கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label பெண்கள். Show all posts
Showing posts with label பெண்கள். Show all posts

10 September, 2018

இது காதல் பேட்ட




என்னை காணாத 
நேரங்களில்
அழுதுவடிந்து....

திடிரென
என் வருகையை
அறிந்துக்கொண்டதும்....

ஓடிச்சென்று.. 
முகம் கழுவி..
என்னை ஆவலுடன் 
வரவேற்பாளே
என் அழகு தேவதை...

அந்த 
அழகைப்போல்
தெளிவாய் இருந்தது....

மழை ஓய்ந்த பின்
எங்கள் ஊர்சலை....

*********************************


நீளம் மறைந்த 
வானமொன்றை
ரசிக்க முடியாததைபோல்...

விண்மீன் அல்லாத 
இரவொன்றை
கடக்க முடியாததைபோல்...

மணம் இல்லாத 
மலர்களை
சூட முடியததைபோல்...

காதல் இல்லாத
வாழ்க்கையை
வாழ்ந்திட முடியாது...

*********************************



குளிர் காலமொன்றை
உன்னோடு கழிக்க
நினைத்து...

வாடைக்காற்று
உன்னை 
வாட்டும் முன்னே...

வயற்காட்டு தென்றலை
வழி அனுப்பி வைத்துவிட்டு
வருகிறேன்...

வேண்டாத 
ஊடல் கொண்டு
கண்களாலே எரிக்கிறாய்...

காயப்பட்டு 
திருப்புகிறது
என் வசந்த காலங்கள்...!

***********************************

வாசித்தமைக்கு நன்றி...!!

06 June, 2018

சமைப்பவர்கள் இதை தெரிஞ்சிக்கனுமா..?


சப்பாத்தி செய்யும்போது, கோதுமை மாவை தண்ணீர் விட்டுப் பிசைவதற்கு பதில் பால்கலந்த நீரில் பிசைந்து செய்தால் சுவையாகவும் மென்மையாகவும் இருக்கும்.

**************************************

சமையலறை அலமாரிகளில் உலர்ந்த வெள்ளரிக்காய் தோலைப் போட்டு வைத்தால் எறும்புகள் வராது. 

பிரியாணி செய்யும்போது ஒரு எலுமிச்சையைப் பிழிந்து விட்டால் சாதம் உதிர் உதிராக இருக்கும்..

**************************************

நவராத்திரியின் போது வீட்டில் வாங்கி வைத்திருக்கும் பழங்கள், தாம்பூலத்துடன் வந்த மாதுளை, ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, வாழைப்பழங்கள் என நிறைய சேர்ந்துவிட்டதா? கவலையே வேண்டாம். எல்லாப் பழங்களையும் நறுக்கி, அதனுடன் உலர்ந்த திராட்சை, பேரீச்சை, டைமண்ட் கல்கண்டு, தேன், சர்க்கரை சேர்த்து ஃபுரூட் மிக்ஸ் செய்யுங்கள். அதை ஃபிரிட்ஜில் வைத்து, சிகரமாக ஐஸ்க்ரீம் சேர்த்து வீட்டில் உள்ளவர்களுக்குக் கொடுங்கள். பழப் பாத்திரம் பாராட்டுகளோடு காலியாகிவிடும்!

**************************************


பாத்திரங்கள் அடிப்பிடித்துவிட்டால், வெங்காயத்தை நறுக்கி பாத்திரத்தில் போட்டு, சிறிது நீர் ஊற்றி வேக வைத்து, பிறகு தேய்த்துக் கழுவினால் அடிப்பிடித்த சுவடே தெரியாது.

**************************************

புளியைப் போட்டு வைக்கும் பாத்திரத்தின் அடியில் கொஞ்சம் உப்பைப் போட்டு வைத்தால் கெடாமல் இருக்கும். 

கீரையைப் பருப்புடன் சேர்த்து செய்யும்போது, தக்காளி, புளி சேர்க்காமல் நெல்லிக்காயைத் துருவிச் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

**************************************

வடகத்துக்கான மாவில் எலுமிச்சைச்சாறு அதிகமாகக் கூடாது. வடகம் பொரிக்கும்போது சிவந்துவிடும். 

பித்தளைப் பாத்திரங்களைக் கழுவிய பிறகு, தோல் சீவிய உருளைக்கிழங்கை அந்தப் பாத்திரத்தின் மேல் தேய்த்தால், பளபளப்புக் கூடும்.

