கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label அம்மா. Show all posts
Showing posts with label அம்மா. Show all posts

27 July, 2016

அம்மா சொன்ன உண்மை... அப்துல்கலாம் நெகிழ்ச்சி..!


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சிறந்த துறவியான ஷேக் அப்துல் காதர் அல்-ஜிலானி வாழ்க்கையில் நிகழ்ந்த கதையை, தற்போது நான் உங்களுக்கு சொல்லப் போகிறேன். 
 
ஒரு நாள் சிறுவன் அப்துல் காதர் தனது வீட்டுக் கூரையின் மேல் ஏறிக்கொண்டான். அங்கிருந்து பார்க்கையில் ஏராளமான மக்கள் அரபி மலைக் குன்றுகளில் இருந்து திரும்பி வந்துக்கொண்டிருப்பது தெரிந்தது. அவர்கள் அந்த இடத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மைல் அப்பால் இருக்கும் மெக்காவுக்கு ஹஜ் பயணமாக சென்று, திரும்பி வருகிறார்கள்.
 
குழப்பமடைந்த அப்துல் காதர் தனது அன்னையிடம் சென்று, அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வதற்காக பாக்தாத் செல்ல அனுமதி கேட்டான். புனித அழைப்பை அந்தத் தாய் புரிந்துகொண்டார். காதர் உடனே பாக்தாத் செல்ல அனுமதித்தார். தனது தந்தையிடமிருந்து அவன் பங்காக பெறப்போகும் நாற்பது தங்க நாணயங்களையும் தாய் அச்சிறுவனிடம் அளித்தார். 
 
அவனை வழியனுப்புவதற்காக கதவு அருகே வந்த அந்த தாய், என்னருமை மகனே! நீ போகிறாய்! இறுதித் தீர்ப்பு வரும் நாள் வரை நான் உன்னை பார்க்க போவதில்லை என்றாலும் அல்லாவுக்காக உன்னிடமிருந்து இருந்து என்னை பிரித்துக் கொண்டேன். ஆனால் என்னிடமிருந்து ஒரு அறிவுரையை நீ எடுத்துச் செல்ல வேண்டும். என் மகனே, நீ எப்பொழுதும் உண்மையை உணர வேண்டும், உண்மையே பேச வேண்டும் உனது வாழ்க்கையைப் பணயம் வைக்க நேரிடினும் உண்மையையே பரப்ப வேண்டும் என்று கூறினார்.

அப்துல் காதரும் மற்றவர்களும் சிறிய வண்டிகளில் குழுவாக பாக்தாத்தை நோக்கி பயணித்தானர். வண்டிகள் கடினமான நிலபரப்பை கடந்து செல்லும் போது, குதிரைகளில் திடீரென வந்த கொள்ளையர் கூட்டம் அவர்களை தாக்கி பொருட்களை கொள்ளையடித்தது. யாரும் அச்சிறுவனை பொருட்படுத்தவில்லை. 
 
கொள்ளையர்களில் ஒருவன் அப்துல் காதரை கவனித்து ஏய் சிறுவனே, பாவம் நீ ! உன்னிடம் ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டான். அப்துல் காதர், ஆமாம். என் தாயார் 40 பொற்காசுகளை என் சட்டையின் உள்பகுதியில் தைத்து வைத்துள்ளார் என்று பதில் அளித்தான். அதை கேட்ட கொள்ளையன், நகைச்சுவைக்காக காதர் அவ்வாறு சொல்வதாக எண்ணி புன்னகைத்தான். அவனை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டுச் சென்றான். 
 
கொள்ளையர் தலைவன் அங்கு வந்தபோது, இந்த பையனை அவனிடம் கொண்டு சென்றனர். இந்த பையன் சொல்கிறான் இவனிடம் 40 பொற்காசுகள் உள்ளனவாம். பயணிகள் அனைவரையும் கொள்ளையடித்து விட்டோம். ஆனால் இவனைத் தொடக்கூட இல்லை. இவனிடம் பொற்காசுகள் உள்ளதை யாராவது நம்புவார்களா? என்று ஒரு கொள்ளையன் சொன்னான். கொள்ளையர் தலைவன் மீண்டும் அப்துல்காதரை கேட்க, அவன் அதே பதிலை சொன்னான். தலைவன் அவனை அருகில் அழைத்து சட்டையை ஆராய, சிறுவன் சொன்னவாறு பொற்காசுகள் சட்டையின் உள்பகுதியில் தைக்கப்பட்டு இருந்தன.

