கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label நித்தியானந்தா. Show all posts
Showing posts with label நித்தியானந்தா. Show all posts

06 January, 2013

இன்று நித்தியானந்தா பிறந்த நாள்... விரட்டும் போலீஸ் மற்றும் கோயில் நிர்வாகம்..

இன்று (06.01.2013) பிறந்த நாள் காணும் நித்தியானந்தா எப்போதும்போல் திருவண்ணாமலையில் பந்தா காட்ட நினைத்தார். இன்று காலை அண்ணாமலையால் கோவிலுக்குள் பக்தர்களுடன் வந்து வணங்கிவிட்டு, பின்னர் தன்னுடைய உருவ சிலையை கோயில் மாட வீதியில் வலம் வரவழைப்பதற்கான ஏற்பாடுகளை ஏற்பாடு செய்திருந்தார்.

இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், கோயில் நிர்வாகம் கோவிலுக்குள் ஐந்து பேரை மட்டுமே அனுமதிப்போம். கோயிலுக்குள் கூட்டம் போடுவதோ, பேசுவதோ இருந்தால் வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தது. இதனால் கோவிலுக்குள் வருவதை தவிர்த்துவிட்டார் நித்தியானந்தா.

தொடர்ந்து மாட வீதியில் வலம் வருவதற்கு போலீசாரிடம் அனுமதி வாங்க வேண்டும். ஆனால் நித்தியானந்தா அனுமதி வாங்காததால், கோயிலுக்கு எதிரே அவரது சார்பில் போடப்பட்டிருந்த பந்தலை போலீசார் பிரித்து போட்டனர். இதனால் அதிர்ச்சியான நித்தியானந்தா அனைத்து நிகழ்ச்சிகளையும் தனது ஆசிரமத்துக்கு மாற்றிக்கொண்டார்.

28 December, 2012

நித்தியானந்தாவே எல்லாம் - ரஞ்சிதா பேட்டி, நித்தியானநத்தாவை சந்தித்த திரை பிரபலங்கள்

 நாட்டில் எத்தனையோ சாமியார்கள் இருந்தாலும் நித்தியானந்தாவே என்னை கவர்ந்தார். அவரது போதனைகள் பிடித்தது. மனதுக்கு நிம்மதி தந்தது. அவரிடம் சென்றால் கவலைகள் போகும் என்று கூறியுள்ளார் நடிகை ரஞ்சிதா. 

நித்தியானந்தா குறித்தும், சிடி சர்ச்சை குறித்தும் ரஞ்சிதா ஒரு டிவி சேனலுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் தான் நித்தியானந்தாவுடன் இன்னும் நல்ல தொடர்பில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். 

பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது... நித்தியானந்தாவையும் என்னையும் பற்றி வந்த சி.டி. போலியானது. அதை வெளியிடாமல் இருக்க ரூ.60 கோடி கேட்டார்கள். பணம் தராவிட்டால் விபசார வழக்கில் சிக்க வைப்பதாகவும் மிரட்டினர். அவர்களை சும்மா விடமாட்டேன். கோர்ட்டில் ஏற்றுவேன். சிறு வயதிலேயே எனக்கு ஆன்மீக ஈடுபாடு உண்டு. அதுவே நித்தியானந்தா ஆசிரமத்துக்கு செல்ல தூண்டியது. 

நடிகர், நடிகைகள் பலர் ஆன்மீகத்தில் ஈடுபாடு வைத்துள்ளனர். ரஜினிகாந்த் ஆன்மீகவாதியாக இருக்கிறார். நான் நித்தியானந்தா பக்தையாவதற்கு முன்பே நடிகர் விவேக் அவரிடம் சென்று வந்தார். நடிகர் சந்தானம், நடிகை கவுசல்யா போன்றோரும் ஆசிரமத்துக்கு அடிக்கடி வருகிறார்கள். 

எத்தனையோ சாமியார்கள் இருந்தாலும் நித்தியானந்தாவே என்னை கவர்ந்தார். அவரது போதனைகள் பிடித்தது. மனதுக்கு நிம்மதி தந்தது. அவரிடம் சென்றால் கவலைகள் போகும். சி.டி. விவகாரத்துக்கு பிறகு முன்பைவிட அதிக பக்தர்கள் ஆசிரமத்துக்கு வருகிறார்கள். 

வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.. நித்தியானந்தா தற்போது வெளிநாடு சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். ஜனவரி 6-ம் தேதி அவரது பிறந்தநாள் வருகிறது. அன்றைய தினம் திருவண்ணாமலையில் சிறப்பு பூஜைகள் நடக்கும் என்றார் ரஞ்சிதா.

28 July, 2012

நித்தியானந்தா இந்த ஜோக்கை படிச்சிருப்பாரு போல...


இந்த சனி ஞாயிறு என்றால் என்ன பதிவு போடுறதுன்னு ரொம்ப குழப்பாக இருக்குங்க... சிபி அட்வைஸ் என்னன்னா நல்ல நல்ல  பதிவுகளை வார இறுதி நாட்கள்ள போடக்கூடாது என்பதுதான். 