**************************************

லேசான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து உரித்தால், கண்கள் எரியாது. 

அரிவாள்மனை முனையில் சிறிய வெங்காயத்தை தோலை மட்டும் நீக்கிவிட்டு செருகி, வெங்காயத்தை அரிந்தாலும் கண்கள் எரியாது. 

**************************************

பாத்திரத்தின் விளிம்புகளில் எண்ணெய் தடவிவிட்டுப் 
பாலைக் காய்ச்சினால் பால் பொங்காமல் இருக்கும்.

**************************************


வத்தக்குழம்பு செய்யும்போது, கடைசியாக மஞ்சள், மிளகுத்தூளைக் கலந்தால் குழம்பு ருசியாக இருக்கும். 

வசம்பை அரைத்து, அதனுடன் உப்புத் தண்ணீரைக் கலந்து தெளித்தால் வீட்டில் ஈக்கள் வராது. 

வெண்டைக்காயை வறுக்கும்போது புளித்த மோரைச் சேர்த்தால் மொறுமொறுவென இருக்கும்.

**************************************

பூசணிக்காய் மீந்துவிட்டால் அடுத்த நாள் சமைக்க முடியாது. மீந்ததை நறுக்கிக் கொஞ்சம் உப்பைப் போட்டு வேக வைத்து, அப்படியே எடுத்து வைத்தால் அடுத்த நாள் வரை கெடாமல் அப்படியே இருக்கும். .

**************************************

வெண்பூசணியை நறுக்கி முக்கால் வேக்காடு வேக விடவும். துவரம்பருப்பைத் தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய், காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு வெடித்ததும், வேக வைத்த வெண்பூசணியைப் போட்டு அதனுடன் அரைத்த தேங்காய் விழுது, துவரம் பருப்பு, உப்புச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். சாப்பிட சுவையாக இருக்கும்.

**************************************


லட்டு பிடிக்கும்போது ஏதாவது பழ எசென்ஸ் விட்டுப் பிடித்தால், லட்டு சுவையாகவும் மணமாகவும் இருக்கும். 

பொட்டுக்கடலை உருண்டை பிடிக்கும்போது வறுத்த வேர்க்கடலை, 
பொடித்த முந்திரி சேர்த்துப் பிடித்தால் கூடுதல் சுவை!


**************************************

ஜாங்கிரி செய்யும்போது, பத்து ஜாங்கிரியை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு, மேலே தயிர் ஊற்றி, கொஞ்சம் உப்புப் போட்டு ஊற வைத்து சாப்பிட்டுப் பாருங்களேன்... சூப்பர் ருசி!

**************************************

31 March, 2018

பாம்பை நடுங்க வைக்கும் பெண்... அதிர்ச்சி செய்தி



பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. எவ்வளவு துணிச்சல் உள்ள ஆண்களும், பாம்பைக் கண்டவுடன் சிறிதுதூரம் பின்வாங்குவார்கள்.

காரணம், பாம்பு சிறிய உயிரினம் என்ற போதிலும், அதில் உள்ள கொடிய விஷம் மனிதர்களின் உயிரை சில மணிநேரங்களில் மாய்த்துவிடும் என்பதாலயே அதைக் கண்டு அஞ்சுகிறார்கள்.


ஆனால், இதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண், பாம்புகளை அனாசயமாகப் பிடித்து வருகிறார். இதை மக்களுக்கு சேவையாகச் செய்து, பாம்புகளை மக்கள் கொல்வதில் இருந்து காத்து வருகிறார். மக்களுக்கு பாம்புகள் குறித்த விழிப்புணர்வையும் ஊட்டி வருகிறார்.

திருவனந்தபுரம் மாவட்டம், நெடுமங்காடு வனப்பகுதிக்குள் இருக்கும் சிறிய கிராமமே பாலோடு. இங்குள்ள பச்சா எனும் மலைப்பகுதியில் வசிப்பவர் ஜே.ஆர். ராஜி(வயது 34). இவர்தான் பாம்புகளின் தோழியாக இருந்து துணிச்சலாக பாம்புகளை பிடித்து வருகிறார். திருமணமான ராஜிக்கு அனாமியா, அபிராமி என பெண் குழந்தைகள் உள்ளனர்.

பயிற்சியாளரிடம் ஒருநாள் மட்டுமே முறையான பயிற்சி பெற்ற ராஜி, கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 483 பாம்புகளைப்ப பிடித்து காடுகளில் பத்திரமாக விட்டுள்ளார்.

