இந்த பூவுலகில்
அழித்தலுடன் கழித்தலை செய்தவனே....
அழித்தலுடன் கழித்தலை செய்தவனே....
உன் அழிவிற்கு உலகமே
கண்ணீர் சிந்துகிறது
ஆனந்தத்தால்...
எதை அடைந்தாய்
உன் வன்முறைக் கொண்டு
ரத்தங்களும் சதைகளும் தவிர...
மாற்றான் தோட்டத்தில்
மலர்களுக்கு தீவைத்துவிட்டு
“புனித போர்” என்கிறாய்...
அப்படியென்றால்
“புனித போர்” என்கிறாய்...
அப்படியென்றால்
அஹிம்சையை என்னவென்று சொல்வது...
உலக தீவிரவாதமே...
உள்ளங்களில் எழுதிக்கொள்ளுங்கள்
இனி இந்த பூமியில்
உங்களுக்கு ஆறடி நிலம்கூட சொந்தமில்லை...
உங்கள் உடலை புதைத்து
பூமியை மாசுப்படுத்த விரும்பவில்லை
அதனால் தான்
கடலில் கரைத்திருக்கிறோம்...
அதனால் தான்
கடலில் கரைத்திருக்கிறோம்...
இறுதியாய் தீவிரவாதிகளே
மனம்திருந்துங்கள்
இல்லையேல்...
இன்னும் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது
சுறாக்கள்....
இனி உலக தீவிரவாதத்திற்கு மூடுவிழா தான்
கருத்து சொல்லுங்கள்...
This comment has been removed by the author.
ReplyDeleteME THE FIRST
ReplyDeleteஉலக தீவிரவாதமே...
ReplyDeleteஉள்ளங்களில் எழுதிக்கொள்ளுங்கள்
இனி இந்த பூமியில்
உங்களுக்கு ஆறடி நிலம்கூட சொந்தமில்லை...
அருமையான வரிகள்
//இறுதியாய் தீவிரவாதிகளே
ReplyDeleteமனம்திருந்துங்கள்
இல்லையேல்...
இன்னும் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது
சுறாக்கள்....//
நன்று சௌந்தர்!
இறுதியாய் தீவிரவாதிகளே
ReplyDeleteமனம்திருந்துங்கள்
இல்லையேல்...
இன்னும் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது
சுறாக்கள்....
நல்ல கவிதை நண்பரே
உணர்ச்சி மிக்க கவிதை. வாழ்த்துக்கள்
ReplyDeleteசூப்பர் கவிதை நண்பா
ReplyDeleteடைமிங்க் ரைமிங்க்
ReplyDeleteதீவிரவாதத்தை பொட்டில் அறைந்தது போல உள்ளது....
ReplyDeleteதேவையான கவிதை.
ReplyDelete.................
ReplyDeleteபோய்யாங்க!
ReplyDeleteமாற்றான் தோட்டத்தில்
ReplyDeleteமலர்களுக்கு தீவைத்துவிட்டு
“புனித போர்” என்கிறாய்...//
வரிகள் வலியை உணர்த்துகின்றன்.
///உலக தீவிரவாதமே...
ReplyDeleteஉள்ளங்களில் எழுதிக்கொள்ளுங்கள்
இனி இந்த பூமியில்
உங்களுக்கு ஆறடி நிலம்கூட சொந்தமில்லை.../// யதார்த்தம்
//எதை அடைந்தாய்
ReplyDeleteஉன் வன்முறைக் கொண்டு
ரத்தங்களும் சதைகளும் தவிர..///
கரிக்டு....
நல்ல கவிதை.
ReplyDeleteபிரபாகரனை அழித்தது தமிழனைக் காப்பாற்றுவதற்கல்ல;ஒஸாமாவை அழித்தது முஸ்லிம்களைக் காப்பாற்றி சமாதானத்தை வரவழைப்பதற்கல்ல. முஸ்லிகளுக்கு ஒஸாமா; தமிழர்களுக்கு பிரபாகரன்
ReplyDeleteபிரபாகரனை அழித்தது குற்றம் என்று கூறும் நீங்கள் ஒஸாமா இறந்ததை வெறுப்பதுமேனோ?
ReplyDeleteWOW
ReplyDeleteஇனி இந்த பூமியில்
உங்களுக்கு ஆறடி நிலம்கூட சொந்தமில்லை...
அசத்தல் வரிகள்...
ReplyDeleteஉங்களுக்கு ஆறடி நிலம்கூட சொந்தமில்லை...
உண்மை ..
அருமையான கவிதை..
