கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

13 August, 2013

விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்தும் ஒரு தமிழ்படம்...?



ஜான் ஆபிரகாம் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம் மெட்ராஸ் கஃபே. இதன் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது.


இந்தத் திரைப்படத்தில் விடுதலைப் புலிகளையும் ஈழத்தமிழர் பிரச்சனையையும் தவறாக சித்தரித்திருப்பதாக கூறி சில தமிழ் அமைப்புகள் இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த படத்தின் முன்னோட்டம் - 1....

முன்னோட்டம் - 2


படம் வெளியான பிறகுதான் சர்ச்சைகள் குறித்த உண்மை விவரங்கள் தெரியவரும்

04 April, 2013

இலங்கை பிரச்சனை... சன் டிவி-க்கு எதிராக போராட்டம்

 
சன் டிவி முன்பு இன்று காலை மாணவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சன் ரைசர்ஸ் அணியை ஏலத்தில் எடுத்துள்ள சன் டிவி குழுமம் அதில் சங்கக்காரா என்ற சிங்களவரை கேப்டனாக நியமித்துள்ளது உடனே அவரை நீக்குக என்று மாணவர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். சன் ரைசர்ஸ் அணியில் சங்கக்காரா தவிர திசரா பிரைரா என்ற இன்னொரு சிங்கள வீரரும் இடம்பெற்றுள்ளார்.

இருவரையும் அணியிலிருந்து நீக்கக்கோரி மாணவர்கள் ஆர்பாட்டம் செய்தனர். சாஸ்தா பொறியியல் கல்லூரி மாணவர்கள் பிரபாகரன் என்ற மாணவர் தலைமையில் சன் டிவி அலுவலகம் முன்பு திரண்டனர்.
 


இந்தப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பல்வேறு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் ஈடுபட்டனர்.

மாணவர்களுக்கு அஞ்சி அங்கு கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சன் டிவி அலுவலகத்திற்குள் மாணவர்கள் நுழைந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் போலீசார் மாணவர்களை சுற்றி வளைத்து நின்றனர்.

இந்த போராட்டம் குறித்து மாணவர் பிரபாகரன் கூறியிருப்பதாவது:

சன் டிவிக்கு எதிராக திடீரென இந்தப் போராட்டத்தை நடத்தவில்லை. ஏற்கனவெ கலாநிதிமாறனுக்கு சங்கக்காராவை நீக்கக்கோரி கடிதம் எழுதினோம், மின்னஞ்சலும் அனுப்பினோம். பத்திரிக்கையாளர்கள் மூலம் எங்கள் எதிர்ப்பை பதிவு செய்தோம். ஆனால் கலாநிதிமாறனிடமிருந்து எந்த வித பதிலுமில்லை.

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக்கூடாது என்று கடிதம் எழுதுகிறார் கருணாநிதி ஆனால் பேரனின் அணியில், சன்ரைசர்ஸ் அணியில் சிங்கள வீரர்கள் இடம்பெற்றிருப்பதை அவரால் தடுக்க முடியவில்லை. மாறாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். தமிழ் உணர்வைக் காட்டிலும் கருணாநிதிக்கு வியாபார நோக்கம்தான் பெரிதாகிவிட்டது. என்று கூறியுள்ளார் மாணவர் பிரபாகர்ன்.

இந்த ஆர்பாட்டம் காரணமாக நன் டிவி நிறுவனம் அமைந்துள்ள எம்.ஆர்.சி. நகரில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

28 March, 2013

தமிழீழக் கோரிக்கை - ஜெயலலிதாவின் கனவு பலிக்குமா..?


எமது தனித் தமிழீழக் கோரிக்கையை வென்றெடுக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. விரைவில் இந்தக் கோரிக்கை நிறைவேறும் என்று அடித்துக் கூறினார் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா. 
 
