கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label விஜயகாந்த். Show all posts
Showing posts with label விஜயகாந்த். Show all posts

28 December, 2023

விஜயகாந்த் - ஒரு சகாப்தம்



விஜயகாந்த் -

'நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி' என்ற இயற்பெயர் கொண்டுள்ள இவர், தமிழ் சினிமாவில் விஜயகாந்த் என்ற பெயரில் அறியப்படுகிறார். இவர் தமிழ் திரையுலக பிரபல முன்னணி முக்கிய நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் தமிழக சட்டசபை அரசியல்வாதியும் ஆவார். விஜயகாந்த் 1979 ஆம் ஆண்டு 'அகல் விளக்கு' திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 2015 ஆம் ஆண்டு வரை 150-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து தமிழ் மக்களின் அன்பை கவர்ந்து பிரபலமானவர்.


விஜயகாந்த் இதுவரை தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவரது திரைப்படங்கள் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டிருந்தாலும் இவர் தமிழ் சினிமாவில் தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ள குறிப்பிடப்படும் பிரபலங்களில் இவரும் ஒருவராவார். இவருக்கு தமிழ் சினிமாவில் "புரட்சி கலைஞர்' என்னும் பட்டம் உண்டு.


பிறப்பு


விஜயகாந்த், மதுரையில் கே.என் அழகர்சுவாமி மற்றும் ஆண்டாள் அழகர்சுவாமி ஆகியோருக்கு மகனாக 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதியில் பிறந்துள்ளார். நடிப்பு கலையில் அதிக ஆர்வம் கொண்டுள்ள இவர், சினிமாவில் நடிகன் ஆக வேண்டும் என்ற மோகத்தில் சென்னைக்கு வந்து பல கஷ்டங்களை கடந்து 1979 ஆம் ஆண்டு 'அகல் விளக்கு' என்ற படத்தில் மூலம் அறிமுகமாகி தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.


1990 ஆம் ஆண்டு ஜனவரி 31ல் நடிகர் விஜயகாந்த், பிரேமலதா என்பவரை மதுரையில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு விஜய பிரபாகரன் மற்றும் சன்முகப் பாண்டியன் என்னும் இரு மகன்கள் உள்ளனர். இவர்களது இளைய மகன் 'சகாப்தம்' திரைப்படத்தின் மூலம் ஒரு நடிகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.




திரையுலக தொடக்கம்


நடிகர் விஜயகாந்த் பல போராட்டங்களுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரம் மூலம் அறிமுகமானார். இவர் 1979ல் அகல் விளக்கு என்ற படத்தில் நடித்துள்ளார், பின்னர் அதே ஆண்டு இனிக்கும் இளமை என்ற படத்தில் நடித்துள்ளார்


விஜயராஜ் என்ற தனது பெயரில் ராஜ் என்னும் வார்த்தையை தூக்கி காந்த் என்னும் வார்த்தையுடன் இணைத்து 'விஜயகாந்த்' என தனது பெயரினை மாற்றி அமைத்துள்ளார்.


தொடக்கத்தில் இவர் வில்லன் கதாபாத்திரம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினாலும், பின்னர் நாயகனாக தனது பயணத்தை தொடங்கியுள்ளார். இவரது முன்னணி நடிப்பில் 1981 ஆம் ஆண்டு வெளியான 'சட்டம் ஒரு இருட்டறை' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இவருக்கென ஒரு அடையாளத்தினை பெற்று தந்துள்ளது.





பிரபலம் / அங்கீகாரம்


வில்லன் கதாபாத்திரம் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கிய இவர், நாயகனாக பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். இவர் நடிக்கும் படங்களில் தேசப்பற்று வசனங்கள் மிகவும் அழுத்தமாக இருக்கும். ஊழல், திருட்டு என சட்ட விரோத செயல்களுக்கு இவரின் குரல் திரைப்படங்களிலும், சமூகத்திலும் தொடர்ச்சியாக ஒலிக்கும்.


விஜயகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் ஊழலுக்கு எதிரான திரைக்கதையிழும், தேசப்பற்று படங்களாகவும் இருக்கின்றது. இவர் இரட்டை கதாபாத்திரங்கள் மற்றும் காவலர், ராணுவம் போன்ற கதாபாத்திரங்களில் பெரும்பாலும் நடித்துள்ளார்.


தமிழ் சினிமாவில் 'புரட்சி கலைஞர்' என்ற பட்டம் பெற்றிருந்தாலும் இவரை தமிழ் திரைப்பட ரசிகர்கள் 'கேப்டன்' என்றே அழைக்கின்றனர். இவரது 100வது படமான 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்கு பின்னர் இவருக்கு இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளது.


இவரது நடிப்பையும், நாட்டு பற்றையும் பாராட்டி - தமிழக அரசு திரு. விஜயகாந்த் அவர்களுக்கு கலைமாமணி விருது (2001), எம் ஜி ஆர் விருது (1994), சிறந்த தமிழ் திரை நட்சத்திரத்திற்கான பிலிம்பேர் விருது (2009) ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அரசால் 'சிறந்த குடிமகனுக்கான' விருது அளிக்கப்பட்டுள்ளது.


நடிகர் விஜயகாந்த் அவர்கள் தமிழ் திரைப்படங்களில் நடிகனாக மட்டுமில்லாமல், தமிழக திரைப்பட சங்கம் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். பல கோடிகள் கடனில் உள்ள தமிழ் திரைப்பட சங்கத்தினை தனது சிறந்த வழிகாட்டுதலில் ஒரு முன்னணி திரைப்பட சங்கமாக உயர்த்தியுள்ளார்.


அரசியல் பயணம்


நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் தனது தேசப்பற்று வசனங்கள் மூலம் பிரபலமான இவர், அரசியலிலும் தனது பங்களிப்பினை கொடுத்துள்ளார். "தேசிய முற்போக்கு திராவிட கழகம்" என்ற பெயரில் தனக்கென ஒரு கட்சியினை தொடங்கி புகழ் பெற்றுள்ளார். இவர் 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.




,

மறைந்தார் விஜயகாந்த்.


தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இந்த நிலையில், சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 26ம் தேதி நேற்று இரவு 9 மணிக்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது.

வீட்டு வாசலில் காத்திருந்த தொண்டர்கள் விஜயகாந்தின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜயகாந்திற்கு நுரையீரல் அழற்சி ஏற்பட்டதாகவும், மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சி இருந்த போதிலும் இன்று காலமானார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 November, 2013

விஜயகாந்தின் குடி பழக்கம் அவர் சொந்த விஷயமா..?



'விஜயகாந்த், மதுப் பழக்கம் உடையவர்' என்று, ஆளும் கட்சியினர் கூறுவது, சிலருக்கு, எரிச்சலைக் கிளப்புகிறது. 'அவருடைய தனிப்பட்ட பழக்கம் எதுவும், தமிழர்களைப் பாதிக்காது' என்கின்றனர்.

இப்படிச் சொல்வது அபத்தம்; அறிவீனம். ஏனெனில், விஜயகாந்த், டாஸ்மாக்கே கதி என்று விழுந்து கிடக்கும் ஒரு சாதாரணக் 'குடிமகன்' அல்ல. அவர், ஓர் அரசியல் கட்சியின் தலைவர் மட்டுமல்ல, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் கூட.

