கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label ரஞ்சிதா. Show all posts
Showing posts with label ரஞ்சிதா. Show all posts

28 December, 2012

நித்தியானந்தாவே எல்லாம் - ரஞ்சிதா பேட்டி, நித்தியானநத்தாவை சந்தித்த திரை பிரபலங்கள்

 நாட்டில் எத்தனையோ சாமியார்கள் இருந்தாலும் நித்தியானந்தாவே என்னை கவர்ந்தார். அவரது போதனைகள் பிடித்தது. மனதுக்கு நிம்மதி தந்தது. அவரிடம் சென்றால் கவலைகள் போகும் என்று கூறியுள்ளார் நடிகை ரஞ்சிதா. 

நித்தியானந்தா குறித்தும், சிடி சர்ச்சை குறித்தும் ரஞ்சிதா ஒரு டிவி சேனலுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் தான் நித்தியானந்தாவுடன் இன்னும் நல்ல தொடர்பில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். 

பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது... நித்தியானந்தாவையும் என்னையும் பற்றி வந்த சி.டி. போலியானது. அதை வெளியிடாமல் இருக்க ரூ.60 கோடி கேட்டார்கள். பணம் தராவிட்டால் விபசார வழக்கில் சிக்க வைப்பதாகவும் மிரட்டினர். அவர்களை சும்மா விடமாட்டேன். கோர்ட்டில் ஏற்றுவேன். சிறு வயதிலேயே எனக்கு ஆன்மீக ஈடுபாடு உண்டு. அதுவே நித்தியானந்தா ஆசிரமத்துக்கு செல்ல தூண்டியது. 

நடிகர், நடிகைகள் பலர் ஆன்மீகத்தில் ஈடுபாடு வைத்துள்ளனர். ரஜினிகாந்த் ஆன்மீகவாதியாக இருக்கிறார். நான் நித்தியானந்தா பக்தையாவதற்கு முன்பே நடிகர் விவேக் அவரிடம் சென்று வந்தார். நடிகர் சந்தானம், நடிகை கவுசல்யா போன்றோரும் ஆசிரமத்துக்கு அடிக்கடி வருகிறார்கள். 

எத்தனையோ சாமியார்கள் இருந்தாலும் நித்தியானந்தாவே என்னை கவர்ந்தார். அவரது போதனைகள் பிடித்தது. மனதுக்கு நிம்மதி தந்தது. அவரிடம் சென்றால் கவலைகள் போகும். சி.டி. விவகாரத்துக்கு பிறகு முன்பைவிட அதிக பக்தர்கள் ஆசிரமத்துக்கு வருகிறார்கள். 

வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.. நித்தியானந்தா தற்போது வெளிநாடு சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். ஜனவரி 6-ம் தேதி அவரது பிறந்தநாள் வருகிறது. அன்றைய தினம் திருவண்ணாமலையில் சிறப்பு பூஜைகள் நடக்கும் என்றார் ரஞ்சிதா.

19 August, 2011

நித்தியானந்தா மீது செகஸ் புகார்கள் சென்னையில் சிபிசிடி போலீஸார் அதிரடி விசாரணை

சாமியார் நித்தியானந்தாவிடம் சென்னையில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் வைத்து திடீர் விசாரணை நடத்தப்பட்டது.

நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் படுக்கை அறையில் இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இருவரும் தலைமறைவானார்கள். ஒரு மாத கால தலைமறைவுக்குப் பின்னர் இமாச்சலப் பிரதேசத்தில் வைத்து நித்தியானந்தாவை கர்நாடக சிஐடி போலீஸார் கைது செய்து பெங்களூர் கொண்டு வந்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் ஜாமீனில் விடப்பட்டார். தற்போது நித்தியானந்தா மீதான வழக்குகள் ராம்நகர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் நித்தியானந்தா மீது இந்து மக்கள் கட்சி, அவரது முன்னாள் சீடர்கள் சென்னை மத்திய குற்றப் பிரிவு, பாண்டி பஜார் காவல் நிலையங்களில் புகார் கொடுத்தனர். அதில் இந்து மதத்தை இழிவுபடுத்திப் பேசியதாக இந்து மக்கள் கட்சியும், தங்களை மிரட்டுவதாக முன்னாள் சீடர்களும் கூறியுள்ளனர்.

இந்த வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு அவர்களின் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் நித்தியானந்தாவை சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு வருமாறு அழைத்திருந்தனர். இதையடுத்து நேற்று கிண்டியில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்திற்கு வக்கீல்களுடன் வந்தார் நித்தியானந்தா.

