுக்கும், எனக்கும் திருமணமாகி 17 ஆண்டுகள் ஒன்றாக இருந்தோம். 12 ஆண்டுகள் கூட இந்த திருமணம் நீடிக்காது என்று நினைத்தேன். ஆனால் எங்கள் பிரிவு குழந்தைகளை பாதிக்கும் என்பதால் தள்ளிப்போட்டுக் கொண்டே போனோம். குழந்தைகள் ஓரளவுக்கு பெரியவர்களாக ஆகும்வரைகாத்திருந்தோம். 
 
கௌதமி மிகவும் வித்தியாசமானவர். அவர் தன்னை மணந்து கொள்ளுமாறு ஒரு நாளும் என்னை வற்புறுத்தியதில்லை என்றார்.

08 December, 2012

இந்த வயதில் கருணாநிதிக்கு ஏன் இந்த ஆசை?.. ஒரு தொண்டனின் ஆதங்கம்


"தமிழக சட்டசபை வைர விழாவில், தன் பெயரை, கவர்னர் ரோசய்யா குறிப்பிடவில்லை' என, கருணாநிதி மிகவும் வருத்தம் அடைந்திருக்கிறார். கவர்னரின் பேச்சை, மீண்டும் யாரையாவது படிக்கச் சொல்லி கருணாநிதி கேட்க வேண்டும்.

ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஆகிய முன்னோடிகளின் பங்களிப்பு, நல்ல முன் மாதிரியாக உள்ளது என்று, கவர்னர் குறிப்பிட்டுள்ளார்.

சாராயக் கடைகளை திறக்காமல், ஊழலுக்கு இடம் கொடுக்காமல், முன் மாதிரியாக இருந்தார் ராஜாஜி. அவரது கொள்கைகளைப் பின்பற்றி, காமராஜர், சாராயக்கடைகளை திறக்காமல், ஊழலுக்கு இடம் கொடுக்காமல் இருந்தார்.



ஏழைக் குழந்தைகளும் கல்வி பயில வேண்டும் என்று, பள்ளிகளில், மதிய உணவு திட்டத்தை, கொண்டு வந்தார். நெய்வேலி மின் திட்டம், ரயில் பெட்டி தொழிற்சாலை, விவசாயப்புரட்சி என, தமிழகத்தை முன்மாதிரியாக்கினார். கடைசி வரை, திருமணம் செய்து கொள்ளாமல், ஆட்சியில், குடும்பம் நுழையாமல் பார்த்துக் கொண்டார். 

அவருக்கு பின், அவர் விட்டுச் சென்ற பணிகளை, பக்தவத்சலமும் செவ்வனே தொடர்ந்து செய்தார்.மக்களின் ஆதரவைப் பெற்ற அண்ணாதுரை, மக்களுக்காகவே ஆட்சி நடத்தினார். ஆட்சியில், குடும்ப உறுப்பினர்கள்  வராமல் பார்த்துக் கொண்டார்.

எம்.ஜி.ஆர்., மக்களுக்காகவே ஆட்சி செய்தார். விலைவாசிகள் ஏறாமல் பார்த்துக் கொண்டார்; சட்டம் - ஒழுங்கை நன்றாக பராமரித்தார்.இதனால், இவர்கள் பெயர்களை, கவர்னர் ரோசய்யா குறிப்பிட்டதற்கு காரணம் உண்டு; அதுபோல, கருணாநிதி பெயரைக் குறிப்பிடாததற்கும் காரணம் உண்டு. 



சாராயக் கடைகளை, கருணாநிதி திறந்து, தமிழகத்தை குடிகார நாடாக்கினார். இதனால், தமிழகம், 50 ஆண்டு காலம் பின்னோக்கிப் போய் விட்டது. ராஜாஜி ஆட்சிக் காலத்தில், ஊழலுக்கு இடமில்லாமல் இருந்தது. கருணாநிதி ஆட்சிக் காலத்தில், ஊழலுக்கே முதலிடம் கிடைத்தது. 