முதல்வர் நாற்காலி மீது, தீரா மோகம் கொண்டிருப்பவர். அவர் கனவு காண்பதைப் போல, 2016-ல், முதல்வராகி விட்டால் (தமிழகத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்!), முக்கியமான முடிவுகளை எடுக்கையில், நிதானத்தில்' தான் இருப்பார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

அவர், நிதானம் இழந்து நடந்து கொண்டதால் தான், தே.மு.தி.க.,வைச் சேர்ந்த ஏழு எம்.எல்.ஏ.,க்கள், அதிருப்தியாளர்களாக மாறி விட்டனரா என்பது தெரியவில்லை.

ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம், சி.என்.அண்ணா துரை மற்றும் (எனக்குத் தெரிந்த வரையில்) கருணாநிதிக்கு, இந்தப் பழக்கம் இருந்ததாக, யாருமே சொன்னதில்லை. சில மாதங்களுக்கு முன், திருமதி விஜயகாந்த் தலைமையில், தே.மு.தி.க.,வினர், மது ஒழிப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். கட்சியின் தலைவருக்கே, 'பழக்கம்' உண்டு என்பது, பகிரங்க ரகசியம். ஆகையால், மக்கள், அதை ஒரு வேடிக்கையாகத் தான் பார்த்தனர்.

நல்லதொரு மறுவாழ்வு சிகிச்சை மையத்தில், சிகிச்சை பெற்று, இப்பழக்கத்தை விட்டொழிப்பது, அவருக்கும், கட்சிக்கும் நல்லது. அவருடைய ஆதரவாளர்கள், இதை அவருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

ஆளுங்கட்சியினர், திட்டமிட்டு அவமானப்படுத்துவதால் தான், அவர், சட்டசபைக்கு வருவதில்லை என்று சொல்கின்றனர். நாக்கைத் துருத்தி, விரலை நீட்டி, ஆளுங்கட்சியினருக்கு, அவர் சவால் விட்டது தவறில்லையா? சரியான தகவல்கள் மற்றும் புள்ளி விவரங்களுடன், கோர்வையாகப் பேச, அவரால் முடியவில்லை.

எனவே தான், அவைக்குப் போவதில்லை என்பது தான் பெரும்பாலானோரின் கருத்து. இதை எல்லாம் நினைவில் கொண்டு, தன்னை மாற்றிக் கொண்டால் தான், விஜயகாந்த், அரசியலில் நிலைக்க முடியும். இல்லையென்றால், அதோகதி தான்!

06 August, 2013

இஸ்லாமிய கொள்கையோடு ஒத்துப்போகிறது தேமுதிக. - விஜயகாந்த் அதிரடி

"எனக்கும் மெக்காவிற்கும் நிறைய தொடர்பு உண்டு; அங்கிருந்து வாங்கி வரப்பட்ட, ஆல்கஹால் கலக்காத, "பெர்பியூம்' தான் பயன்படுத்துகிறேன்; பேரீச்சம் பழம் சாப்பிடுகிறேன்,'' என, இப்தார் நோன்பு திறப்பு விழாவில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்த, இப்தார் நோன்பு திறப்பு விழாவில் பங்கேற்று, விஜயகாந்த் பேசியதாவது: 
 
இப்தார் நோன்பு பற்றி நிறைய பேசவேண்டும். இஸ்லாமியர்களுக்கு, ஐந்து விதமான விஷயங்கள் உண்டு. அதில் நோன்பு திறப்பது, ஒரு முக்கியமான விஷயம். சிறு வயதாக இருக்கும்போது, மதுரையில் பள்ளி வாசல்களுக்கு சென்று நோன்பு கஞ்சி வாங்கி குடித்திருக்கிறேன்; கஞ்சி அவ்வளவு ருசியாக இருக்கும். "இயன்றதை செய்வோம், இல்லாதவருக்கே' என்ற தே.மு.தி.க., கொள்கையும், இஸ்லாமியர்களின் ஐந்து விதமான விஷயங்களும் ஒன்று தான். 
 
சில தலைவர்கள், தலையில் குல்லா போட்டு நோன்பு திறந்து படம் எடுத்து சென்று விடுவர். ஆனால், நான், 2005ல் கட்சி துவக்கியதில் இருந்து நோன்பு திறந்து வருகிறேன். கட்சி கொள்கைப்படி, பெண்களுக்காக பல உதவிகளை செய்திருக்கிறேன். 
 
என் கையை கட்டி போட்டாலும், தர்மம் செய்வதை நிறுத்த மாட்டேன். இந்தியாவில் பிறந்த நாம், வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும். மெக்காவில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித தண்ணீர், என் வீட்டில் இருக்கிறது. பலருக்கும் கிடைக்காத அந்த தண்ணீரை குடிப்பதற்கு, நான் பாக்கியம் செய்திருக்கவேண்டும். 
 
எனக்கும், மெக்காவிற்கும் நிறைய தொடர்பு உண்டு. அங்கு வாங்கிய, ஆல்கஹால் கலக்காத, "பெர்பியூம்' தான் நான் பயன்படுத்துகிறேன். என் அருகில் வந்து நுகர்ந்து பார்த்தால், அது தெரியும். அங்கிருந்து கொண்டு வரப்பட்ட பேரீச்சம் பழத்தை சாப்பிடுகிறேன். இவ்வாறு, அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், தே.மு.தி.க., மாநில நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், பார்த்தசாரதி, சந்திரக்குமார், சுதீஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

16 February, 2013

ஜெயலலிதா மற்றும் விஜயகாந்தை சந்திக்கிறார் வடிவேலு

சினிமாவுலகில் உச்சத்தில் இருந்த வடிவேலுக்கு தேர்தல் சூறாவளி பெரும் பாதிப்பை தந்தது. தற்போது கொஞ்சக்கொஞ்சமாய் வெளிவந்திருக்கும் வடிவேலு தன்னுடைய மகளின் திருமணத்தை முன்னிருத்தி அனைத்து கட்சியினருடனும் சுமூகமாக செல்ல தீர்மானித்திருக்கிறார்.

அதனால் மகளின் திருமணத்துக்கு அரசியல் பேதமின்றி ஜெயலலிதா உள்பட அனைவருக்குமே அழைப்பிதழ் வைக்க நடிகர் வடிவேலு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நடிகர் வடிவேலு அவர்களின் மூத்த மகளுக்கு வரும் ஏப்ரல் 7-ம் தேதி மண்மனம் மாராத மதுரையில் திருமணம் நடக்கிறது. திருமண வேலைகளில் மும்முரமாக உள்ளார் வடிவேலு. 
மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் அச்சடிக்கும் பணி இப்போது நடந்து வருகிறது. வடிவேலு இப்போது அரசியல் பற்றி பேசுவதில்லை என்றாலும், அவர் சார்ந்திருக்கும் திமுக தலைவர்களை அழைத்தால் மீண்டும் தேவையற்ற சர்ச்சைகள் வரும். எனவே அழைப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தாராம். 

இறுதியாய் திமுக மட்டும் இல்லாது அதிமுக சார்ந்த பிரபலங்களுக்கும் மற்றும் அனைத்து அரசியல் தலைவர்களுக்குமே அழைப்பிதழ் தருவதென முடிவு செய்துள்ளாராம். திருமணம் முடிந்த பிறகு பல புதுப்பட ஷூட்டிங்கை தொடங்கப் போகிறாராம் வடிவேலு.