தனது பாம்பு பிடிக்கும் அனுபவம் குறித்து ராஜி நம்மிடம் கூறியதாவது:

''பாம்பு பிடிக்கும் கலையை நான் தொழிலாகச் செய்யவில்லை. இதை ஒரு சேவையாக எடுத்துச் செய்து வருகிறேன். மக்களுக்கு பாம்புகளைப் பற்றி விழிப்புணர்வும், அதேசமயம், பாம்புகளையும், மக்களையும் அழிவில் இருந்து காத்தும் வருகிறேன்.

என் தந்தை ஒரு ரப்பர் மரத்தொழிலாளி. நான் காடுகளில் வாழ்ந்து பழகியவள். இதனால், சிறுவயதில் இருந்தே பாம்புகளைப் பார்த்துப் பழகிவிட்டேன். சிறுவயதில் தேங்காய் சிரட்டைகளை வைத்து பாம்புகளை பிடித்து வந்தேன்.

பலநேரங்களில் பாம்புகளைத் தொட்டு விளையாடி இருக்கிறேன், ஆனால், ஒருபோதும் என்னை சீண்டியது இல்லை. இதையடுத்து, யுடியூப்பில் பாம்புகளை எப்படிப் பிடிப்பது என்பதைக் கற்றுக்கொண்டேன். அதன்பின் சிறிய அளவிலான பாம்புகளை மட்டும் பிடித்துவந்தேன்.

அதன்பின் கேரளாவில் உள்ள பாம்பு பிடிக்கும் வல்லுநரான பாபு பாலலயம் என்பவரிடம் என்னைப் பற்றிக்கூறி அவரிடம் முறைப்படி பாம்பு பிடிக்கும் நுனுக்கங்களை கற்றுக்கொண்டேன். எனக்கு ஒருநாள் மட்டுமே முறைப்படி பயிற்சி அளித்து, பாம்புகளின் வகைகளையும், அதன் குணங்கள், தன்மைகள், விஷம் தாக்கும் முறை ஆகியவற்றை கூறினார்.

இந்த பயிற்சிக்குபின் நான் முதன் முதலில் ஒரு கருநாகப் பாம்பு தான் பிடித்தேன். அதன்பின் நான் வீடுகளில், நகர்ப்புறங்களில் பிடிக்கும் பலவகையான பாம்புகளையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்து அதை காடுகளில் விட்டுவிடுவோம்.

நான் பாம்பு பிடிக்கும் விஷயத்தை மக்கள் அறிந்து வீடுகளில் எந்தவகையான பாம்புகள் இருந்தாலும் உடனடியாக எனக்கு போன் செய்து அழைக்கிறார்கள். இதற்காக நான் யாரிடமும் பணம் கேட்பதில்லை. சிலர் அன்பின் காரணமாக பணம் கொடுத்தாலும்கூட அதை மற்ற சேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்வேன்.

என்னுடைய கணவர் அனில்குமார் டிரைவராக பணிபுரிகிறார். அவரின் உதவியால் இருசக்கர வாகனம், நான்கு சக்கரவாகனம், லாரி போன்ற கனரக வாகனங்களையும் ஓட்ட கற்றுக்கொண்டேன்.

நான் முதலில் பாம்பு பிடிப்பதைப் பார்த்து எனது கணவர் மிகவும் அச்சப்பட்டார். ஆனால், இப்போது என்னைப் பற்றி கவலைப்படுவதில்லை.

பாம்புகளைப் பிடிக்கும் போது கையுறை ஏதும் போடமாட்டேன் வெறும் கைகளை மட்டும் பயன்படுத்துவேன். பாம்பு பிடிக்கும் கருவிகளை வைத்து பாம்பு பிடிப்பது எப்போதும் சிறிது ஆபத்தானது. சிறிது தவறாக பிடித்துவிட்டாலும், அல்லது எந்திரக் கோளாறு ஏற்பட்டாலும் நாம் கடுமையான விலை கொடுக்க வேண்டியது இருக்கும். ஆனால், நான் செய்யும் பணி நல்ல சேவையாக இருக்கிறது. எனக்கு எந்த சிக்கலும் வராமல் கடவுள் பாதுகாப்பார் என்று நம்புகிறேன்.''

இவ்வாறு ராஜி தெரிவித்தார்.

பாராட்டுகள் சகோதரி...
தி இந்து சொய்திகளில்....

