உலகிலேயே மிக விசாலமான விமான நிலையம் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையமாகும். இந்நிலையம் அடங்கியுள்ள நிலப்பரப்பு 55040 ஏக்கர்(225 சதுர கிலோமீட்டர்) ஆகும்.
***************************
கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி.
கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி.
***************************
***************************
காட்டு நாய்களிடமிருந்து கம்பளி ஆடுகளை காப்பாற்றுவதற்கு ஆஸ்திரேலியா அரசாங்கம் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 3 ஆயிரத்து 437 மைல் நீளமுள்ள வேலியை அமைத்துள்ளது. இதுதான் உலகின் மிகப் பெரிய வேலியாகும்.
***************************
கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.
***************************
கனவாய் மீனின் ரத்தத்தில் காப்பர் அதிகமாக இருப்பதால் ரத்தத்தின் நிறம் பச்சையும் நீலமும் கலந்த நிறமாக தோன்றும். இதன் காரணமாகவே இதை ராஜா மீன் என்கின்றனர்.
***************************
சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.
***************************
கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – இதயம்.
***************************
உலகத்திலே மிகவும் வேகமாக வளரக்கூடிய மரம் யூக்கலிப்டஸ் (Eucalyptus) தான். இது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் வளர்க்கப்படுகிறது. காடுகளின் 8 சதவீதம் இம்மரமே உள்ளது. பிரேசில் நாட்டில் மட்டுமே 3.5 மில்லியன் ஏக்கரில் யூக்கலிப்டஸ் மரம் இருக்கிறது.
***************************
மிகப்பெரிய கோதுமைக் களம் கனடாவில் உள்ள அல்பர்டா என்ற இடத்தில், சுமார் 142 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது
***************************
***************************
சாலைகளில் வரையப்பட்ட பார்க்கவே வியப்பூட்டும் அழகிய முப்பரிமாண ஓவியங்களுடன்... சில பொது அறிவு துணுக்குகள்...!
ரசித்தமைக்கு மிக்க நன்றி...
படங்கள் எல்லாம் மிக அருமை..தகவல்களுக்கும் நன்றி!
ReplyDeleteஒரே ஒரு சந்தேகம்...//அட்லான்டிக் பகுதியில் ஆண்டிற்கு ஒரு முறைதான் சூரியன் உதயமாகிறது.// அட்லாண்டிக் இல்லையே...அண்டார்டிகாவில் அதுவும் தென் துருவத்தில் மட்டும் தானே இப்படி..
இரு துருவத்திலும் அப்படித்தாங்க....
Deleteதுருவப்பகுதிகளில் 6 மாதம் பகலாகவும் 6 மாதம் இரவாகவும் இருக்கும்...
புவியானது தனவு அச்சில் இருந்து 23.5 டிகிரி சாய்ந்திருப்பதால் ஏற்படுகிறநிகழ்வுதான் துருவப்பகுதியில் இப்படி நிகழ்கிறது
ஆமாம்..ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் தானே..
Delete'அட்லாண்டிக்' அல்லவே..அதைத்தான் குறிப்பிட்டேன்..
முப்பரிமான ஓவியங்களும்
ReplyDeleteதகவல்களும் இதுவரை அறியாதவை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
கருத்துக்கு மிக்க நன்றி ஐயா
Deleteவணக்கம்
ReplyDeleteஎல்லாம் அறியவேண்டிய விடயங்கள் தேடலுக்கு பாராட்டுக்கள்....
என்னுடைய வலைப்பக்கம் புதியகவிதை....இதோவலைத்தளமுகவரி
https://2008rupan.wordpress.com
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நலல்தோரு கவிதை...
Deleteதற்போதுதான் படித்துவிட்டு வந்தேன்...
வியப்பான மற்றும் பயனுள்ள தகல்வகள் நண்பரே.
ReplyDeleteநன்றி நண்பரே...
Deleteநம்பீட்டோம் சகோதரா :)))))))) வாழ்த்துக்கள் தொடரட்டும் மேலும் மேலும் சிறப்பான
ReplyDeleteபொது அறிவுப் பகிர்வுகள் .
ம்... தங்கள் கருத்துக்கு நன்றி
Deleteரசித்தேன் படங்களை;அறிந்தேன் புது தகவல்களை!
ReplyDeleteரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கீங்க ஐயா...
Deleteதாங்கள் நலமா...
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி
ok... thanks... from new android...
ReplyDeleteஎன்ன போன்.... என்ன விலை...
Deleteரைட்டு... கலக்குங்க...
வியப்பூட்டும் படங்கள் நன்றி
ReplyDeleteநல்லது ஐயா
Deleteஒவியங்கள் அனைத்தும் மிகவும் அருமை... குறிப்பாக சதுரங்கம் விளையாடும் ஒவியம்... நல்ல தகவல்களுக்கு நன்றிகள்...
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி
Deleteசுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.\\This is just story and not true. Pictures are good.
ReplyDeleteஇது கதைதான்... ஒரு வேளை இந்த கதையின் அடைப்படையில் தழுவலாகக்கூட இருக்கலாம் என்று தான் நம்பினேன்...
Deleteநான் படித்த அதிசய தகவல்கள் என்ற நூலில் இருந்த இந்த தகவல்களை தொகுத்தேன்...
தகவலுக்கு நன்றி
இந்த அழகான ஓவியத்தை போலவே ஹோண்டா நிறுவனத்தின் ஒரு புதிய விளம்பர வீடியோ வியப்பூட்டுகிறது அருமை ..
ReplyDeleteநல்லது... தங்கள் கருத்துக்கு நன்றி
Deleteஓவியம் ஒன்னொன்னும் கண்ணைவிட்டு அகழலை .அருமையான பதிவு
ReplyDeleteஅன்பின் சௌந்தர் - முப்பரிமான படங்கள் - அத்தனையும் அருமை - பார்த்துக் கொண்டே இருக்கலாம் - பலப்பல தகவல்கள் - இவை பகிரப்பட்டமைக்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஎத்தனை செய்திகள்! அத்தனையும் அறியாதவை! மேலும்
ReplyDeleteகளிப்பூட்டும் படங்கள்! இரசித்தேன்!
ஓவியங்கள் அனைத்தும் வியப்பை வரவழைத்தது.
ReplyDeleteசூப்பர்.