கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

20 June, 2013

ரஜினியை பற்றி நான் தவறான அர்த்தத்தில் சொல்லவில்லை..! மாற்றிய தனுஷ்


நேற்று மாலை நட்சத்திர விடுதியில் அம்பிகாபதி பிரஸ்மீட். ராஞ்சனா படத்தின் தமிழ் பதிப்பின் பெயர்தான் அம்பிகாபதி. வரும் 21ஆம் தேதி படம் வெளியாகிறது.

தனுஷ், சோனம் கபூர், இயக்குனர் ஆனந்த் எல்.ராய், தயா‌ரிப்பாளர், கதை எழுதியவர் என அனைவரும் கலந்து கொண்டனர். அடுத்து யாருடன் ஜோடியாக நடிக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு பாதுகாப்பாக, தனுஷ் என்று பதிலளித்தார் சோனம் கபூர். இதே கேள்விக்கு தனுஷின் பதில், யாராக இருந்தாலும் பரவாயில்லை அழகாக இருந்தால் போதும்.

இப்போதெல்லாம் விழாக்களுக்கு வேட்டி, சட்டையில்தான் வருகிறார் தனுஷ். விஜய் அவார்ட்ஸிலும் வேட்டி, சட்டை, நேற்றும் வேட்டி, சட்டை. இப்படி வருவது பிடிச்சிருக்கு, தமிழர்களின் பாரம்ப‌ரிய உடைதானே என்றார்.


கடந்த இரண்டு நாட்களாக, ர‌ஜினியால் எனக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்று தனுஷ் கூறியதுதான் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. விடுவார்களா அதை? கேட்டே விட்டார்கள்.

ர‌ஜினியின் மருமகனாக இருப்பது எனக்கு எந்த பலமும் இல்லை பலவீனமும் இல்லை என்றுதான் கூறினேன். அதனை அந்த நிருபர் தனக்கு ஏற்ற மாதி‌ரி எழுதிவிட்டார். ர‌ஜினியோடு என்னை ஒப்பிடாதீர்கள். நான் 25 படங்கள்தான் நடித்திருக்கேன். அவர் சினிமாவின் முகமாக இருக்கிறார் என்றார்.

பிரஸ்மீட்டுக்கு வந்த இன்னொருவர் அபிராமி ராமநாதன். இவர்தான் அம்பிகாபதியின் தமிழக விநியோக உ‌ரிமையை வாங்கியிருக்கிறாராம். தனுஷ் இதுவரையான வியாபார எல்லைகளை எல்லாம் உடைத்துவிட்டார், படம் பெ‌ரிய ஹிட்டாகும் என பரவசப்பட்டார்.

2 comments:

  1. பாவம்பா இந்த பிரபலங்கள்.., மனசுக்கு தோணுனதை சாயம் பூசி தெரியாவிட்டால் பிரச்சனைதான்

    ReplyDelete
  2. தனுஷ் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...