அதிர்ச்சியுற்ற கொள்ளையர் தலைவன், எதனால் இந்த உண்மையை சொன்னாய்? என்று அப்துல் காதரை வினவ, வாழ்க்கையை இழக்கும் சூழ்நிலை வந்தாலும் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்று என் தாய் சத்தியம் வாங்கிக் கொண்டார். 40 பொற்காசுகள்தானே, போகட்டும். என் தாயாருக்கு கொடுத்த வாக்கை மீறமாட்டேன். அவருக்கு நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டேன். அதனால்தான் உண்மையை கூறினேன், என்று பதில் அளித்தான். 
 
இதைக் கேட்ட கொள்ளையர்கள் விம்மி விம்மி அழுதனர். உனது தாயாரின் அறிவுரைக்கு இவ்வளவு மதிப்பளிக்கிறாயே! ஆனால் நாங்களோ, பல ஆண்டுகளாக எமது பெற்றோருக்கும், எம்மை படைத்தவனுக்கும் துரோகம் இழைத்துவிட்டோம். இன்று முதல் நீர்தான் எமது தலைவர் என்று கொள்ளையர்கள் கூறினர். கொள்ளையடிப்பதை அன்று முதல் விட்டொழித்து திருந்தி வாழ்ந்தனர். 
 
ஷேக் அப்துல் காதர் அல்- ஜிலானி என்ற ஒப்பற்ற துறவி பிறந்ததையும் உலகம் கண்டது. ஒரு தாய் தனது குழந்தைக்கு உண்மையைப் பற்றி சொன்ன செய்தியில் துறவி உருவானார். இந்த இடத்தில் இதைசொல்வதில் நான் மிகவும் நெகிழ்ச்சி அடைகிறேன்... இத்தருணத்தில் திருவள்ளுவரின் வாக்கை நினைவுகூற விரும்புகிறேன்.

மனத்தோடு வாய்மை மொழியின் தவத்தோடு
தனஞ்செய் வாரின் தலை.

அருந்தவத்தையும், வாரி வழங்கும் கொடையையும்விட சிந்தனையிலும், செயலிலும் உண்மையோடு இருப்பது அதிக சக்தி வாய்ந்தது என்பதே இக்குறளின் பொருளாகும்.
 
# 57-வது குடியரசு தின விழாவில் அப்துல்கலாம் ஐயாவின் உரையில் இருந்து...!

15 March, 2012

தள்ளிப்போகிறது என் தற்கொலை...!


ட்டம் வாங்கி பல நாளாகியும்
இன்னுமொறு வேலை இல்லையென...

சாப்பிட உட்காரும் போதெல்லாம்
சித்தி பரிமாறுகிறார்
சாதத்தோடு சில சவுக்கடிகள்...!

சாயங்காலம் வீடு திரும்புகையில்
என்மீது அப்பா பொழியும்
அமிலத்தில் நனைத்த வார்த்தைகளை
தவிர்த்துவிடவும்...!

திர்பார்த்தே நடத்தும் சமூகம்
எப்போதும் ஏமாற்றத்தையே
திருப்பிக்கொடுக்கும் போதும்...!

லிகொண்டு மனம்துடிக்கும்
ஒவ்‌வொறு சந்தர்ப்பங்களில் முயற்சித்தும் 
தோற்றுதான் போகிறது
என் தற்கொலை...

தரவற்று தனித்திருக்கும்
என் அம்மாவுக்காக....!


கவிதை கரு : சமூகம்
படங்கள் : கூகுள்


21 December, 2011

அம்மாவை மாற்றினாலும் நல்லாதான் இருக்கும்...

நூலைப்போல சேலை, தாயைப்போல பிள்ளை என்பார்கள். உலக உயிரினங்கள் தன்னுடைய வம்சத்தை வளர்க்க தன்னைப்போல
குட்டிகளையும், கன்றுகளையும் ஈனும்.
 

அப்படியில்லாமல் மாறுதலுக்காக அம்மாவை மாற்றினால் எப்படியிருக்கும் என்று யோசித்து, கூகிலில் வலை வீசுகையில் சிக்கியவைகள்...



வாத்துகளுக்கு அம்மாவாக நாய்
 

பூனையை அடைகாத்து அம்மாவாகிறது கோழி



கொழி குஞ்சுகளுக்கு அம்மாவாக பூனை


அணில்களுக்கு பால் கொடுக்கும் அம்மாவாக பூனை


அம்மா பிள்ளையாக எலி, பூனை.


சிங்க அம்மாவும், செல்ல செம்பறிஆடும்.


புலிகளுக்கு பிறந்தது பன்றி.


குரங்கு அம்மா.. பூனை குழந்தை..

அம்மாவை மாற்றிப்பார்த்தாலும் அன்போடு பழகினால் எல்லாம் ஆனந்தம்தான்...!