அதுசரி அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து பத்திரிக்கை கொடுக்க நினைக்கும் வடிவேலு மதுரையை சார்ந்தவரும் தே.மு.தி.க. வின் தலைவருமான கேப்டன் விஜயகாந்தை சந்தித்து பத்திரிக்கை வைப்பாரா என்பதுதான் தற்போதைய கேள்வி.

31 December, 2012

விஜய், விஜயகாந்த், பவர்ஸ்டார் / 2012 -ன் Top 10 பிரபலங்கள்


2012-ல் நம் பதிவுலகில் ஆயிரக்கணக்காக பதிவுகள் வெளிவந்திருக்கும். நானே 143 பதிவுகள் போட்டிருக்கே பாருங்களேன். ஒவ்வொறுவரும் தன்னுடைய படைப்புகளை மற்றவர்கள் ரசிக்கும் படி அழகாக தொகுத்து கொடுத்திருந்தனர். சில பொது தலைப்புகளில் மற்றும் விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டி அதிக பதிவுகள் வெளிவந்திருந்தது.


அப்படி 2012-ம் ஆண்டில் எந்த தலைப்புக்கு அல்லது எந்த விஷயத்துக்கு அதிகமுக்கியத்துவம் கொடுத்து அதிக பதிவுகள் வந்தது என்று சிறந்த 10 அம்சங்களை இங்கு தொகுத்திருக்கிறேன். இவைகள் வரிசைப்படுத்தப்படவில்லை. அவைகள்.

*****************************************



இந்தவருடம் அதிகஅளவில் அனைத்து பதிவர்களும் பகிர்ந்துக்கொண்ட செய்திகளில் முதல் இடம் வகிப்பது இந்த மின்தடை குறித்த பதிவுகள்தான்.

கவிதை, கட்டுரை, கண்டன பதிவுகள், கேலி சித்திரங்கள், பேஸ்புக்கில் தகவல்கள் என அதிகமானோர் இந்த மின்தடையை பதிவிட்டார்கள்.

*****************************************
 
இந்த வருடமும் விஜயகாந்த் பற்றிய அதிரடி பதிவுகள் வந்தது. சட்டமன்றத்தை விட்டு வெளியேற்றம், தன்னுடைய கட்சி அமைச்சர்கள் அதிமுக வுக்கு ஆதரவான செயல்பாடு போன்ற விவகாரங்களில் விஜயகாந்த் பரபரப்பாக காணப்பட்டார்.

*****************************************
 அம்மாவை பற்றி சொல்லவே தேவையில்லை.
இந்த வருடம் முழுவதும் அம்மா மற்றிய பதிவுகள் அதிகஅளவில் வந்து பதிவுலகை கலக்கியது.

*****************************************

விஜய் இந்த வருடமும் அதிக பதிவுகளில் இடம் பிடித்து அதிக பதிவர்களுக்கு அதிக அளவில் ஹிட்ஸ் எடுக்க உதவினார். நண்பன் படம் அது குறித்த விமர்சனம், துப்பாக்கி படம் விமர்சனம், முஸ்லீம் பற்றிய கருத்துக்கு எதிர்ப்பு என அஜித்தை விட விஜய் இந்த வருடம் அதிக பதிவுகளில் இடம்பிடித்தார்.

*****************************************

ஆகஸ்ட் மாதம் ‌சென்னையில் நடைப்பெற்ற  பிரமாண்ட பதிவர் சந்திப்பு நிகழ்ச்சி முடிவு செய்ததில் இருந்து அதன் காணொளிகளை வெளிட்ட வரை அது குறித்து எண்ணற்ற பதிவுகள் பதிவுலகால் பகிரப்பட்டது. அதுவும் பரபரப்பு தலைப்புளுடன்.

*****************************************

பவர் ஸ்டார் இந்த வருடமும் பதிவுலகால் அதிக அளலில் கவனிக்கப்பட்டார். அவருடைய கைது, திரைப்படங்கள், போன்றவை அதிக அளவில் இடம்பிடித்தது. இன்னும் தலைப்பில் பவர்ஸ்டார் என்று பதிவிட்டால் ஹிட்ஸ் அள்ளும் என்று நிறைய பதிவர்களுக்கு தெரியும்.

*****************************************
இந்த ஆண்டு இருமுறை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதிதேர்வு, VAO, TNPSC, போன்ற ‌தேர்வுகள் குறித்த பதிவுகளும் அதுகுறித்த செய்திகளும் அதிக இடத்தை பிடித்திருந்தது.

*****************************************

படம் துவங்கியல் இருந்து பரபரப்பு தகவல்களை கொண்டதாக இந்த விஸ்வரூப தகவல்கள் இருந்து வருகிறது.

*****************************************

அன்னீய முதலீடு குறித்த வால்-மார்ட் குறித்த பதிவுகளும் அதிக அளவில் இடம் பிடித்தது.

*****************************************

 ‌எல்லாவருடமும் போல் இந்த வருடமும் அதிக பதிவுகளில் இடம்பிடித்தவர் அறிக்கை அறிஞர் நம்ம கலைஞர்.

*****************************************

வேறு ஏதாவது அதிக அளவில் பதிவுகளாக வந்திருந்தால் தங்களுடைய கருத்தாக பதிவுசெய்யுங்கள்.

01 November, 2012

விஜயகாந்தை கைது செய்து ஜனநாயக கடமையாற்றுவாரா ஜெயலலிதா..?


விஜயகாந்த் என்றால் எதாவது பரபரப்பு என்று ஆகிவிட்டது. அந்த பரபரப்பு ஆக்கபூர்வமான செயலுக்காக இருந்தால் நல்லது என்று தமிழக மக்கள் அனைவரும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவருடைய பரபரப்பு எதுஎதற்கு என்று நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

சென்னை விமான நிலையத்தில் கேள்வி கேட்ட செய்தியாளரை நாயே...... என்றும் தாறுமாறாகவும் திட்டினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் அப்போது அவருடன் இருந்த அவரது கட்சி எம்.எல்.ஏ.  அனகை முருகேசன் அவர்கள் நிருபரை தள்ளிவிட்ட வழக்கில் கைது செய்து தமிழக அரசு தன்னுடைய ஜனநாயக கடமையை செம்மையாக நிறைவேற்றியிருக்கிறது. தற்போது அவர்களது அடுத்த குறி விஜயகாந்த். அவரையும் கைது செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சென்னை விமான நிலையத்திற்கு வந்த விஜயகாந்த்திடம், வேண்டுமென்ற ஜெயா டிவி செய்தியாளர் பாலு  அவர்கள் கேள்விமேல் கேட்டு கேப்டனை இம்சை செய்திருக்கிறார். தலைவரும் உணர்ச்சி வசப்பட்டு தன்னுடைய வேலையை காட்ட பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.


மற்ற செய்தியாளராக இருந்திருந்தால் அரசு வேடிக்கை பார்த்திருக்கும் ஜெயா டிவி நிருபர் என்ற உடன் அத்தனை அதிகாரிகளும் அநியாயத்துக்கு தன்னுடைய வேலையை செம்மையாக செய்துக்கொண்டிருக்கிறார்கள். நிருபர் இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் விஜயகாந்த், அனகை முருகேசன் ஆகியோர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முருகேசன் அவர்களை கைதும் செய்துவிட்டார்கள்.

