கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

04 May, 2011

இது ஒரு கண்டன மற்றும் எதி்ர் பதிவு...திர்பார்த்து எதிர்பார்த்து
ஏங்கிக்கிடக்கிறேன்
தினமும் எதிர்படும் நீ
இன்றும் எதிர்படுவாய் என்று.... 

தினமும் எதிர்ப்படும் என்னை
உதாசினம்படுத்திவிட்டு போவாய்
இருந்தும் நான்
எதிர்பார்ப்பதை கைவிடவில்லை...

தெரிந்தும் மற்றும் தெரியாத
முகங்கள் எதிர்ப்படுகையில்
அவர்களுக்கான பதிவுகளை 
சிறு மூளை ஞாபகபடுத்துவதில்லை
உன்னை எதிர்பார்த்து நிற்கும் எனக்குள்...

ன்றொறுநாள் எதிர்படுகையில்
விழிகளால் மோதிவிட்டுச் சென்றாய்
நான் விழுந்ததும் அன்றிலிருந்துதான்...

ன்னும் எவ்வளவு நேரம் 
எதிர்பார்த்துக் கொண்டிருப்பது...

பெண்ணே...
எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்
என் கனவுகளுக்கு வந்து காட்சிக்கொடு

ன் கருவிழிகள் கண்டனங்கள் 
தெரிவிக்கும் முன்...

(அப்பா... ‌எப்படியோ எதிர்பதிவு என்பதால் அதிக இடத்தில் எதிர் என்ற வார்த்தையை பயன்படுத்தி விட்டேன், கண்டனம் என்ற வார்த்தையில் கவிதை முடிகிறது..... ஏங்க இது டிஸ்கிங்க)

உங்கள் விருப்பம்போல் பின்னூட்டங்கள் இடலாம்..

43 comments:

 1. யோவ் தலைப்ப பார்த்துட்டு என்னமோ ஏதோன்னு நெனைச்சு வந்தேன் யா! ஆனாலும் கவிதை சூப்பர்!!

  ReplyDelete
 2. மச்சி தமிழ்மணத்துல உனக்கு நீயே ஓட்டுப் போடலன்னா அப்புறம்.......?

  ReplyDelete
 3. நீங்கள் கவிதை வீதியா?இல்லை காதல் வீதியா? அருமை நண்பரே...

  ReplyDelete
 4. //அன்றொறுநாள் எதிர்படுகையில்
  விழிகளால் மோதிவிட்டுச் சென்றாய்
  நான் விழுந்ததும் அன்றிலிருந்துதான்...//
  பெண்ணின் விழி வீச்சில் விழாதவர் யார்?
  நல்ல கவிதை சௌந்தர்!

  ReplyDelete
 5. ///
  ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... [Reply to comment]

  யோவ் தலைப்ப பார்த்துட்டு என்னமோ ஏதோன்னு நெனைச்சு வந்தேன் யா! ஆனாலும் கவிதை சூப்பர்!!
  ////

  எல்லாம் ஒரு கவர்ச்சிக்குதாங்க...
  தொடர்ந்து வாங்க ஓனர்...

  ReplyDelete
 6. ////
  ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... [Reply to comment]

  மச்சி தமிழ்மணத்துல உனக்கு நீயே ஓட்டுப் போடலன்னா அப்புறம்.......?
  /////


  இதோ போடுறேன்...

  நான் செல்லும் தளங்களில் ஓட்டு போடாமல் திரும்பியதாக எனக்கு நினைவில்லை

  ReplyDelete
 7. ////
  NKS.ஹாஜா மைதீன் said... [Reply to comment]

  நீங்கள் கவிதை வீதியா?இல்லை காதல் வீதியா? அருமை நண்பரே...
  ///////

  கவிதை காதல் இரண்டும் ஒன்றுதான்
  ஒவ்வொன்றும் ஒவ்வொன்றில் அடக்கம்..

  ReplyDelete
 8. என்னமோ ஏதோ என்று எதிர்பார்த்து வந்தது கிடைக்காததால் என் கண்டனங்களை தெரிவிக்கிறேன்..

  ReplyDelete
 9. கவிதை எழுதிவிட்டு தலைப்பு எழுத யோசிச்சிங்களா. கவிதை நல்ல இருக்கு.

  ReplyDelete
 10. இன்னும் கொஞ்சம் பலமான எதிர்ப்பை எதிர்பார்த்து வந்தேன் :)
  http://karadipommai.blogspot.com/

  ReplyDelete
 11. ஆக தலைப்பை பார்த்து எமந்துட்டேனே! ஆனாலும் கவிதை நல்ல இருக்கு பாஸ் ..

  ReplyDelete
 12. அசத்தல் கவிதை...
  நானும் கண்டனம் தெரிவிக்கிறேன்..

  ReplyDelete
 13. ///
  சென்னை பித்தன் said... [Reply to comment]

  //அன்றொறுநாள் எதிர்படுகையில்
  விழிகளால் மோதிவிட்டுச் சென்றாய்
  நான் விழுந்ததும் அன்றிலிருந்துதான்...//
  பெண்ணின் விழி வீச்சில் விழாதவர் யார்?
  நல்ல கவிதை சௌந்தர்!
  //////

  நன்றி தலைவரே...