காமராஜர், பக்தவத்சலம், எம்.ஜி.ஆர்., காலங்களில், தொழில்துறை நன்றாக இருந்தது. இவர்கள், தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக இருந்தனர். கருணாநிதி ஆட்சிக் காலத்தில், உலகப் புகழ் பெற்ற பின்னி மில் மூடப்பட்டது. ஸ்டாண்டர்ட் மோட்டார் தொழிற்சாலைகள், வடமாநிலங்களுக்கு தப்பித்துச் சென்றன. தொழிலாளர் குடும்பங்கள், கருணாநிதி ஆட்சிக் காலத்தில், நடுத் தெருவுக்கு வந்தன. காமராஜர், பக்தவத்சலம் மற்றும் எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலங்களில் சட்டம் - ஒழுங்கு நன்றாகயிருந்தது. 



கருணாநிதி ஆட்சிக் காலத்தில், பிப்., 14, 1998ல் கோவையில், தொடர் வெடி குண்டு வெடிப்பில், 60க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி இறந்தனர். வீரப்பனை, கருணாநிதியால் பிடிக்க முடியவில்லை. அக்., 18, 2004ல், ஜெ., ஆட்சியில் தான் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டான். 

இவரது, 2006 - 2011 ஆட்சி காலத்தில், விலைவாசி விஷம்போல் ஏறியது. குடும்ப உறுப்பினர்களுக்கு, பதவி பெற்றுத் தந்தார். தொண்டர்கள் புறக்கணிக்கப் பட்டனர். 

மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, நில அபகரிப்பு, கொலை, கொள்ளை போன்றவை, இவரது ஆட்சியில் சர்வ சாதாரணம். கருணாநிதி, சட்டசபைக்கு செல்ல மாட்டார்; வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு, படியைப் பெற்று, அப்படியே, "எஸ்கேப்' ஆகி விடுவார்.சட்டசபை வைர விழாவிற்கும் வரவில்லை. இந்த லட்சணத்தில், கவர்னர், இவரது பெயரை எப்படி கூற முடியும்? கருணாநிதிக்கு ஏன் இந்த ஆசை?

மெயிலில் எஸ்.சந்தான ராகவன், சென்னை

04 December, 2012

அதிமுக-வில் இணைந்தார் பிரச்சார பீரங்கி நாஞ்சில் சம்பத்...!



மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரான நாஞ்சில் சம்பத் இன்று அதிமுகவில் இணைந்தார்.

மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் பிரபல பேச்சாளராகவும் இருந்தவர் நாஞ்சில் சம்பத். கடந்த சில மாதங்களாக அவருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

வைகோவும் நாஞ்சில் சம்பத்தை தமது கட்சி ஏடான சங்கொலியில் மறைமுகமாக விமர்சித்தார். வைகோவை நாஞ்சில் சம்பத்தும் கடுமையாக விமர்சித்து வந்தார். இதையடுத்து நாஞ்சில் சம்பத் ஒப்புக் கொண்ட அனைத்துக் கூட்டங்களும் சட்டென ரத்து செய்யப்பட்டன.

ஆனால் அவரை கட்சியை விட்டு வைகோ நீக்கவில்லை. நாஞ்சில் சம்பத்தும் கட்சியை விட்டு நீக்கிப் பாருங்கள் என்றெல்லாம் கொந்தளித்துக் கொண்டிருந்தார். போட்டி மதிமுகவை உருவாக்கப் போவதாகவும் கூட செய்திகள் வலம் வந்தன. திமுகவில் சேருவார் என்றும் பேச்சு அடிபட்டது. இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் இன்று திடீரென அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டார்.

சென்னையில் இன்று ஜெயலலிதாவை நேரில் சந்தித்த நாஞ்சில் சம்பத், அதிமுக உறுப்பினராக தம்மை இணைத்துக் கொண்டார்.

இனி நாஞ்சில் சம்பத் அதிமுகவின் பிரச்சார பீரங்கி!

19 November, 2012

சத்தியமா இதெல்லாம் ஊர்ல பேசிகிட்டதுங்க...!


சுப்பன் :தமிழகத்துக்கு மத்திய அரசு மின்சாரம் கொடுக்காததற்கு காரணம் கலைஞர்தானாம். 

குப்பன் : ம்... அப்படியா..?


சுப்பன் : தற்போது ஆளும் அதிமுக ஆட்சியின் மீது தொடர் மின்தடையால் மக்கள் மிகவும் வெறுப்படைந்து இருக்கிறார்கள். தற்போது மத்திய அரசு தொகுப்பில் இருந்து மின்சாரத்தை தந்து நிலமை சரியானால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெருவது கடினமாகிவிடும்.

