கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label பதிவுலகம். Show all posts
Showing posts with label பதிவுலகம். Show all posts

19 July, 2014

உங்களின் ஆசீர்வாதத்தையும்... வாழ்த்தையும் வேண்டி...

அன்பார்ந்த பதிவுலக  நண்பர்களுக்கும்.. வாசக பெருமக்களுக்கும் என் இனிய வணக்கங்கள்...

கடந்த 04-07-2014 அன்று என்னுடைய திருமணம் திருவள்ளூர் நகரில் நடந்தேறியது.

மிக குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதால் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கு
ம் திருமண நிகழ்வை சொல்ல முடியாமல் போயிற்று... அதற்காக அனைவரிடமும் நான் மன்னி்ப்பு கேட்டுக்கொள்கிறேன்...

தற்போது உங்களுடைய ஆசீர்வாதங்களையும்... வாழ்த்துக்களையும்
வேண்டி நிற்கிறேன்...!






நேரில் வந்து வாழ்த்திய ஆபிஷர் மற்றும் 
வேடந்தாங்கல் கருண் குடும்பத்தினர்...


உங்கள் ஆசீர்வாதம் எங்களை பல்லாண்டுகாலம் வாழவைக்கும்...!

31 December, 2013

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது...


இனிய பதிவுலக நண்பர்களுக்கும்...
வாசக பெருமக்களுக்கும்...
என் கனிவான 
புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.....

2014-ல் நீங்கள் எல்லா வளமும்
எல்லா புகழும் பெற்று
இன்று போல் என்று வாழ்க 
என வாழ்த்துகிறேன்... 

07 September, 2013

மன்னிக்கனும் தலைவா..! என் விமர்சனத்தை திரும்பப்பெறுகிறேன்...!


கடந்த மாதம் ரம்ஸான் அன்று (09-08-2013) விஜய் நடித்த தலைவா திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிப்புகள் வந்தது. ஆனால் சில அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக படம் தமிழில் வெளிவரவில்லை.. ஆனால் மற்றமொழிகளில் படம் வெளிவந்தது...

தலைவா படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆர்வக்கோளாறில் நானும் நண்பர்களும் ஆந்திரா மாநிலம் சத்தியவேடு சென்று தலைவாவை தெலுங்கு மொழியில் படத்தை பார்த்துவிட்டுவந்து அன்று மறுநாள் தலைவா விமர்சனம் எழுதினேன்..!

சரி அதற்கு என்னவென்று நீங்கள் கேட்கலாம்... ஒன்றுமில்லை.. படம் கதை சரியில்லையென்றும், படம் ஒன்றும் வேலைக்காகாது என்று எதிர்மறைக்கருத்தை என்னுடைய விமர்சனமாக வெளியிட்டேன்.

அன்றிலிருந்து இன்றுவரை மிகவும் பலத்த எதிர்ப்பு கிளம்பிவருகிறது. நீ எப்படி எங்கள் படத்தை விமர்சிக்கலாம்.. சினிமாவைப்பற்றி உனக்கு என்ன தெரியும்..? நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா...? முடிந்தால் மோதிபார்...? ஒத்தைக்கு ஒத்தைவறீயா...? என்றும், அவன் இவன் என்றும் மரியாதைக்குறைவாகவும், மிகவும் கீழ்தரமாக இறங்கி அவர்களின் உண்மைமுகத்தை  ஊருக்கு காட்டிவருகிறார்கள்...! 



இந்த திரைப்படத்தை சார்ந்த.... நடிகர் விஜய், விஜய்யோட அப்பா  எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள், அவங்க வீட்டுதோட்டக்காரன், அப்புறம் பக்கத்துவீட்டுக்காரன், இயக்குனர் விஜய், சந்தானம், இந்த படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் இன்னும் பெயர் சொல்லமுடியாத யார்யாரே... அவர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பும்.. அதுமட்டுமல்லாமல் இரவு 11.00 மணி 12.00 மணிக்குகூட போன்பண்ணி மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தது.

சரி எதற்கு நமக்கு வம்பு என்று அந்த விமர்சன திரும்பப்பெற்று விடலாம் என்று முடிவெடுத்தப்பின்.... இன்று மறுபடியும் திரும்ப ஒரு விமர்சனத்தை எழுதவைத்துவிட்டார்கள்....

 

1. இந்த படத்தின் ஹீரோ விஜய் மிகப்பெரிய நடிப்பை தந்துள்ளார். அவர் நடித்தப்படங்களிலேயே இந்தப்படம் தான், ஒரு மன்னிக்கவும் பற்பல மைல்கல்கள்...! கண்டிப்பாக இந்த படத்தில் நடித்ததற்கு அவருக்கு ‌ஐந்தோ ஆறோ ஆஸ்கார் நிச்சயம் என்று பல்வேறுதரப்பில் இருந்து தகவல்கள் வந்துள்ளன.

2. இயக்குனர் விஜய்... இந்த கதை இவரது வாழ்நாள் சாதனை.. இவர் இந்த படத்தை இயக்கியதின் மூலம் தன்னுடைய வாழ்நாள் சாதனையை முடிந்துவிட்டார் என்றே சொல்லவேண்டும். இப்படி ஒரு கதை பேரண்ட வரலாற்றில் இதுவரையாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.

3. சந்தானம்..! செம காமெடிங்க இவருடையது... இவரு நடிச்ச படத்துல இருந்து நல்லபடம் எதுன்னுகேட்டா இதுன்னுதான் சொல்வார். இதை கவுண்டமனி-செந்தில் மேல சத்தியமா...? ஏம்பா..! கொஞ்சம் மரியாதையா பேச கத்துகிட்டா நல்லாயிருக்கும் நம்பி...

4. ஹீரோயின்... ஏதாவது சொல்லாமா... அமலாபால்...! இந்தபடத்துல அமலாபாலுக்கு அது ரொம்ப அதிகம் தெரியுமா... எதுவா..? அட.. வீரம்ங்க... விஜய்யை கைதுபண்ணி செம போலீஸ் வேடத்துல வற்றாங்க...

5. படம் இதுவரை இல்லாத அளவுக்கு பல்லாயிரம்கோடி வசூல் செய்து விட்டது... எடுத்த தியேட்டர்காரங்க இந்த படத்தை நிரந்தரமா தமக்கே எழுதிகொடுத்துடுங்கன்னு சொல்லிகிட்டு இருக்காங்கலாம்...  படம் தியேட்டரில் பலவருஷம் ஓடவாய்ப்பிருக்கிறது. விரைவில் பவர்ஸ்டாரின் லத்திகா திரைப்படத்தின் சாதனையை முறியடிக்க வாய்ப்பிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அம்மாடி..! 