“இந்த நிலத்தில் யாருக்கும் அச்சாத சிங்கம்”  முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருக்கிறார் விஜயகாந்த். அதையும் அம்மா அவர்கள் நேற்று பேரவை நேரத்தில் அழகா நக்கல் அடித்தார். சட்ட மன்றத்தில் தற்போது இந்த படம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

தற்போது அதிமுக ஆட்சி என்றால் அது எதிர்கட்சியினரை பழிவாங்கும் ஆட்சி என்ற நிலை இன்றுவரைகூட நிடிக்கிறது. இதுவரை பிரதான எதிர்கட்சியான திமுக-வுக்கு எதிராக மட்டும் இருந்த இந்த கைது நடவடிக்கைகள் தற்போது தமிழகத்தில் இருக்கும் அனைத்து கட்சிக்கும் எதிராக திரும்பியிருப்பது கொஞ்சம் வேதனையாக இருக்கிறது...

தமிழகத்தில் நீலம் புயல் பாதிப்புகள், மின் பற்றாக்குறை, காவிரிப் பிரச்சனை, தேவர் கூட்ட கலவரம், கூடங்குளம் போராட்டம் என ஏகப்பட்ட பிரச்சனைகள் தமிழகத்தில் தவைவிரித்து ஆடும்போது கூட அம்மா அவர்கள் எதிர்கட்சியினரின் தவறுகளுக்கு தண்டனை வழங்குவதை செமமையாக செய்து வருகிறார். இன்னும் பாக்கி இருப்பது விஜயகாந்த கைது மட்டும்தான்.

வாழ்க அண்ணா நாமம்..!. வளர்க அம்மா தொண்டு...!

31 October, 2012

அடுத்து என்ன செய்ய போகிறார் விஜயகாந்த்...!


 

‌தேமுதிக வுக்குள் தற்போது வெள்ளம் தலைக்குமேல் சென்றுக்கொண்டிருக்கிறது....

இப்போதாவது கட்சியையும், கட்சி உறுப்பினர்களிடம் நடந்துக்கொள்ளும் அனுமுறையையும், தன்னுடைய நிலையையும் மாற்றிக்கொள்வாரா ‌விஜயகாந்த் அவர்கள்...

மற்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சரை பார்ப்பதால் என்ன ஆகிவிடப்போவதில்லை. தன் கட்சியின் மன்ற உறுப்பினர்கள் போய் தொகுதி பற்றி பேசினார்கள் என்றதும். தானும் தொகுதிப்பற்றி பேச அனுமதி கோறியிருக்கிறார். முறைப்படி பார்த்தால் இவர் அல்லவா முதலில் போயிருக்க வேண்டும்.

4 பேர் மட்டும்தானா  இன்னும் தேமுதிக கட்சிக்குள் அதிரடி காத்திருக்கிறதா..?

அடுத்த என்ன நடக்கபோகிறது பொருத்திருந்து பார்ப்போம்...

14 September, 2012

இந்திய தலைவர்களை இழிவுப்படுத்தும் விஜயகாந்த்... இதுவா இவரது சாதனை


தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) செப்டம்பர் 14, 2005 அன்று விஜயகாந்த் தலைமையில் மதுரையில் தொடங்கப்பட்டது. அதன் ஆண்டு விழா இன்று அந்த கட்சியினரால் கொண்டாடப்படுகிறது.
 
கட்சி தலைவரான விஜயகாந்த் தன்னுடைய முன்‌யோசனையற்ற தன்மையால் பல்வேறு விமர்சனங்களுக்கும், பல்வேறு கன்டணங்களுக்கும் ஆளாகியிருக்கிறார்.

விஜயகாந்த் சினிமாவுக்காக எத்தனையோ கதாபாத்திரத்தில் நடித்தவராக இருக்கலாம். காவல் துறை சார்ந்த அவர் நடித்தப்படங்கள் மிகவும் சக்கைப்போடு போட்டவை. அவருடைய வசனங்கள் கைதட்டவைத்தது...
 
ஆனால் அவர் அவைகளை சினிமாவோடு நிறுத்திக்கொள்ளாமல் தன்னுடைய பொதுவாழ்விலும் கடைபிடிப்பதுதான் வேதனையாக இருக்கிறது.
 
தன்னுடைய வாழ்க்கையில் ஒருவர், மூத்த அல்லது தேசிய தலைவர்கள் போன்று அவர்களது வழியை பின்பற்றி அவர்களைப்போல் வாழமுயற்சிக்கலாம். அதற்காக அவர்கள்போல் வேடமிட்டு கொண்டு அவர்களை இழிவுப்படுத்தி வருவது தவறு. 

இதை இவரே விருப்பப்பட்டு செய்கிறாரா அல்லது ‌ஆர்வகோளாரால் அவரது‌ தொண்டர்கள் இப்படி செய்கிறார்களா என்று தெரியவில்லை. எது எப்படியோ அதை செய்யக்கூடாது என்று தொண்டர்களுக்கு கட்டளையிடாதது அமைதிகாப்பதும் குற்றத்திற்கு துணைப்போவதுபோல்தானே...



கருப்பு எம்ஜிஆர் என்று இவரே இவரை சொல்லிக்கொண்டால் எப்படி, மக்கள் சொல்லவேண்டும். எம்.ஜி.ஆர். செய்ய சேவைகள், அவர் நடத்திய அரசியல், அவருடைய பெருந்தன்மை, அவரது சபை நாகரீகம் கொஞ்சமாவது இவர் பின்பற்றினால் சரி என்று ஏற்றுக்கொள்ளலாம். அவைகள் கொஞ்சமாவது இவரிடத்தில் இருக்கிறதா நீங்களே சொல்லுங்கள்.





எம்ஜிஆர் போல் வேடமிட்டது போதாதென்றுமேற்கண்ட தேசிய தலைவர்கள் போலும் இவரை சித்தரிக்கிறார்கள். பாரதியார், சுபாஸ்சந்திரபோஸ், பகத்சிங்,  திலகர் என இவரது அட்டகாசங்கள் நீள்கிறது. இதற்கு நான் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.






இந்த பட்டத்துக்கு நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை நீங்களே சொல்லுங்கள். விஜயகாந்த் தமிழகத்தின் அன்னா ஹசாராவா..?



இது அவரது உண்மை முகம் இது நான்சொல்ல தேவையில்லை. தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும்.



தமிழக வரலாற்றில் ஒரு எதிர்கட்சித் தலைவர் சஸ்பெண்ட் செய்ய காரணமான சம்பவம். சட்டமன்றத்தை கூ்ட இவர் நாடக மேடை என்று நினைத்துவிட்டார் போலும்.



இது போன்ற சிறுபிள்ளைத்தனமான செய்கைகளை இவர் அரசியலில் விட்டால்தான் எதிர்காலத்தில் கொஞ்சமாவது மதிக்கப்படுவார் என்பதில் சந்தேகம் இல்லை. இதுபோன்றே தொடர்ந்தால் என்ன ஆவரோ.....?

