கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

09 August, 2012

வீடுதிரும்பல் மோகன் குமாரும், ஆவேசமடைந்த தாய்குலமும்...!அன்பார்ந்த பதிவுலக நண்பர்களுக்கு... வணக்கம்...!
கவிதைவீதியை பெருமைப்படுத்தும் விதமாக 500 பாளோயர்ஸ் இணைந்துள்ளனர். இம்மகிழ்ச்சி தருணத்தை தங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன்...


கவிதைவீதியில் 500-வது பதிவராக வந்தமைக்கு மரியாதைக்குரிய நண்பர்

 திரு. வீடுதிரும்பல் மோகன் குமார் அவர்களுக்கும்... 

கவிதை வீதியில் குடியேறியிருக்கும் 499 அன்புள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

 நண்பர் திடம்கொண்டு போராடு சீனு அவர்களுக்கும்... அவர் (என்வலைதளத்தின் 499-வது விருந்தினர்...)


அதற்கு அடுதது பாயோயர் 501 என அடுத்த கணக்கை துவக்கி வைத்துள்ள
அவர்கள் உண்மைகள் குழுவிற்கும் எனது நன்றிகள்...! தங்களின் எதிர்பார்ப்பையும்,  நம்பிக்கையும் நான் என்றும் மறந்திடமாட்டேன். தங்களின் ஆதரவுக்கு என்றும் என் நன்றிகள்...!

*******************************************

ஒரு வரலாற்று சம்பவம்...

தேச பக்தர் திருக்கூடசுந்தரம் பிள்ளை விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட காரணத்தால் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

திருக்கூடசுந்தரத்தின் நண்பரான யக்ஞேசுவர சர்மாவுக்கு திருக்கூடசுந்தரம் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்தது. திருக்கூடசுந்தரத்தின் வயது முதிர்ந்த அன்னை கவலைப்படகூடும் என்று எண்ணிய அவர், திருநெல்வேலி சிந்துபூந்துறையில் வசிக்கும் திருக்கூடசுந்தரத்தின் தாயாரைச் சென்று சந்தித்தார்.

உண்மையில் அம்மையாருக்கு யக்ஞேசுவர சர்மா ஆறுதல் கூறினார். “இதைப் பற்றிப் பெரிதாக கவலைப் படாதீர்கள். இனிமேல் அரசியலில் பங்கேற்க மாட்டேன் என்று திருக்கூடசுந்தரம் எழுதிக் கொடுத்துவிட்டால் அவரை விடுதலை செய்துவிடுவார்கள்” என்றார் சர்மா.

அந்த பதிலைக் கேட்ட திருக்கூடசுந்தரத்தின் தாயார் ஆவேசமடைந்தார். ”மன்னிப்பு எழுதிக் கொடுத்துவிட்டு கோழையாகத் திரும்பி வருவதற்கா என் மகன் சிறைக்குச் சென்றான்.? என்ன பேச்சுப் பேசுகிறீர்கள்? மறந்தும் கூட இந்த மாதிரியான பைத்தியக்காரத்தனமான யோசனைகளை என் மகனைச் சந்தித்தால் சொல்லிவிடாதீர்கள்..! இந்த ‌மாதிரியான யோசனையை அவன் காதில் கூட போட்டுக் கொள்ள மாட்டான்” என்றார்.

திகைப்பினாலும், வியப்பினாலும் யக்ஞேசுவர சர்மா செயலற்று நின்றுவிட்டார்.


*******************************************
ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.....

அன்புடன்..
கவிதைவீதி செளந்தர்..
திருவள்ளூர்.
9042235550  9443432105

28 comments:

 1. ஏற்கனவே நம்ம மேல கோபத்தில நிறைய பேர் இருக்காங்க. இதுல நம்ம பேருல ஒரு போஸ்ட்டா !!

  வாழ்த்துக்கள் சௌந்தர் அடிச்சு ஆடுங்க !

  ReplyDelete
 2. ஆயிரம் ஆயிரமாய் தொடர்பவர்கள் தொடரவும்
  தொடர்ந்து தரமான பதிவுகள் தரவும்
  மனப் பூர்வமான நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. வாழ்த்துகள் போலிஸ் ஆபிசர் ... நீங்க தொடர்ந்து கலக்குங்கள்

  ReplyDelete
 5. வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதோடு மட்டுமில்லாமல் உங்கள் வீதியிலும் என்னை அறிமுகம் செய்து வைத்த உங்களுக்கு கோடி நன்றிகள் என்றால், திடங்கொண்டு போராடி புத்தகம் பெரும் வாய்ப்பை பெற்றுத் தந்த அண்ணன் மோகன் குமார் அவர்களுக்கு கோட்டான கோடி நன்றிகள் சார் கோட்டான கோடி நன்றிகள்....

  ReplyDelete
 6. அவ்வளவாக அறிமுகம் இல்லாத சுதந்திரப் போராட்ட வீரரை அறிந்து கொண்டேன்.நன்றி சௌந்தர். தொடர்க.

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் பாஸ்

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் சைவுந்தர்.. போட்டுத்தாக்குங்க...

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் சௌந்தர் அடிச்சு ஆடுங்க !-நன்றி மோகன்குமார்.

  ReplyDelete
 10. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தலைவரே...
  நன்றி… (TM 9)

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் நண்பரே..

  ReplyDelete
 12. வாழ்த்துகள்.. எங்க பாஸ் நம்ப பக்கம் ஆளையே காணோம்?

  ReplyDelete
 13. வர வர தலைப்பெல்லாம் ஒரு மார்க்கமாவே இருக்கே!
  வாழ்த்துகள் சௌந்தர்

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள்! ஆயிரமாகட்டும் கவிதை வீதி களைகட்டும் சா இராமாநுசம்

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள் சார்.......

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள் நண்பா!
  இன்று என் தளத்தில்
  ஒண்ணொன்னு .. ஒண்ணொன்னு வேணும்!
  http://thalirssb.blogspot.in

  ReplyDelete
 17. ஐநூறு பேரும் உங்கள் பதிவுகளின் அருமை தெரிந்தவர்கள். உங்களை வாழ்த்துவதோடு அவர்களையும் வாழ்த்துகிறேன்.
  மனமுவந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 18. வாழ்த்துகள் போலீஸ்...!

  ReplyDelete
 19. வணக்கம் ,
  உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
  நன்றி.
  www.thiraddu.com

  ReplyDelete
 20. நீங்க நடத்துங்க... - போட்டு தாக்கு

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள் சௌந்தர்

  ReplyDelete
 22. வாழ்த்துக்கள் ஆசிரியரே.

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...