அங்கு பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையில் நித்தியானந்தா மீதான புகார்கள் குறித்து போலீஸார் கேட்டதாக தெரிகிறது.

திருவண்ணாமலையில் சாமி தரிசனம்

இதற்கிடையே, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் மேலாளர் இந்திரஜித் மகன் திருமணம் நேற்று நடைபெற்றது. இதற்காக நித்யானந்தாவுக்கு அழைப்பு அனுப்பட்டிருந்தது.

இதனையடுத்து, நித்யானந்தா திருமணத்தில் கலந்து கொண்டார். நித்யானந்தா வருகை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. மேலும், அதிகாலை நேரத்தில் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சென்றும் அவர் சாமி கும்பிட்டார்.

13 July, 2011

நித்தியானந்தா ஆபாசப் பட விவகாரம் - சன் டிவி, தினகரன், நக்கீரன் மீது போலீஸில் ரஞ்சிதா புகார்




தன்னையும் நித்யானந்தாவும் இணைத்து ஆபாசப்படம் வெளியிட்டதாக சன் டிவி, தினகரன் மற்றும் நக்கீரன் பத்திரிகை மீது சென்னை மாநகர கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார் நடிகை ரஞ்சிதா.

கடந்த வாரம் நித்யானந்தா சாமியாரின் சீடர்கள் சென்னை நகர போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தனர். அந்த புகார் மனுவில், நித்யானந்தா-நடிகை ரஞ்சிதாவை இணைத்து போலியான ஆபாச படங்களை வெளியிட்ட சன் டி.வி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அந்த புகார் மனு விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில், அதே குற்றச்சாட்டை கூறி நடிகை ரஞ்சிதாவும் புகார் கொடுத்துள்ளார். நேற்று பிற்பகல் 2.45 மணிக்கு ரஞ்சிதா தனது மூத்த சகோதரியோடும், சீனியர் வக்கீல் ராஜன் உள்பட சில வக்கீல்களோடும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார்.

கமிஷனர் திரிபாதியை சந்தித்து அவர் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். புகார் கொடுத்துவிட்டு வெளியே வந்த அவரிடம் கமிஷனரிடம் கொடுத்த புகார் மனுவின் நகல் காப்பியை தரும்படி நிருபர்கள் கேட்டனர். அதை தர இயலாது என்று ரஞ்சிதா கூறிச் சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் கமிஷனர் திரிபாதி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், ரஞ்சிதா கொடுத்த புகார் மனு பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்து கமிஷனர் திரிபாதி கூறுகையில், "ரஞ்சிதா கொடுத்த புகார் மனுவில், ஆசிரமத்தில் நடந்ததாக போலியான வீடியோ காட்சிகளை வெளியிட்டு என்னை அவமானப்படுத்தி விட்டார்கள் என்றும், எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டார்கள் என்றும், அதுதொடர்பாக சன் டி.வி. மீதும், நக்கீரன் உள்பட சில பத்திரிகைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோ காட்சிகளை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டினார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வளவு பணம் கேட்டார்கள் என்பதுபற்றி புகாரில் இல்லை. யார், யார் பெயர் உள்ளது என்பது பற்றி மனுவை முழுமையாக படித்து பார்த்தால்தான் தெரியும்.

இந்த புகார் மனு மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துவார்கள். பெங்களூரில் நடக்கும் வழக்கு வேறு. இங்கு நடந்த சம்பவங்கள் தொடர்பாக இந்த புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. என்ன நடவடிக்கை என்பது பற்றி விசாரணை முடிந்தபிறகுதான் சொல்ல முடியும்.

சக்சேனா மீது நிறைய புகார்கள் இருந்தாலும், இதுவரை 3 புகார்கள் மீதுதான் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது," என்றார்.
ஆட்சி மாற்றின் விளைவாக  திமுக சார்ந்தவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு வருகிறது. தற்போது பதுங்கி ஒதுங்கி இருந்தவர்கள் கூட வெளியில் வந்துவிட்டார்கள்... வழக்குகள் நியாயம் இருப்பின் சரியான தண்டனைகள் வழங்கவேண்டும் என்பது என்னுடைய வாதம். இதில் பழிவாங்கக்கூடிய போக்கு இல்லாமல் பார்த்துக் கொள்வது அரசின் கடமையாகும்...

இனி என்னவாகும் பொறுத்திருந்து பார்ப்போம்.
Related Posts Plugin for WordPress, Blogger...