கடந்த இரண்டு வாரமாக செய்திதாள்களில் என்னைமிகவும் வேதனைப்பட வைத்த செய்தி ஒன்று வந்துக் கொண்டு இருக்கிறது. அது வறுமைக்கோட்டு கீழ் வாழ்வர்கள் குறித்த செய்திகள் ஆகும். இந்தியாவில் சில மாநிலங்களில் பட்டிச்சாவு நடைப்பெற்றுக்கொண்டிருக்க இந்தியாவில் யாரும் வருமைக்கோட்டுக்கு கீழ் இல்லை என்பது அரசின் முடிவாகும்.
இந்தியாவில், வறுமைக் கோட்டுக்குக் கீழே தொங்கிக் கொண்டிருப்பவர்கள் யார், யார் என, நம் மத்திய அரசு கண்டுபிடித்து அறிவித்துள்ளது. அதன் படி, நகர்ப்புறங்களில் நாளொன்றுக்கு, 32 ரூபாய்க்கு கீழும், கிராமப் பகுதிகளில், 26 ரூபாய்க்கு கீழும் சம்பாதிப்பவர்கள் தான், வறுமைக்கோட்டுக்குக் கீழே தொங்கிக் கொண்டிருப்பவர்கள் என அறிவித்துள்ளது. இது என்ன கொடுமை என்று தெரியவில்லை. நகர்புறங்களில் நாள் ஒன்றுக்கு 32 ரூபாய் வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்..? காலை உணவுக்குமட்டும் கூட இது போதாது.
இதே மத்திய அரசு தான், சில ஆண்டுகளுக்கு முன், "தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி, கிராமப்புற மக்களுக்கு, நாளொன்றுக்கு, 100 ரூபாய் கூலி வீதம், ஆண்டுக்கு, 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இத்திட்டத்தின் படி, தினசரி, 100 ரூபாய் வீதம் ஆண்டுக்கு, 100 நாட்கள் ஒருவர் தே.ஊ.வே.வா., திட்டத்தில் பணிபுரிந்தால், அவரது ஆண்டு வருமானம், 10 ஆயிரம் ரூபாய், மாத வருமானம் சராசரியாக, 833.33 ரூபாய்; 834 ரூபாய் என்றே வைத்துக் கொள்வோம்.
அரசின் புதிய கண்டுபிடிப்பின் படி, கிராமப் புறங்களில், மாதம், 780 ரூபாய் தினக்கூலி, 26 ரூபாய்க்குக் குறைவாய் வருவாய் ஈட்டுவோரே, வறுமைக் கோட்டுக்குக் கீழே தொங்குவோர். அதன்படி, தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில், ஆண்டுக்கு, 100 நாட்கள் பணிபுரிவோர், வறுமைக் கோட்டுக்கு மேலே நடை பயில்பவர்கள். அதாவது, அவர்களும், "மேட்டுக்குடியினர்' என்றும் பொருள் கூறலாம்.
நகர்ப்புறங்களில் பிச்சைக்காரர்கள் கூட, நாளொன்றுக்கு சராசரியாக, 100 முதல், 150 ரூபாய் வரை வருமானம் (பிச்சை) ஈட்டி விடுவர், அவர்களும் கூட வறுமைக் கோட்டுக்குக் கீழே வரமாட்டார்கள். இலக்கியம், மருத்துவம், அறிவியல் போன்ற துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு, "நோபல் பரிசு' வழங்குகின்றனர். புதிய கண்டுபிடிப்புகளுக்குக் கொடுக்கின்றனரா எனத் தெரியவில்லை. அப்படி கொடுக்கின்றனர் என்றால், அதை இந்தக் கண்டுபிடிப்புக்காக, நம் மத்திய அரசுக்குக் கொடுக்கலாம்.
இதுபோன்ற மத்திய அரசு தன்னுடைய தவறான அறிக்கையை கைவிட்டு மக்களின் சாதாரான தேவைகளை பூர்த்திசெய்ய இன்று காலகட்டத்தில் இந்த தொகை எள்ளளவுக்கும் போது என புரிந்துக் கொள்ள வேண்டும். மக்களின் உண்மையான நிலையை உலகிற்க்கு அறிவிக்க வேண்டும்.
விழிப்புனர்வு கட்டுரை பகிர்வுக்கு நன்றி நண்பரே
ReplyDeleteEnru vidium india ???
ReplyDeleteஇந்த எம்பி எம்எல்ஏக்களுக்கெல்லாம் நாள் ஒன்றுக்கு 32 ரூபாய் சம்பளமாக கொடுக்க வேண்டும். அப்போது தெரியும். கேனைப்பயல் ஊரில் கிறுக்குப்பயல் நாட்டாமை நடக்கிறது.
ReplyDelete//புதிய கண்டுபிடிப்புகளுக்குக் கொடுக்கின்றனரா எனத் தெரியவில்லை. அப்படி கொடுக்கின்றனர் என்றால், அதை இந்தக் கண்டுபிடிப்புக்காக, நம் மத்திய அரசுக்குக் கொடுக்கலாம்.///
ReplyDeleteபொருளாதாரத்தின் கீழ் நோபல் பரிசு கொடுக்கலாம்...
#ங்கோ.... பொருளாதாரத்துல (கோ.எடுத்த) புளி நம்ம P.M.
ஹி ஹி ஹி ஹி...