ஏம்பா தலைவா படக்குழு பாக்கியவான்களே... உங்க படத்தை நல்லாயிருக்குன்னு சொல்லிபுட்டேன். இனி நிம்மதியா போய் தூங்குங்க..  இனிமே பாருங்க இந்தியா, அமெரிக்கா, சிங்கபூர், மலேசியா போன்ற கோபால் பல்பொடி விற்கும் அனைத்து நாடுகளிலும் படம் செமையாக ஓடி வரலாற்று சாதனை செய்யபோகிறது.

அடக் கடவுளே...! படம் நல்லாயில்லேன்னு விமர்சனம் பண்ணேன். அதை அடுத்தப்படத்துல சரிபண்ணசொன்னா.. நாங்க எப்படி படம் எடுத்தோம் தெரியுமா..? அங்கிட்டுபோய் டூயட் எடுத்தோம்... இங்கிட்டு வந்து சண்டைகாட்சி எடுத்தோம்...? லைட்டை தூக்கிறவர் எப்படி தூக்கி கஷ்டப்பட்டாருன்னு உனக்கு தெரியுமா..? செட்டுபோட எவ்வளவு அலைஞ்சோம் தெரியுமா..? பட்ஜெட் வேற கையை கடிச்சது..! இப்படி கேட்டுகிட்டு கிளம்பிட்டிங்க..!

ஒரு சினிமா எடுக்குறது ரொம்ப கஷ்டம் தான் அதையாரும் மறுப்பதற்கில்லை.. அதற்காக படம்பார்க்கும்போது படத்தில் இருக்கும் குறைகளை சொல்லாமல்... படம் எப்படி எடுத்தாங்க, யாரு எவ்வளவு கஷ்டப்பட்டாங்கன்னு போய்பார்த்துகிட்டா வரவாமுடியும்.... 2.30 மணிநேரம் ஓடுரபடத்தை வச்சிதான் விமர்சனம் செய்யமுடியும்.


இதுல மெயினான இயக்குனர்... தயாரிப்பாளர்... ஹீரோ.. என பலப்பேர் இருக்காங்க. அவங்க யாரும் வாயைதிறக்கவில்லை... இந்த சைடுங்கதாங்க ரொம்ப ஆடுதுங்க.... ஓ.. அப்பத்தான் அவங்க நாலுபேருகிட்ட நல்லபேர் வாங்கமுடியுமா...? தெரியல...!

அப்ப விஜய் & விஜய் இப்பபோய் நிம்மதியா தூங்குங்கப்பா...!

எதுக்கு பிரச்சனை... டிஸ்கி போட்டுடுவோம்..
 

டிஸ்கி 1 :  இதை படிக்கும் யாவரும் நகைச்சுவையோடு படியுங்கள்.. இது எதிர்பதிவோ அல்லது உள்குத்து பதிவோ அல்ல என்பதை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

டிஸ்கி 2 : இந்தபதிவிலும் யார் மனதை புண்படியாக தகாதவார்த்தைகளையே, தரக்குறைவான சொல்லையோ பயன்படுத்தவில்லை என்று நினைக்கிறேன்.

நாளைக்கு நல்ல கவிதையா போடுவோம்...

நல்லவங்க நாலுபேர் படிச்சாபோதும்...!

06 September, 2013

மதுமதியின் 90 டிகிரி - விமர்சனம்

நடந்து முடிந்த சென்னை பதிவர் சந்திப்பில் மதுமதி அவர்கள் எழுதி இயக்கிய குறும்படம் ஒன்று வெளியிடப்பட்டது. அந்த குறும்படம் குறித்த விமர்சனம்... (விமர்சனம்ன்னு போட்டிருக்கேன்... இதுக்கு எவ்வளவுபேர் பொங்கப்போறாங்கன்னு தெரியலையே...)


பதிவர், பாடலாசிரியர், எழுத்தாளர், என்ற பரிமாணங்களை தாண்டி ஒரு இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார் நம்ம மதுமதி அவர்கள்... ஆரம்பத்தில் இந்த படத்தை ஒளிப்பரப்பும் ஐடியா இல்லாமல் இருந்தது.  ஆனால் பின்னர் கொஞ்சம் கடினமுயற்சிக்குபிறகு படத்தை தயார்செய்து இந்த விழாவில் ஒளிப்பரப்பு செய்யும் முடிவை எடுத்திருக்கிறார் மதுமதி அவர்கள்....


குறும்படத்தின் தலைப்பு... 90 டிகிரி... படம் மிகவும் சிறப்பாக இருந்தது... படம் ஓடி முடிந்தப்பிறகு அரங்கம் கொஞ்சம் அமைதியாகி பின் பலமான கைதட்டல்களை கண்டது. இந்த குறும்படத்தை குறித்து அனைவரும் வெளிப்படையாக பாராட்டினார்கள்... பாராட்டுதலுக்கு ஏற்ற படைப்பு தான்இது.

இந்த குறும்படத்தின் கதையமைப்பு மிகவும் அழகாக அமைந்திருந்தது... குறும்படத்துக்கு ஏற்றகதை... நேர்த்தியான இயக்கம்... இசை அழகான ஓவியம்போல் படம்முழுவதும் அழகாக பரவிக்கிடந்தது...

மதுமதியின் முதல் முயற்சி என்பதால் இப்படத்தின் ஆக்கத்திற்காக அவரை மனதார வாழ்த்துகிறேன்.  மேலும்... இனி அவர் எடுக்கும் அனைத்து முயற்சியும்  வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

மேலும் இத்திரைப்படத்தில் நான் கண்ட சில குறைகளை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்... (ரைட்டு வில்லங்கம் ஆரம்பிச்சிடிச்சி....)

கதை...

கற்கை நன்றே... கற்கை நன்றே... பிச்சைப்புகினும் கற்கை நன்றே...  என்ற ஒருவரி கதைக்கருவை கொண்டு படமாக்கப்பட்டிருக்கிறது. ஒரு ஏழைப் பெண்குழந்தை பிச்சையெடுத்தாவது படிக்கவேண்டும் என்று எடுக்கும் முடிவையும், அந்த மாணவி பிச்சையெடுப்பதற்கான பின்னணியையும்  அழகாக சொல்லியிருக்கிறார்.

கதைப்படி பள்ளி மாணவி ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர். உடல்நலம் சரியில்லாத அப்பா... குடும்பத்தில் ஏழ்மையை அனுசரித்து வாழும் அம்மா... சரியான தேர்வு... வீடும் அதுபோலவே...! ஆனால் கதையின் நாயகியாகவரும் அந்த பள்ளி மாணவி அந்த குடும்பத்தோடு ஒட்டவில்லை. அந்த கதாப்பாத்திரம் ஏழைப்போன்ற கதாபாத்திரத்திற்கு ஏற்றதாக எனக்குதெரியவில்லை. வேறுஒன்றுமில்லை... அந்த பள்ளிமாணவியை பார்த்தால் ஏழைவீட்டில் பிறந்த மாதிரி தெரியவில்லை... பார்த்தால் ஏழ்மையாக தெரிவதுபோன்ற குழந்தையே தேர்வு செய்திருக்கலாம்...