குப்பன் : அதனா‌ல...சுப்பன் : வரும் தேர்தல் வரை தமிழகத்துக்கு மின்சாரம் தராதீர்கள் அப்போதுதான் நம் கூட்டணி ஜெயிக்கும் என்று மத்திய அரசிடம் கலைஞர் கூறியிருக்கிறாராம்.

குப்பன் : ... இருக்கலாம்.. நம்ம தானைத்தலைவரை நம்பமுடியாது பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுவரே...!
*********************************


முனியன்: இ‌லங்கை சோகம் முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் திமுக பரபரப்பாக செயல் படுவதுபோல் காட்டிக்கொள்கிறது. டெசோ மாநாடு நடத்தி அதன் தீர்மானங்களை ஜ.நா-வுக்கும், மனித உரிமை தலைவர்களுக்கு அந்த  நகல்களை மு.க.ஸ்டாலின் கொண்டு சென்று கொடுத்து வந்தது ஈழத்தமிழர்கள் மீது உள்ள அக்கறை ஒன்றும் இல்லையாம்.


பக்கிரி : ம்.. அப்ப எதுக்காம்

முனியன்: ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை. அவர் தன்னுடை மருத்துவ சிகிச்சைக்காக சென்றார். அப்படியே இந்த நாடகம்.

பக்கிரி : சரிதாம்பா..! உண்மையான அக்கறை என்றால் அவர் ஆட்சி காலத்தில் துணை முதல்வராகவே இந்த வேலையை செய்திருக்கலாமே....?
**********************************

கந்தசாமி : அம்மாவிடம் அடங்காமல் இருந்த விஜயகாந்தை கொஞ்சம் அடக்கி வைக்கவே அந்த கட்சி எம்.எல்.ஏ-க்களை அம்மா இழுத்தார்களாம். 

முனுசாமி: ம்... அப்படியா..


கந்தசாமி : நிலைமை மோசமாவதை தொடர்ந்து தற்போது அம்மாவிடம் அடிபணிந்து போய் விட்டார். அதனால் தான் அந்த பிரச்சனை தற்போது அப்படியே மூடி மறைத்துவிட்டனர்.

இன்னும் மீதமிருக்கும் நாட்களில் தன்னுடைய எதிர்கட்சி தலைவர் என்ற பத‌வியை காப்பாற்றிக்கொள்ளவே இந்த அமைதியாம்.... அதான் படம் எடுத்த பாம்பு பணிய ஆரம்பிச்சிடிச்சி...

முனுசாமி: அப்பன்னா இவரை எம்ஜிஆர்-ன்னு கூப்பிடறாதா.. நம்பியார்ன்னு கூப்பிடறதா...

********************************

ராமு: தமிழகத்தில் மின் வெட்டுக்கு முக்கிய காரணம் அம்மா தான்
 

சோமு : அப்படியா... ஏன் இதுமாதிரி செய்யுராங்க..
 

ராமு : தமிழகத்தில் இதுமாதிரி மின்பற்றாக்குறை காட்டினாதான் கூடங்குள பிரச்சனை எழாது அப்புறம் இதையே காரணம் காட்டி மொத்த மின்சாரத்தையும் தமிழகத்துக்கே வாங்கிடனுன்னு அம்மா பிளானாம்...
 

சோமு : ஓ... அப்படியா சங்கதி... இந்த விளையாட்டு எப்ப முடியும்...
 

ராமு : அது... ‌ அம்மாவுக்கு மட்டுமே தெரியும்...!

********************************
மறுபடியும் சொல்றேங்க இதை நான் சொல்லல.. ஊர்ல பேசிகிட்டது...

01 November, 2012

விஜயகாந்தை கைது செய்து ஜனநாயக கடமையாற்றுவாரா ஜெயலலிதா..?


விஜயகாந்த் என்றால் எதாவது பரபரப்பு என்று ஆகிவிட்டது. அந்த பரபரப்பு ஆக்கபூர்வமான செயலுக்காக இருந்தால் நல்லது என்று தமிழக மக்கள் அனைவரும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவருடைய பரபரப்பு எதுஎதற்கு என்று நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