24 February, 2012

டிஜிட்டல் தமிழகம்... ஜெயலலிதாவுக்கு போட்டியாக மு.க.ஸ்டாலின்..


இன்றைய தமிழக அரசியல்வாதிகள் தங்கள் வகிக்கும் பதவியை அடிக்கடி மக்களுக்கு, அவர்களின் கட்சிகாரர்களுக்கும் ஞாபகம் படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். கட்சியின் பலமான கட்சிக்காரர்கள் மற்றும் தொண்டர்கள் தங்கள் தலைமையை அன்றாடம் பாராட்டி தள்ள வேண்டும். அதற்காக அவர்கள் கையில் எடுத்துள்ள ஆயுதம் டிஜிட்டல் பேனர். தன்னுடைய வீடு எப்படி போனாலும் பரவாயில்லை, ஆனால் தன் பெயரில‌் எதாவது ஒரு டிஜிட்டல் கட்அவு்ட் ரோட்டில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

சாதாரண வீட்டு காதுகுத்து விழா தொடங்கி, இரங்கல் செய்தி வரை இன்று எதற்கெடுத்தாலும் டிஜிட்டல் பேனர் வைப்பது என்பது சர்வசதாரண நிகழ்வாக ஆகிவிட்டது. அது அரசியல் கட்சிகளிடம் இருக்கிற மிகப்பெரிய ஆயுதமாக தற்போது உறுமாறிவருகிறது. 

தமிழகத்தின் தொன்மை வாய்ந்த தொழிலும், லாபம் ஈட்டக்கூடிய மிக முக்கிய தொழிலாக விளங்கிவருவது அரசியல் தான். அரசியலில் வார்டு உறுப்பினர் பதவியில் ஆரம்பித்து கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய, மாவட்ட த‌லைவர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சர் என ஒவ்வொறு படிநிலையிலும் அதற்கேற்ற நிலையில் இங்கு சம்பாதிக்க முடியும். அப்படி வருமானத்திற்கு உத்திரவாதம் கொண்ட தொழிலாக அரசியல் விளங்கி வருகிறது.


தமிழகத்தில் பிரதான கட்சியாக விளங்கி வருபவை திமுக மற்றும் அதிமுக என்ற இரண்டு ஜாம்பவான் கட்சிகள்தான். இதன் கட்சிக்காரர்கள் நம் தமிழகம் எங்கு நிறைந்து காணப்படுகிறார்கள். இந்த கட்சிக்காரர்கள் தலைமைக்கு தன்னுடைய விசுவாசத்தை காட்ட தலைமையை வாழ்த்தி, பாராட்டி ஏதாவது செய்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் இவர்கள் தொடர்ந்து அந்த பதவியில் இருக்க முடியும். அதற்காக முன்பெல்லாம் சுவர்முழுக்க வெள்ளை அடித்து அதில் வாழ்க வளர்க என தன் தலைமையை பாராட்டி வாழ்த்தி விளம்பரம் எழுதுவார்கள். அது ஒருகாலம்.

ஆனால் இன்றைய காலமாற்றத்தால்  கட்சித் தொண்டர்களுக்கு உறுதுணையாக இருப்பது டிஜிட்டல் பேனர் என்று அழைக்கப்படும் விளம்பர பேனர்களே.... இதன் வருகையால் பழைய சுவர்விளம்பரங்கள் அறவே ஒழிந்து விட்டது. இன்று (பிப்ரவரி 24) அதிமுக பொதுச்செயலாளர் ‌ஜெயலலிதா அவர்களுக்கும், வரும் மார்ச் 1 அன்று திமுக துணைபொதுச் செயலாளர்  மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் பிறந்த நாள் வருகிறது. 

இந்த இருவரும் தமிழகத்தில் நிலவிவரும் மின் பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு தன்னுடைய பிறந்தநாள் விழாவை எளிமையாக கொண்டாட வேண்டும் என்று அறிக்கை விட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய கட்சித் தொண்டர்கள் அப்படி விடுவதாக இல்லை. தன்னுடைய விசுவாசத்தை காட்டவும், கட்சி பொருப்பில் நிலைத்து இருக்கவும் இவர்கள் ஏதாவது செய்துக்கொண்டே இருக்க வேண்டும்.

இந்த ஒரு வாரமாய் எங்கு பார்க்கிலும் கட்சி பேனர்கள்  ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கிறது. இன்று ஜெ., அவர்களின் பிறந்த நாள் விழாவுக்கு பேனர்கள் வைத்ததின் விளைவாக எதிர்கட்சியான திமுக வும் தன்னுடைய பங்குக்கு ஏட்டிக்குபோட்டியாக அவர்களுக்கு நிகராக பிரமாண்ட பேனர்களை வைத்து வருகிறார்கள். திருவள்ளூரில் இருந்து ‌சென்னை சென்று வந்தேன் போய் வரும் வழியெல்லாம் எங்கு பார்க்கிலும் இந்த வாழ்த்து டிஜிட்டல் பேனர்கள் அனைத்தையும் மறைத்துக் கொண்டு பிரமாண்டமாய் ‌காட்சியளிக்கிறது.

ஏன் இதை சொல்கிறேன் என்றால், இன்று தமிழகம் மிகப்பெரிய மின்பற்றாக்குறையால் தத்தளித்து வருகிறது. அது போதாதென்று தினம் ஒரு கொள்ளையும் அரங்கேறி வருகிறது. இப்படி இருக்க இந்த ஆடம்பர டிஜிட்டல் பேனர்கள் அவசியம் தானா என்பது என்னுடைய கேள்வி. கிராமங்களில் உள்ள கடைசி மட்ட தொண்டர்கள் கூட ஆளுக்கு இரண்டு டிஜிட்டல் பேனர்கள் கட்டி தன்னுடைய விசுவாசத்தை காட்டிகொண்டிருக்கிறார்கள்.

இந்த டிஜிட்டல் பேனர் அச்சடிக்க ஒரு சதுர அடிக்கு 8 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை செலவு பிடிக்கிறது.  பத்துக்குபத்து (10x10) அளவு கொண்ட ஒரு டிஜிட்டல் பேனர் அச்சடிக்க டிசைன் சார்ஜ், பிரிண்டிங், ‌பேனருக்காக சட்டம், அதை கட்ட சாரம், கூலி என கிட்டதட்ட 2000 ரூபாய் வரை செலவு பிடிக்கும். அப்படியென்றால் தங்கள் பகுதியில் இருக்கும் அனைத்து டிஜிட்டல் பேனர் அச்சடிக்க எவ்வளவு செலவு ஆகியிருக்கும் என்று நீங்களே கணக்குபோட்டு‌ கொள்ளுங்கள். இன்று தமிழகம் முழுவதும் இன்று எங்கு பார்க்கில் இந்த பேனர்கள் தான்.

அரசியல்வாதிகள் தங்கள் பிள்ளைக்குட்டிகள் நன்றாக இருக்க கோடிக்கோடியாய் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதைஅறியாத கடைக்கோடி தொண்டன் தன்னுடைய வருமானத்தை இழந்து இதுபோன்ற செலவு செய்துக்கொண்டிருக்கிறார்கள். சமூகத்திற்கும் குடியானர்களுக்கு கேடுவிளைவிக்கும் இந்த டிஜிட்டல் சாம்ராஜ்ஜியம் என்றுதான் ஒழியுமோ...