தமிழகத்தில் மாணவர்கள் தொடர்ச்சியாக நடத்திவரும் ஈழ ஆதரவுப் போராட்டம் தொடர்பிலான சிறப்புக் கவனவீர்ப்பு விவாதம் தமிழக சட்டச் சபையில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது: இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற ஈவு இரக்கமற்ற மனிதநேயமற்ற செயல்களை, இனப்படுகொலையை கண்டித்து இங்குள்ள மாணவ மாணவியர் போரட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களின் போராட்டம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக உள்ளது. மாணவ மாணவியரின் ஒட்டுமொத்தப் போராட்டம் அரசியல் கலப்பற்றதாக, இலங்கைத்தமிழர் நலனை மாத்திரமே நோக்கமாகக் கொண்டுள்ளது. 
 
இந்த உணர்வு பூர்வமான போராட்டங்கள், கவனவீர்ப்புகள் தமிழகத்தில் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற போதும், இலங்கை அரசு தமிழர்களைத் தொடர்ந்தும் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தி வருகின்றது. 
 
சொந்த நாட்டிலேயே இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இது மட்டுமல்லாமல் ஈழத் தமிழர்கள் வசிக்கின்ற பகுதிகளில் சிங்களவர்களை இலங்கை அரசு குடியமர்த்தி வருகின்றது.

தமிழர் வழிபாட்டுத் தலங்கள் அகற்றப்படுகின்றன. மொத்தத்தில் இலங்கையில் அரசு ஓர் இனவெறி தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது. இவற்றையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய மத்திய அரசு, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு தமிழ்நாட்டு அரசன் கோரிக்கைக்கு சற்றும் மதிப்பளிக்காமல் பாராமுகமாக இருந்து வருகின்றது. இது எமக்கு மிகுந்த வருத்தத்தையளிக்கின்றது. 
 
இந்தச் சூழ்நிலையில் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை இந்திய மத்திய அரசுக்கு மீண்டும் எடுத்துரைக்கும் வகையில் தனித் தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்மொழிகின்றேன் என்றார். இதனையடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 
 
எமது கோரிக்கைகளை வென்றெடுக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று தெரிவித்த முதல்வர் செல்வி ஜெயலலிதா, ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதால் தமிழக மாணவர்கள் போராட்டங்களைக் கைவிட்டுப் படிப்புக்குத் திரும்ப வேண்டும் மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதே சட்ட சபையில், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அந்தத் தீர்மானத்தை இன்னமும் மத்திய அரசு நடைமுறைப்படுத்தவில்லை.

இதற்காக நாம் தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல் இருக்க முடியாது. சென்னையில் இடம்பெறும் ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் யாரும் பங்கெடுக்கக்கூடாது என்று பிரதமருக்கு நேற்று (நேற்று முன்தினம்) வலியுறுத்தியிருந்தேன். இதைப் போலத்தான் இந்தத் தீர்மானங்கள் வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார். 
 
அவர் தனது உரையில் 2009 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த தி.மு.க அரசு தமிழர்களை காக்கத் தவறிவிட்டதாகவும் கூறினார். உடனடியாக எதிர்ப்பு வெளியட்ட தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதனால் சபாநாயகரின் உத்தரவின் பிரகாரம் தி.மு.க சட்ட உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

12 September, 2011

கலைஞரை விட ராஜபக்சேவே மேல் - சீமான் ஆவேசம்...

தமிழர் விஷயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் செயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பரவாயில்லை. அவர் இன உணர்வுடன் செயற்படுகிறார் என்று விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மன வேதனையுடன் தன்னிடம் கூறியதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
 
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கும் மரண தண்டனையை ரத்துச் செய்யும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டத்தில் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில்:

கடந்த 2008 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் ஆரம்பமாவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக விடுதலைப் புலிகளின் தலைவர் மேற்கண்டவாறு கூறினார். கருணாநிதி ஈழப்படுகொலையைத் தடுத்து நிறுத்தத் தவறியது மட்டுமல்லாமல் ஈழத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட உச்சக்கட்ட கொடுமைகளை வெளி உலகுக்குக் கொண்டு சேர்க்கவும் தவறிவிட்டார்.