தீவிர வாதத்த ஒரு போதும் நிப்பாட்ட முடியாது எங்க எங்க அநியாயம் நடக்குதோ அங்க தீவிரவாதம் உயிர் பெறும்
ReplyDelete////
ReplyDeleteஏ.எல்.ஏ முஹம்மத் said... [Reply to comment]
பிரபாகரனை அழித்தது தமிழனைக் காப்பாற்றுவதற்கல்ல;ஒஸாமாவை அழித்தது முஸ்லிம்களைக் காப்பாற்றி சமாதானத்தை வரவழைப்பதற்கல்ல. முஸ்லிகளுக்கு ஒஸாமா; தமிழர்களுக்கு பிரபாகரன்
/////
பிரபாகரன் மேற்கொண்ட போராட்டம் ஒரு தன்மானத்திற்காக நடந்தது....
ஆனால் பின்லேடன் நடத்தியது பேறாமையால் ஏற்பட்ட போராட்டம்...
////
ReplyDeletenaan said... [Reply to comment]
தீவிர வாதத்த ஒரு போதும் நிப்பாட்ட முடியாது எங்க எங்க அநியாயம் நடக்குதோ அங்க தீவிரவாதம் உயிர் பெறும்
//////
தீவிரவாதம் நல்லதுதான் அது நியாயத்திற்காக இருக்க வேண்டும்...
ஒசாமா இதுவரை கிட்டதட்ட 30000 பேரை கொண்று குவித்திருக்கிறான்...
நண்பரே... அஹிம்சைக் கூட ஒரு வகையான தீவிரவாதம் தான்.....
////
ReplyDeleteஏ.எல்.ஏ முஹம்மத் said... [Reply to comment]
பிரபாகரனை அழித்தது குற்றம் என்று கூறும் நீங்கள் ஒஸாமா இறந்ததை வெறுப்பதுமேனோ?
///////
பிரபாகரன் கெள்ளப்படுவதை எதிர்த்து போராடினான்
அது தன்மான போராட்டம்...
ஒசாமா அப்படியல்ல தன் பலத்தை காட்டும் போராட்டம்...
யோசிக்க வைக்கும் கவிதை. '
ReplyDeleteதற்போதைய சூழ்நிலைக்கேற்ப கவிதை எழுதியிருப்பதற்கு சிறப்பான பாராட்டுக்கள்..
ReplyDeleteதீவிரவாதம் எந்த ரூபத்தில் இருந்தாலும் அதை எதிர்க்கத்தான் செய்யவேண்டும். எந்தக் காரணத்திற்காக போராட்டம் இருந்தாலும் அதில் சம்பந்தப்படாத அப்பாவி மக்களை குண்டு வைத்து தகர்ப்பது எப்படி போராட்டமாகும். நியாயாமுமாகுமா? நக்கசலைட்டுகளின் வன்முறையை நாம் ஊக்குவிக்க முடியுமா? அதே போல்தான் சம்பந்தப்படாத அப்பாவிகளை கொன்றுகுவிப்பதை நியாயப்படுத்தி பேசுவதை ஏற்கமுடியாது. ஒஸாமாவின் முடிவு வரவேற்கத்தக்கது. தங்கள் கவிதை ஆனந்த அஞ்சலி நல்ல ஆனந்த கூத்தாய் மிளிர்கிறது. மிக நன்று
ReplyDeleteபோய்யாங்க!
ReplyDeleteMay 3, 2011 1:10 PM//
He He..
This comment has been removed by the author.
ReplyDeleteநியாயத்திற்காக போராடுபவர்களுக்கு இன்று தீவிரவாதி தான் பெயர்.........அதை மறந்துவிட்டு ஊடகங்களில் வரும் செய்திகளை வைத்து ஒசாமா சாவை கொண்டாடி அமெரிக்காவுக்கு காவடி தூக்காதீர்கள்.....இந்தியாவில் உள்ள உங்களுக்கு சினிமாவும் ஊழல் அரசியலும் தான் வாழ்க்கை.......போராட்டத்தின் அர்த்தமும் அதன் வலியும் அதற்காக செய்யும் தியாகங்களும் புரியாது........வல்லாதிக்க சக்திகளின் கையில் ஊடகம் எப்படி வேண்டுமென்றாலும் ஒரு நபரையோ ஒரு இயக்கத்தையோ சித்தரிக்கலாம் அதிலுள்ள அர்த்தம் புரியாமல் கவிதை எழுத வந்திட்டானுங்க........போங்கடா உங்கட ரஜினி , விஜய் இல்லாட்டி கருணாநிதி எவனாவது புகழ்ந்து கவிதை எழுதுங்க...அது மட்டும் தான் உங்களுக்கு சரியா வரும்......