சென்னை விமான நிலையத்தில் கேள்வி கேட்ட செய்தியாளரை நாயே...... என்றும் தாறுமாறாகவும் திட்டினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் அப்போது அவருடன் இருந்த அவரது கட்சி எம்.எல்.ஏ.  அனகை முருகேசன் அவர்கள் நிருபரை தள்ளிவிட்ட வழக்கில் கைது செய்து தமிழக அரசு தன்னுடைய ஜனநாயக கடமையை செம்மையாக நிறைவேற்றியிருக்கிறது. தற்போது அவர்களது அடுத்த குறி விஜயகாந்த். அவரையும் கைது செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சென்னை விமான நிலையத்திற்கு வந்த விஜயகாந்த்திடம், வேண்டுமென்ற ஜெயா டிவி செய்தியாளர் பாலு  அவர்கள் கேள்விமேல் கேட்டு கேப்டனை இம்சை செய்திருக்கிறார். தலைவரும் உணர்ச்சி வசப்பட்டு தன்னுடைய வேலையை காட்ட பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.


மற்ற செய்தியாளராக இருந்திருந்தால் அரசு வேடிக்கை பார்த்திருக்கும் ஜெயா டிவி நிருபர் என்ற உடன் அத்தனை அதிகாரிகளும் அநியாயத்துக்கு தன்னுடைய வேலையை செம்மையாக செய்துக்கொண்டிருக்கிறார்கள். நிருபர் இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் விஜயகாந்த், அனகை முருகேசன் ஆகியோர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முருகேசன் அவர்களை கைதும் செய்துவிட்டார்கள்.

“இந்த நிலத்தில் யாருக்கும் அச்சாத சிங்கம்”  முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருக்கிறார் விஜயகாந்த். அதையும் அம்மா அவர்கள் நேற்று பேரவை நேரத்தில் அழகா நக்கல் அடித்தார். சட்ட மன்றத்தில் தற்போது இந்த படம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

தற்போது அதிமுக ஆட்சி என்றால் அது எதிர்கட்சியினரை பழிவாங்கும் ஆட்சி என்ற நிலை இன்றுவரைகூட நிடிக்கிறது. இதுவரை பிரதான எதிர்கட்சியான திமுக-வுக்கு எதிராக மட்டும் இருந்த இந்த கைது நடவடிக்கைகள் தற்போது தமிழகத்தில் இருக்கும் அனைத்து கட்சிக்கும் எதிராக திரும்பியிருப்பது கொஞ்சம் வேதனையாக இருக்கிறது...

தமிழகத்தில் நீலம் புயல் பாதிப்புகள், மின் பற்றாக்குறை, காவிரிப் பிரச்சனை, தேவர் கூட்ட கலவரம், கூடங்குளம் போராட்டம் என ஏகப்பட்ட பிரச்சனைகள் தமிழகத்தில் தவைவிரித்து ஆடும்போது கூட அம்மா அவர்கள் எதிர்கட்சியினரின் தவறுகளுக்கு தண்டனை வழங்குவதை செமமையாக செய்து வருகிறார். இன்னும் பாக்கி இருப்பது விஜயகாந்த கைது மட்டும்தான்.

வாழ்க அண்ணா நாமம்..!. வளர்க அம்மா தொண்டு...!

31 October, 2012

அடுத்து என்ன செய்ய போகிறார் விஜயகாந்த்...!


 

‌தேமுதிக வுக்குள் தற்போது வெள்ளம் தலைக்குமேல் சென்றுக்கொண்டிருக்கிறது....

இப்போதாவது கட்சியையும், கட்சி உறுப்பினர்களிடம் நடந்துக்கொள்ளும் அனுமுறையையும், தன்னுடைய நிலையையும் மாற்றிக்கொள்வாரா ‌விஜயகாந்த் அவர்கள்...

மற்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சரை பார்ப்பதால் என்ன ஆகிவிடப்போவதில்லை. தன் கட்சியின் மன்ற உறுப்பினர்கள் போய் தொகுதி பற்றி பேசினார்கள் என்றதும். தானும் தொகுதிப்பற்றி பேச அனுமதி கோறியிருக்கிறார். முறைப்படி பார்த்தால் இவர் அல்லவா முதலில் போயிருக்க வேண்டும்.

4 பேர் மட்டும்தானா  இன்னும் தேமுதிக கட்சிக்குள் அதிரடி காத்திருக்கிறதா..?

அடுத்த என்ன நடக்கபோகிறது பொருத்திருந்து பார்ப்போம்...

17 October, 2012

பிரதமர் பதவிக்கு ஜெயலலிதா, வேடிக்கை பார்க்கும் திமுக ,!

