கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

14 March, 2013

விஜய் நடத்திய கல்யாணத்தில் திடீர் கலாட்டா! சுவர் ஏறிகுதித்து தப்பி ஓடிய இளைய தளபதி! (படங்கள் இணைப்பு)


13.03.2013 புதன்கிழமை காலை 9 மணிக்கே நடிகர் விஜய் வருவார் என்று விழுப்புரம் ஆனந்தா திருமண மண்டபத்தில் ரசிகர்கள் காத்திருந்தனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 11 ஏழை ஜோடிகளுக்கு 51 சீர்வரிசை பொருட்களுடன் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மண்டபத்திற்குள் பத்திரிகை மீடியாக்கள் தவிர 700 பேர்களுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டிருந்தது. மண்டபத்திற்கு வெளியே சுமார் 1500 பேர் திரண்டிருந்தார்கள். 11 மணி அளவில் மண்டபத்துக்குள் வந்த விஜய், மண்டப பால்கனிக்கு வந்து நின்று வெளியே நின்றிருந்த ரசிகர்களுக்கு டாடா காட்டிவிட்டு உள்ளே சென்று திருமணத்தை நடத்தி வைத்தார்.

பின்னர் பேசிய விஜய், எனது தங்கை வித்யா சிறுவயதில் தவறிவிட்டார். அவர் நினைவாக இந்த திருணமங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன. இதன் மூலம் தமிழகம் உட்பட உலக அளவில் எனக்கு தம்பி, தங்கைகள் கிடைத்துள்ளனர்.

இப்படி பேசிக்கொண்டிருக்கும்போதே, ரசிகர்கள் கூட்டம் பூட்டப்பட்ட மண்டபத்தின் கதவு திறக்காததால் கண்ணாடிகளை வாட்டார் பாட்டில்களால் உடைத்துக்கொண்டு திபுதிபுவென்று உள்ளே நுழைந்தவர்கள் சேர்களையும் அடித்து நொறுக்கினார்கள்.

திருமணத்துக்கு மந்திரம் ஓத வந்த பிராமணர்கள், பத்திரிகை போட்டோகிராபர்களுக்கு கண்ணாடி துண்டுகள் குத்தி காயங்கள் ஏற்பட்டது. அனைவரும் உயிர் பயத்தில் உரைந்தனர்.

இந்தக் காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்து பேச்சை சீக்கிரம் முடித்த விஜய், ரசிகர்களோடு ரசிகராக கும்பலில் புகுந்து பக்கவாட்டு சுவர் ஏறிகுதித்து மண்டபத்தை விட்டு வெளியேறி தயாராக இருந்த காரில் தப்பிவிட்டார். ரசிகர்கள் கூட்டம் மண்டபத்தில் உள்ள கும்பலில் விஜயை தேடி ஏமாற்றம் அடைந்தது.

விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் இதுகுறித்து கூறியதாவது, இவ்வளவு கூட்டம் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இனி வரும் காலங்களில் முன்னெச்சரிக்கையாக இருப்போம் என்றனர்.

விஜய் நடத்தி வைத்த கல்யாணம் கலாட்டா கல்யாணமாகிப்போனது மட்டுமல்லாமல், கல்யாணத்துக்கு வந்திருந்தவர்கள் சாப்பாடு இல்லாமல் பட்டினியோடு சென்றனர்.


 
படங்கள் நன்றி நக்கீரன்

11 comments:

 1. கடைசில மண்டப ஓனருக்கு நஷ்டம்

  ReplyDelete
  Replies
  1. மண்டப ஓனருக்கு ஒன்னும் நஷ்டம் வராது தலைவரே....

   அதை புக் செய்த ரசிகர்கள் அதை தரவேண்டியிருக்கும்....

   ரசிகருக்கு எப்பவும் செலவு செய்யவேண்டிய வேலைதானே...

   Delete
 2. தமிழன்டா!
  கல்யாண பந்தலிலே ஒரு மாப்பிள்ளை பேப்பர் படிக்கும் அதிசய காட்சியை இப்பத்தான் பார்க்கிறேன். மனப் பெண்ணை விட பேப்பரா சுவாரஸ்யமா இருக்கு!

  அவன் தமிழன்டா!

  ReplyDelete
  Replies
  1. அவர்களும் எவ்வளவு நேரம்தான் பெண்ணையே பார்த்துக்கிட்டு இருப்பாரு...

   அதாவது காலையில் வரவேண்டிய தளபதி சொன்ன நேரத்துக்கு வராது தாமதமாக வந்திருக்கிறார்...

   அதனாலதான் எல்லாம்...

   Delete
  2. அங்க உன்னொரு மாப்பிள்ளை தூங்கறான்! இவனுங்களைக் கட்டிக் கொண்டு பாவம் அந்த பெண்கள். திருமண நாளில் உலகத்திலேயே ஒரே ஒரெ அழகான பொருள்---உயிருள்ள பொருள் பெண்ணும் அந்தந பெண்மையும்...அதைக் கூட ரசிக்கத் தெரியாத மூடர்கள்; போனா வருமா இந்நாள்?

   இவனுங்களுக்கு முதல் இரவு வேற!

   என்னத்த முதல் இரவுக்கு போய்...என்னத்தை முதல் இரவில்...!

   Delete
 3. தளபதி என்றால் தப்பிக்க தெரிய வேண்டுமல்லவா...?

  ReplyDelete
  Replies
  1. அதற்கு பலிகடா ரசிகள்தானா....

   தளபதின்னா தப்பிக்கனுமா...
   புதுசாயிருக்கு...

   Delete
 4. எல்லாம் ஒரு விளம்பரம்தான்.

  ReplyDelete
  Replies
  1. அதுக்கு பலிகடா... ரசிகர்கள்தான்....

   என்ன பண்றது...

   Delete
 5. இதெல்லாம் செட்டப் கல்யாணம். கல்யாணமாகி ஆறு மாச ஆன ஜோடிகளை கூட சீர் வரிசைக்காக 2 வது முறை
  கல்யாணம் பண்ணிக்க வைக்குற கொடுமைல்லாம் நடந்திருக்கு

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...