கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

20 March, 2013

நாம்ம ஆளுக எப்படியிருக்காங்க பாருங்க..! (இதில் உள்குத்து ஏதும் இல்லை)இந்தியரும் அமெரிக்கரும் ஒரு சாக்லெட் கடைக்குள் நுழைந்தனர். அனைவரும் பிஸியாக இருந்த நேரம் அமெரிக்கர் 3 சாக்லெட் பார்களை யாருக்கும் தெரியாமல் எடுத்து தனது பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார். சிறிது நேரம் கழித்து இருவரும் கடைக்கு வெளியே வந்தனர்.


அமெரிக்கர் தான் யாருக்கும் தெரியாமல் எடுத்த 3 சாக்லெட் பார்களையும் தனது பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்து இந்தியரிடம் காட்டி, 'நாங்கெல்லாம் யாரு! அப்பவே நாங்க அப்படி..! பார்த்தியா யாருக்கும் தெரியாம 3 சாக்லெட் பார்களை எடுத்து கொண்டு வந்துட்டேன் பார்த்தியா?.. என்று பெருமை அடித்ததோடு மட்டுமில்லாமல் உன்னால இதைவிட பெரிசா ஏதாவது செய்ய முடியுமா? என்று சவால் வேறு விட்டார் இந்தியரிடம்.


விடுவாரா இந்தியர். '.உள்ள வா. உனக்கு உண்மையான திருட்டுன்னா என்னன்னு காட்டுறேன்னு சொல்லி அமெரிக்கரை சாக்லெட் கடையின் உள்ளே அழைத்துச் சென்றார்.


விற்பனை கவுன்டரில் இருந்த பையனிடம் சென்ற இந்தியர், அவனிடம் கேட்டார், நான் ஒரு வித்தை காட்டுறேன் பார்க்கிறியா?..


பையனும் சரியென்று தலையாட்ட கவுண்டரில் இருந்து 1 சாக்லெட் பார் எடுத்து, அதனை தின்று முடித்தார். அடுத்து இன்னொரு சாக்லெட் பார் எடுத்து அதனையும் தின்று தீர்த்தார். பிறகு 3-வதாக ஒரு சாக்லெட் பார் எடுத்து அதனையும் தின்று முடித்துவிட்டு கவுன்டரில் இருந்த பையனை ஏறிட்டுப் பார்த்தார்.


கவுன்டரில் இருந்த பையன் கேட்டான், 'எல்லாம் சரி. இதில் வித்தை எங்கே இருக்கிறது?.'


இந்தியர் அமைதியாக பதில் அளித்தார், இப்போ 'என் ஃப்ரெண்டோட பாக்கெட்ல செக் பண்ணிப்பாரு. நான் சாப்பிட்ட 3 சாக்லெட் பாரும் இருக்கும்.'


ஹா.. ஹா.. ஹா.. யாருகிட்ட.. எப்படி நாம்ம ஆளுக... (பேஸ்புக்கில் படித்தது)

டிஸ்கி..: இப்பவாவது தெரியுதா இதில் ஏதும் உள்குத்து இல்லையென்று...

10 comments:

 1. சௌந்தர் நல்ல கதைதான். இங்கேதான்யா நாம நிக்குறோம்.

  ReplyDelete
 2. இதில உள்குத்தே இல்லை!

  ReplyDelete
 3. செம்ம...
  முடியுமா... தேக்குடா..!!!

  :-)

  ReplyDelete
 4. ஆஆஆழமான கருத்துமிக்கதாய் ஒரு கதை...
  தந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 5. தமிழனா இருப்பானோ?

  ReplyDelete
 6. அன்பின் சௌந்தர் - அருமையான கதை - நல்லாவே இருக்கு - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

  ReplyDelete
 7. இந்தியர் புத்திசாலி தான்

  ReplyDelete
 8. இந்தியன்னா சும்மாவா...? கதை சூப்பர்!

  ReplyDelete
 9. நல்ல நகைச்சுவையை பகிர்ந்தமைக்கு
  மிக்க நன்றி சௌந்தர் ஐயா.
  அதைவிட உங்கள் தளம் எனக்குத்
  திறந்ததுதான் பெரும் மகிழ்ச்சி.

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...