கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

27 May, 2011

அ.தி.மு.க. எங்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் - விஜயகாந்த் போட்டி


சபாநாயகர் ஜெயக்குமார் ஆளுங்கட்சியிலும் இருந்துள்ளார், எதிர்க்கட்சியிலும் இருந்துள்ளார். எனவே இரு கட்சிகளிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது அவருக்கு நன்கு தெரியும் என்று கூறியுள்ளார் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்.

எந்தவித போட்டியும் இல்லாமல் ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டதில் இருந்தே சபாநாயகர் பதவிக்கு தாங்கள் பொருத்தமானவர் என்பது தெளிவாகி விட்டது. சபாநாயகர் பட்டப்படிப்பும், சட்டமும் படித்தவர். ஆளும் கட்சியில் அமைச்சராகவும், எதிர்க்கட்சி வரிசையிலும் பணியாற்றி உள்ளார். எனவே ஆளும் கட்சியான அ.தி.மு.க. எதிர்க்கட்சியான எங்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர்.

தங்களுக்கு தே.மு.தி.க. முழு ஒத்துழைப்பை வழங்கும். மக்களுடைய மிகப் பெரிய ஆதரவுடன் 3-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சி தலைவிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள சபாநாயகர், துணை சபாநாயகருக்கும் எனது வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் விஜயகாந்த்.

ஓ.பன்னீர்செல்வம்

அவை முன்னவரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், தமிழக மக்களின் பேராதரவை பெற்று 3-வது முறையாக முதல்வர் அம்மா பொறுப்பு ஏற்று உள்ளார். வரலாற்று பெருமை மிக்க இந்த சபையின் தலைவராக தாங்களும், துணை சபாநாயகராக தனபாலும் அவையில் பதவி ஏற்கும் வாய்ப்பை அம்மா வழங்கி உள்ளார்.

பாராளுமன்ற சட்டமன்ற மரபை மதிக்கும் வகையில் இந்த மாமன்றத்தில் தலைவராகும் தகுதி உங்களுக்கு உள்ளது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபாடு இல்லாமல் அணைவரையும் சமமாக நடத்தும் பண்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் நீங்கள் பணியாற்றி இந்த அவைக்கு பெருமை சேர்க்க வேண்டும். அதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

42 comments:

 1. எனவே இரு கட்சிகளிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது அவருக்கு நன்கு தெரியும் என்று கூறியுள்ளார் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த். ::::::

  கேப்டனின் புரட்சி ஆரம்பிச்சாச்சா?

  ReplyDelete
 2. கலைகட்டட்டும்

  ReplyDelete
 3. //ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபாடு இல்லாமல் அணைவரையும் சமமாக நடத்தும் பண்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் நீங்கள் பணியாற்றி //
  கேக்க நல்லாத்தான் இருக்கு!

  ReplyDelete
 4. நல்ல தொடக்கமாகவே தெரிகிறது
  நம் மாநில நலனில் அக்கறை கொண்டு அனைவரும் ஒன்றாய் செயல் படவேண்டும்

  ReplyDelete
 5. ஆஹா.... கலகட்ட ஆரம்பிச்சுருச்சா.....கேப்டன் அதிரடிய ஆரம்பிக்கப்போறாரா?....நடக்கட்டும் நடக்கட்டும்.

  ReplyDelete
 6. ////
  ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... [Reply to comment]

  எனவே இரு கட்சிகளிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது அவருக்கு நன்கு தெரியும் என்று கூறியுள்ளார் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த். ::::::

  கேப்டனின் புரட்சி ஆரம்பிச்சாச்சா?
  /////

  ஆமாம்...

  ReplyDelete
 7. களை கட்ட ஆரம்பிச்சிடுச்சி...

  ReplyDelete
 8. ////
  Speed Master said... [Reply to comment]

  கலைகட்டட்டும்
  ////

  வாங்க மாஸ்டர்

  ReplyDelete
 9. ////
  சென்னை பித்தன் said... [Reply to comment]

  //ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபாடு இல்லாமல் அணைவரையும் சமமாக நடத்தும் பண்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் நீங்கள் பணியாற்றி //
  கேக்க நல்லாத்தான் இருக்கு!
  //////

  இது போல் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்...
  உண்மைதான்

  ReplyDelete
 10. பாக்கலாம் ......