ReplyDelete@cisco
ReplyDeleteஒரு கவிஞனுக்கு அதுவும் இந்தியாவில் இருந்துக் கொண்டு அஹிம்சைக்கே முன்னுரிமை தரவேண்டும்..
இங்கே நியாமான உரிமைகளைக்கூட அமைதியான போராட்டங்களைக் கொண்டும்தான் வெற்றியாக்கி கொள்கிறோம்....
அதற்காக தூப்பாக்கி தூக்கி அப்பாவி பொது மக்களை கொல்ல வில்லை.
அதற்காக அமெரிக்காவின் அராஜகத்திற்கு நானும் என் கவிதையும் துனைப்போகாது..
ஒபாமா இறந்தால் கூட எனக்கு ஆனந்த கவிதைதான் வரும்.....
பின்னூட்டங்கள் இடும் போது கொஞ்சம் நாகரீகம் தேவை அதை தாங்கள் புரிந்துக் கொள்ளுங்கள்...
அகிம்சை என்ற ஒன்று இருக்கிறது தான் ஆனால் அதை உச்சரிக்க தகுதி அற்றவர்கள் இந்தியர்கள்........நீங்கள் கோழை தனமாக வாழ்வதற்கு பயன்படுத்தும் சொல்லு தன அகிம்சை.......உங்கள் கருத்திலிருந்து உங்கள் தேசத்தில் கையாலாகாதவர்கள் தான் இருக்கிறீர்கள் என்றது மட்டும் புரிகிறீர்கள்.........உங்களுக்கு உரிமை என்பது கிடையாது இருந்தும் வாய் மூடி அடங்கி கிடக்கிறீர்கள் ......கேரளா காரனும் ஆந்திரா காரனும் எது என்றாலும் துணிந்து இறங்குவான் ஆனால் நீங்களும் உங்கள் அரசும் மானம் மரியாதையை சூடு சுரணை இல்லாமல் பார்த்துக்கொண்டு இருக்கத்தானே தெரியும்.....ஆகமிஞ்சினால் நடிகர்களின் பின்னால் ஒரு பேரணியோ ஒரு நாள் உண்ணாவிரதமோ இருப்பீர்கள் .....இல்லாவிட்டால் கையாலாகாத கருணாநிதி 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருப்பான் அவ்வளவு தானே....முதுகெலும்பு இல்லாமல் வாழ்வதற்கு பெயர் அகிம்சை இல்லை........இலங்கை வந்து பாருங்கள் உங்களை விட எங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு ஆனால் சுய கௌரவத்தை இழக்காமல் எதிர்த்து நிற்கிறோம் மத்திய அரசை நக்கி பிழைப்பவர்கள் அல்ல நாங்கள்.....எண்கள் சனத்தொகை 10 லட்சம் தான் ஆனால் நாங்கள் சாதித்தது எவ்வளவோ 7 கோடி பேர் இருந்து என்ன செய்தீர்கள்.........
ReplyDeleteஉங்கள் கருணாநிதியும் காந்தியும் செய்தது அகிம்சை அல்ல......எங்கள் திலீபன் 21 நாள் உணவின்றி இருந்து கொள்கைக்காக அகிம்சை மூலம் போராடி இறந்தானே அதற்க்கு பெயர் தான் அகிம்சை..........
ReplyDeleteஒசாமாவுக்காவது கடலில் இடம் கிடைத்தது
ReplyDeleteஆனால் இராசபக்சேவுக்கு அங்கும் இடம் கிடைக்காது
அக்கடலில் தான் ஈழத்தமிழரின் இரத்தமும கலந்து
இருகிறதே அது நிச்சியம் அனுமதிக்காது பாவி
புலவர் சா இராமாநுசம்
சென்னை 24
அரசியல் தீவிரவாதிகள் இருக்கும் வரைக்கும் தீலிரவாதிகள் நிச்சயம் தேவை கொடிய அமெரிக்காவை அழிக்க 3000 பேரை ஒசாமா கொன்றிருக்கிறார் என்கிறீர்களே ஹிரோசிமா நாகசாக்கியில் அமெரிக்கா லட்சக்கணக்கில் அழித்தது தீவிரவாதமில்லையா கவிஜரே ஆகவே அமெரிக்காவை குறை
ReplyDeleteகூறுவதை விட்டுவிட்டு ஒசாமா பின்லேடனை குறை கூறுவது பொருத்தமாகுமா??