தேர்தல் நேரத்தில் இதுபோன்ற டிஜிட்டல் பேனர்கள் வைக்க கூடாது என்று கட்டுபாடுவிதிக்கும் தேர்தல் ஆணையம் எல்லாகாலங்களிலும் இதற்கு தடைவிதித்தால் சுற்றுசூழல் மாசில் இருந்து இந்த நாட்டை காக்கவும் ஒரு வழி ஏற்படும். குடியானவனின் பணம் வீணடிக்கப்படுவதையும் இதன் மூலம் தடுக்கலாம்.


19 December, 2011

தமிழக மக்களை காக்க எளிய வழிகள்.. விஜயகாந்த் அதிரடி பேட்டி...


முல்லைபெரியாறு அணை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துவரும் வேளையில் அனைத்து அரசியல் கட்சிகளும் பல்‌வேறு போராட்டங்களை அறிவித்து அ‌தனைநடத்தியும் வருகிறது. மறியல்கள், பேரணிகள், ஆர்பாட்டங்கள், ரகளைகள் என அவரவர் தன்பங்குக்கு போராட்டங்களை செய்து வருகிறார்கள். அதிமுக, திமுக, தேமுதிக, மதிமுக, என அனைத்து கட்சிகளும் ஒரு சேர குரல் கொடுத்து வருகிறது.

தேமுதிக சார்பில் கடந்த வாரம் ஒரு பேரணியை வெற்றிகரமாக நடத்திய விஜயகாந்த், அன்று  பத்திரிக்கையாளர்களுக்கு  அளித்த பேட்டியில் ஒரு விஷயம் குறிப்பிட்டு இருந்தார்.

அதாவது ‌ஐயப்பனை தரிசிக்க நாம் சபரிமலைக்குதான் செல்ல வேண்டுமா.. நாமே தமிழ்நாட்டிலே ஒரு ஐயப்ப கோயிலைக்கட்டி நாம் தரிசிக்க கூடாதா என்று கேட்டிருந்தார்.

பொதுவாக சில சமய நம்பிக்கைளை, புராதன ஸ்தலங்களை, தேசிய சின்னங்களை, பாரம்பரியங்களை நாம் எளிதில் விட்டு விடமுடியாது. அவைகள் தற்போதை பிரச்சனைகளுக்காக பலநூறு ஆண்டுகள் கொண்டுள்ள சம்பிரதாயங்களை மாற்றுக்கொள்வது என்பது கொஞ்சமும் ஆகாத செயல்.

விஜயகாந்த் இதுபோன்ற பாணியில் வேறு என்னன்ன சொல்வார் என்ற நகைச்சுவை கலந்த  பதிவு...


நிருபர் : ஆந்திராவில் அடிக்கடி தமிழர்கள் தாக்கபடுகிறார்கள் அது குறித்து தாங்கள் என்ன சொல்கிறீர்கள்.

விஜயகாந்த் : இது மிகவும் கண்டிக்கத்தக்கது. நான் ஒண்ணு சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன். தமிழன் பொறுமையை இழந்தால் அவ்வளவுதான்.

ஆந்திராவுக்கு நாம போனாதானுங்க அடிக்கிறாங்க.. திருத்தணியிலே ஒரு வெங்கடாசலபதி கோயிலை கட்டிடலாம். அப்படியே பக்கத்திலே முருகன் இருக்காரு இரண்டு போரும் ஒரே நேரத்தில் பிரபரமாயிடுவாங்க இல்ல..!

நிருபர் : பெங்களூரில் தமிழர்கள் தாக்கப்படுவது குறித்து தங்கள் கருத்து.

விஜயகாந்த் : ஏங்க நாம அங்க போகனும் அப்புறம் அடிப்படனும். மைசூரும் ஏறக்குறைய பெங்களூர் மாதிரித்தான் இருக்குது அதனாலே மைசூரையே பெங்களூருன்னு பெயர் மாத்திட வேண்டியதுதான்.

நிருபர் : இலங்கை கடற்படை அடிக்கடி நம்ம மீனவர்களை தாக்குவது குறித்து என்ன சொல்ல வர்றீங்க.

விஜயகாந்த் :  அது ஒண்ணும் இல்லிங்க.. நான் மாத்திமாத்தியெல்லாம் பேச மாட்டேன். இப்பவும் இதான் சொல்றேன். ஏன் நாம கடல்ல மீன் பிடிக்க போகணும் அப்புறம் அவங்க கிட்ட அடிவாங்கனும். தமிழ்நாட்டிலேயே நிறைய மீன்பிடிக்க வசதிகள் இருக்கு. அதை சொல்றேன் கேளுங்க... மொத்தம் 22,287 குளங்கள், 10,297 ஏரிகள், 5,398 கம்மாய்கள், 3097 கிணறுகள், 356 நதிகள், 205 ஆறுகள் இருக்கு இங்கயே நமக்கு தேவையான மீன்களை பிடிச்சிக்கிடலாம் இல்லையா..? அதை விட்டுட்டு அங்க போய் அவங்க அடிக்கிறாங்க இவங்க அடிக்கிறாங்கன்னா எப்படி...?

நிருபர் : நம்ம தமிழர்கள் வெளிநாட்டுக்கு சொன்று கஷ்டப்படுறதா ‌தகவல்கள் வருது.. அதைப்பத்தி என்ன ‌நினைக்கிறீங்க.. நமக்கு தெரிந்த மனோ கூட பஹ்ரைன்ல ரொம்ப வறுத்தெடுக்கிறாங்கலாம்.

விஜயகாந்த் : அந்த பரதேசிக்கு நான் அப்பவே சொன்னேன். நம்ம நாட்டைவிட்டு வேற எங்கும் போகாதேயான்னு கேட்கல...

நிருபர் : சரிங்க தலைவரே முடிவாக என்ன சொல்ல வறீங்க...

விஜயகாந்த் : எல்லா பிரச்சனைக்கும் ஒரு முடிவு இருக்கு. அது நம்ம தமிழகத்தை சுத்தி நல்ல பெரிய மதில்சுவர் எழுப்பி நம்மதமிழர்களை காக்க வேண்டும் என்று நான் அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.

அடுத்தமுறை என்னை முதல்வராக்கினால் மேற்கண்ட அனைத்தையும் செய்து முடித்து, தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன்.

வரட்டா..!

15 December, 2011

பொதுஇடத்தில் கமிஷ்னர், கலெக்டரை மிரட்டிய விஜயகாந்த்... மதுரையில் நடந்த நிஜசம்பவம்

தேமுதிக-வை கட்சியைச் சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகி ஒருவரின் இல்லத்திருமணத்தில் கலந்துகொள்ள மதுரை சென்ற விஜயகாந்த், திருமணத்திற்கு வந்த கட்சியின் பிளெக்ஸ் போர்டுகள் வைக்க அனுமதி மறுத்த காரணத்திற்காக, மணமேடையில் வைத்தே மதுரை காவல்துறை கமிஷனர் திரு. கண்ணப்பனையும், கலெக்டர் சகாயத்தையும், கொஞ்சம் கூட நாகரிகமற்ற முறையில் பெயர்களை உச்சரித்து, மிரட்டலோடு பேசியிருக்கிறார். 