காட்சி அமைப்பிற்கான இடம்.. அவர்கள் வாழும் பகுதி, தெருக்கள் கச்சிதமாகவும் யாதார்த்தமாகவும் இருந்தது... படக்காட்சிகள் பல்வேறு திசைகளில்இருந்து படமாக்கப்பட்டிருந்தது.. அந்தகோயில்.. பூக்காரர்கள்.. உடன் பிச்சையெடுப்பவர்கள் என அனைவரும் எதார்த்தமாக தெரிந்தார்கள்....

(கணித உபகரண பெட்டி)
ஜாமன்ரிபாக்ஸ் இல்லாமல் போனதால்... அதை வாங்கவே அந்தக்குழந்தை பிச்சையெடுக்கும் முடிவை எடுக்கிறது....

ஜாமன்ரிபாக்ஸ் இல்லாத மாணவியை மையமாக வைத்துதான்  குறும்படத்துக்கு 90 டிகிரி என்று பெயர் சூட்டியுள்ளார்... ஏனென்றால் 90 டிகிரி என்பது கணிதம்சார்ந்த ஒரு வார்த்தை அதற்காக அதன் விலையையும் 90 ரூபாய் என்று வைத்தது ஏனென்று தெரியவில்லை. தற்போது ஜாமன்ரிபாக்ஸின் விலை 30 ரூபாயிலிருந்தே ஆரம்பிக்கிறது.

ஜாமன்ரிபாக்ஸ் வாங்க காரணமான வகுப்பறை பிளாஸ்பேக் நன்றாக இருந்தது...  பொதுவாக வகுப்பறையில் சில மாணவர்களிடம் சில ஆசிரியர்கள் கண்டிப்புடன் நடந்துக்கொள்ளவேண்டிய சூழல் இருக்கிறது...  இந்த கதைப்படி ஆசிரியர் அவமானப்படுத்தியதால்தான் குழந்தை எப்படியாவது ஜாமன்ரிபாக்ஸ் வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது... இல்லையென்றால் அந்தபொருள் இல்லையென்ற கவலை அந்தமாணவியிடம் வராது.... படிபப்பிலும் ஆர்வம் வராமல்போயிருக்கும்.

இந்த கதை தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றதாக இல்லை... தற்போது மாணவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் அரசே விலையில்லாமல் கொடுத்துவிடுகிறது.... வேறு ஏதாவது புதுசாக யோசித்திருந்திருக்கலாம்....

பள்ளிச்செல்லும் அந்த மாணவி அரசு கொடுத்துள்ள புத்தகப்பைத்தான் பள்ளிக்கு எடுத்துச்செல்கிறாள்... அப்படியென்றால் ஜாமன்ரிபாக்ஸ் கண்டிப்பாக கொடுக்கப்பட்டிருக்கும்... இல்லையென்றால் அரசு அளித்த புத்தகப்பையை பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம். இன்னும் மாணவிக்கு தமிழக அரசுபள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் சீருடையையும் பயன்படுத்தியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

பிச்சையெடுக்கும்போது தன்னுடைய முடியை கலைத்துவிட்டுக்கொள்வது..  எதார்த்தமாக இல்லை...! (பிச்சை எடுப்பது போன்று இல்லாமல் வேறு ஏதாவது யோசித்திருக்கலாமே)

கல்வியென்பது அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்ட நிலையில் யாராவது ஒருசிலரே அதை அடையமுடியாமல்  வசதிவாய்ப்பின்றி அவதிப்படுகிறார்கள்.... படிக்கவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டால் எப்படியாது பிச்சைஎடுத்தாவது படிக்க வேண்டும் என்ற எண்ணம் வருவது... எதிர்கால சமுதாயத்திற்கு நல்லதுதான்....


ஒவ்வொறு மாணவ மாணவியர்களும் இதுபோன்ற குறும்படங்களை கண்டு படிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை...


இது எதிர்காலத்தில் சிறந்துவிளங்கப்போகும் ஒரு இயக்குனருக்கு ரசிகனாக நான் தரும் சின்ன விமர்சனம் அவ்வளவுதான்... (உடனே சினிமாவைப்பற்றி உனக்கு என்னத்தெரியும் என்றும், முடிந்தால் நீயே ஒரு குறும்படத்தை எடுத்துக்காட்டு பார்ப்போம்... என்றும் கிளம்பிவிடாதீர்கள்...)


90 டிகிரி ஒரு முன்னோட்டம்...  



கடந்த பதிவு பற்றிய என் விளக்கம் : மாநாடு குறித்து நான் வெளியிட்ட என்னுடைய கருத்தை இவ்வளவு விமர்சிப்பார்கள் என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. நான் வைத்தது குற்றச்சாட்டுகள் அல்ல...  அடுத்த சந்திப்பில் சரிசெய்ய வேண்டியவைகளே....  வேண்டுமென்றால் சொல்லுங்கள் புகழ்ந்து ஒரு பதிவு போட்டு விடுகிறேன். 

விமர்சனத்திற்கு தெளிவான பதிலையோ அல்லது மறுப்போ தெரிவிப்பதை விட்டுவிட்டு கருத்துக்சொன்னவரை அசிங்கப்படுத்தி பதிவெழும் பதிவுலகைகண்டு உச்சிக்குளிந்தேன்..... (தயவுசெய்து இதற்குமேல் இன்னும் வேண்டாம் என்று நினைக்கிறேன்...)

சிலர் ஹிட்ஸ் என்கிறார்கள்... அதற்கு எனக்கு விஜய்.. மற்றும் பவர்ஸ்டார் இருக்கிறார்கள்....


காப்பி பேஸ்ட் என்கிறார்கள்... நான் படித்து எனக்குபிடித்ததை, ரசித்ததை பகிர்ந்துக்கொள்கிறேன். அதற்கு சிலருக்கு என்ன வருத்தம் என்று தெரியவில்லை....


எழுத்துப்பிழை என்கிறார்கள்... இது எழுதும் ஒரு சராசரி மனிதனால் தவிர்க்கமுடியாத விஷயம்... (நான் சராசரி மனிதன்)


இந்த விளக்கம் கூட... ஒரு கருத்தை (நேர் மறையோ/ எதிர்மறையோ) ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலையில் இல்லாமல் தரம்கெட்ட பதிவர்களுக்கு அல்ல....  


தன்னுடைய கருத்தை இங்கு நாகரீகமாக வெளிப்படுத்தியவர்களுக்கு மட்டுமே...!

04 September, 2013

பதிவர்கள் சந்திப்பு - என் தரப்பு விமர்சனம்...!







