கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

01 March, 2011

நீங்க எந்த மாதிரி ஆளு..


“என்ன... ஒரு மாதிரியா வர்றீங்க?”

நான் ஒரு பைத்தியம்.. என் வீட்டுக்காரி சொல்றா...!”
 
“எங்க வீட்டுலேயும் எனக்கு அப்படித்தான் பேரு..! அதுக்காக நான் கவலைப்படறேனா..? விட்டுத் தள்ளுங்க சார்.. வீட்டுக்கு வீடு இதெல்லாம் சகஜம்!”
 
“என்ன இப்படிச் சொல்றீங்க!”
 
“வேறே எப்படிச் சொல்லச் சொல்றீங்க..? உங்களுக்குத் தெரியுமா.. ஒரு புள்ளி விவரம்...?
 
“என்னது..!”
 
நம்ம நாட்டுலே 26 சதவீதம்பேர் மனநிலை பாதிப்புக்கு ஆளானவங்கத்தானாம்! பல்வேறு காரணங்களா‌லே இப்படி ஆயிடறாங்களாம்..!”
 
“யாரு சொல்றது இப்படி?”
 
இந்திய மனநல மருத்துவர்கள் சங்க மாநாட்டுலேயே இந்தக் கருத்தைத் தெரிவிச்சிருக்காங்க!”
 
“வேடிக்கையாத்தான் இருக்கு!”

“அது மட்டுமில்லே... அலெக்சாண்டர், ஹிட்லர், நெப்போலியன்,... இவங்கள்லாம்கூட ஒவ்வொரு கால கட்டத்துலே மனநிலை பிறழ்ந்தவங்களாதான் இருந்திருக்காங்க!”
 
“நீங்க சொல்றதெல்லாம் நியாயம்தான் சார்... ஆனாலும் நான் எப்பேர்ப்பட்ட ஆள்? எல்லா விஷயத்துலேயும் எவ்வளவு தெளிவா இருக்கிறவன்.. என்னைப்போய் இப்படிச் சொல்றாளே.. அதுதான் மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு!”
 
“அவங்க அப்படி சொல்ற அளவுக்கு நீங்க நடந்திருப்பீங்க...!”
 
“‌வேறே ஒண்ணுமில்லீங்க.. எனக்கு பச்சைக் கலர் செருப்புதான் வேணும்.. கருப்புக் கலர் செருப்பு வேணாம்னு சொன்னேன். அது ஒரு தப்பா..?”
 
“அதுலே ஒண்ணும் தப்பு இல்லையே... எனக்குக் கூடப் பச்சைக் கலர் செருப்புதான் பிடிக்கும்...!”
 
“பார்த்தீங்களா..! இப்ப சொல்லுங்க.. நீங்க எப்படி.. அதைப் பொரிச்சி சாப்பிடுவீங்களா? இல்லே வேகவச்சி சாப்பிடுவீங்களா?”
( நன்றி சுவாமிநாதன்)

உண்மைதாங்க... ஒவ்வொறு மனுஷனும் மனநிலை பாதிப்பாட்டவர்கள்  தான் ஆனா அவங்க அதை வெளிப்படுத்துகிற அ‌ளவை வைத்து அவர்களது நிலைமையை கணிக்கப்படுகிறது.. 

குழந்தை, குடிக்காரன், ஞானிகள், அதிகம் படித்தவர்கள். வாழ்க்கையை வெறுத்தவர்கள், அதிக தொந்தரவில் இருந்து வெளிப்பட்டவர்கள் எல்லாம் தன் மூளையின் உத்தரவுகளுக்கு கட்டுப்படுவதில்லை தான் நினைத்ததை செய்துக் கொண்டு இருப்பார்கள்..
 
சில சமயங்களில் சம மனநிலையில் இருப்பவர் கூட அவர் செய்யும் செயல், ‌வேலைகள் அவர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் நாமா இதைசெய்தது என்று எண்னி நகைப்பார்கள்..
இந்த மனநிலை மாற்றத்திற்கு முதல் காரணமாக அமைவது சமுகத்தோடு இந்த குடும்பமே. வறுமை..  வேலையின்மை, கடன் தொல்லை, உறவுகளின் தொல்லை, இயலாமை, இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் இதிலெல்லாம் ஒரு மனிதான் தாக்கு பிடித்து வாழ பழகிக் கொள்ள வேண்டும். எந்த நேரத்திலும் மனதளவில் பலவினமான நாம் நடக்க தொடங்கினாலும் அது ந‌மக்கே ஆபத்தாக அமைந்து விடும்

வாழ்க்கை மிகப் பெரியது.. அதில் சுயநினவோடும், சகிப்புத்தன்மையோடு வாழப்பழகுவோம்.. அப்போது இந்த உலகம் நமக்கு கம்பளம் விரிக்கும்..


