கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

18 March, 2013

பரதேசி, விஸ்வரூபம், வழக்கு எண் 18/ 9-க்கு, தேசிய விருதுகள் ... ஓரம் கட்டப்பட்ட தமிழ் சினிமா..!


2012-ம் ஆண்டு சிறந்த படங்கள், சிறந்த திரைக் கலைஞர்களுக்கான 60 வது தேசிய விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. வழக்கு எண் 18/9 மற்றும் விஸ்வரூபம் ஆகிய படங்களுக்கு தலா இரு விருதுகள் கிடைத்துள்ளன. 

பாசு சட்டர்ஜி தலைமையிலான நடுவர் குழு அறிவித்துள்ள இந்த விருதுகளில் அகில இந்திய அளவில் சிறந்த படமாக பான் சிங் தோமரும், சிறந்த பொழுதுபோக்குப் படமாக விக்கி டோனர் படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

சிறந்த நடிகர் பான் சிங் தோமரில் நடித்ததற்காக இர்பான் கான் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மராத்தி படம் தாக்-ல் நடித்த உஷா ஜாதவ் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த துணை நடிகர் விருது விக்கி டோனரில் நடித்த அனுகபூருக்கு வழங்கப்பட்டுள்ளது. 


இஷாக்காதே படத்தில் நடித்த பரிநிதி சோப்ராவுக்கு நடுவர் குழுவின் சிறப்பு விருது வழங்கப்படுகிறது. வித்யாபாலன் நடித்த கஹானிக்கு சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்கான விருதும், அக்ஷய் குமார் நடித்த ஓ மை காட் படத்துக்கு சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதும் தரப்படுகிறது. 

விஸ்வரூபம் பிராந்திய மொழிப் படங்களில் கமல்ஹாஸன் இயக்கி தயாரித்து நடித்த விஸ்வரூபம் படத்துக்கு சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த நடனத்துக்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 


பாலாஜி சக்திவேல் இயக்கி வெளிவந்த வழக்கு எண் 18/9 படத்துக்கு சிறந்த ஒப்பனைக்கான விருது கிடைத்துள்ளன. சங்கர் மகாதேவன் சிறந்த பாடகருக்கான விருது சிட்டகாங் படத்தில் இடம்பெற்ற போலோ நா பாடலைப் பாடிய சங்கர் மகாதேவனுக்கு கிடைத்துள்ளது. 

சிறந்த பாடகிக்கான விருது, மராத்தியில் வெளியான ஆர்த்தி அங்க்லேகர்ட்கேகர் படத்தில் இடம்பெற்ற நா மூன் டான் பாடலைப் பாடிய சம்ஹிதாவுக்குக் கிடைத்துள்ளது. சிறந்த இசை சிறந்த இசையமைப்பாளருக்கான விருது மராத்தி இசையமைப்பாளர் ஷைலேந்திர பார்வேவுக்கு கிடைத்துள்ளது. படம்: சம்ஹிதா. சிறந்த பின்னணி இசைக்கான விருது மலையாளப் படம் கலியாச்சனுக்கு இசையமைத்த பிஜி பாலுக்கு கிடைத்துள்ளது. 

சிறந்த பாடலுக்கான விருது சிட்டகாங்கில் இடம்பெற்ற போலோ நா பாடலுக்குக் கிடைத்துள்ளது. மலையாளம் மலையாளத்தில் வெளியான உஸ்தாத் ஓட்டல் படத்தின் வசனத்தை எழுதிய அஞ்சலி மேனனுக்கு சிறந்த வசனகர்த்தா விருது கிடைத்துள்ளது. தெலுங்கில் சிறந்த படமாக ராஜமௌலி இயக்கிய ஈகா தேர்வு செய்யப்பட்டுள்ளது சிறந்த இயக்குநர் மராத்தியில் வெளியான தாக் (Dhag) படத்தை இயக்கிய ஸ்ரீ சிவாஜி லோட்டன் பட்டேலுக்கு சிறந்த இயக்குநருக்கான விருது கிடைத்துள்ளது. 

இந்திரா காந்தி விருது புதுமுக இயக்குநரின் சிறந்த படத்துக்கான இந்திராகாந்தி தேசிய விருது சிட்டகாங் (இந்தி) மற்றும் 101 சூடியங்கள் (மலையாளம்) படங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ரிதுபர்னோ கோஷ் பிரபல வங்காள இயக்குநர் ரிதுபர்னோ கோஷ் (சித்ராங்கதா) மற்றும் இயக்குநர் நவாசுதீன் சித்திக் ஆகியோருக்கு நடுவர் குழுவின் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தமிழுக்கு அவ்வளவு சிறப்பானதாக இல்லை. பல்வேறு சிறந்த தமிழ்ப்படங்கள் வந்தும் இந்த ஆண்டிற்காக விருகள் பட்டியலில் அதிகம் இட்ம் பெற வில்லை. இது தமிழ் திரைஉலகினருக்கும் தமிழ் ரசிகர்களுக்கும் பெருத்த ஏமாற்றமே..

3 comments:

  1. நமக்கும் ஒரு காலம் வரும்... நம்புவோம்...

    ReplyDelete
  2. இவ்வளவாவது கிடைத்ததே மகிழ்ச்சி அடைவோம்.

    ReplyDelete
  3. காலம் பதில் சொல்லும் நண்பா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...