மேலும் பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகனை ஏன் இன்னும் தூக்கில் போடவில்லை என்று 7 முறை மத்திய அரசுக்கு நினைவூட்டல் கடிதங்களும் எழுதியிருக்கிறார்.
 
இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் இந்திய அளவில் தெரியவந்து, இலங்கையைப் பொறுத்தவரை இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்கிற விவாதம் எழுந்திருக்கும் வேளையில் ஒட்டு மொத்த ஊடகங்களையும் தமிழர்களையும் திசை திருப்புவதற்காக அவசரவசரமாக கடந்த 9 ஆம் தேதி தூக்குத் தண்டனையை நிறைவேற்ற காலக்கடு விதித்தது ஏன்.?

இந்தியாவின் இறையாண்மை என்பது தமிழர்களுக்கு எதிரானது என்றால் அந்த இந்திய இறையாண்மைக்கு நாம் எதிரிதான். மும்பைக் குண்டு வெடிப்புக்குத் தமிழன் உட்பட கண்டனம் தெரிவிக்கும் நிலையில் தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கொல்லப்படும் போது அதனை எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று ஏன் மற்றவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை?  இவ்வாறு அவர் கூறினார்.

23 July, 2011

இலங்கையின் அழைப்பை ஜெயலலிதா ஏற்றுக் கொண்டாரா?


இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு உயர்ஸ்தானிகராலயத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் நேற்றுமுன்தினம் சென்னையில் தமிழக முதல்வரை சந்தித்துப் பேச்சு நடத்தியபோதே ஜெயலலிதா இலங்கையின் அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.

அதேவேளை ஜெயலலிதா, ஜனாதிபதியிடம் தெரிவிக்குமாறு தகவல் ஒன்றையும் வழங்கியுள்ளார்.

இலங்கையில் அகதி முகாம்களில் தங்கியுள்ள தமிழர்கள், தங்கள் சொந்த இடங்களுக்கு விரைவில் திரும்பிச் செல்ல வேண்டும். அவர்கள் தமது சொந்த இடங்களில் மறுவாழ்வு பெறுவதை உங்கள் அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்ற தகவலை ஜெயலலிதா அனுப்பி வைத்துள்ளார்.

பிரசாத் கரியவாசம், முதல்வரின் இந்தத் தகவலை ஜனாதிபதியிடம் தெரிவிப்பதாகக் கூறியிருக்கிறார்.

அத்துடன், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும் எனவும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாக் ஜலசந்தியில் மீன் பிடிப்பில் ஈடுபடும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் அவ்வப்போது தாக்கப்படுவது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. கடந்த 2 மாதங்களில் 3 முறை தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்றும் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.


ஜெயலலிதாவுடனான சந்திப்பை முடித்துக்கொண்டு வெளியேறிய பிரசாத் காரியவசத்தை, சூழ்ந்துகொண்ட பத்திரிகையாளர்கள், "எதற்காக இந்த திடீர் சந்திப்பு" என்று கேட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதற்குப் பதிலளித்த தூதர் கரியவாசம், "முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்றதற்காக, அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்க வந்துள்ளேன். முதல்வருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்குமாறு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ என்னைப் பணித்துள்ளார்" என்று தெரிவித்தார்.

ஜெயலலிதா தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராகப் பொறுப்பேற்றது, மே மாதம் நடுப்பகுதியில். தூதர் காரியவாசம் வாழ்த்துத் தெரிவிக்க வந்திருப்பது, ஜூலை மாதம் 21ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது. (தமிழ்CNN)

20 June, 2011

முதுகெலும்பற்ற ஈனத்தமிழர்களல்ல நாம்.... (ஒரு அழைப்பு..)


ற்பனைகள் செய்தால்கூட
காணமுடியாத கொடும்காட்சிகள்...
பாலினம் பாராது நிர்வாண கோலத்தில்
உயிர் மூச்சை நிறுத்திய ஆணவத்தனம்...