இறுதியாய் ஒரு நகைச்சுவை துணுக்கு :
 

“ரஷிய அதிபராக இருந்த புதின் ஒருமுறை, மனநல மருத்துவமனைக்கு விஜயம் செய்தார். ஒரு மன நோயாளி “நீங்கள் யார்?” என்று கேட்டான்.
 

அதற்கு புதின் “நான்தான் இந்த நாட்டின் அதிபர்” என்றார்.
 

உடனே அந்த மனநோயாளி சொன்னான். “இதைத்தான் நானும் ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கேன். என்னையப் புடிச்சி இங்கே போட்டுடாங்க. நீங்களாவது வாயை வச்சிக்கிட்டு சும்மா இருங்க” என்றான்.

இதை கேட்ட புதினுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் அசடு வழிந்தாராம்.
 


நண்பர்களே ஏதோ என் அறிவுக்கு எட்டிய அளவுக்கு கருத்து சொல்லிட்டேன் இது சரியா? தவறா? நீங்கதான் சொல்லனும்.
தவறிறுந்தால் சுட்டிக் காட்டுங்கள்.. தங்கள் வருகைக்கு நன்றி..

இந்த பதிவுலகம் தரமான பதிவுகளுக்கு ஆதரவு தரும் என்று நம்புகிறேன்..

56 comments:

  1. //அலெக்சாண்டர், ஹிட்லர், நெப்போலியன்,... இவங்கள்லாம்கூட ஒவ்வொரு கால கட்டத்துலே மனநிலை பிறழ்ந்தவங்களாதான் இருந்திருக்காங்க!”
    //
    ஏலே உண்மையாலே??

    ReplyDelete
  2. //உடனே அந்த மனநோயாளி சொன்னான். “இதைத்தான் நானும் ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கேன். என்னையப் புடிச்சி இங்கே போட்டுடாங்க. நீங்களாவது வாயை வச்சிக்கிட்டு சும்மா இருங்க” என்றான்.//
    ஹிஹிஹீஹி

    ReplyDelete
  3. என்னய்யா திரட்டிகள் இணைக்கப்படவில்லையா?

    ReplyDelete
  4. நகைசுவையாய் ஒரு நயமான பதிவு.

    ReplyDelete
  5. Depression - Stress - Panic - Anxiety என்று ஏதாவது ஒரு விதத்தில் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டு இருப்பதாகத்தான் நானும் வாசித்து இருக்கிறேன்.
    நல்ல பதிவுங்க. நிறைய எழுதுங்க.

    ReplyDelete
  6. கலக்கல் நண்பரே

    இந்த விஷயம் ஒரு டபுள் ஆக்ட் மாதிரி நம்ம கூடவே இருக்கும் எப்போ ஏன்னா பண்ணும்னு தெரியாது ஹி ஹி!!

    ReplyDelete
  7. தென்கச்சி சாமிநாதன் அய்யாவின் கருத்துக்களோடு உங்களின் கருத்துக்களும் அருமை

    எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு
    கலைஞரின் பேச்சும் எடக்கு மடக்கான எனது கேள்விகளும்

    ReplyDelete
  8. நல்ல பதிவு தொடர்ந்து இம்மாதிரி எதிர்பார்க்கிறேன் ...........

    ReplyDelete
  9. கலக்கிட்டீங்க நண்பரே...

    ReplyDelete
  10. //சில சமயங்களில் சம மனநிலையில் இருப்பவர் கூட அவர் செய்யும் செயல், ‌வேலைகள் அவர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் நாமா இதைசெய்தது என்று எண்னி நகைப்பார்கள்..//
    மிகச்சரி!
    நன்று!

    ReplyDelete
  11. //இந்த மனநிலை மாற்றத்திற்கு முதல் காரணமாக அமைவது சமுகத்தோடு இந்த குடும்பமே. வறுமை.. வேலையின்மை, கடன் தொல்லை, உறவுகளின் தொல்லை, இயலாமை, இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் இதிலெல்லாம் ஒரு மனிதான் தாக்கு பிடித்து வாழ பழகிக் கொள்ள வேண்டும்//


    100 சதவிகிதம் உண்மை.