23 November, 2011

விஜயகாந்த் உண்ணாவிரதத்தின் உண்மையான பின்னணி...


விஜயகாந்தின் தேமுதிக கட்சி அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த வெற்றிவாகை சூடி, பின் உள்ளாட்சி தேர்தலில் அந்தக் கூட்டணியிலிருந்து பிரிந்து முதல்முறையாக பெரும் போராட்டம் ஒன்றை நாளை நடத்துகிறது. 

பால் கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை தேமுதிகவினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர். அந்த செய்தியை மைப்படுத்திய ஒரு நகைச்சுவை உரையாடல்.

பிரேமலதா : ஏங்க எழுந்திருங்க...

விஜயகாந்த் : என்னம்மா..! விடும்மா இப்பத்தானே மணி 10 ஆகுது.


பிரேமலதா :  நைட்டுல டைட்டா சாரி லேட்டா படுத்தா இப்படிதாங்க... எந்திரிங்க சட்டசபைக்கு போகனும்...

விஜயகாந்த் : விடும்மா அது பெரிய மேட்ரே இல்லை..  நாளைக்கு பாத்துக்கலாம்

பிரேமலதா :  ஏங்க பிரஸ்-காரங்க கேட்டா என்ன சொல்லுவீங்க...
 

விஜயகாந்த் : அதுக்கும் ஐடியா இருக்கும்மா.. ”ஐயாம் சப்பரீங் பிரம் பீவர்” ...ம்... அப்படின்னு சொல்லிடலாம்.

பிரேமலதா :  ஏங்க நீங்க ஒரு மாநிலத்தின் எதிர்கட்சித்தலைவர். அதை மறந்துட்டு இப்படியிருக்கீங்க...

பாருங்க நைட்டோட நைட்டா பஸ் கட்டணம், பால் விலை, மின் கட்டணம், அத்த‌னையும் ஏத்திபுட்டாங்க நீங்க அதுக்கு ஏதாவது அறிக்கை விடுங்க..


விஜயகாந்த் : பொரும்மா.. ஏன் அவசறபடுற... மத்த தலைவரெல்லாம் அறிக்கை விடுவாங்கல்ல அதை எல்லாத்தையும் சேர்த்து பெரிய அறிக்கையா நம்ம கேப்டன் டீவில வாசிச்சிட சொல்லிடலாம். அப்பத்தான் நான் கரைட்டா பேசுரேனா என்ற டவுட்டு எனக்கு வராது.

பிரேமலதா :  எக்கேடாவது கெட்டுப்போகட்டும். அதுசரி இந்த விலை உயர்வை கண்டித்து வர்ற 1-ந் தேதி திமுக பார்ட்டி போரட்டங்க அறிவிச்சிருக்கு. நீங்க ஏதாவது போராட்டம் செஞ்சி மக்கள் மத்தியில நல்ல பேரு எடுங்க.

விஜயகாந்த் : அப்படியா சங்கதி.. பரவாயில்லயே எல்லா விஷயமும் தெரிஞ்சி வச்சியிருக்கே. அப்படின்னா நாம உண்ணாவிரதம் ஆரம்பிச்சிடுவோம்.

சரி... நான் எப்போதும் வியாழக்கிழமை ஒருபொழுது இருக்கேன் இல்ல. அந்தநாள்ளே உண்ணாவிரதத்தை வச்சிக்கலாம்.


அப்ப காலையில் நல்ல ஒரு கட்டுகட்டிட்டு கொஞ்சம் நேரம் அப்படியே இருந்துபுட்டு சாயங்காலம் 4 மணிக்கெல்லாம் வந்திடுறேன். எப்படி என்னுடைய அரசியல் ராஜதந்திரம்.


பிரேமலதா :  இப்ப தெரியாதுங்க.. அடுத்த முறை ஓட்டுகேட்க போகும்போதுதான் தெரியும் உங்க ராஜதந்திரம்.
 

விஜயகாந்த் : விடுமா.. நாம என்ன சொன்னாலும் நம்ம புரட்சிதலைவி கேட்டுக்கமாட்டாங்க. இந்த 5 ஆண்டுக்கு அவங்க வச்சதுதான் சட்டம், நமக்கு வந்து சேர வேண்டியது எல்லாம் வந்தாச்சியில்ல. அப்புறம் நமக்கு என்ன கவலை. மக்களை நம்பவைக்கிறதுக்கு இப்படி ஏதாவது செய்யணும்மில்ல.

சரி.. சரி.. நாளைக்கு உண்ணாவிரதத்துக்கு போறேன். இன்னிக்கு நல்ல ஆட்டுக்கால் பாயாவேட டிபன் ரெடிப்பண்ணு... நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிட்டு வறேன்.



அம்புட்டுதாங்க....

22 November, 2011

குறைந்தப்பட்ச அரசியல் இலட்சணம் கூட விஜயகாந்திடம் இல்லையா?

ஒரு குறிப்பிட்ட அமைச்சரைக் கூப்பிட்டு அச்சமயம் அங்கு அழைக்கப்பட்டிருந்த தொழில் நிபுணர்களிடம் தொழில் நுணுக்கம் பற்றிய சில விவரங்களை எடுத்துச் சொல்லச் சொன்னார் சர்ச்சில்.

அந்த அமைச்சரும் வழவழ-கொழ கொழவென்று தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தார். சர்ச்சிலுக்கு அதை சகித்துக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் பொறுமையாக கேட்டுக் கொண்டே உட்கார்ந்திருந்தார்.

அமைச்சர் பேச்சை முடித்தவுடனே சர்ச்சில் அவரைப் பார்த்து அரசியலின் அடிப்படை விதியை நீங்கள் நன்றாகவே அறிந்திருக்கிறீர்கள் என்றார்.

அமைச்சர், சர்ச்சில் என்ன சொல்கிறார் என்று புரியாமல் விழித்தார்.

நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா? என்று கேட்டார் சர்ச்சில்.

புரிய வில்லை என்றார் அமைச்சர்..

நீங்கள் விளக்கவந்த விஷயம் உங்களுக்கே புரியாவிட்டாலும், எவ்வளவு குழப்பமாக அதை எடுத்துக் சொல்ல முடியுமோ அப்படி  எடுத்துச் சொல்வது தான் ஓர் அரசியல்வாதியின் இலட்சணம் என்று சொன்னார் சர்ச்சில்.


விஜயகாந்த் அவர்களுக்கு முழுமையான அரசியல் தெரியாது என்று தமிழகமக்களும் நன்று அறிவார். ஆனால் குறைந்தபட்ச தகுதியான, ஏதாவது அறிக்கைகள், தேரியாவிட்டாலும் பேசிக்குழப்பக்கூடிய வேலையாவது செய்யலாம். அதற்குகூட வாய்திறக்காமல் மௌனம் காத்துக்கொண்டு அம்மாவின் உண்மை விசுவாசி என்று நிறுபித்துவிட்டார்.

தற்போதுதான் ஞானம் வந்ததுபோல்  பஸ் கட்டணம் உயர்வு, பால்விலை உயர்வு, மற்றும் மின்சார கட்டண உயர்வுக்கு நான் உண்ணாவிரதம் இருக்கபோகிறேன் என்று அறிவித்திருக்கிறார்.

