கட்சி ஆரம்பித்த 7 ஆண்டுக்குள் தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சி அந்தஸ்த்தை அடைந்திருக்கும் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் தற்போது நடக்கவிருக்கும் உள்ளாட்சி யுத்தத்தில் தனித்து களம் இறங்குகிறது.
2006-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும், அதை தொடர்ந்து நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக-வும், அதிமுக-வும் இருக்கும் அத்தனைக் கட்சிகளையும் பகிர்ந்துக் கொண்டும் கூட்டணியுடன் களம் இறங்கியது. இந்த இரு கூட்டணியில் இடம்பிடிக்காமல் கடவுளுடன் மட்டும்தான் கூட்டணி என்று மார்த்தட்டிய விஜயகாந்த் குறிப்பிடும் படியான மூன்றாது இடத்தை பிடித்தார். மூன்று தரப்பு மட்டுமே இருக்கும் இடத்தில் மூன்றாவது இடம் என்பது அவ்வளவாக அதனுடைய தரத்தை எடுத்துக்காட்டாது. இருப்பினும் மூன்றாம் இடத்தை பிடித்து அதிமுக-வின் தோல்விக்கு காரணமாக அமைந்தார் என்று சொல்லலாம்.
அடுத்ததாக தற்போது நடந்து முடிந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் எப்படியோ கெஞ்சி கூத்தாடி அதிமுக-வுடன் இணைந்து கணிசமான இடத்தைப்பிடித்து சாதனை படைத்தது தேமுதிக. அதைத் தொடர்ந்து வரும் இந்த உள்ளாட்சி தேர்தலில் அத்தனை கூட்டணி கட்சிகளையும் கழட்டிவிட்டு திமுக-வும் அதிமுக-வும் தனித்து களம்காண போகிறோம் என்று அறிவித்துவிட்டபிறகு தமிழகத்தின் இருக்கும் அத்தனைக்கட்சிகளும் ஏறக்குறைய முன்றாம் அணி என்ற சொல்லுக்கு இடம் கெர்டுக்காமல் தனித்தே களம் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டுள்ளது.
தற்போது திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், மதிமுக, வலது இடது கம்னியூஸ்ட், பட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, விடுதலை சிறுத்தைகள் என இருக்கும் அத்தனைக் கட்சிகளும் தனித்துப்போட்டி போடுகிற சூழலில் முன்பெல்லாம் இருமுனை, மும்முனை போட்டிகளாக இருந்தது தற்போது அது ஆறு முனை, ஏழு முனை போட்டி என்ற நிலையில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்நிலையில் மும்முனையில் மூன்றாம் இடம்பிடித்த தேமுதிக தற்போது பலமுனைப் போட்டியில் எந்த இடத்தைப்பிடிக்கும் என்றும், விஜயகாந்தின் பலம் பெருகியிருக்கிறாதா...? இல்லையா...? என்று இந்த தேர்தல் படம் பிடித்துக்காட்டும்.
விஜயகாந்த் எதிர்கட்சி தலைவர் பதிவிக்கு வந்தபிறகு சட்டச்சபையிலோ அல்லது வெளியிலேயோ ஏதாவது பேசியதாக எந்த தகவலும் இல்லை. அதிமுக கூட்டணியில் சேர்ந்து ஆட்சிக்கு வந்தபிறகு விஜயகாந்த் அவர்கள் வேடிக்கைப்பார்க்கும் வேலையை மட்டும்தான் செய்துக் கொண்டிருக்கிறார்.
விஜயகாந்த் உள்ளாட்சியில் கிடைக்கும் ஆதரவைப்பொருத்துதான் அவரின் சொல்வாக்கு கூடியுள்ளதா அல்லது குறைந்துள்ளதா என்று தெரிந்து விடும். தேமுதிக மட்டுமல்ல தமிழகத்தில் இருக்கும் அந்தனை கட்சிகளின் லட்சணமும் இன்னும் இந்த உள்ளாட்சி தேர்தலின் முடிவில் தெரிந்து விடும்.
அவருக்கு என்ன பாஸ் ஜெய்ச்சாலும் காசு தோத்தாலும் காசு. பார்க்கலாம் மக்கள் மனசுல என்ன இருக்குன்னு
ReplyDeleteஇரண்டாம் இடத்திற்கு வந்தாலும் ஆச்சர்யமில்லை
ReplyDeleteவிஜயகாந்த் தான் கெஞ்சி கூத்தாடி அ.தி.மு.க விடம் சீட் வாங்கினார் என்று நீங்கள் சொன்னது வேடிக்கையாக இருக்கிறது, விஜயகாந்த் இல்லாவிடில் தாங்கள் இந்த முறையும் தோல்வியை சந்திக்க நேரிடும் என்று அவர்களுக்கு தெரிந்ததால் தான் அவர்கள் வியாஜயகந்திடம் கூட்டணி பேசினார்கள், இது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும் உங்களுக்கு மட்டும் தெரியாதது தான் காமெடியாக உள்ளது.