வணக்கம் மக்களே...!
சென்னையில் நடைப்பெற்ற இரண்டாம் ஆண்டு பதிவர் சந்திப்பு மிகவும் சிறப்பான முறையில் நடந்து முடிந்தது. ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. மிகவும் குறைந்த காலத்தில் துவக்கப்பட்டு இந்த அளவு சிறப்பாக நடத்தி முடித்தமைக்கு அதனை சார்ந்த விழா குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த பதிவர் சந்திப்பை விட அதிகமான பதிவர்கள் இந்த விழாவுக்கு வருகைபுரிந்திருந்தனர். இன்னும் சிலபேர் வராதது ஏமாற்றமே. அவர்கள் முறையான அழைப்பு இல்லை அதனால் வரவில்லை என்றார்களாம். (உதாரணத்திற்கு சிபி செந்தில்குமார்)  அடுத்தமுறை அவர்களுக்கு தபாலில் வெற்றிலைப்பாக்கு வைத்து அழைக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.



வெற்றிகரமாக முடிந்தது என்று பலபேர் பலபதிவுகள் எழுதிய வண்ணம் உள்ளனர். அதே வெற்றி சந்திப்பு என்று மார்த்தட்டுவதைவிட இந்த சந்திப்பில் இருக்கும் சில நெருடல்களை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.


உண்மையில் இந்த பதிவர் சந்திப்பு வெற்றிப்பெற்றதா என்று ஒவ்வொறு பதிவரும் யோசிக்க வேண்டும்.


முதல் பதிவர் சந்திப்பு எந்த விதத்திலும் குறைவில்லாமல் சிறப்பாக இருந்தது. அனைத்து பதிவர்களும் சிறப்பான முறையில் கையாளப்பட்டார்கள். தனக்கு பிடித்த பதிவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டு அவர்களுடன் மகிழ்ச்சியாக கலந்துரையாடி... கவியரங்கள், கௌரவித்தல், சிறப்புவிருந்தினர் என மிகவும் அழகாக வடிவகைக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த பதிவர் சந்திப்பு என்னை போன்று நிறைய பதிவர்களின் மனதை கவரவில்லை என்றே சொல்ல வேண்டும்....


முதலில் இடத்தேர்வு....



இந்த அரங்கம் பிரதான சாலையில் இருந்தாலும் உள் அரங்கம் அனைவரையும் அனைவரும் பார்த்துக்கொள்ளகூடிய வகையில் இல்லை... இதுப்போன்ற அரங்கம் மேடையில் இருப்பவர்களை பார்க்கும் வகையில் மாத்திரமே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உடன் இருப்பவர்கள் யார் என்று தெரியாத பட்சத்தில் இந்த அரங்கம் சரி ஆனால் அனைவரும் பார்த்துக்கொள்ள இது வசதியாக இல்லை.



இந்த பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்த அனைத்து பதிவர்களும் அரங்கினுள் அவ்வப்போது மாத்திரமே தலைக்காட்டினார்கள். முக்கியமான நிறைய பதிவர்கள் அரங்கிற்கு வெளியேவும், வரண்டாவிலுமே இருந்தார்கள். இவர்கள் விழா அரங்கினுள் முழுமனதாக இருந்ததுபோல் தெரியவில்லை.



பெரும்பாலான சென்னைபதிவர்கள் இருக்கைகளில் அமைந்து இருக்க வில்லை.  இவர்களை அரங்கினுள் இருந்து வெளியே வந்தால்தான் பார்க்க முடிந்தது. இதுவே அவர்களின் ஈடுபாட்டை அப்பட்டமாக காட்டியது.



மேலும் பதிவர்கள் அறிமுக நிகழ்வு ஏதோ சம்பரதாயம் போல் தான் தோன்றியது. புதுமுக மற்றும் வெளியில் வந்த பதிவர்களை முதன்மை படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. அப்படி அறிமுகப்படுத்திக்கொள்பவர்களை யாரும் கவனித்ததுபோலும் தெரியவில்லை.

பதிவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் இருக்கிறது என்று பல்வேறுபதிவுகளில் வெளிப்படுத்திய விழாக்குழுவினர்கள் விழா நாளன்று மிகவும் சிறப்பாக செய்வார்கள் என்று எதிர்பார்த்தால் அதுபோல ஏதும் இல்லை என்பது போல் சப்பென்று முடிந்துவிட்டது. கடைசியில் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பவேண்டியதாயிற்று.


எனது அடுத்த கேள்வி ஏன் சில பதிவர்களையே சிறப்புறை ஆற்றவைத்திருக்க கூடாது. உதாரணத்திகு உணவு உலகம் சங்கரலிங்கம் அவர்கள், கேஆர்பி செந்தில் அவர்கள், சில தொழிற்நுட்ப பதிவர்கள், விக்கி உலகம் வெங்கட், இன்னும் சில மூத்தப்பதிவர்கள் (வயதில்) இப்படி பலரை தன்னுடைய அனுபவங்களையும் அவர்களுடைய பயனுள்ள தகவல்களையும் சிறப்புறையாக பயன்படுத்தியிருக்கலாம்.

நேரத்தை மிகவும் கச்சிதமாக கையாண்டு பதிவர்களின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் சிறந்த பதிவர்களை, மூத்த பதிவர்களை கவுரவித்தல், கவியரங்கம், விவாத மேடை, கலை நிகழ்ச்சிகள், என ஏற்பாடு செய்திருந்தால் மேடை சிறந்திருக்கும்.



பதிவர் அறிமுகம் இனிதேவையில்லை என்று நினைக்கிறேன்.‌ பெரும்பாலான பதிவர்கள் அனைவரும் அறிந்ததே. புதிய பதிவர்களை வேண்டுமானால் அறிமுகத்தில் பயன்படுத்தியிருக்கலாம். பெரும்பாலான நேரம் அதிலே முடிந்து விட்டது. சென்னைபதிவர்களை அனைவருக்குமே தெரியும் அவர்களுக்கு அறிமுகம் தேவையோ இல்லை. இதனால் நேரம் மாத்திரமே கரைந்து போனது.



புத்தக வெளியீடு பெருமைக்குறியதுதான் அதற்காக உணவு இடைவேளைக்கு பிறகு மொத்த நேரத்தையும் இந்த நிகழ்வே எடுத்துக்கொண்டது. இது நிறைய பதிவர்களை பாதியிலே கிளம்ப வைத்துவிட்டது. கொஞ்சம் விரைவாக முடிந்திருக்கலாம்.