15 February, 2016

இது யாவருக்கும் வரும் படபடப்பு தான்...!



அப்புறம் என்ன சாப்பிட்ட
இன்னைக்கும் அதே தயிர்சாதம் தானா....?

உங்க வீட்டுல பூச்சொடிகளுக்கு
தண்ணி ஊத்தியாச்சா...?

டிவி-ல நேத்து போட்ட புதுப்படம்
செம மொக்க இல்ல...?

நீ டைரியில வச்ச மயிலிறகு
குட்டிப்போட்டுச்சா...?


இப்ப இருக்கிற மாணவர்கள்
சின்ன வயசிலே கெட்டுப்போதுங்கல்ல...?


உங்க அப்பா அந்த கொடுவா மீசைக்கு
என்ன உரம்‌ போறாரு...?

ஆமா... இப்பவர தேர்தல்ல
நீ யாருக்கு ஓட்டுப்போடபோற..?


இப்பெல்லாம் ‌பேப்பர்ல வரும்
செய்திகளை பார்த்தா கோவமா வருதுல்ல...?


விஜய் தெறி படம் வந்தா
முதல் நாள் காட்சி பார்க்கலாமா...?


கவிதை தொகுப்பு ஒன்னு கொடுத்தேனே
படிச்சி முடிச்சிட்டியா...?


இப்படியாய் 
அவளிடத்தில்
 சம்மந்தமின்றி உளறினேன்...

காதலை சொல்ல நினைத்து

இதயம் படபடத்த தைரியமற்ற 
அந்த நிமிடங்களில்....!

வாசித்தமைக்கு மிக்க நன்றி...!

11 December, 2013

பெண்களை கவர இந்த மூன்று விஷயம் போதும்..!


முல்லா நஸ்ருதீன் பெண்கள் மீது விருப்பம் கொண்டவர் என்று நான் கெள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் அவருக்கு பெண்களைப் பொறுத்தவரை அதிர்ஷ்டமே கிடையாது. எவரும் அவரை விரும்ப மாட்டார்கள்.

ஒரு பெண்னை அவர் முதன்முறையாக சந்திக்க சென்றார். அதற்கு முன் அவர் தனது நண்பனிடம் கேட்டார்; “உன்னுடைய ரகசியம் என்ன? நீ பெண்களுடன் நன்றாக பழகுகிறாயே? நீ எளிதில் அவர்களை மயக்கிவிடுகிறாய். ஆனால் நான் தோல்வி காண்கிறேன். எனவே எனக்கு எதாவது வழிவகை சொல்லிக்கொடு. நான் முதன்முறையாக ஒரு பெண்னைப் பார்க்க போகிறேன், எனக்குச் சில ரகசியங்களை சொல்லிக்கொடு.” என கேட்டார்...

நண்பன் கூறினான்; “மூன்று விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். எப்போது, உணவைப்பற்றி, குடும்பத்தைப்பற்றி, தத்துவத்தைப்பற்றிப் பேசு”.

“ஏன் உண்வைப்பற்றி பேச வேண்டும்” என்று கேட்டார் முல்லா. நண்பன் கூறினான்; “உண்வைப் பற்றி பேசுவதை பெண் விரும்புவதால் நான் அதைப் பற்றிப் பேசுகிறேன். ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணுக்கும் உணவில் விருப்பம் உண்டு. அவள் குழந்தைக்கு உண்வாகிறாள், மனித சமுதாயம் முழுமைக்கும் அவள் உணவாக இருக்கிறாள். எனவே அடிப்படையில் அவள் உணவில் விருப்பம் கொண்டிருக்கிறாள்”.

“சரி குடும்பத்தைப் பற்றி ஏன் பேச வேண்டும்?” என்று முல்லா கேட்டார்.“ அவளுடைய குடும்பத்தைப் பற்றி நீ பேசினால் உன்னுடைய உள்நோக்கங்களை நேர்மையானவையாக காட்டும்“ என்று நண்பன் பதில் கூறினான்.

