கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

01 May, 2011

அஜித் ரசிகர் மன்ற கலைப்பு - பரபரப்பு பிண்ணனிநடிகர் அஜித் தனது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி பரிசு கொடுத்துள்ளார். தனது ரசிகர் மன்றத்தை கலைப்பதாக அறிவித்துள்ள அஜித், நல திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம்; நல் உள்ளமும், எண்ணமும்‌ போதும் என்று கூறியுள்ளார். 40வது பிறந்த நாளை முன்னிட்டு அஜித்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அமராவதி திரைப்படம் மூலம் தொடங்கிய எனது திரைப்பட பயணத்தில் மங்காத்தா 50வது திரைப்படமாக வெளிவர உள்ளது. எனது இந்த திரைப் பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த என் சக நடிகர், நடிகையர், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ஊடக நண்பர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் எனக்கு ஊக்கமும், ஆக்கமும் கொடுத்த என் குடும்பத்தார்க்கும் இந்த அறிக்கை மூலம் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட நாட்களாகவே என்னை சிந்திக்க வைத்த ஒரு கருத்தை சொல்ல இன்றே உகந்த நேரம் என கருதி இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

நான் என்றுமே ரசிகர்களை எனது சுயநலத்திற்காக பயன்படுத்தியதில்லை. எனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்காக அவர்களை கேடயமாக பயன்படுத்திக் கொண்டதும் இல்லை, பயன்படுத்தவும் மாட்டேன். நான் நடித்த படங்கள் நன்றாக இருந்தால் அதற்கு ஆதரவு தரவும் – சரியாக இல்லாவிட்டால் விமர்சிக்கவும் ரசிகர்களுக்கு உரிமை உண்டு. எனது திரைப்படத்தை ரசிக்கும் ரசிகர்கள் எல்லோருமே என் இயக்க உறுப்பினர்கள் இல்லை என்பதை நான் அறிவேன். 

என் ரசிகர்களிடையே இக்காரணத்தை கொண்டு நான் வித்தியாசம் பார்ப்பதில்லை – பார்க்கவும் மாட்‌டேன். கோஷ்டி பூசல், ஒற்றுமையின்மை, தலைமையின் கட்டுப்பாட்டுக்கு இணங்காமல் தன்னிச்சையாக செயல்படுவது, தங்களது தனிப்பட்ட அரசியல் கருத்துக்காக நற்பணி இயக்கத்தை பயன்படுத்துவது என்ற பல்வேறு காரணங்கள் என்னுடைய எண்ண ஓட்டத்திற்கு உகந்ததாக இல்லை

சமுதாய நல பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக தங்களது குடும்பத்திற்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே நான் வலியுறுத்தி வருகிறேன். நல திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம்; நல் உள்ளமும், எண்ணமும்‌ போதும் என்பதே என் கருத்து.

வருகிற மே 1ம் தேதி என்னுடைய நாற்பதாவது பிறந்த நாளில் எனது கருத்தை எனது முடிவாக அறிவிக்கிறேன். இன்று முதல் எனது த‌லைமையின் ‌கீழ் கட்டுப்பட்டு வந்த அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன்.

மாறிவரும் காலகட்டத்தில் ‌பொதுமக்கள், எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு திரைப்படத்திற்கு அப்பாற்பட்டு ‌பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே ஒரு நடிகனுக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு கவுரவம் கிட்டும் என்பதே என் நம்பிக்கை. அந்த கவுரவமும் எனது இந்த முடிவிற்கு ஆதரவு அளிக்கும். எனது உண்மையான ரசிகர்களின் கருத்து மட்டுமே எனது பிறந்த நாள் பரிசாகும்.

இவ்வாறு அஜித் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

 அஜித்குமாரின் இந்த அதிரடியான முடிவு அவரது ரசிகர்களை பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எனினும் அஜித் சொல்லியிருக்கும் கருத்துக்கள் ஏற்கக்கூடியவை என்பதால் பெரும்பாலானவர்கள் இந்த முடிவை வரவேற்றிருக்கிறார்கள். முன்பொருமுறை தலைமைக்கு கட்டுப்படாமல் ஒரு ரசிகர் மன்றம் இயங்கியதால், ரசிகர் மன்றத்தையே கலைப்‌பேன் என்று அஜித் எச்சரிக்கை விடுத்திருந்தது நினைவிருக்கலாம். 

அவரது எச்சரிக்கையையும் மீறி சில மன்றங்கள் தேர்தல் நேரத்தில் செயல்பட்டதால்தான் இப்படியொரு அதிரடி முடிவை எடுத்திருக்கிறார். அஜித்தின் இந்த முடிவு சரியானதுதானா? அல்லது இன்னும் கொஞ்சம் யோசித்து முடி‌‌வெடுத்திருக்க வேண்டுமா? என்பதை இங்கே கருத்தாக பகிர்ந்து கொள்ளுங்கள் வாசகர்களே…!!

என்ன இருந்தாலும் ரசிகர் மன்றம் வைத்து அரசியல் நடத்தும் நடிகர்கள் மத்தியில் நம்ம தல தனித்து நிர்கிறார்...

அவருக்கு கவிதை  வீதியின் வாழ்த்துக்கள்..

12 comments:

 1. //முன்பொருமுறை தலைமைக்கு கட்டுப்படாமல் ஒரு ரசிகர் மன்றம் இயங்கியதால், ரசிகர் மன்றத்தையே கலைப்‌பேன் என்று அஜித் எச்சரிக்கை விடுத்திருந்தது நினைவிருக்கலாம்//
  உண்மை!

  ReplyDelete
 2. தூர நோக்கு சிந்தனையில் அஜித் செயற்பட்டு இருப்பது பாராட்டுக்கு உரியது :-)

  ReplyDelete
 3. நம்ம தல எப்பவுமே டாப்பு தான்... பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல...

  ReplyDelete
 4. தல செய்தி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. iis a good decision . . .
  ajith is right in this decision . .
  wish u happy birthday ajith

  ReplyDelete
 6. தல வாழ்க!!!
  தலைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. நடக்கட்டும் நடக்கட்டும்....

  ReplyDelete
 8. அஜித்தின் இந்த முடிவு சரியானது
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 9. பிறந்த நாள் வாழ்த்துக்கள். இது ரசிகர்களுக்கு பரிசா?

  ReplyDelete
 10. உங்கள் பதிவை படிப்பவர்கள் எல்லாம் பின்னூட்டம் போட வேண்டிய அவசியமில்லை.அதே,சமயத்தில் பின்னூட்டத்தில் நல்லாயிருக்கு என்று சொல்லனும்ன்னு நீர் எதிர்ப்பார்க்கவும் கூடாது. உங்கள் சார்ந்த கருத்தினை தவிர்க்க முடியாது என்ற சூழ்நிலையில் தான் 'வாந்தி' என்ற வார்த்தையை விமர்சன குழு சேர்த்தது இருந்தது.இது ஒன்றும் நீங்கள் பின்னூட்டத்தில் பேசும் வார்த்தைகளை விட அருவெறுப்பானது இல்லையே. தவறை தவறு என்பது சொல்வது தவறானால் அந்த தவற்றை தவறாமல் தினமும் செய்வோம்

  ReplyDelete
 11. ///நல திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம்; நல் உள்ளமும், எண்ணமும்‌ போதும்//////
  நல்ல விஷயம்..ஒவ்வொரு நடிகனும் அதை கடைபிடிக்கணும்!

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...