    ReplyDelete
  12. நண்பரே இன்னும் கொஞ்ச நாள்ல எனக்கு முத்திடும்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  13. ////இந்த மனநிலை மாற்றத்திற்கு முதல் காரணமாக அமைவது சமுகத்தோடு இந்த குடும்பமே. வறுமை.. வேலையின்மை, கடன் தொல்லை, உறவுகளின் தொல்லை, இயலாமை, இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் இதிலெல்லாம் ஒரு மனிதான் தாக்கு பிடித்து வாழ பழகிக் கொள்ள வேண்டும்//

    உண்மைதான் இதுதான் வாழ்க்கை

    ReplyDelete
  14. //“பார்த்தீங்களா..! இப்ப சொல்லுங்க.. நீங்க எப்படி.. அதைப் பொரிச்சி சாப்பிடுவீங்களா? இல்லே வேகவச்சி சாப்பிடுவீங்களா//

    ஹா ஹா ஹா ஹா ஹா டாப்பே.....

    ReplyDelete
  15. // “இதைத்தான் நானும் ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கேன். என்னையப் புடிச்சி இங்கே போட்டுடாங்க. நீங்களாவது வாயை வச்சிக்கிட்டு சும்மா இருங்க” என்றான்.//

    ஹா ஹா ஹா ஹா ரிப்பீட்டே.....

    ReplyDelete
  16. /////
    மைந்தன் சிவா said... [Reply to comment]

    வடை
    /////

    தங்கள் வருகைக்கு நன்றி சிவா...

    ReplyDelete
  17. ////மைந்தன் சிவா said... [Reply to comment]

    //அலெக்சாண்டர், ஹிட்லர், நெப்போலியன்,... இவங்கள்லாம்கூட ஒவ்வொரு கால கட்டத்துலே மனநிலை பிறழ்ந்தவங்களாதான் இருந்திருக்காங்க!”
    //
    ஏலே உண்மையாலே??
    ////

    உண்மைதாங்க.. உலகையே தன் வசப்படுத்த வேண்டும் எனபது என்ன ஆசையா.?

    ReplyDelete
  18. மைந்தன் சிவா said... [Reply to comment]

    //உடனே அந்த மனநோயாளி சொன்னான். “இதைத்தான் நானும் ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கேன். என்னையப் புடிச்சி இங்கே போட்டுடாங்க. நீங்களாவது வாயை வச்சிக்கிட்டு சும்மா இருங்க” என்றான்.//
    ஹிஹிஹீஹி
    ////

    தொடர்ந்து வாருங்கள்..

    ReplyDelete
  19. ///
    தமிழ் உதயம் said... [Reply to comment]

    நகைசுவையாய் ஒரு நயமான பதிவு.
    ////

    நன்றி..

    ReplyDelete
  20. ///Chitra said... [Reply to comment]

    Depression - Stress - Panic - Anxiety என்று ஏதாவது ஒரு விதத்தில் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டு இருப்பதாகத்தான் நானும் வாசித்து இருக்கிறேன்.
    நல்ல பதிவுங்க. நிறைய எழுதுங்க.
    /////

    தங்கள் ஆதரவுக்கு நன்றி..

    ReplyDelete
  21. /////
    விக்கி உலகம் said... [Reply to comment]

    கலக்கல் நண்பரே

    இந்த விஷயம் ஒரு டபுள் ஆக்ட் மாதிரி நம்ம கூடவே இருக்கும் எப்போ ஏன்னா பண்ணும்னு தெரியாது ஹி ஹி!!
    ////

    நன்றி விக்கி

    ReplyDelete
  22. ரஹீம் கஸாலி said... [Reply to comment]

    தென்கச்சி சாமிநாதன் அய்யாவின் கருத்துக்களோடு உங்களின் கருத்துக்களும் அருமை

    எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு
    கலைஞரின் பேச்சும் எடக்கு மடக்கான எனது கேள்விகளும்


    உங்களுக்கும் வந்தாச்சி ஓட்டும் போட்டாச்சி...

    ReplyDelete
  23. சொல்லுவது உண்மையாதான் இருக்கும் சிலருக்கு வெளியில தெரியாது....
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  24. The difference is between balance and imbalance in MENTAL EQUILIBRIUM.
    balance-normal person
    (im)balance-(ab)normal(mental) person......if "im" and "ab" hide means normal person,if "im" and "ab" visible means abnormal(mental) person.
    உங்கள் கவிதைகளின் கற்பனை அருமை...வாழ்த்துகள் திரு.சௌந்தர்.