“தத்துவத்தைப் பற்றி ஏன் பேச வேண்டும்? “என்று முல்லா அடுத்த கேள்வியை கேட்டான். அதற்கு அந்த நண்பன் பதில் தருகையில், “தத்துவத்தைப்பற்றி பேசினால் அந்த பெண் தன்னைப் புத்திசாலியாக கருதிக் கொள்கிறாள்“ என்றான்

உடனே முல்லா விரைந்து சென்றான். அந்த பெண்னைக் கண்டதும் “ஹலோ, உனக்கு“ நூடுல்ஸ்” (ஒரு வகை உணவு என்றும் முட்டாள் என்றும் பொருள் உண்டு) பிடிக்குமா? என்று கேட்டான். அதை கேட்டு அவள் அதிர்ச்சி அடைந்தாள், “இல்லை“ என்று பதில் கூறினாள் . முல்லா இரண்டாவது கேள்வியைக் கேட்டான், “உணக்கு இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்களா?“ “இல்லை” என்றாள்.

முல்லா ஒரு நிமிடம் திகைத்தான். “தத்துவத்தைப்பற்றி எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்தான். ஒரு வினாடி கழித்து கேட்டான், “உனக்கு ஒரு சகோதரன் இருந்தால் அவனுக்கு “நூடுல்ஸ்” பிடிக்குமா?“

ஓஷோ: “தத்துவம் என்பது அநேகமாக முட்டாள்தனமானதுதான்”

இன்று ஓஷோ அவர்களின் பிறந்த தினம்
************************************

தேதியே போடாமல் வந்த
அவளின் காதல் கடிதங்களை
தினமும் படிக்கிறேன்...!

எத்தனை நாள் படித்தாலும்
அவை புதிது போலவே
என்னை சிலிர்க்க வைக்கிறது..!

இன்னும் எத்தனை யுகங்கள்
இளமையோடு வாழுமோ
இந்த காதல்...!

+++++++++++++++++++++++++++++++

“தேடிச் சோறு நிதம் தின்று; அதில்
திண்ணைக் கதைகள்பல பேசி;மனம்
வாடித் துன்பம் மிக உழன்று; பிறர்
வாடப் பல செயல்கள் செய்து;நரை
கூடிக் கிழப் பருவம் எய்தி; கொடும்
கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்
வேடிக்கை மனிதரைப் போலே; நான்
வீழ்வேனென்று நினைத் தாயோ? ”

-பாரதி பிறந்த நாள் இன்று...

+++++++++++++++++++++++++++++++ 
 

23 November, 2013

பெண்கள் அதிகம் கவனம் செலுத்தும் இரண்டு விஷயங்கள்..


சூரியன் அஸ்தமனத்துக்கு முன் சிவப்பாக தோன்றும். ஆனால், அது பச்சையாகத் தோன்றுவது அண்டார்டிக்காவில் மட்டும் தான்.


காரில் செல்லும் போது மழை, இடி வந்தால் காரை விட்டு இறங்காமலிருப்பதே நல்லது. காரணம், பூமிக்கும், காருக்கும் பாசிடிவ் சார்ஜ் கவராமலிருப்பது தான்.


நீரை உறிஞ்சி குடிக்கும் ஒரே பறவை புறா தான்.


  பச்சைத் தங்கம் என அழைக்கப்படும் மரம் யூகாலிப்டஸ் மரம்.


பாம்புகளில் 3,000 வகையான பாம்புகள் உலகம் முழுவதும் உள்ளன. இந்தியாவில் மட்டும் 350 வகைகள் உள்ளன.


நாகபாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டுப் பாம்பு, கட்டுவிரியான் ஆகியவை மிகவும் கொடிய நச்சுள்ள பாம்புகள்.


  நச்சுள்ள பாம்பு இன்னொரு பாம்பைக் கடித்தால் கடிப்பட்ட பாம்பு இறந்து விடும்.



குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும்..



நிலத்தில் ஒரு மைல் என்பது 5,280 அடி. கடலில் ஒரு மைல் 6,080 அடி.


கண்களை கசக்கும் போது தோன்றும் நட்சத்திரம் மற்றும் கலர்கள், பாஸ்பீன்ஸ் எனப்படும்.


சூயிங்கத்தை முழுங்கினால், வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும்.



வறுக்காத முந்திரி கொட்டை விஷ தன்மை உடையது.


குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர். 2 - 6 வயதில் தான் வளர்கிறது.



15 எழுத்து ஆங்கில வார்த்தை, எழுத்துக்கள் திரும்ப வராத வார்த்தை: uncopyrightable


லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால் வரையவும் செய்வார்.


நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும். மனித மூளை, 11 வகை இராசாயணத்தை அமைதி படுத்த அனுப்புகிறது.


பெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப் படும் 10:10, புன்னகையை குறிக்கும்.