சிறப்பு அழைப்பாளர் திரு பாமரன் அவர்கள் சிறப்பாக தன் அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார் ஆனால் அவருக்கும் சரியான நேரம் ஏற்படுத்தி தரவில்லை. உணவு இடைவேளை என்பதால் அவர் தன்னுடைய சிறப்புரையை விரைவாக முடித்துக்கொண்டதாக தெரிகிறது. சிறப்பு விருந்தினரை மாலை நேரத்தில் பயன்படுத்திக்‌கொண்டிருந்தால் பதிவர்களும் இருந்திருப்பார்கள். சிறப்பு விருந்தினரும் தன்னுடைய கருத்தை விரிவாக ‌வெளிப்படுத்தியிருப்பார்.



உணவு விஷயத்தில் எந்த குறையும் சொல்லமுடியாத அளவுக்கு இருந்தது. சென்ற பதிவர்சந்திப்பு போல் அமரவைத்து பரிமாறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இடம் அதற்கு வதியாக இல்லை.



சென்ற பதிவர் சந்திப்பில் தனக்கு பிடித்த பதிவர்களுடன் அனைவரும் புகைப்படம் எடுத்த வண்ணம் இருந்தனர் ஆனால் இந்த சந்திப்பில் யாரும் யாருடனும் அதிகமாக புகைப்படம் எடுத்துக்கொண்டதுபோல் தெரியவில்லை.

தனித்திறன்  போட்டியில் அந்த நாடகம் இந்த நாடகம், பதிவர்களை கலாய்ப்போம் தவறாக எண்ணக்கூடாது என்றெல்லாம் அலம்பல் செய்திருந்தார்கள்... அவர்கள் யாரையும் அங்கு காணவில்லை. மயிலன் நல்லதொரு கவிதையை வாசித்தார் அதை கைத்தட்டி ரசிக்ககூட ஆளில்லை.... என்பேர் பிரம்மன் என்ற தலைப்பில் வந்த நான் அரங்க சூழ்நிலையை கருத்தில் கொண்டு கவிதை வாசிப்பதை தவிர்த்து விட்டேன்....  (அந்த கவிதை கண்டிப்பாக பதிவாக வரும்)




நிகழ்ச்சிகள் மாலை 6.00 மணிக்கு முடியும் என இருந்தது ஆனால் பெரும்பாலான பதிவர்கள் மதிய உணவுக்கு பிறகு கிளம்ப ஆரம்பித்துவிட்டார்கள். (நான் சரியாக 4.45 மணிக்கு கிளம்பினேன்). மாலை நிகழ்வு ஒன்றுமில்லை என்ன இருக்கிறது என்று கூடதெரியவில்லை.



மேடையை ஒரு சில சென்னைப்பதிவர்கள் மாத்திரமே ஆக்கிரமித்தார்கள். பிரபல பதிவர்கள் என்ற போர்வையில் இவர்களே முன்னிலைப்படுத்தப்படுவது வளரும் பதிவர்களுக்கு ஆரோக்கியமானதாக தெரியவில்லை.



நிகழ்ச்சிகளை தொகுக்க நாள் முழுவதும் ஒருவரே எனும் போது பல்வேறு பதிவர்களிடையே கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தியது. பலபேரிடம் பகிர்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். (அந்த பொருப்பை அவரிடம் தரவில்லை என்றால் அவர் பதிவர் சந்திப்புக்கு வந்திருப்பாரா என்று தெரிவில்லை).



மதுமதியின் குறும்படம் ஓடும்போது மட்டும் அரங்கம் கொஞ்சம் அமைதியாக இருந்தது. அதுதவிர்த்த பிற நேரங்களில் அமைதியில்லை. மேலும் பதிவர் அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது அரங்கம் காலியாகவே இருந்தது. (மதுமதியின் குறும்படம் விமர்சனம் அடுத்த பதிவில்).







இக்கருத்துக்களை ஒருதலைப்பட்சமாக பாராமல் நடுநிலையோடு சொல்லுங்கள்.... இந்த பதிவர் சந்திப்பு வெற்றி அடைந்ததாஎன்ற...?

சிலர் கூறலாம் நீங்கள் முன்நின்று செய்ய வேண்டியதுதானே என்று...? முடிந்த விஷயத்துக்கு யாரும் யாரையும் குறைசொல்வது சரியானதாக இருக்காது. அடுத்துவரும் காலங்களில் இவைகளை மனதில்வைத்து நடந்துக்கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில்தான் என்கருத்துக்களை வெளிப்படையாக இங்கு பதிவிட்டிருக்கிறேன்.

இது குறித்து இன்னும் விவாதம் இருப்பின் பதிவு தொடரும்...!

05 August, 2013

இப்போது பெயரில் என்ன இருக்கிறது...! /// 700 -வது பதிவு



பொய் சொல்வதையே 
பிழைப்பாக கொண்டிருந்தார்
அடுத்ததெரு அரிச்சந்திரன்....


வசரம் என்று உதவிகேட்டால்
தவறாமல் செய்கிறார் பத்துவட்டிக்கு
எங்க ஊர் காந்தி...!


டுத்தவன் நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டு 

அத்தனையையும் எனக்கே என்கிறார்
கடைசி தெரு புத்தன்...!


ன்வீட்டு விளக்கொளி

அடுத்தவர் வீட்டில் விழுகிறது என்பதற்காக
விளக்கை அணைத்தார் பக்கத்துவீட்டு பாரி...


ருக்கென்றால் உபதேசித்து
தனக்கென்று வந்தபோது கருவருத்தார்
கலியுகக் கண்ணன்...

 ற்போது பெயரில் ஒன்றும் இருப்பதில்லை
அழைக்கவும்... 

அடையாளம் சொல்லவும் தவிர...


கவிதைவீதியின்  -வது பதிவு....

ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி..!

21 April, 2013

திருமதி தமிழ் விமர்சனம் / மாப்பிள்ளை சிம்பு / மற்றும் ரஹீம் கஸாலி



மேதைப் படத்தை பார்த்து விமர்சனம் எழுதி பதிவுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சென்னை பதிவர்கள்... மெகா மற்றும் சோலார் ஸ்டார் நடித்த திருமதி தமிழ் படத்தை மெட்ராஸ் பவன் சிவக்குமார் தலைமையில் பார்த்து விமர்சனம் எழுதியிருக்கிறார்கள்.

அவர்களுடைய தைரியத்தை பாராட்டி அவர்களுடைய விமர்சன லிங்க்கும் இங்கு தரப்பட்டுள்ளது.... வாழ்க இவர்கள்... வளர்க இவர்கள் சினிமா தொண்டு...