  ReplyDelete
 14. ம்..எப்படியெல்லாம் வித்தை காட்டுறாய்ங்க..

  ReplyDelete
 15. நல்லாருக்கு புகுந்து விளையாடுங்க..

  ReplyDelete
 16. தலைப்பு ரெடி பண்ணிட்டு கவிதை எழுதுறீங்களா தலை..?

  ReplyDelete
 17. >>>உங்கள் விருப்பம்போல் பின்னூட்டங்கள் இடலாம்..

  ஹி ஹி கண்ட படி திட்டலாமா?

  ReplyDelete
 18. ஹி ஹி எப்படியெல்லாம் யோசிக்கறாங்க

  ReplyDelete
 19. என்னங்க இது,அழகான ஒரு கவிதைக்கு,இப்படி ஒருத் தலைப்பு?

  ReplyDelete
 20. ஏங்க இது டிஸ்கிங்க)//
  கவிதை சூப்பர்!!

  ReplyDelete
 21. அட போங்கங்க ஏதோ சண்டை, வேடிக்கை பாக்கலாம்னு வந்தா, இங்க வேற என்னமோ நடக்குது.

  ReplyDelete
 22. எதிர் பதிவல்ல. பெண்ணை எதிர்பார்க்கும் பதிவு. நன்று.

  ReplyDelete
 23. This comment has been removed by the author.

  ReplyDelete
 24. என்ன இது சின்னபுள்ள தனமா ......
  ஆனால் கவிதை மிக அருமை நண்பரே...
  உங்கள் மகேஷ்...
  http://www.maheskavithai.blogspot.com

  ReplyDelete
 25. @Maheswaran.Mhttp://www.maheskavithai.blogspot.com

  ReplyDelete
 26. தலைப்பப் பாத்துட்டு என்னமோ ஏதோனு வந்தேன்..
  இப்டி பல்பு குடுத்துட்டீங்களே...
  (சரி விடுங்க.. எவ்வளவோ வாங்கிட்டோம்.. இத வாங்க மாட்டோமா??)

  ReplyDelete
 27. ///
  !* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]

  என்னமோ ஏதோ என்று எதிர்பார்த்து வந்தது கிடைக்காததால் என் கண்டனங்களை தெரிவிக்கிறேன்..
  //////

  அப்படியா..

  ReplyDelete
 28. அண்ணா நமக்கெதுக்கு எதிர்பதிவெல்லாம்னு சொல்லலாம்னு நினைச்சேன்.. ஆனா இந்த மாதிரி எதிர்பதிவு தேவைதான்.. ஹி ஹி .. கடைசி வரிக்கும் அவுங்க பார்வை கிடைச்சுதா இல்லையா ?

  ReplyDelete
 29. கவிதை நல்லா இருக்கு நண்பா

  ReplyDelete
 30. கவிதை நல்லா இருக்கு...;-))

  ReplyDelete
 31. //அன்றொறுநாள் எதிர்படுகையில்
  விழிகளால் மோதிவிட்டுச் சென்றாய்
  நான் விழுந்ததும் அன்றிலிருந்துதான்...//
  கவிதை மிக அருமை

  ReplyDelete
 32. கவிதை நல்ல இருக்கு இதை படிக்க வைக்க இப்படி செய்ய வேண்டாமே

  ReplyDelete
 33. தலைப்பை பார்த்துட்டு என்னவோ ஏதோனு ஆசையா சண்டைய பார்க்க வந்தா.... இப்படி ஏமாத்திட்டீங்களே. ஆனாலும் அருமையான கவிதை. கனவுகளுக்கு வந்து காட்சி கொடுத்தாங்களா இல்லையானு ஒரே டென்சனா இருக்கே. அடுத்த பதிவில் சொல்லிடுங்க.

  ReplyDelete
 34. //நான் விழுந்ததும் அன்றிலிருந்துதான்..//
  எப்போ எழுந்தீங்க,நண்பரே?

  ReplyDelete
 35. எதிர்பார்த்தது தான்...

  ReplyDelete
 36. கவிதை சூப்பர்

  ReplyDelete
 37. எதிர்பார்ப்புகள் எப்பொழுதுமே ஒரு சுகம்தான் . அழகான் ரசனை . பகிர்ந்தமைக்கு நன்றி தோழா

  ReplyDelete
 38. யாரையாச்சும் திட்டுவீங்களோனு ஆசையா வந்தேன், போச்சு, ஆனால் கவிதை மிக அருமை

  ReplyDelete
 39. ''...என் கருவிழிகள் கண்டனங்கள்
  தெரிவிக்கும் முன்...''
  நினைத்தது நடக்கட்டுமே! பாராட்டுகள்.
  எனக்கு அரசியலில் அவ்வளவு ஆர்வமில்லையாதலால் டிஜிட்டலுக்கு வந்து கவிதை தேடிக் கருத்திடுகிறேன் தொடரட்டும் பணி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...