பொதுவாக பெண்களுக்கு தன்னுடைய நகங்களை அழகுப்படுத்தி கொள்வதிலும்... பொது விஷயங்கள் பொதுஅறிவு தகவல்களை படிப்பதிலும் அதிகம் ஆர்வம் படைத்தவர்கள்... தலைப்பு புரிந்ததா..!

16 November, 2013

இப்படிபட்ட பெண்மணியை நாம் என்ன சொல்வது...!


ஒரு முறை அன்னை தெரசா அவர்கள் பசியோடு வந்த ஒரு ஏழைத் தாய்க்கு சாப்பிட மூன்று ரொட்டித் துண்டுகளை வழங்கினார். 

நன்கு பசித்தவருக்கு உணவு வழங்கினால் அதை உடனே உண்ணவே ஆசைப்படுவார்கள். ஆனால் அந்த ரொட்டித்துண்டுகளைப் பெற்ற தாயோ மிகவேகம் வேகமாக அந்த இடத்தைவிட்டு ஓட எத்தனித்தார்.

அவரை ஓடவிடாமல் தடுத்த அன்னை தெரசா, "சாப்பிடாமல் எங்கே போறீங்க...?" என்று வினவினார்,

அதற்கு அந்த தாய்... "அம்மா..! நானாச்சும் பரவாயில்லீங்க.. ரெண்டு வேளைதான் பட்டினி. ஆனா என்னுடைய பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்மணி தன்னோட இளம் குழந்தைகளோட சேர்ந்து இரண்டு நாளா பட்டினியா கிடக்குறாங்க. எனவே இதனை சீக்கிரம் கொண்டு சென்று அவர்களுக்கு கொடுக்கனும். அதற்காகத்தான் ஓட முயன்றேன்!" என்றார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தெரசா, "மிகவும் நெகிழ்ந்து... அம்மா! கருணையிலும் சேவையிலும் என்னையே மிஞ்சிட்டீங்களே!" என்று கண்ணீர் மல்க பாராட்டினார்...!

பசியிலும் தானம் செய்வது என்பது... சொல்ல வார்த்தைகள் இல்லை...

******************************** 

உலக சகிப்புத் தன்மை நாள் (International Day for Tolerance) என்பது மக்களிடையே சகிப்புணர்வின்மையின் பயங்கரமான விளைவுகளையும் சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையின் தேவையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுவதற்காகவும் உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் நவம்பர் 16 அன்று கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். இந்நிகழ்வு பற்றிய அறிவித்தல் 1995 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் வெளியிடப்பட்டது.

22 October, 2013

பெண்களை எந்த கண்னோட்டத்தோடு பார்க்க வேண்டும்... இதை நீங்கள் ஏற்பீர்களா..?

 


ஒரு குரு சீடர்களுக்குப் பாடம் போதித்துக் கொண்டிருந்தார்.

“பிறப்பைப் பொறுத்தவரை எல்லா உயிர்களும் சமமே. பசி, தாகம், தூக்கம், மரணபயம் இவை எல்லா உயிர்களுக்கும் உண்டு. கவலைகள் என்பவை எல்லோருக்கும் பொதுவானவை. இரவும், பகவும் மாறி மாறி வருவது போலவே இன்பமும், துன்பமும் ஒருவரது வாழ்வில் மாறிமாறி வரும். அதே போல் பிறப்பும் இறப்பும் மாறி மாறி வரும்”

சீடர்கள் குரு சொல்வதைக் கூர்மையாக கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

“இரவு வருகிறது. மெல்ல அது கலைந்து பொழுது புலர ஆரம்பிக்கிறது. அந்த சமயத்தில் எந்த நொடியில் பொழுது விடிந்து விட்டது என்பதை நீ அறிவாய்..?” குரு ஒரு கேள்வியுயுடன் தன் போதனையை நிறுத்தினார்.

“ஒரு மிருகம் தொலைவில் நிற்கும் போதே அது கழுதையா, குதிரையா என்று அடையாளம் காண முடியும் என்றால் அதை வைத்து வெளிச்சம் வந்து விட்டது என்று புரிந்து கொள்ளலாம்” என்றான் ஒரு சீடன்.

குரு இல்லை என்று தலையசைத்தார்...

“ஒரு மரம் தூ‌ரத்திலிருக்கும்போதே இங்கிருந்தபடி அது ஆல மரமா, அரச மரமா என்று சொல்ல முடியுமானால் அதுதான் வெளிச்சம்!” என்றான் வேறொருவன்.