ReplyDeletePresent my lord!
ReplyDelete///////
ReplyDeleterampo said... [Reply to comment]
விஜயகாந்த் தான் கெஞ்சி கூத்தாடி அ.தி.மு.க விடம் சீட் வாங்கினார் என்று நீங்கள் சொன்னது வேடிக்கையாக இருக்கிறது, விஜயகாந்த் இல்லாவிடில் தாங்கள் இந்த முறையும் தோல்வியை சந்திக்க நேரிடும் என்று அவர்களுக்கு தெரிந்ததால் தான் அவர்கள் வியாஜயகந்திடம் கூட்டணி பேசினார்கள், இது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும் உங்களுக்கு மட்டும் தெரியாதது தான் காமெடியாக உள்ளது.
///////
விஜயகாந்துக்கு அதிமுக-வில் சேருவதற்கான விருப்பம் இருந்தது அதை வெளிப்படையாக சொல்லாமல் பல்வேறு மறைமுக பேச்சுகளும், பேச்சுவார்த்தைகளும் நடந்தது...
உதா. கூட்டணிக்கு முன்பு வேலூரில் நடந்த பொது கூட்டத்தில் திமுக-வை வசைப்பாடிய விஜயகாந்த், அதிமுக-வை பற்றி ஒரு வாய்திறக்க வில்லை. இதை வைத்தே இவர் அதிமுக பக்கம் என்று மக்கள் முடிவுக்கட்டினர்..
அதன் படிவே பல்வேறு படிநிலைகளில் தொகுதி பங்கீடுகுறித்த விவாதமும் நடைப்பெற்றது...
அதன் பிறகே முடிவு எட்டப்பட்டது...
இவராக செல்லவில்லையென்றால் சட்டசபையில் ஏன் மௌனம் காக்க வேண்டும். சொல்லுங்கள் பார்ப்போம்..
உண்மை... ஆனால் இங்கு இரண்டாம் இடம் பிடிப்பதோ மூன்றாம் இடம் பிடிப்பதோ முக்கியம் அல்ல, மக்கள் நலனில் அக்கறை உள்ளதா என்பதை யாரும் பார்க்க மாட்டேன் என்கிறார்கள்... ஏனோ குதிரை ரேஸ் போல் ஆகி விட்டது அரசியல்.. முன்னணியில் செல்லும் குதிரை மேல் பந்தயம் கட்டுவதால் ஜெயிக்கப் போவது நாம் அல்ல, குதிரை தான் என்பது மறந்து விடுகிறது..
ReplyDeleteகேப்டனா கொக்கா?
ReplyDeleteதாங்கள் கூறியவாறு வரும்
ReplyDeleteதேர்தல் முடிவு தெரிவித்து விடும்
புலவர் சா இராமாநுசம்
விஜய்காந்த், பிறரின் தவறு அவரை வளர்க்கும். அவரும் தனது தவறை திருத்தி கொள்ளவேண்டும்.
ReplyDeleteதமிழ்மணம் ஏழு...
ReplyDeleteவிஜயகாந்த் இரெண்டாம் இடத்துக்கு கண்டிப்பாக வருவார்னு நம்பலாம்...!!!
ReplyDeleteஆமாம் நண்பரே உள்ளாட்சி தேர்தல் அவரின் நிலை காட்டி விடும் ,அலசலுக்கு நன்றி நண்பா
ReplyDeleteஅரசியல் அரசியல் அரசியல்..
ReplyDeleteஒருவேளை சட்டசபையில ரெடி டேக் ஆக்க்ஷன்ன்னு சொன்னாத்தான் பேசுவாரோ....ஒரு படத்துல இந்த பாட்டு வரும்...."ஒரு நடிகனாக மாறியாச்சு...பவுடர் பூசி பூசி கூச்சம் போச்சு"ன்னு....இந்த பிரகஸ்பதியும் அப்படித்தான் போல இருக்கு...
ReplyDeleteநீங்கள் சொன்னதுபோல இன்னும் கொஞ்ச நாள்ல வண்டவாளம் தண்டவாளம் ஏறிடும்....
டாஸ்மாக் கேப்டன் வாழ்க....AC பார் ஒழிக இப்படிக்கு ரெகுலர் குடிகாரன் ஹிஹி!
ReplyDeleteவிஜயகாந்த் தெரிந்துக் கொள்ள இன்னும் நிறைய இருக்கு !!
ReplyDeleteஉண்மையில் விஜயகாந்தின் 'பலம்' என்ன என்பதை இந்த உள்ளாட்சித் தேர்தல் காட்டும். பார்ப்போம்.
ReplyDeleteகேப்டன் மட்டும் கணிசமான இடத்துல ஜெயிச்சா அப்புறம் இருக்கு கச்சேரி!!
ReplyDeleteபார்ப்போம் ...
ReplyDeleteஊரறிந்த விஷயம் தானே இதுக்கு தனியா வேற ஒரு பதிவா??