தமிழகத்தில் நாளுக்கு நாள் பல்வோறு பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. மின்வெட்டு என்ற பூதத்தை அடக்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று தெரிய வில்லை அறிவிப்புகளைத்தவிர. திமுக-வாக இருக்கட்டும் அல்லது அதிமுக-வாக இருக்கட்டும் தான் இருக்கும்போது எந்த வேலையும் செய்யாமல் ஆட்சி மாறியப்பிறகே இது கிழிக்கலாம் அதைக்கிழிக்கலாம் என்று வாய்சவிடால் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். கடந்த 25 ஆண்டுகளாக இதுதான் நடந்துக்கொண்டிருக்கிறது.
 
கோவை லோக்சபா தொகுதி அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய தமிழக நிதியமைச்சர், தங்களது கட்சித் தலைவி (அதாங்க அம்மா) பிரதமரானால் தான், இந்த இந்திய நாட்டை காப்பாற்ற முடியும் என, பேசியிருக்காராம்.
 
 
என்ன ஒரு வேடிக்கைப்பாருங்க அண்ணாவளைவு எடுத்தது எனக்கு தெரியாது என்று கூறிய ஜெயலலிதா அவர்கள், மின் வெட்டு குறி்த்து துரிதமான எந்த முடிவைவையும் எடுக்காத இவர் இங்கு தமிழகத்தையே காப்பாற்ற முடியாதவர், இந்தியாவை காப்பாற்ற போகிறாராம்; நல்ல வேடிக்கை. 
 
தினமும், 10 முதல் 14 மணி நேரத்திற்கும் மேல் மின் தட்டுப்பாடு உள்ளது. இங்கு சீரான மின்சாரத்தை கொடுத்து, தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லாமல், பிரதமர் பதவி மேல் ஆசைப்படுகின்றனர். தேர்தலில் சொன்ன வாக்குறுதியை மறந்து விட்டனர். மின்தடையால் போராட்டம், உண்ணாவிரதம், மறியல், மனிதச் சங்கிலி, பந்த் என, பொது மக்களும், தொழில் துறையினரும் அல்லாடிக் கொண்டிருக்க, ஆளும் கட்சியோ, பதவி பற்றி ஊர் ஊராக செயல் வீரர்கள் கூட்டம் நடத்துகிறது. 
 
கர்நாடகாவில் உற்பத்தியாகும் காவிரி நீர், கர்நாடகாவுக்கே சொந்தம் என்று, காங்கிரஸ் கட்சி மத்திய அமைச்சர் ஒருவர், தமிழகத்துக்கு தண்ணீர் தரும்படியான உத்தரவை நிறுத்தி வைக்கும்படி, பிரதமருக்கு கோரிக்கை விடுக்கிறார். ஆனால் தமிழகத்தை சார்ந்த காங்கிரஸ் அமைச்சர்களோ, 13 ஆண்டுகளாக, மத்திய அரசில் அமைச்சர் பதவி சுகம் அனுபவித்து வரும் தி.மு.க., அமைச்சர்களோ, வாயே திறக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 
 
 
மத்திய அரசில் பதவி சுகம் காணும், தி.மு.க., தன் ஆட்சிக் காலத்திலேயே, மின்சார பற்றாக்குறையை போக்க, எந்த விதமான முயற்சிகளையும் எடுக்காமல், தொழிற்சாலைகளுக்கு வார விடுமுறை, வீடுகளுக்கு மின்வெட்டு என்ற நிலை இருந்ததோடு, மின்வாரியத்திற்கும் கோடிக்கணக்கில் கடன் வைத்து விட்டனர். 
 
ஆனால் இன்று, மின்வெட்டு தொடர்பாக போராட்டம், மறியல், துண்டு பிரசுரம் கொடுத்து, நல்லவர்கள் போல வேஷம் போடுகின்றனர்.போர்க்கால அடிப்படையில் கவனம் செலுத்தி, சீரான மின்சாரத்தை வழங்க, தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்து, தமிழக மக்களை காப்பாற்ற, ஆளுங்கட்சி முன்வர வேண்டும்.

எதிர்கால கொள்கைகள், தெலைநோக்கு பார்வை என்ற அனுகுமுறையில்லாமல் வெறும் ஆட்சி அதிகாரத்தை மட்டுமே கொள்கையாக வைத்துக்கொண்டு செயல்படும் இந்த திராவிட கட்சிகளை நாம் என்னவென்று சொல்வதோ...?
Related Posts Plugin for WordPress, Blogger...