மாப்ள நிர்வாகத்தை எதிர்த்து பேசுகிறாயா!...உலக அளவில் இப்படி இந்தியா பணக்கார நாடாக இருப்பது உமக்கு பிடிக்கவில்லையா....படுபாவிங்க இப்படியும் கேள்வி கேப்பானுங்களோ!
ReplyDeleteரைட்டு...
ReplyDeleteஅரசு சொல்லும் புள்ளி விபரங்கள் - விந்தையானது, உண்மைக்கு மாறானது.
ReplyDeleteஅரசுக்கு ஏழைகள் இல்லைன்னு சொல்லுறது சந்தோசம், அப்பதானே இன்னும் நிறைய வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முடியும்.. அப்பிடித்தான் நினைக்கிறேன்.
ReplyDeleteஇல்லை அமெரிக்காவோட ரிப்போர்ட்-ஐ காபி பேஸ்ட் பண்ணீட்டு நம்பரை மாத்தாம விட்டுட்டாங்களோன்னு ஒரு சின்ன சந்தேகம் உண்டு..
உண்மைக்குப் புறம்பான அரசின் புள்ளி விவரங்களை எல்லாருக்கும் எடுத்துக் கூறியதற்கு நன்றி.
ReplyDeleteஇவிங்க விட்டா எல்லாருமே அம்பானின்னு சொல்வாய்ங்க
ReplyDeleteபாவம் மக்கள்
ReplyDeleteபத்தாயிரம் ரூபா சம்பளம் வாங்குறவன் கூட மாசம் 500 ரூபா வருமானம் நு ரேஷன் கார்டில போடும் போது என்ன வேண்டுமானாலும் நடக்கும்
ReplyDeleteஏதாவது உள்குத்துக் காரணமாகத்தான் இருக்கும் .அரசு அரிக்கையில்...
ReplyDeleteவிதி எப்படியெல்லதம் விளையாடுது...
comment checking...
ReplyDeleteநாசமாபோற அரசாங்கம் கண்டதையும் சொல்லிட்டு இருக்கு வேற என்னத்தை சொல்ல....!!!
ReplyDeleteசரியான ஆதங்கம்தான். நாட்டில் இது போல போலித்தனமான வறட்டு கவுரவங்கள் நிறையவே இருக்கிறது....
ReplyDelete// மக்களின் உண்மையான நிலையை உலகிற்க்கு அறிவிக்க வேண்டும்.///
ReplyDeleteஅவர்களுக்கு அதுக்கெல்லாம் நேரம் ஏது பாஸ்
அழுத்தமான கருத்துக்களுடன் கட்டுரை.
ReplyDeleteநான் இந்தியாவில் ஏழை தான்
ReplyDeleteஇந்த நிலைமை என்றைக்கு மாறுகிறதோ அன்று தான் நம் நாடு 'உண்மையான' சுதந்திரம் அடைந்திருக்கிறது என்று மார்தட்டி சொல்லிக் கொள்ளலாம்.
ReplyDelete@பாலா
ReplyDeleteசரியாய் சொன்னீர்கள் பாலா
@பாலா
ReplyDeleteசரியாய் சொன்னீர்கள் பாலா
உண்மை தானே... உங்க கருத்து,.
ReplyDeleteபாவப்பட்ட ஜென்மம் இந்த poverty line!
ReplyDeleteஅரசால ஒரு கணக்கு கூட எடுக்க தெரியாதா ?
ReplyDeleteபொய்,முழுப்பொய்,புள்ளி விவரம்!
ReplyDelete(lies,damned lies and statistics)
நம்ம நாடு இப்டி இருக்க .... அடுத்த நாட்டுக்கு ஹெல்ப் பன்றங்கலம் ............ போங்கடா போங்கடா நாய்ஹல....நம்ம நாட்டு அரசியல் வாதிகளுக்கு ..... திருடாம இருக்க ஒரு பதிஉ போடுங்க சார் .........
ReplyDeleteநான் சொல்லலாம்னு நினைச்சத பாலா சொல்லிட்டாரு!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநோபல் பரிசு' புதிய கண்டுபிடிப்புகளுக்குக் கொடுக்கின்றனரா எனத் தெரியவில்லை. அப்படி கொடுக்கின்றனர் என்றால், அதை இந்தக் கண்டுபிடிப்புக்காக, நம் மத்திய அரசுக்குக் கொடுக்கலாம்.
ReplyDeleteநிச்சயம் மத்திய அரசுக்குத் தான் பரிசு. . . நம்ம பிரதமர்ர்ர். பொருளாதாரத்தில 24முனைவர் பட்டம் பெற்றவர். . . அப்ப நமக்குத்தானே....
அடுத்தவருடம் வறுமை கோட்டை இன்னும் கீழிரக்குவார்களோ?
ReplyDeleteஇந்த நிலைமை என்றைக்கு மாறுகிறதோ அன்று தான் நம் நாடு 'உண்மையான' சுதந்திரம் அடைந்திருக்கிறது என்று மார்தட்டி சொல்லிக் கொள்ளலாம்.
ReplyDeleteமத்திய அரசுக்கு என்னாச்சு? நல்லாத்தானே இருந்தாங்க?
ReplyDeleteஉண்மை சௌந்தர் - திட்டக் கமிசன் ஏதாவது இப்படித்தான் செய்யும் - புறந்தள்ளி விடுவாரகள் - ஒன்றும் நடவாது - நட்புடன் சீனா
ReplyDeleteவிழிப்புனர்வு கட்டுரைக்கு நன்றி நண்பா
ReplyDelete