விலங்கினங்களை வதைத்தாலே
வீறுகொண்டு எழுகிறது ஒரு அமைப்பு
ஒரு இனப்படுகொலைக்கு எதிராக ஏன்
தயக்கம் காட்டுகிறது இந்த உலகம்....

யிர்களை அங்கே உறுக்குலைத்தபோது
அறிக்கைகளும் வருத்தங்கள்  மட்டுமே
இங்கிருந்து அனுப்பிவைக்கப்பட்டன
இனி என்னச்செய்யப் போகிறோம்...

கிளைகளை வெட்டும் போதே
கேள்விகள் கேட்டிருந்தால்
ஒரு இனத்தையே வேறருக்கும் போது
வேடிக்கை பார்க்கும் நிலை வந்திருக்குமா?

யிர்களை வதைக்கும் போது 
வருத்தப்பட்டவர்களே... தற்போதைக்கு
அந்த ஆத்மாக்களையாவது
சாந்திப்படுத்துவோம் வாருங்கள்...

முத்துக்குமரன் விட்டுப்போன
நெருப்பு இன்னும் நீருப்பூக்கவில்லை
என நிருபித்து
தியாக சுடரேந்துவோம்...

மெரீனாவில் கால் நனைக்கும்
கடல்அலைகளிடம் சொல்லிவிடுவோம்....
எந்திய தீபத்தில் கிளம்பும் சுடரில்
தமிழ் ஈழம்  ஒருநாள் மலரும் என்று....

நாம் ஏந்திநிற்க்கும் தீபங்கள்
ஒரு நாள் தீப்பிழம்பாய்
சிங்கள வெறிப்பிடித்தவர்களை
தீக்கிறையாக்கும் என்ற நம்பிக்கையுடன்...





ஈழப் படுகொலைகளை நினைவு கூறும் அதே சமயம், 
இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட 
543 தமிழக மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் 
ஒன்று கூடுவோம்...

நாள்: ஜூன் 26
நேரம்: மாலை 5 மணி
இடம்: மெரினா கண்ணகி சிலை.

கவிதை வீதியில் இருந்து இதைப்படிப்பார் கண்டிப்பாக வர 

முயற்ச்சிப்பீர்கள் என நம்புகிறேன்...
 

ஒன்றுபடுவோம்... விடியும் ஒரு நாள்...

 

15 June, 2011

இலங்கை எனும் கொலைக்களம் பரபரப்பு வீடியோ காட்சிகள்...


இலங்கையில் ராஜபக்சவின் இனவெறி இராணுவம் நடத்திய தமிழின அழிப்பின் காணொளி பதிவு ஒன்றை ‘கொலைக்களம்’ என்ற பெயரில் சானல் 4 தொலைக்காட்சி இன்று வெளியிட்டது.

இலங்கையில் தமிழினம் எப்படியெல்லாம் திட்டமிட்ட இனப் படுகொலைக்கு உடபடுத்தப்பட்டது என்பதை பல காணொளிகள் மூலம் உலகின் பார்வைக்குக் கொண்டு வந்த சானல் 4, அங்கு நடந்த மிகப் பெரிய படுகொலைக்கு ஆதாரமான மிகப் பெரிய காணொளியை இன்று (14-06-2011 இரவு 11.00 மணிக்கு) வெளியிட்டது.
காட்சிகளை பார்க்கும் அதிகாரிகள் கூட கண்கலங்கும் காட்சிகள் பார்ப்போரை கதிகலங்க வைக்கிறது.

அந்த வீடியோ காட்சிகள் :




கொலை பாதகன் ராஜபக்சே சர்வச குற்றவாளி கூண்டில் எப்போது ஏற்றப்படுவான்....  இனப் படுகொலைக்கு என்று வரும் ஒரு தீர்வு... 
தன் சொந்த மண்ணில் உரிமைகள் இழந்து உணர்வுகள் இழந்து இலங்கை ராணுவ துப்பாக்கிகளுக்கு இறையாகும் தம் இனம் என்றுதான் சுதந்திர காற்றை தனிஈழம் அமைத்து சுவாசிக்குமோ...
Related Posts Plugin for WordPress, Blogger...