நேற்று ஒரு திருமண விழாவில் கலந்துக்கொண்டு பேசிய விஜயகாந்திடம், ஏன் சட்டசபைக்கு செல்லவில்லை என்று கேட்டதற்க்கு உடல்நிலை சரியில்லைஎன்று பதில் அளித்துள்ளார். அவருக்கு எதிர்கட்சி தலைவர் என்பதை அடிக்கடி ஞாபகம் படுத்த வேண்டும் போல.

இவரின் உண்ணாவிரதம் தமிழகத்தில் எந்தவிதமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

09 November, 2011

பதுங்கிவிட்ட விஜயகாந்த்... பரிதவிப்பில் மக்கள்...


தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் பரபரப்பாக செயல் பட்ட விஜயகாந்த் வெற்றிவாகை சூடிய கையோடு தொலைந்து போனவர்தான் இதுவரை காணவில்லை. 

தமிழக சட்டமன்றத்தில் மிகவும் பொறுப்புமிக்க பதவியான எதிர்கட்சி தலைவர் அந்தஸ்த்து கிடைத்தும் அதற்கான பொறுப்புடன் விஜயகாந்த அவர்கள் நடந்துக்கொண்ட மாதிரி தெரியவில்லை. பட்ஜெட் கூட்டத்திலும் அதன் பிறகு நடந்த விவாதங்களிலும் வாயை திறக்காமல் இருந்த இவர் அடுத்து வெளிவந்தது உள்ளாட்சி தேர்தலில்தான்.

எவ்வளவு பம்பியும் கூட்டணியில் சேர்க்காமல் கழட்டிவிட்டப்பிறகு உள்ளாட்சி மன்றத்தில் தனித்துப்போட்டியிட்டு ஏதோ அவரால் முடிந்த இடத்தை பிடித்தார். கூட்டணியில் இல்லாத இந்த தருணத்தில் கூட விஜயகாந்தின் நடவடிக்கைகள் சந்தேகத்தை கிளப்புகிறது.

தமிழகமெங்கும் பருவ மழைக்காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கும் 60 க்கும் மேற்ப்பட்ட மக்கள் உயிரிழப்பும் ஏற்ப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். 

தமிழக முதல்வர் அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் வம்பு வழக்கு என்று நீதிமன்றங்களை சந்தித்துவிட்டு மீதமிருக்கும் நேரத்தில் தான் மக்களின் நினைப்பு வருகிறது அவருக்கு... எதிர்கட்சி அந்தஸ்த்தில் இருக்கும் விஜயகாந்த் என்னவானார்.

கடந்த ஒரு வாரமாக செய்திதாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் விஜயகாந்த் பற்றி செய்தி ஏதாவது வருகிறதா என்று ஆவலும் பார்த்து கொண்டிருக்கிறேன். ஆனால் அவரைப்பற்றிய செய்திகள் ஏதும் இல்லை. 

அவரது சொந்த மாவட்டமான மதுரையை சுற்றி பல்வேறு இடங்களில் ‌மழைச் சேதமும், உயிரி‌ழப்பும் அதிகமாக இருக்கிறது. தென் மாவட்டங்கள் பலத்த மழைச் சேதத்தை சந்தித்திருக்கிறது. அந்த மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற கூட இவர் வெளியில் வரவில்லையென்றால் மிகவும் வெட்ககேடு.

எதிரிகட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்த போது பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து நிவாரண பணிகள் நடக்கிறதா என்று கண்டறிந்தார். தற்போது கூட சென்னையில் பல இடங்களில் சுற்றிபார்த்து ஆறுதல் கூறி வருகிறார். ஆனால் விஜயகாந்த்.

தமிழகத்தின் ஒரு ‌பெரிய பொறுப்பு வகிக்கும் விஜயகாந்த் இது ‌போன்று மெத்தன போக்கை கடைபிடிப்பது மிகவும் கண்டிக்க தக்கது. ஒரு வேளை அம்மாவின் கைப்பாவையாக மாறிவிட்டாறோ என்ற சந்தேகம்தான் எழுகிறது.

பாருங்கள் தமிழகத்திற்கு வந்த சோதனை...!

23 September, 2011

தடம்மாறுது தேமுதிக.., உள்ளாட்சியில் கூட்டணி அமைக்க காங்கிரஸிடம் திடீர் ரகசியப் பேச்சு


உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவால் கிட்டத்தட்ட கழற்றி விடப்பட்டு விட்ட தேமுதிகவுக்கும், திமுகவால் கழற்றி விடப்பட்டு விட்ட காங்கிரஸுக்கும் இடையே கூட்டணி வைத்துப் போட்டியிடுவது குறித்த ரகசியப் பேச்சுக்கள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தனித்துதான் போட்டி என்ற கொள்கையுடன் செயல்பட்டு வந்த தேமுதிக கடந்த சட்டசபைத் தேர்தல் மூலம் முதல் முறையாக கூட்டணி அரசியலில் புகுந்தது. யாருடைய வாக்குகளைப் பிரித்து வந்தது அதே அதிமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டது. கூட்டணி முடிவான பின்னர் தொகுதிப் பங்கீட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் அதிமுக தன்னிச்சையாக தான் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்து தேமுதிகவுக்கு ஷாக் கொடுத்தது.

பின்னர் சமரசப் பேச்சுக்கள் நடந்து இணைந்து போட்டியிட்டனர். அதிமுக ஆட்சியைப் பிடித்தது. தேமுதிகவுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைத்து, இன்று எதிர்க்கட்சியாகியுள்ளது.

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் இடப் பங்கீட்டுக்காக கூட்டணிக் கட்சிகள் காத்திருந்த நேரத்தில் அத்தனை இடங்களுக்கும் அதிரடியாக தனது வேட்பாளர்களை அறிவித்து கதவை மூடி விட்டார் ஜெயலலிதா. இதனால் தேமுதிக கடும் அதிர்ச்சியில் மூழ்கியது. தேர்தல் தேதி அறிவித்து, வேட்பு மனு தாக்கலும் தொடங்கி விட்டதால் என்ன செய்வது, எங்கு போவது, எப்படிப் போவது என்பது தெரியாமல் தேமுதிகவினர் குழப்பத்தில் உள்ளனர்.

தற்போது இடதுசாரிகளை மட்டும் அழைத்து அதிமுக பேசி வருகிறது. அதிலும் உடன்பாடு ஏற்பட்டதாக தெரியவில்லை.

இந்த நிலையில் தேமுதிக தரப்பிலிருந்து, காங்கிரஸ் தரப்புடன் ரகசியப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. காங்கிரஸும் திமுக கூட்டணியில் இருந்து வந்தது. ஆனால் திமுக திடீரென தனியாகப் போட்டியிடப் போவதாக அறிவித்து விட்டதால் காங்கிரஸ் குழம்பிப் போய் நிற்கிறது. இரு கட்சிகள் சார்பிலும் யார் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் பேச்சுவார்த்தை ஏற்கனவே தொடங்கி விட்டதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படி திமுக, அதிமுகவால் திராட்டில் விடப்பட்ட காங்கிரஸும், தேமுதிகவும் திடீரென பேசத் தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேச்சுக்கள் கனிந்து, புதுக் கூட்டணி உருவாகுமா, அதில் இடதுசாரிகள் இணையுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...