ReplyDeleteமாப்ள ரைட்டு.,
ReplyDeleteஹா ஹா பார்ப்போம் பார்ப்போம்
ReplyDeleteஇனிய மாலை வணக்கம் பாஸ்,
ReplyDeleteசனி, ஞாயிறு தினங்களில் பிசியாகி விட்டேன். அதனால் தான் பதிவிற்கு வர முடியலை.
மன்னிக்கவும்,
கப்டன் சிந்தித்துச் செயற்பட்டால், அரசியல் நிதானத்துடன் செயலாற்றினால் அவருக்குத் தற்போதைய தமிழக அரசியல் நகர்வுகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் நல்ல இடம் கிடைக்கும் என்று நினைக்கின்றேன்.
ஆனாலும் பலமான எதிர்க் கட்சியாகப் பம்மிக் கொண்டிருப்பது அவரின் எதிர்கால நகர்வுகளிற்குப் பாதகமான செயல் தான் பாஸ்.
நல்லதோர் அலசல்.
//கட்சி ஆரம்பித்த 7 ஆண்டுக்குள் தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சி அந்தஸ்த்தை அடைந்திருக்கும் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் தற்போது நடக்கவிருக்கும் உள்ளாட்சி யுத்தத்தில் தனித்து களம் இறங்குகிறது.//
ReplyDeleteநீங்க எந்த உலகத்தில் பாஸ் இருக்கீங்க?
தேமுதிக தனித்து போட்டியிடுகிறதுனு உங்களுக்கு யார் சொன்னா? அப்போ மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட சேர்ந்து போட்டியிடுறது யாரு?
ஒவ்வொரு கட்சியும் தனது இருப்பை நிலைநிறுத்திக்கொள்ளவும் இயன்றவரை சம்பாதிப்பதையும்தாண்டி மக்கள் நலனிற்காக எதைச் செய்கிறார்கள் என்பதை கவனிக்கவேண்டும்.
ReplyDeleteகட்சிக்கு - எத்தனையாவது இடம் என்பது முக்கியம்.
ReplyDeleteவாக்காளனிற்கு - எதை செய்தார்கள் என்பது முக்கியம்.
அவரு ஆட்சிய புடிக்க போறேன்னுட்டு இருக்காரு, நீங்க மூன்றாவது இடம்னு சொல்லிட்டீங்களே?
ReplyDeleteஓகே....மப்ஸ் ரைட்டு...
ReplyDelete///////
ReplyDelete*anishj* said... [Reply to comment]
//கட்சி ஆரம்பித்த 7 ஆண்டுக்குள் தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சி அந்தஸ்த்தை அடைந்திருக்கும் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் தற்போது நடக்கவிருக்கும் உள்ளாட்சி யுத்தத்தில் தனித்து களம் இறங்குகிறது.//
நீங்க எந்த உலகத்தில் பாஸ் இருக்கீங்க?
தேமுதிக தனித்து போட்டியிடுகிறதுனு உங்களுக்கு யார் சொன்னா? அப்போ மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட சேர்ந்து போட்டியிடுறது யாரு?
//////
கம்னியூஸ்ட்டுகள் தற்போதைக்கு தமிழகத்தில் கணக்கில்கொள்ள படாதவர்கள் பாஸ்...
எல்லா கட்சிகளும் தனித்து என்ற முடிவில் இருக்கும் போது கூட இவர்கள் கூட்டணியை தேடிக் கொண்டிருக்கிறார்கள்...
//////
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
அவரு ஆட்சிய புடிக்க போறேன்னுட்டு இருக்காரு, நீங்க மூன்றாவது இடம்னு சொல்லிட்டீங்களே?
/////////
யாருடைய ஆச்சியை... ஓ.. ஆட்சியா..?
கண்டிப்பாக பிடிச்சிடுவாரு...
பொறுத்திருந்து பார்க்கலாம் சௌந்தர்/
ReplyDeleteகாலம் விரைவில் பதில் சொல்லும்.
ReplyDeleteஅரசியல் ஜ ஆம் அப்பீட்டு
ReplyDeleteபார்ப்போம்!
ReplyDeleteவெயிட் & ஸீ தான் வேர என்ன சொல்ல
ReplyDeleteபார்ப்போம் வருவாரா என்று
ReplyDeleteமக்களே!என்ன சொல்றீங்க மக்களே?
ReplyDelete//விஜயகாந்த் இரெண்டாம் இடத்துக்கு கண்டிப்பாக வருவார்னு நம்பலாம்...!//
ReplyDeleteமனோ அண்ணனை நான் வழிமொழிகிறேன்.
அன்புநிறை நண்பரே ...
ReplyDeleteகடந்த ஒருவாரம் கொஞ்சம் வேலைப்பளு காரணமாக வரமுடியவில்லை..
பொறுத்தருள்க...
இன்னும் இரண்டு வாரத்தில் முடிவு தெரிசிடும். .
@ஜ.ரா.ரமேஷ் பாபு
ReplyDeleteஆஹா...அருமை...