எப்படியிருக்குது நம்ம காமினேஷன்... 

19 December, 2011

ஆட்சியை பிடிக்க சசிகலா சதியா..? ஜெயலலிதா பகீர் குற்றசாட்டு...!




இன்றைபொழுது அதிமுக-வினற்க்கு அதிர்ச்சி மற்றும் ஆச்சரியமான நாள். அது சசிகலா உள்ளிட்ட மன்னர்குடிவம்சத்தை சார்ந்த 12 பேர்  கூண்டோடு அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக நடந்துவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஒரு வேளை பாதகமாக தீர்ப்பு வந்தால் அதைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்க சசிகலா மற்றும் அவரது கூட்டாளிகள் தரப்பு திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதனால்தான் ஜெயலலிதா, ஒட்டுமொத்தமாக அத்தனைபேரையும் அதிமுக-வை விட்டு விரட்டி விட்டதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

என்ன நடந்தது என்று பார்ப்பதற்குள் என்னவெல்லாமோ நடந்து விட்டது என்று ஒரு வார்த்தை சொல்வார்கள். ஜெயலலிதா விஷயத்தில் அதுதான் நடந்திருக்கிறது. தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதை யோசித்துப் பார்ப்பதற்குள் என்னவெல்லாமோ நடந்தேறி விட்டதைபார்த்து அதிர்ந்து போய்த்தான் சசிகலா உள்ளிட்ட அந்த கும்பலை விரட்டி விட்டுள்ளார் ஜெயலலிதா என்கிறார்கள்.

விஷயம் ரொம்ப சிம்பிள். பெங்களூர் கோர்ட்டில் 14 வருடங்களுக்கும் மேலாக நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கை மையமாக வைத்து சசிகலா ஒரு அபாரமான திட்டத்தை வகுத்து செயல்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதாவது இந்த சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பாதகமாக நிச்சயம் தீர்ப்பு வரும். எனவே அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து விலக நேரிடலாம். அப்படி நடந்தால், தமிழகத்தின் ஆட்சியைப் பிடிப்பது என்பதுதான் இந்த சதித் திட்டத்தின் மையப் புள்ளி என்கிறார்கள் 'போயஸ் கார்டனுக்கு' நெருக்கமானவர்கள்.

ஜெயலலிதா 3-வது முறையாக முதல்வர் பதவிக்கு வந்த நாள் முதலே இந்த சதித்திட்டத்தை படிப்படியாக அமல்படுத்த ஆரம்பித்து விட்டது சசிகலா தரப்பு என்கிறது விவரம் அறிந்த வட்டாரங்கள்.

முதலில், ஜெயலலிதாவுக்கு அரசு நிர்வாகத் தகவல்கள், ஏனைய முக்கியத் தகவல்கள் எதுவும் போகாமல் தடுக்க ஆரம்பித்துள்ளது இந்த 'குரூப்'. உளவுத்துறைத் தகவல்களை ஜெயலலிதாவிடம் போகாமல் திட்டமிட்டு தடுத்துள்ளது. ஆரம்பகட்டமாக நேர்மையான அதிகாரியாக அறியப்பட்ட கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரனை உளவுத்துறை பொறுப்பிலிருந்து திட்டமிட்டு அகற்றியுள்ளனர். அவருக்குப் பதில், ஐ.ஜி.யான பொன்.மாணிக்கவேலை கொண்டு வந்துள்ளனர்.

சசிகலா தரப்பிலிருந்து நியமிக்கப்பட்ட பொன்.மாணிக்கவேல் உளவுத்துறை தகவல் எதையும் நேரடியாக ஜெயலலிதாவுக்குக் கொண்டு போகவே இல்லை என்கிறார்கள். அதற்கு மாறாக சசிகலாவிடமே நேரடியாக உளவுத் தகவல்களை கொடுத்து வந்துள்ளார். இதில் சந்தேகம் வந்து விடக் கூடாது என்பதற்காகவே மாலைக்குமேல் ஜெயலலிதாவை யாரும் சந்திக்காத வகையில் திட்டமிட்டு ஜெயலலிதாவையே குழப்பி வைத்துள்ளனர்.

இதனால் ஒவ்வோறு நாளும் மாலைக்கு மேல் ஜெயலலிதாவை உளவுத்துறையினர் மட்டுமல்லாமல் யாருமே தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நெருங்கிய அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள், உயர் காவல்துறை அதிகாரிகள், கட்சித் தலைவர்கள் என யாருமே ஜெயலலிதாவை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அத்தனை பேருமே சசிகலாவை பார்க்க வேண்டிய நிலையை செட்டப் செய்து உருவாக்கியுள்ளனர். அதாவது திட்டமிட்டு செய்துள்ளனர்.