திருமதி தமிழ் - சினிமா விமர்சனம்
(ஸ்கூல் பையன் அவர்களின் விமர்சனம்)

 **************************************

வல்லவன் படத்தில் நடித்தபோது நயன்தாராவுடன் உதட்டு முத்தக்காட்சியில் நடித்து படு சூட்டைக் கிளப்பினார் சிம்பு. அதையடுத்து அவர்கள் ஜாலியாக ஊர் சுற்றியதால் அவர்களை இணைத்து காதல் கிசுகிசுக்கள் வேகமாக பரவின. ஆனால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்களது காதல் முறிந்து போனது. 
இருவரும் அதன்பிறகு இணைந்து நடிப்பதைகூட தவிர்த்தனர். ஏதாவது சினிமா விழாக்களில் எதேச்சையாக சந்தித்தால்கூட முகத்தை திருப்பிக்கொண்டு ஆளுக்கொரு பக்கமாக எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தனர். அதையடுத்து அடிக்கடி சிம்புவை முன்னணி நடிகைகளுடன் இணைத்து கிசுகிசு பரவுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

இந்த நிலையில், இந்த மாதிரியான கிசுகிசுக்கள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சிம்புவுக்கு ஒரு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கும் வேலைகளில் அவரது பெற்றோர் தீவிரமடைந்துள்ளனர். 
சமீபத்தில் வேலூரில் அவர்கள் சிம்புவுக்காக ஒரு பெண் பார்த்தார்களாம். அது மனசுக்கு திருப்தியாக இருக்க, மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அப்படி விரைவில் பிடித்தமான பெண் கிடைத்துவிட்டால், இந்த வருடம் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சிம்புவுக்கு திருமணம் நடைபெறுமாம். ஆக, இப்போதே புதுமாப்பிள்ளை களை சிம்புவின் முகத்தில் தாண்டவமாடத் தொடங்கி விட்டது.
******************************** 
இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்பு நண்பர் ரஹீம் கஸாலி அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்....
 **************************

03 April, 2013

இது தடைச் செய்யப்பட்டபகுதி... (கண்டிப்பாக இது 18+ஙக...)

வணக்கம்... மகா ஜனங்களே....

டெரர் கும்மீஸ் பட்டாளம் காலவதியான பிறகு இந்த மொக்கை பதிவை எந்தப்பக்கமும் காணமுடியறதில்லை. சரி கவிதை வீதியிலும் மொக்கை பதிவு போட்டு ரொம்ப நாளாச்சே..அது... உங்க மெயின்டு வாயிஸை நான் கேச் பண்ணிட்டேன்  உஷாராயிருங்க... அப்புறம் மூனா.செந்தில் பக்கத்தில ஒரு பெட் காலியாகத்தான் இருக்கு...

சரி பதிவுக்கு வருகிறேன்.. இன்னைக்கு மின்சார ஊழியர்கள் தன்னுடைய பணியை செம்மையாக செய்து காலை 9.00 மணி முதல் மாலை 6.30 வரை ஏதோ பராமரிப்பு பணின்னு அவர்களுடைய வேலையை செம்மையாக செஞ்சாங்க... (கரண்ட்டே இல்லாத டிரான்ஸ்பார்க்கு ஏதுக்குடா பராமரிப்பு) சரின்னு இந்த 7.00 மணிக்கு வந்து உட்கார்ந்தா என்ன போடுறதுன்னு ஒரு குழப்பமாக இருந்தது...

இந்த வாரம் ஒரு கவிதை.. ஒரு சினிமா... போட்டாச்சி சரி ஒரு மொக்கை போடலாம் யோசனப்பண்ணி தற்போது ஏதோ என்னால முடிஞ்ச வேலையை செம்மையாக செஞ்சிருக்கேன்... படிச்சிட்டு ஏதோ உங்களால முடிஞ்சத செஞ்சிட்டுப்போங்க.....

அதாவது 18 -டோட 1-யை சேர்த்தா வருவது

அதுபோல 18+2 சேர்த்தா வருவது

அதுபோல 18+3 சேர்த்தா வருவது

அதுபோல 18+4 சேர்த்தா வருவது

அதுபோல 18+5 சேர்த்தா வருவது

அதுபோல 18+6 சேர்த்தா வருவது
 

அதுபோல 18+7 சேர்த்தா வருவது 
இது மாதிரி 18 கூட ஒரு + போட்டு நாம எந்த எண்னை சேர்த்தாலும் எதாவது ஒரு எண் வரும்...


வேற எதாவது டவுட் இருக்கா....? தயவு கூர்ந்து தயங்காம கேளுங்க...
 
டிஸ்கி-1  : மக்களே இந்த பதிவுக்கு நான் டிஸ்கி போடப்போகிறேன்.
டிஸ்கி-2 : பதிவு தலைப்பு என்ன இது தடைசெய்யப்பட்ட பகுதின்னு போட்டிருக்கேன் இதையும் மீறி நீங்க வந்தா நான் ‌எப்படிங்க பொருப்பாக முடியும்...
டிஸ்கி-3 : இது உங்களுக்கே தெரியும் 18+ தான்னு.....
டிஸ்கி-4 : இத்தனை டிஸ்கி போட்டேன்னு யாரும் திட்டக்கூடாது...

ரைட்டு நான் கிளம்புறேன்....

02 March, 2013

அம்மா உணவகத்திற்கு பிரபல பதிவர்கள் திடீர் விஜயம்...! உண்மை பிண்ணனி என்ன?


சென்னை மாநகரில் வாழும் ஏழை மக்கள், கூலிப்பணியாளர்கள். ஓட்டுனர்கள், பாரம் தூக்குபவர்கள், பணி நிமித்தமாக சென்னை வந்து செல்பவர்கள் என, அனைவரும், சுகாதார மற்றும் தரமான உணவை, மலிவு விலையில் பெறும் வகையில் அம்மா உணவகம் திறக்கப்பட்டது.

1 ரூபாய்க்கு, இட்லி; 3 ரூபாய்க்கு தயிர் சாதம் மற்றும், 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம் என வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதில் தயிர்சாதத்துக்கு ஊறுகாய் தருவார்களா அல்லது தரமாட்டார்களா என்ற பட்டிமன்றமெல்லாம் தற்போது ஓடி முடிந்திருக்கிறது.

இந்நிலையில் பிரபல பதிவர்கள்  சென்னை தி.நகரில் உள்ள இந்த உணவகங்களை தேடி சென்று காலை உணவாக இட்லி சாப்பிட்டு விட்டு திரும்பியிருக்கிறார்கள். 

இவர்கள் எத்தனை இட்லி சாப்பிட்டார்கள், அதற்கான செலவு எவ்வளவு, அதற்கான தொகையை செலுத்தியது யார் என்ற கேள்விகளும், அங்கு சென்றதற்கான காரணம் மற்றும் பிண்ணனி என்னவென்று இதுவரை மர்மமாகவே இருக்கிறது.


ஒருவேளை இவர்கள் அம்மா உணவகத்தை ரகசியமாக ஆய்வு மேற்கொண்டார்களா... அந்த ஆய்வின் அடிப்படையில் அந்த உணவகத்தைப்பற்றி நல்ல முறையில் அல்லது எதிராக கருத்து தெரிவிப்பார்களா என்று பதிவுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.


எப்பூடி....