  ReplyDelete
 11. யோவ் அடிச்சி சொல்றேன், எழுதி வச்சிக்குங்க, அடுத்த முதல்வர் விஜயகாந்த்'த்தான்....!!!

  ReplyDelete
 12. MANO நாஞ்சில் மனோ said
  //யோவ் அடிச்சி சொல்றேன், எழுதி வச்சிக்குங்க, அடுத்த முதல்வர் விஜயகாந்த்'த்தான்....!!!//

  ஐய்யய்ய்யோ...... ஏன் சகோதரர் இப்படி எல்லோரையும் இப்போ இருந்தே பயமுறுத்துகிறார். எங்களைப் பார்த்தால் பாவமா இல்லையா????

  ReplyDelete
 13. ////
  A.R.ராஜகோபாலன் said... [Reply to comment]

  நல்ல தொடக்கமாகவே தெரிகிறது
  நம் மாநில நலனில் அக்கறை கொண்டு அனைவரும் ஒன்றாய் செயல் படவேண்டும்
  ////

  எதிர்ப்பார்ப்போம்....

  ReplyDelete
 14. ////
  கடம்பவன குயில் said... [Reply to comment]

  ஆஹா.... கலகட்ட ஆரம்பிச்சுருச்சா.....கேப்டன் அதிரடிய ஆரம்பிக்கப்போறாரா?....நடக்கட்டும் நடக்கட்டும்.
  ////

  கேப்டன் அதிரடி எடுபடுமா..
  பொருத்திருந்து பார்ப்போம்...

  ReplyDelete
 15. -///
  துரைராஜ் said... [Reply to comment]

  களை கட்ட ஆரம்பிச்சிடுச்சி...
  ////////

  ஆமாம் நண்பரே...
  பொருத்திருந்து பார்ப்போம்...

  ReplyDelete
 16. ///
  koodal bala said... [Reply to comment]

  பாக்கலாம் ......
  ////

  நானும் பார்க்கிறேன்...

  ReplyDelete
 17. ////
  MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

  யோவ் அடிச்சி சொல்றேன், எழுதி வச்சிக்குங்க, அடுத்த முதல்வர் விஜயகாந்த்'த்தான்....!!!
  /////

  உண்மை..

  ReplyDelete
 18. புரட்சி கலைஞர் கடைசியாக புரட்சி தலைவி என்று சொல்லிவிட்டாரா?

  ReplyDelete
 19. அடிச்சு ஆட ஆரம்பிச்சுட்டார் விஜய காந்த்

  ReplyDelete
 20. வந்துட்டேன்லே வந்துட்டேன்லே...

  ReplyDelete
 21. கவிதை வீதியில் அராசியலா??

  ReplyDelete
 22. எதிர்கட்ட்சியாய் என்ன பன்னுரார்னு பார்ப்போம்...
  நான் இனிமேல் இரவு தான் நடமாடுவேன் பாஸ்...என்றாலும் வழமை போல சேதாரம் இருக்கும்!!

  ReplyDelete
 23. //வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் விஜயகாந்த்//

  கேப்டன் அரசியல்ல பார்ம்க்கு வராப்பல இருக்கு :)

  //தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள //

  கேப்டன் , எந்த அரசு அமைஞ்சாலும் (திமுக, அதிமுக) சபாநாயகர் எல்லாம் தேர்ந்து எடுக்கறதில்லை .. ஒன்லி நியமனம் தான்.. !

  POEM STREET - அதெப்படிங்க நீங்க பதிவு போட்டா மட்டும் நாலு மணி நேரத்துல கருத்து வந்து குவியுது.. கொஞ்சம் சொல்லிகொடுங்களேன்

  ReplyDelete
 24. அரசியல் பதிவு. அப்பீட்

  ReplyDelete
 25. கேப்டன் கலக்க ஆரம்பிச்சிட்டாரு... நடத்துங்க கேப்டன்

  ReplyDelete
 26. கேப்டனிடம் தெனாவட்டாக பேச நினைப்பவர்கள் ஜாக்கிரதை!

  ReplyDelete
 27. ஓஹோ..ஆப்பு கண்ணுக்கு தெரிய ஆரம்பிக்குது ஹிஹி!

