கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

17 June, 2013

காதலில் இப்படிகூடவா நடக்கும்...! துணைப்போகும் தகவல் தொடர்புகள்..!

 
கண்டதும் காதல் என்பது போய், காணாமலே காதல் கொள்ளும் தன்மைகள் வளர்ந்து, இன்று விபரீதங்களை விளைவித்து வருகின்றன. 
 
பேஸ்புக், தொலைபேசி, அலைபேசி காதல்கள், வாழ்க்கையை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளன. ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்ற வாழ்வும் சீர்குலைந்து வருகிறது. தன்னுடன் படித்த சக கல்லூரி மாணவனைக் காதலித்து, அதன் பின், பேஸ்புக் மூலம் குறுந்தகவல்களை அனுப்பி பழகத் துவங்கியதும், ஏற்கனவே, காதலித்தவனை விட்டு விட்டு, பேஸ்புக் மூலம் நண்பனானவனை, பெண்ணொருத்தி காதலித்ததன் விளைவு, கொலையில் முடிந்ததை, ஓர் மாணவன் கொலை நிகழ்வு சொன்னது.

அலைபேசி மூலமாக, சுகாஷ் எனும் ஆண் சொன்ன ஆசை வார்த்தையை நம்பி மோசம் போனது, வழக்குகளில் சிக்கி, கைதாகி, சிறையிலிருக்கும், நடிகை லீனா மரியா பாலின் காதல் வாழ்க்கை அறிவுறுத்தியது.
 
காதலித்து கலப்புத் திருமணம் செய்து, இரு சமூகங்களும், இரு கட்சிகளும் மோதிக் கொள்ளும் அளவிற்கு, தர்மபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசனும், திவ்யாவும் திருமணம் செய்து கொண்ட, 10 மாதங்களுக்குப் பின், பிரிந்து வாழத் துவங்கிய காதல் வாழ்வையும், சமீபத்தில் தமிழகம் கண்டது.
 
காதலித்தவன், வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய இருப்பதை அறிந்து, அவன் வீட்டின் முன்னே போராட்டத்தில் ஈடுபடும் பெண்களும், சில நேரங்களில் காதலித்தவனோடு கொண்ட தகாத உறவின் காரணமாக, பிறந்த குழந்தையுடன் போராடும், காதலில் ஏமாந்த பெண்களின் எண்ணிக்கையும், அதிகரித்த வண்ணம் உள்ளன.



"காதல் காதல் காதல்; காதல் போயின் சாதல் சாதல் சாதல்' என்ற முன்னோர் மொழி, கொலை, தற்கொலை என, வெவ்வேறு வடிவங்களில் வருவது ஆபத்தானது.
 
பெற்றோர் சொல் கேளாமல், முன்யோசனைகள் எதுவுமின்றி, ஆடம்பர வாழ்விற்கு ஆசைப்பட்டு, காதலனாலும், காதலியாலும் மோசம் போவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதும், இதனால், கலவரங்கள் வெடிக்கவும், கட்சிகள் தங்களுக்குள் மோதிக் கொள்ளவும், அமைதியற்ற சூழல்கள் ஏற்படவும், நவீன யுகக் காதல்கள் காரணிகளாகிப் போயுள்ளன.
 
காதல் தவறல்ல... காதலிப்பதும் தவறல்ல! அந்தக் காதல் எப்படிப்பட்டது, எவருடனானது என்பதை சிந்திக்காமல், மேற்கொள்ளும் காதலே தவறானது. 
 
அகத்தை அறிவிக்காது, முகத்தை மட்டுமே அறிவிக்கும் முகநூல் காதல்களுக்கும்; அகத்தை அறிவிக்காது, ஆசை வார்த்தைகளை மட்டுமே அறிவிக்கும், அலைபேசி காதல்களுக்கும் விடை கொடுத்து, மனம் ஒத்த காதலை வரவேற்க, இளையோர் முன் வருவார் எனில், வாழ்வாங்கு வாழலாம்.

6 comments:

  1. காதல் தவறல்ல... காதலிப்பதும் தவறல்ல! அந்தக் காதல் எப்படிப்பட்டது, எவருடனானது என்பதை சிந்திக்காமல், மேற்கொள்ளும் காதலே தவறானது.
    >>
    சரியான கருத்து மாற்று கருத்தே இல்லை இதற்கு

    ReplyDelete
  2. வாழ்வாங்கு வாழ யாரும் (தா)தயாராக இல்லை என்பதும் உண்மை...

    ReplyDelete
  3. காதலினால் நன்மையும் இருந்தாலும் துரோகம் மட்டுமே தீமையாய் வாழ்க்கைப் பாதையை மாற்றிவிடுகிறது

    ReplyDelete
  4. காதல் தவறல்ல... காதலிப்பதும் தவறல்ல! அந்தக் காதல் எப்படிப்பட்டது, எவருடனானது என்பதை சிந்திக்காமல், மேற்கொள்ளும் காதலே தவறானது.//

    சரியாக சொன்னீர் போலீசு, அண்ணனும் காதல் கல்யாணம்தான் ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  5. இளையோருக்கு நல்ல எச்சரிக்கை.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...