01 January, 2013

நான் என்ன சொல்லவர்றேன்னா... கேளுங்கண்ணே கேளுங்க...!








22 December, 2012

இது ஒரு கண்டன மற்றும் எதி்ர் பதிவு...




திர்பார்த்து எதிர்பார்த்து
ஏங்கிக்கிடக்கிறேன்
தினமும் எதிர்படும் நீ
இன்றும் எதிர்படுவாய் என்று.... 

தினமும் எதிர்படும் என்னை
உதாசினப்படுத்திவிட்டு போவாய்
இருந்தும் நான்
எதிர்பார்ப்பதை கைவிடவில்லை...

தெரிந்தும் மற்றும் தெரியாத
முகங்கள் எதிர்படுகையில்
அவர்களுக்கான பதிவுகளை 
சிறு மூளை ஞாபகபடுத்துவதில்லை
உன்னை எதிர்பார்த்து நிற்கும் எனக்குள்...

ன்றொறுநாள் எதிர்படுகையில்
விழிகளால் மோதிவிட்டுச் சென்றாய்
நான் விழுந்ததும் அன்றிலிருந்துதான்...

ன்னும் எவ்வளவு நேரம் 
எதிர்பார்த்துக் கொண்டிருப்பது...

பெண்ணே...
எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்
என் கனவுகளுக்கு வந்து காட்சிக்கொடு

ன் கருவிழிகள் கண்டனங்கள் 
தெரிவிக்கும் முன்...

(அப்பா... ‌எப்படியோ எதிர்பதிவு என்பதால் அதிக இடத்தில் எதிர் என்ற வார்த்தையை பயன்படுத்தி விட்டேன், கண்டனம் என்ற வார்த்தையில் கவிதை முடிகிறது..... ஏங்க இது டிஸ்கிங்க)

உங்கள் விருப்பம்போல் பின்னூட்டங்கள் இடலாம்..
(மீள் பதிவு)

29 November, 2012

பிராபல மற்றும் பிரபல பதிவர்கள் இங்கு கலாய்க்கப்பட்டிருக்கிறார்கள்..!


ஒரு முறை கல்லூரியில் உணவு உலகம் சங்கரலிங்கம் அவர்கள் பேச வேண்டியிருந்தது. அவருக்கு ஆங்கிலம் பேச தெரியாது என் காரணத்தினால் தன் உதவியாளரிடத்தில் பதினைந்து நிமிட ஆங்கிலப் பேச்சை எழுதித் தருமாறு சொன்னார்...

கூட்டத்தில் அதை அரை மணி நேரம் படித்தார் அவர்..

பிறகு தன் உதவியாளரிடம், “ கால் மணி நேரப் பேச்சு தயாரிக்கச் சொன்னால், நீ ஏன் அரை மணிநேரப் பேச்சைத் தயார் செய்தாய் ”? என்று கோவத்துடன் கேட்டார் ஆபிஷர் அவர்கள்.

”ஐயா..! நான் கால் மணி நேரப்  பேச்சுத்தான் தயாரித்தேன்.  நீங்கள் தான் அதன் நகலையும் சேர்த்து படித்து விட்டீர்கள்..” என்றார் உதவியாளர்.
*********************************


 வீடு சுரேஷ்குமார் ஒரு பெரிய தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கினார்.

நிறைய ஆட்கள் வேலைக்குத் தேவைப்பட்டபர்கள். “திருமணமானவர்களுக்கு மட்டும் வேலை...” என்று விளம்பரம் செய்தார் சுரேஷ்குமார்.

இதைப்பார்த்த அவரது நண்பர் தமிழ் பேரண்ட்ஸ் சம்பத், “ உன் விளம்பரம் வேடிக்கையா இருக்கு.. எதற்காக இப்படி விளம்பரம் தந்தாய்?” என்று கேட்டார்.

“திருமணமானவர்கள் தான் எப்பொழுதும் எதிர்த்து பேச ‌மாட்டார்கள்..., வீட்டில் இருக்கிற மாதிரி பணிவாக இருப்பார்கள்” என்று பதில் தந்தார்... சுரேஷ்... (எனக்கு புரிஞ்சிடிச்சி...)

*********************************


ராஜபாட்டை ராஜா  மாணவன் ராமுவை அழைத்து.. நீ சோமுவின் விடைத்தாளை பார்த்துதானே எழுதினாய் என கேட்டார்..

சார் அப்படி நான் யாரைப்பார்த்தும் காப்பி அடிக்கல சார் என்றான் ராமு...

ஏன் இப்படி பொய் சொல்ற என்று மிரட்டினார் ராஜா...

சார்! நான் காப்பி அடித்தாகவே வைத்துக் கொள்ளுங்கள் அதை நீங்கள் எப்படி கண்டு பிடிச்சிங்க என கேட்டான் ராமு.

சோமு தன் விடைத்தாளில் ஒரு கேள்விக்குத் தெரியாது என்று பதில் தந்திருந்தான். அந்த கேள்விக்கு நீ.. “எனக்கும் தெரியாது“ அப்படின்னு பதில்  எழுதியிருக்கிற.... என விளக்க கொடுத்தார் ராஜபாட்டை ராஜா...


*****************************************

டிஸ்கி : இங்கு பிரபல பதிவர்கள் கலாய்க்கப்பட்டிருக்கிறார்கள்...
இதற்கு அந்த பதிவரே அல்லது வேறு யாராவதோ ஆட்சேபனை தெரிவித்தால் இன்னும் கடுமையாக கலாய்க்கப்படுவாகள் என்று எச்சரிக்கிறேன்...!


தொடரும்.... 

16 November, 2012

அநானமிகளுக்கு ஒரு எச்சரிக்கை...! துவங்கியது களையெடுக்கும் பணி...!


இணையத்தில் உலாவரும் தனிநபர்களைப் பற்றிய தகவல்களைக் கோருவதில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் இணைய பயன்பாட்டாளர்கள் 3467 பேர் பற்றிய தகவல்களைக் கோரி 2319 வேண்டுகோள்களை இந்தியா விடுத்திருக்கிறது. அமெரிக்காவோ இதுபோல் 7969 வேண்டுகோளை விடுத்திருக்கிறது. 

அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து பிரேசில் 3-வது இடத்தில் இருக்கிறது. அந்த நாடு இண்டர்நெட்வாசிகள் பற்றி 1566 வேண்டுகோளை கொடுத்திருக்கிறது. மொத்தமாக இண்டர்நெட்வாசிகள் பற்றிய 20,938 வேண்டுகோள்கள் கூகுளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

பொதுவாக ஜிமெயில் அக்கவுண்ட், சாட்டிங் விவரங்கள், ஆர்குட் விவரங்களைப் பற்றியே அதிகம் கேட்கப்பட்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ஆண்டு இதுபோன்ற தகவல்களைக் கோரும் வேண்டுகோள்கள் அதிகரித்தே வருகிறது என்கிறது கூகுள் வட்டாரம்.