அதற்கும் குரு மறுப்பாகத் தலையசைத்தார்...

சீடர்கள் விழித்தார்கள்...

கடைசியாக “சரியான விடையைத் தாங்கள் தான் கூறி அருளவேண்டும்!” என்றனர்.

“எந்த ஒரு மனிதரைக் கண்டாலும் இவன் என் சகோதரன் என்றும், எந்த ஒரு பெண்ணைக் கண்டாலும் இவள் என் சகோதரி என்றும், எப்போது நீ  அறிகிறாயோ அப்போதுதான் உண்மையான வெளிச்சம் உனக்கு ஏற்பட்டது என்று பொருள். அதுவரை உச்சி வெயில் கூட உமக்கு காரிருளே.”

 யாதும் ஊரே... யாரும் கேளிர்... அப்படித்தானே....

இப்படிப்பட்ட மனநிலை நம் மக்களிடையே வந்துவிட்டால் ஏன் தேவையில்லாத கற்பழிப்பும் கலவரங்களும் இங்கு நடக்கிறது.. தற்போது திருமணமாகிவிட்டப்பிறகு கூட அடுத்தப்பெண்களை கண்டு வழிவது குறையாமல் இருக்கிறது. இதனால் தான் இவ்வளவு பிரச்சனைகள்...


22 April, 2013

நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்...!



வ்வொறு சந்திப்பின் போதும்
எப்படியாவது வந்துவிடுகிறது 
சின்ன சின்ன சண்டைகள் நமக்குள்...

தவறு செய்தது நீதான்என்று நானும்
நான்தான் என்று நீயும்
மாறி மாறி சுமத்திக்கொள்கிறோம்
குற்றச்சாட்டுகளை...!

இப்படியே 

வெகுநேரம் பேசிபேசியே
முடிவு தெரியாமலே பிரிவோம்...

அதன்பிறகு என்னநேருமோ..?
இமைகள் அரித்துக்கொண்டிருக்கும்
மனசு உறுத்திக்கொண்டிருக்கும்...

உன்னை காயப்படுத்தியதில்
அதிகம் வலிக்கும் எனக்கு
மன்னிப்பு கேட்கும் வரை...!

மறுநாள் சந்தித்து
நான் மன்னிப்பு கோருவதற்கு முன்
“தவறு என்னுடையதுதான்” என்பாய்
பார்க்க துணிவில்லாமல் தலைகுனிந்து...!


உண்மைதான்...!
மன்னிப்பு கேட்கும் மனமும்
மன்னிக்கும் மனமும் இருந்தால்
காதல் செழிக்கும்...!


என் காதலை வாசித்த
அனைவருக்கும் நன்றி...!


25 July, 2011

பெண்மையே உன்னை என்னவென்று சொல்வது..?




ஆண்கள் உடல்ரீதியாக பலசாலியாக இருந்தாலும் அவர்களை விட பெண்கள்தான் பன்முக திறமை படைத்தவர்கள் என்று உளவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இல்லத்தை கவனிப்பதில் தொடங்கி, கணவன், குழந்தைகளுக்கு தேவையான பணிவிடைகள் செய்வது வரை அவர்களின் திறமைகள் ஒவ்வொரு விஷயத்திலும் சிறப்பாக வெளிப்படுகிறது.

அன்புக்குரியவர்கள் பெண்கள்

ஆண்கள் சுயநலவாதிகள். அவர்களுடைய சிந்தனை, செயற்பாடு எல்லாம் மதிப்பு, வெற்றி, தீர்வு பற்றியே இருக்கும். ஆனால் பெண்களுடைய சிந்தனைகள் எல்லாம் குடும்பம், நண்பர்கள், உறவு பற்றியே இருக்கும்.

குழப்பமான நேரங்களில் ஆண்கள் தனியாக உட்கார்ந்து வானத்தை பார்த்து யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் பெண்கள் பிரச்சினைகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் அன்புக்குரியவர்களிடம் கூறிவிட்டு மறந்துவிடுவார்கள்.

பெண்களின் பன்முகத்திறன்

பெண்கள் பலதிறன் கொண்டவர்கள். அவர்களால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை பார்க்க முடியும். போனில் பேசிக் கொண்டே அலுவலக வேலையையும் கவனம் சிதறா மல் செய்துவிடக் கூடியவர்கள் பெண்கள். அதற்கேற்ப அவர்களின் மூளையும் வடிவமைந்துள்ளது. ஆனால் ஆண்களால் இப் படி ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முடியாது.