  ReplyDelete
 28. விஜயகாந்தின் இம் முயற்சி வரவேற்கத்தக்கது. கப்டனின் உரை, இப்போது தேர்ந்த ஒரு அரசியல்வாதியின் உரையினைப் போல உள்ளது.அவருடைய வளமான எதிர்காலம் எப்படி அமையவுள்ளது என்பதனைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும், பகிர்விற்கு நன்றிகள் தல.

  ReplyDelete
 29. ////
  NKS.ஹாஜா மைதீன் said... [Reply to comment]

  புரட்சி கலைஞர் கடைசியாக புரட்சி தலைவி என்று சொல்லிவிட்டாரா?
  /////

  அதுதாங்க அரசியல்..

  ReplyDelete
 30. ////
  தமிழ்வாசி - Prakash said... [Reply to comment]

  அடிச்சு ஆட ஆரம்பிச்சுட்டார் விஜய காந்த்
  ///////

  ஆமாம்...

  ReplyDelete
 31. /////
  மைந்தன் சிவா said... [Reply to comment]

  கவிதை வீதியில் அராசியலா??
  ////

  ஏதோ நம்மலால முடிஞ்சது..

  ReplyDelete
 32. ////
  மைந்தன் சிவா said... [Reply to comment]

  எதிர்கட்ட்சியாய் என்ன பன்னுரார்னு பார்ப்போம்...
  நான் இனிமேல் இரவு தான் நடமாடுவேன் பாஸ்...என்றாலும் வழமை போல சேதாரம் இருக்கும்!!
  /////

  பரவாயில்ல மாப்ள...
  நீ எப்ப வந்தாலும் சரிதான்...

  ReplyDelete
 33. @வேலவன்

  1கண்டிப்பாக பார்ம்க்கு வருவார்ன்னு நினைக்கிறேன்...

  2) நண்பரே சட்டசபையில் பெரும்பான்மை இருக்கும் பட்சத்தில்தான் நியமனம் நடைபெறும். அப்படி இல்லாத படசத்தில் தேர்தல்தான் நடைபெறும்..
  இது கூட நியமனம் அல்ல யாரும் போட்டிக்கு வரராதால் அவரே சபாநாகராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்..

  3) அதுக்கு தீயாய் உழைக்கனும்
  எல்லோருடைய தளங்களுக்கு சென்று பதிவுகளை படித்து கருத்திடுங்கள் கண்டிப்பாக நண்பர்கள் வட்டம் ுபெருகிவிட்டால் எல்லோரும் தங்கள் தளத்திற்கும் அதிக பின்னூட்டங்கள் கிடைக்கும்..

  நன்றி நண்பரே..

  ReplyDelete
 34. ////
  FOOD said... [Reply to comment]

  அரசியல் பதிவு. அப்பீட்
  /////

  என்ன ரீபிட்டு...

  ReplyDelete
 35. ////
  சிவலோகநாதன் நிறூஜ் said... [Reply to comment]

  கேப்டன் கலக்க ஆரம்பிச்சிட்டாரு... நடத்துங்க கேப்டன்
  ////

  ம்...

  ReplyDelete
 36. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சி தலைவிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 37. அடுத்த தேர்தலில் திமுகாவுடன் கூட்டணி உறுதி, பொறுத்திருந்து பாருங்கள்

  ReplyDelete
 38. எச்சரிக்கை குடுகிறாரோ எதிர் கட்சி தலைவர் !!?? டவுட்

  ReplyDelete
 39. ///
  இராஜராஜேஸ்வரி said... [Reply to comment]

  அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சி தலைவிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
  /////

  சரிங்க..

  ReplyDelete
 40. /////////
  ஷர்புதீன் said... [Reply to comment]

  அடுத்த தேர்தலில் திமுகாவுடன் கூட்டணி உறுதி, பொறுத்திருந்து பாருங்கள்
  ////////


  பார்ப்போம்..

  ReplyDelete
 41. //////
  ஜ.ரா.ரமேஷ் பாபு said... [Reply to comment]

  எச்சரிக்கை குடுகிறாரோ எதிர் கட்சி தலைவர் !!?? டவுட்
  ///////
  ஆமாம்...

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...