நீதிமன்ற உத்தரவுகள் மூலமும் இத்தகைய தகவல்களைக் கோருவது இந்தியாவில் அதிகரித்தே வருகிறது. இணைய தளங்கள் மூலமாக நீதிமன்றங்களுக்கு தகவல்களைத் தருவதும் அதிகரித்தே வருகிறது. 

நடப்பாண்டில் இதுபோல் 596 தகவல்கள் நீதிமன்றத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது 20 நீதிமன்ற உத்தரவுகள் மூலம் எடுத்துக் கொடுக்கப்பட்டது. ஆனால் 2010 ஆம் ஆண்டு 125 விவரங்கள் இணையதளம் மூலம் நீதிமன்றங்களுக்குக் கொடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ரொம்ப உஷாராக இருக்கிறதா நினைக்கிற இண்டர்நெட்வாசிகளே! எச்சரிக்கை!

12 November, 2012

மூன்றாம் ஆண்டு முதல் நாளும்...! தீபாவளி திருநாளும்..!


 என் இனிய பதிவுல உறவுகளுக்கு,
 நண்பர்களுக்கும், 
வாசக பெருமக்களுக்கும் 
என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!

கவிதை வீதி தளம் இன்று தன்னுடைய மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.. கவிதை வீதியில் வளம்வந்து  எனது கவிதைகள், கட்டுரைகள் உள்ளிட்ட அனைத்து பதிவுகளுக்கும்  படித்து கருத்திட்டு ஆதரவு நல்கிவரும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்...

நன்றி..! நன்றி..!! நன்றி..!!!!

09 November, 2012

என்னது...! கருத்து சொன்னா போலீஸ்ல புடிக்கிறாங்களா...!


‌பேஸ்புக், டுவிட்டர், இணைய பதிவுகளில் இதுவரை என்னவேண்டுமானாலும் போடலாம்.. யாரை வேண்டுமானாலும் எதைப்பற்றி வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் அது சமீபகாலமாக ஒரு பயத்தை ஏற்படுத்தி வருகிறது. தவறாக கருத்திட்டாலோ அல்லது அவதூறான கருத்துக்களையோ செய்திகளையோ பரப்பினால் கைது என்ற நிலை தற்போது நிலவுகிறது.


ஒரு தனிமனிதர் மீது, வார்த்தை வசைகள் தொடுப்பது மற்றும் அவர்கள் கருத்துக்கு மறுப்புகருத்து வெளியிடுவது என்ற எண்ணம் தற்போது குறைந்துவருகிறது. இந்த விஷயத்தில் என்னுடைய கருத்தை பதிவுசெய்ய விரும்புகிறேன்.


தனிமனித தாக்குதல் என்பது ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும் அளவுக்கு மிஞ்சினால் அமி‌ர்தமும் நஞ்சுதானே... அது சரி யார் மீது தாக்குதல் இருக்க கூடாது.. எவர் ஒருவர் பொது வாழ்வில் ஈடுபடவில்லையோ அவர்கள் மீது கண்டிப்பாக அவதூறுகள் பரப்பக்கூடாது. ஆனால் பொதுவாழ்வில் இருக்கும் ஒருவரைப்பற்றி கண்டிப்பாக விமர்சிக்ககூடிய உரிமை அனைவருக்கும் உண்டு.


அரசியலோ, கலைதுறையோ, அல்லது வேறு ஏதாவது முறையில் பிரபலமானவர் ஒரு கருத்தை சொல்லும் போது அதை எதிர்த்தோ மறுத்தோ கருத்துச்சொல்லக்கூடிய உரிமை அனைவருக்கும் உண்டு. அப்படி சொல்வது தவறு என்றால் அந்த நபர் வாயை முடிக்கொண்டு இருக்கவேண்டும் அல்லது பொதுவாழ்க்கை விட்டு ஒதுங்கிக்கொள்ள வேண்டும். அதை விடுத்து எதிர்த்து வழக்கு தொடுப்பது அவர்களை கைது செய்து தன்னுடைய பலத்தை காட்டுவது இதெல்லாம் அயோக்கிய தனம் என்று தான் நான் சொல்லுவேன்.



அதற்காக எப்படி வேண்டுமானாலும் அவதூறு அல்லது அவமரியாதையான வார்த்தைகளை பயன்படுத்தலாம் என்று நான் சொல்ல வரவில்லை. அப்படி சொன்னாலும் அதை ஏற்க்கொள்கிற மனபக்குவம் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு வரவேன்டும்.


எங்க ஊர் கோயில் மரத்தடியில் உட்கார்ந்து இன்றைக்கு முதல்வர், பிரதமர், எ‌ன அத்தனை போரையும் கிழிகிழி என்று கிழித்துக்கொண்டிருக்கிறார்கள் அதற்காக அவர்களை உடனே கைது செய்து உள்ளே வைத்தால் அப்படியே  இந்தியாவில் இருக்கும் அத்தனைபேரையும் கைது செய்ய வேண்டியிருக்கும்.


தெருவுக்கு தெரு மேடைப்போட்டு அரசியல் கட்சிகளும் அடுத்தவர் பற்றி அவதூறு செய்திகளையும் வன்மையான வார்த்தைகளையும் சொல்லி வசைப்பாடிக்கொண்டிருக்கிறது. அவர்களை பற்றி அவர்களுக்கு எதிராக என்ன செய்துவிட்டார்கள். அந்தந்த கட்சி பேச்சாளர்கள், கொள்கை பரப்பு செயலாளர்கள் போன்றோரின் பேச்சுகளை கேட்டால் போதும் அவ்வளவுதான் நம் காதுகள் பாழாகிவிடும்.

பொது ஊடகங்களில் பொதுவாழ்வில் இருப்போர் பற்றி அவர்களின் செயல் பாடுகள் மற்றும் அவர்களின் கருத்துக்களுக்கு எதிராக எதிர்கருத்தை மறுப்பு கருத்தை பதிவுசெய்யக்கூடிய உரிமை அனைவருக்கும் உண்டு. கொஞ்சம் சபை நாகரீகம் கருதி செயல்பட்டால் போதும்.

என்பதிவுகளில் சிலபதிவுகளில் சில அரசியல் தலைவர்கள், சில பொது ஊடகங்களை விமர்சித்து அவர்களின் தவறை அல்லது அவர்களின் தவறாக கொள்கையை சுட்டிக்காட்டிக்கொண்டிருக்கிறேன். ஒரு செயல் செய்யும் போது அதை பாராட்டினால் ஏற்றுக்கொள்பவர்கள் அதில் உள்ள குறைகளை சொல்லும்போதுமட்டும் பொங்குவது சரியல்ல.
Related Posts Plugin for WordPress, Blogger...