ஆண்கள் பொய் பேசினால் பெண்கள் உடனே கண்டுபிடித்து விடுவார்கள். ஆண்களின் முகபாவனை, அங்க அசைவுகள், வார்த்தை உச்சரிப்பு இவற்றை வைத்தே அதை கண்டுபிடிக்கிறார்கள். ஆண்களால் இப்படி கண்டுபிடிக்க முடிவதில்லை. அதனால்தான் அவள் என்னை ஏமாற்றிவிட்டாள் என்று தாடி வைத்துக் கொண்டு புலம்பித் திரிகிறார்கள்.

மனதிருப்தி

ஒரு ஆண் சந்தோஷமாக இருக்க நல்ல வேலை வேண்டும். கூடுதலாக சந்தோஷமாக நினைக்க மது, மாது ஏதாவது ஒன்று வேண்டும். ஆனால் பெண்களுக்கு நல்ல கணவர், நல்ல உறவு, நல்ல உறவினர்கள், நல்ல பொழுதுபோக்கு, நல்ல சந்தோஷம்… இப்படி எல்லாமே நல்லதாக இருந்தால் மட்டுமே அவர்கள் திருப்தி அடைவார்கள்.

உறவுகளுக்குள் ஒரு பிரச்சினை என்றால் பெண்களால் அவர்களுடைய வேலையில் கவனத்தை செலுத்த முடியாது. ஆண்கள் அப்படியில்லை.

வெளிப்படையான பேச்சு

பெண்கள் எதையும் சுற்றி வளைத்துதான் பேசுவார்கள். ஆசை களையும் ஒளிவுமறைவாக வெளிப்படுத்துவார்கள். ஆண்கள் `ஓபன் டைப்’. நல்லதோ கெட்டதோ விஷயத்தை நேராக போட்டு உடைத்துவிடுவார்கள். ஆசையையும் கொட்டித் தீர்த்து விடுவார்கள்.

பெண்கள் எதையும் யோசிக்காமல் பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் ஆண்கள் எதையும் யோசிக்காமல் செய்வார்கள். – சில ஆண்களும், பெண்களும் இதில் உள்ள எல்லா விஷயங்களுக்கும் விதிவிலக்கான வர்களாகவும் இருப்பார்கள்.

ஆண் பெண் என்ற வித்தியாசம் மாறிவரும் இன்றைய காலகட்டத்தில் நாளை நம்பிக்கைகள் அவர்களே என்று நம்புவோம்.

09 January, 2011

அம்மா...!


ம்மா
உயிரும் மெய்யும் கலந்
உயிர் மெய்...

நானே விளக்குகிறேன்...
அ - உயிர் எழுத்து
ம் - மெய் எழுத்து
மா - உயிர் ‌மெய்

ஆம்
அம்மா...
உயிரும் மெய்யும் கலந்த உயிர்மெய்..

நாத்திகர் வீட்டில் கூட
குடியிருக்கும் தெய்வம்...

விண்ணிலிருந்து
வீடுகளில் சிதறிவிழுந்த
‌தேவதைகளின் சிதறல்கள்...

த்தத்திலிருந்து
பாலைப்பிரிக்கும்
உயிர்கோளத்தின் அதிசய அன்னப்பறவை...

திட்டித்தீர்க்கும்
கரங்களுக்கு மத்தியில்
தட்டிக் கொடுக்கும் வளையல் கரம்...

னைந்தபடி வீடு நுழைந்தேன் ..
“அறிவிருக்கா ஏன் இப்படி நனையிற”
அண்ணன்...

“குடை எடுத்துக்கிட்டு போக வேண்டியது தானே..”
அக்கா...

“காய்ச்சல் வந்தா என் பணம் தான் வீண்”
அப்பா..

தலை துவட்ட துண்டுடன்
அம்மா...

ள்ளி அள்ளி குடித்தாலும் குறையாத
ஆனந்த அன்புக்கடல்...
இவள் திட்டினாள் சீர்படுவோம்
இவள் குட்டினாள் சிற்பமாவோம்...

அம்மா
குடும்பம் தலைக்க
தாங்கி நிற்கும் மனித ஆலமரம்...

 *****************************************************************************
இதையும் கேளுங்கள்...

 *****************************************************************************
இதையும் கேளுங்கள்...
Related Posts Plugin for WordPress, Blogger...