இதெல்லாம்  முதலில் ஜெயலலிதாவுக்குப் புரியவில்லை என்கிறார்கள். பொன்.மாணிக்கவேலின் செயல்பாடுகள் குறித்து ஜெயலலிதாவுக்குச் சந்தேகம் வந்தபோதுதான் நடந்தது, நடக்கிறது, நடந்து கொண்டிருப்பது என்னவென்பது லேசாக அவருக்குப் புரிந்திருக்கிறது. இதனால்தான் பொன்.மாணிக்கவேலை அவர் தூக்கினார்.

இதையடுத்து சசிகலா தரப்பில் என்ன நடக்கிறது என்பதை அவர் சற்று சீரியஸாகவே கண்காணிக்க ஆரம்பித்தார். அப்போதுதான் தன்னைச் சுற்றி எவ்வளவு பெரிய சதிவலை பின்னப்பட்டுள்ளது என்பது அவருக்குப் புரிந்து அதிர்ந்திருக்கிறார். அதாவது கடந்த 6-மாதமாக தான் பெயரளவுக்கே முதல்வராக இருந்திருப்பதையும், உண்மையில் நிர்வாகத்தில் முழு அளவில் சசிகலாவே தலையிட்டு வந்திருப்பதும் அவருக்குப் புரிந்திருக்கிறது.

இதையடுத்து சசிகலாவுக்கு நெருக்கமான மூத்த ஐஏஎஸ் அதிகாரி பன்னீர்செல்வத்தை திட்ட செயலாக்கல் துறை செயலாளர் பதவியிலிருந்து தூக்கினார் ஜெ,. இந்தத் துறைதான், அதிமுக அரசின் இலவச திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்த இலவசத் திட்டங்களை இந்ததுறை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனது குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவரான பன்னீர்செல்வத்தை வைத்து பெரிய அளவில் விளையாடியுள்ளார் சசிகலா என்கிறார்கள். மேலும் பன்னீரை வைத்து நடராஜனும் பெருமளவில் காரியங்கள் சாதித்துள்ளாராம். பல முக்கிய நியமனங்களில் தனக்கு வேண்டியவர்களை போட்டிருக்கிறார் நடராஜன் என்கிறார்கள்.

மேலும் தலைமைச்செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கியிடமே சசிகலா தரப்பு நேரடியாக உரச, விஷயம் ஜெயலலிதாவுக்கு போயுள்ளது. சாரங்கியே இதுகுறித்து நேரடியாக புகார் தர கோபமான ஜெயலலிதா, பன்னீர்செல்வத்தைத் தூக்க முடிவு செய்தார். இதை உணர்ந்து பன்னீரே பதவியை விட்டு போய் விட்டார்.

மொத்தத்தில் ஆட்சியைப் பிடிக்கும் சதி, அவர்களை மீறி நாம் நடந்து விடக் கூடாது என்று நடராஜனுடன் சேர்ந்து சசிகலா போட்ட திட்டம் உள்ளிட்டவைதான் ஜெயலலிதாவின் விஸ்வரூப கோபத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

போயஸ் தோட்டத்தை மையமாக வைத்து நடந்துள்ள இந்த ரகசிய செயல்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

01 December, 2011

என்னது..? ஜெயலலிதாவை மக்கள் தான் காப்பாற்ற வேண்டுமா..?


ஒரு சமயம் நெப்போலியனின் வீரத்தைச் சோதிக்க விரும்பிய ஜரோப்பிய தலைவர்கள் ஒரு சோதனை செய்தார்கள்.

ஒரு கட்டத்தில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அனைவரும் ஒரே நேரத்தில் தேநீரை எடுத்து அருந்துவா‌ர்கள். அவ்வாறு அருந்த முற்படும்போது வெளியே காதைச் செவிடாக்கக்கூடிய பலத்த சப்தத்துடன் பீரங்கியை வெடிப்பதென முடிவு செய்தார்கள்.

அதே போல் அனைவரும் கூடியிருந்து தேநீர் அருந்தும்போது திடீரென பலத்த ஓசையுடன் பீரங்கியை வெடித்தார்கள். சப்தம் கேட்டு நடுங்கிப்போன அனைவரும் கோப்பையை கீழே போட்டு விட்டார்கள்.

ஆனால் நெப்போலியன் மட்டும் எதற்கும், அஞ்சாதவராய் மெல்ல தேநீரை அருந்தியவாறே என்ன சத்தம் அங்கே? என்று கேட்டார்.