எனக்கு அதுதாங்க பிரச்சனை.... நான் போடுறது எல்லாமே நல்லப்பதிவு சுமாரான பதிவுக்கு நான் எங்க போறது... (‌ஜனங்க இன்னும் நம்மல நம்புறாங்கப்பா) 

கோவப்படாதிங்க மக்களே.... காக்கைக்கு தன் குஞ்சு.... 
(அடடா ஆரம்பிச்சிட்டாங்கப்பா)
அதனால பின்வரும் துணுக்கு ஜோக்குகளை ‌எல்லாம் பாடித்து சிரித்து விட்டு போகும்படி வற்புறுத்தப்படுகிறது..
(என்ன... நான் சொல்றது..)

எலே மக்கா... நல்ல பதிவை போடக்கூடாதுன்னு ஜனங்ககிட்ட சொல்லிட்டு இந்த சிபி மட்டும் ஒரு படம் விடாம பார்த்துட்டு விமர்சனம் போட்டுகிட்டு இருக்கான்... 
அவன் இந்தப்பக்கம் வந்த நீ சுடு... 
இந்தப்பக்கம் வந்தா நான்சுடுறேன்... 
(எஸ் பாஸ்.. ஒழியட்டும் ராஸ்கேல்... இது மனோ டயலாகச்சே..)
***************************
சிஷ்யன் : குருவே..! மனிதனுக்கு வாழ்க்கையின் இன்பமும், துன்பமும், எப்போது கிடைக்கும்?
 
குரு : சம்சாரியானால் துன்பமும், அப்படியே சாமியாரானால் இன்பமும் கிடைக்கும் சிஷ்யா... 

(நித்தியானந்தா இந்த ஜோக்கை படிச்சிருப்பாரு போல...)

***************************


நண்பன் 1 : டாக்டர் உன்னை கலாய்க்கிறாரா.. எப்படி?

நண்பன் 2 :  நாக்குல புண் வந்திருக்குன்னு போனா, நீங்க புண்ணாக்கு ஆயிட்டீங்கன்னு சொன்னாரு..!

***************************
 
   

நண்பர் 1 : ஏன்டா மூணு வேளையும் டிபனே சாப்பிடுறே....!
 
நண்பர் 2 : ஏன்னா..! என்னை யாரும் தண்ட சோறுன்னு சொல்லக்கூடாது பாரு அதுக்குத்தான்...
***************************

 
இதுக்கு என்ன அர்த்தம்... உங்களுக்கு தெரியுமா..?
இனிமே மனோகிட்டே பேசக்கூடாது...
மனோ சொல்றதை கேட்கக்கூடாது...
ஏன்.. மனோ பதிவைக்கூட பார்க்ககூடாது...

பாருங்க இதுகளுக்குகூட தெரிஞ்சிருக்கு...!

***************************
(என்ன ஒரு கொலை வெறி..)
எஸ்கேப்....


அவ்வளவுதான் படம் முடிஞ்சிடுச்சி.. கிளம்புங்க..

19 August, 2011

நித்தியானந்தா மீது செகஸ் புகார்கள் சென்னையில் சிபிசிடி போலீஸார் அதிரடி விசாரணை

சாமியார் நித்தியானந்தாவிடம் சென்னையில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் வைத்து திடீர் விசாரணை நடத்தப்பட்டது.

நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் படுக்கை அறையில் இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இருவரும் தலைமறைவானார்கள். ஒரு மாத கால தலைமறைவுக்குப் பின்னர் இமாச்சலப் பிரதேசத்தில் வைத்து நித்தியானந்தாவை கர்நாடக சிஐடி போலீஸார் கைது செய்து பெங்களூர் கொண்டு வந்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் ஜாமீனில் விடப்பட்டார். தற்போது நித்தியானந்தா மீதான வழக்குகள் ராம்நகர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் நித்தியானந்தா மீது இந்து மக்கள் கட்சி, அவரது முன்னாள் சீடர்கள் சென்னை மத்திய குற்றப் பிரிவு, பாண்டி பஜார் காவல் நிலையங்களில் புகார் கொடுத்தனர். அதில் இந்து மதத்தை இழிவுபடுத்திப் பேசியதாக இந்து மக்கள் கட்சியும், தங்களை மிரட்டுவதாக முன்னாள் சீடர்களும் கூறியுள்ளனர்.

இந்த வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு அவர்களின் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் நித்தியானந்தாவை சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு வருமாறு அழைத்திருந்தனர். இதையடுத்து நேற்று கிண்டியில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்திற்கு வக்கீல்களுடன் வந்தார் நித்தியானந்தா.

அங்கு பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையில் நித்தியானந்தா மீதான புகார்கள் குறித்து போலீஸார் கேட்டதாக தெரிகிறது.

திருவண்ணாமலையில் சாமி தரிசனம்

இதற்கிடையே, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் மேலாளர் இந்திரஜித் மகன் திருமணம் நேற்று நடைபெற்றது. இதற்காக நித்யானந்தாவுக்கு அழைப்பு அனுப்பட்டிருந்தது.

இதனையடுத்து, நித்யானந்தா திருமணத்தில் கலந்து கொண்டார். நித்யானந்தா வருகை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. மேலும், அதிகாலை நேரத்தில் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சென்றும் அவர் சாமி கும்பிட்டார்.
Related Posts Plugin for WordPress, Blogger...