    ReplyDelete
  25. //( நன்றி சுவாமிநாதன்)//



    தென்கச்சியார் தானே?

    ReplyDelete
  26. அஞ்சா சிங்கம் said... [Reply to comment]

    நல்ல பதிவு தொடர்ந்து இம்மாதிரி எதிர்பார்க்கிறேன் ...........

    //////
    கண்டிப்பாக..

    ReplyDelete
  27. சங்கவி said... [Reply to comment]

    Good Information...
    /////

    நன்றி சங்கவி..

    ReplyDelete
  28. வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]

    கலக்கிட்டீங்க நண்பரே...
    ////

    நன்றி நண்பரே..

    ReplyDelete
  29. ஜாலியான விஷயங்களின் தொகுப்பு..

    ReplyDelete
  30. சென்னை பித்தன் said... [Reply to comment]

    //சில சமயங்களில் சம மனநிலையில் இருப்பவர் கூட அவர் செய்யும் செயல், ‌வேலைகள் அவர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் நாமா இதைசெய்தது என்று எண்னி நகைப்பார்கள்..//
    மிகச்சரி!
    நன்று!
    /////

    நன்றி தல..

    ReplyDelete
  31. தமிழ் 007 said... [Reply to comment]

    //இந்த மனநிலை மாற்றத்திற்கு முதல் காரணமாக அமைவது சமுகத்தோடு இந்த குடும்பமே. வறுமை.. வேலையின்மை, கடன் தொல்லை, உறவுகளின் தொல்லை, இயலாமை, இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் இதிலெல்லாம் ஒரு மனிதான் தாக்கு பிடித்து வாழ பழகிக் கொள்ள வேண்டும்//


    100 சதவிகிதம் உண்மை.


    நன்றி..

    ReplyDelete
  32. உங்கள் மாணவர்கள் அனைவரும் வரும் பொதுத்தேர்வில் சாதனை படைக்க இறைவனை வேண்டுகிறேன்..

    ReplyDelete
  33. /////
    Speed Master said... [Reply to comment]

    ////இந்த மனநிலை மாற்றத்திற்கு முதல் காரணமாக அமைவது சமுகத்தோடு இந்த குடும்பமே. வறுமை.. வேலையின்மை, கடன் தொல்லை, உறவுகளின் தொல்லை, இயலாமை, இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் இதிலெல்லாம் ஒரு மனிதான் தாக்கு பிடித்து வாழ பழகிக் கொள்ள வேண்டும்//

    உண்மைதான் இதுதான் வாழ்க்கை
    /////

    ஆம்.. இதுதான் வாழ்க்கை..

    ReplyDelete
  34. //////
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    //“பார்த்தீங்களா..! இப்ப சொல்லுங்க.. நீங்க எப்படி.. அதைப் பொரிச்சி சாப்பிடுவீங்களா? இல்லே வேகவச்சி சாப்பிடுவீங்களா//

    ஹா ஹா ஹா ஹா ஹா டாப்பே.....
    ///

    நன்றி சார்..

    ReplyDelete
  35. //////
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    // “இதைத்தான் நானும் ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கேன். என்னையப் புடிச்சி இங்கே போட்டுடாங்க. நீங்களாவது வாயை வச்சிக்கிட்டு சும்மா இருங்க” என்றான்.//

    ஹா ஹா ஹா ஹா ரிப்பீட்டே.....
    /////

    மறுபடியும் நன்றிஙக...

    ReplyDelete
  36. ////
    தமிழ் 007 said... [Reply to comment]

    நண்பரே இன்னும் கொஞ்ச நாள்ல எனக்கு முத்திடும்னு நினைக்கிறேன்.
    ///

    முத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  37. VELU.G said... [Reply to comment]

    நல்ல பதிவு

    தொடர்ந்து வாங்க..

    ReplyDelete
  38. சி.கருணாகரசு said... [Reply to comment]

    சொல்லுவது உண்மையாதான் இருக்கும் சிலருக்கு வெளியில தெரியாது....
    பகிர்வுக்கு நன்றி.


    நன்றி..

    ReplyDelete
  39. ///
    சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

    ஹா ஹா செம ..
    ////

    ஏதாவது நல்லதா சொல்லிட்டு போங்க சார்..