அவருக்கு சோதனை வைத்தவர்களின் முகத்தில் ஈயாடவில்லையாம்.


ஆனால் தமிழகத்தில் ஆட்சியாளர்கள் அடிக்கிற கூத்து இருக்கிறதே.. அப்பப்பா... 

இவர் சரியில்லை என்று அவரை மாற்றினால், அவரும் சரியில்லை‌யென்று இவரைமாற்றுவோம் என, இப்படித்தான் 30 ஆண்டுகளாக திமுக, அதிமுக என மாற்றிமாற்றி வைத்துவிட்டு, தற்போதைய தமிழகத்திற்கு மாற்றுக்கு ஒரு தைரியமானத் தலைவர் இல்லாமல் தத்தளித்துக்கொண்டு இருக்கிறது.

ஆட்சியாளர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் அதைவிடுத்து மக்கள்தான் அரசை காப்பாற்ற வேண்டும் என்ற அறிக்கை, கேட்பதற்கே வித்தியாசமாய் இருக்கிறது. விலையேற்றம், வரிச்சுமைகளை அதிகரித்துவிட்டு மக்கள்தான் அரசை காப்பற்ற வேண்டும் என்றால் அப்போது இவர்கள் எதற்கு..? ஆட்சியாளர்கள் என்று அந்தஸ்த்து மட்டுதானா.

தலைமைபொருப்பில் இருப்பவர்கள் மக்களுக்கு எந்த இழப்பும், எந்த கஷ்டமும் இல்லாமல் பார்த்து கொண்டு தைரியத்துடன் ஆட்சியை நடத்தவேண்டும். அதைவிடுத்து மக்கள் தான் அரசுக்கு உதவவேண்டும் என்று சொல்வது கொஞ்சம்கூட நியாயம் இல்லாதது.

இனிவரும் காலங்களிலாவது மக்களின் பிரச்சனையில் அதிகம் அக்கறை எடுத்து  நடுத்தர மற்றும், சாமானிய மக்கள் அன்றாடம் அதிகம் பயன்படுத்தும் எரிபொருட்கள், பேருந்து, பால், மின்சாரம், காய்கறிகள் போன்றவற்றின் விலைகளை அரசு கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அரசின் வருவாயை உயர்த்த ஆயிரம் வழிகள் இருக்கிறது. அதை முறையான பொருளாதர வள்ளுநர்களை அனுகி அவர்களிடம் அறிவுரைப்பெற்று அதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். 

தற்போதைக்கு அரசு திவாலாகும் நிலைவந்தாலும் கலங்காது இருந்து, மக்களை காக்கும், தைரியமான ஒரு அரசு வரும் என்று நம்பிக்கையை எதிர்நோக்கி காத்திருப்போம்.

09 January, 2011

அம்மா...!


ம்மா
உயிரும் மெய்யும் கலந்
உயிர் மெய்...

நானே விளக்குகிறேன்...
அ - உயிர் எழுத்து
ம் - மெய் எழுத்து
மா - உயிர் ‌மெய்

ஆம்
அம்மா...
உயிரும் மெய்யும் கலந்த உயிர்மெய்..

நாத்திகர் வீட்டில் கூட
குடியிருக்கும் தெய்வம்...

விண்ணிலிருந்து
வீடுகளில் சிதறிவிழுந்த
‌தேவதைகளின் சிதறல்கள்...

த்தத்திலிருந்து
பாலைப்பிரிக்கும்
உயிர்கோளத்தின் அதிசய அன்னப்பறவை...

திட்டித்தீர்க்கும்
கரங்களுக்கு மத்தியில்
தட்டிக் கொடுக்கும் வளையல் கரம்...

னைந்தபடி வீடு நுழைந்தேன் ..
“அறிவிருக்கா ஏன் இப்படி நனையிற”
அண்ணன்...

“குடை எடுத்துக்கிட்டு போக வேண்டியது தானே..”
அக்கா...

“காய்ச்சல் வந்தா என் பணம் தான் வீண்”
அப்பா..

தலை துவட்ட துண்டுடன்
அம்மா...

ள்ளி அள்ளி குடித்தாலும் குறையாத
ஆனந்த அன்புக்கடல்...
இவள் திட்டினாள் சீர்படுவோம்
இவள் குட்டினாள் சிற்பமாவோம்...

அம்மா
குடும்பம் தலைக்க
தாங்கி நிற்கும் மனித ஆலமரம்...

 *****************************************************************************
இதையும் கேளுங்கள்...

 *****************************************************************************
இதையும் கேளுங்கள்...
Related Posts Plugin for WordPress, Blogger...