    ReplyDelete
  40. siva said... [Reply to comment]

    The difference is between balance and imbalance in MENTAL EQUILIBRIUM.
    balance-normal person
    (im)balance-(ab)normal(mental) person......if "im" and "ab" hide means normal person,if "im" and "ab" visible means abnormal(mental) person.
    உங்கள் கவிதைகளின் கற்பனை அருமை...வாழ்த்துகள் திரு.சௌந்தர்.



    நன்றி.. தொடர்ந்து வாங்க..

    ReplyDelete
  41. FOOD said... [Reply to comment]

    நல்ல அலசல். தொடருங்கள்.


    நன்றி சார்..

    ReplyDelete
  42. பாரத்... பாரதி... said... [Reply to comment]

    //( நன்றி சுவாமிநாதன்)//




    கண்டிப்பா அவரேதான்...

    ReplyDelete
  43. பாரத்... பாரதி... said... [Reply to comment]

    உங்கள் மாணவர்கள் அனைவரும் வரும் பொதுத்தேர்வில் சாதனை படைக்க இறைவனை வேண்டுகிறேன்..


    நன்றி..

    ReplyDelete
  44. நீங்க பொரிச்சு சாப்பிடுவீங்களா? வேகவைத்து சாப்பிடுவீங்களா? ஐயோ, தாங்கலீங்க.

    ReplyDelete
  45. சௌந்தர்...ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமான பைத்தியங்கள்தான்.சொன்ன விதம் அழகு !

    ReplyDelete
  46. கார்டூனில் உள்ள ஆளின் உருவத்தைப் பார்த்தால் இன்னும் முப்பது அடி வளைந்தால்தான் சரியாக இருக்கும் போல் தோன்றுகிறது. ஹா,,,ஹா....ஹா....ஹா....ஹா....

    ReplyDelete
  47. கார்டூனில் உள்ள ஆளின் உருவத்தைப் பார்த்தால் இன்னும் முப்பது அடி வளர்ந்தால்தான் Height-Weight Ratio சரியாக இருக்கும் போல் தோன்றுகிறது. ஹா,,,ஹா....ஹா....ஹா....ஹா....

    ReplyDelete
  48. \\“இந்திய மனநல மருத்துவர்கள் சங்க மாநாட்டுலேயே இந்தக் கருத்தைத் தெரிவிச்சிருக்காங்க!”\\ இதைச் சொன்னவருக்கு மனநிலை சரியா இருந்துச்சா? #டவுட்டு. ஹி...ஹி...ஹி...

    ReplyDelete
  49. \\அலெக்சாண்டர், ஹிட்லர், நெப்போலியன்,... இவங்கள்லாம்கூட ஒவ்வொரு கால கட்டத்துலே மனநிலை பிறழ்ந்தவங்களாதான் இருந்திருக்காங்க!”\\ சாகும் வரை அப்படியே தான் இருந்திருப்பானுங்க. ஏதோ கொஞ்சம் நிலத்தை வளைச்சுப் போட்டு அந்த சனத்த மட்டும் சந்தோஷமா காப்பாதுவோம்னு இல்லாம, சதா சண்டை சண்டைன்னு இருக்கும் சனத்தையும் காலி பண்ணிய காலிப் பயல்கள், சாகும் வரை அப்படியேதான் இருந்தானுங்க, போகும் போது எதைக் கொண்டு போனானுங்க?

    ReplyDelete
  50. \\எந்த நேரத்திலும் மனதளவில் பலவினமான நாம் நடக்க தொடங்கினாலும் அது ந‌மக்கே ஆபத்தாக அமைந்து விடும்.\\ Thanks.

    ReplyDelete
  51. Lakshmi said... [Reply to comment]

    நீங்க பொரிச்சு சாப்பிடுவீங்களா? வேகவைத்து சாப்பிடுவீங்களா? ஐயோ, தாங்கலீங்க.
    ///////

    எல்லாம் அப்படிததான்...

    ReplyDelete
  52. //////

    ஹேமா said... [Reply to comment]

    சௌந்தர்...ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமான பைத்தியங்கள்தான்.சொன்ன விதம் அழகு !
    ////

    நன்றி Hema /////////

    ReplyDelete
  53. //

    Jayadev Das said... [Reply to comment]

    கார்டூனில் உள்ள ஆளின் உருவத்தைப் பார்த்தால் இன்னும் முப்பது அடி வளைந்தால்தான் சரியாக இருக்கும் போல் தோன்றுகிறது. ஹா,,,ஹா....ஹா....ஹா....ஹா....
    //

    தங்கள் அனைத்து கமாண்டுக்கும் நன்றி..

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...