கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label விழிப்புணர்வு கட்டுரை. Show all posts
Showing posts with label விழிப்புணர்வு கட்டுரை. Show all posts

30 November, 2012

உள்ளத்தைக் கொடு, இல்லாவிட்டால் உயிரை விடு... பெருகி வரும் கொடூரக் காதலர்கள்!

 
காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீச்சு; காதலிக்க மறுத்த பெண்ணை கோடாரியால் வெட்டி கொலை செய்த மாணவன்; காதலுக்கு மறுப்பு தெரிவித்த சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர்.... இவை எல்லாம் இந்தவார ஊடகங்களில் வெளியான செய்திகள்.
 
காதல் என்பது ஒரு அற்புதமான உணர்வு. இருவருக்கும் அதே உணர்வு ஏற்பட்டால் மட்டுமே அது மலர்ந்து மணம் வீசும். ஆணுக்கோ, பெண்ணுக்கோ ஒருதலையாக தோன்றும் காதலுக்கு எதிராளி யாரும் பொறுப்பாக முடியாது. மாய்ந்து மாய்ந்து காதலித்து விட்டு அந்த காதல் மறுக்கப்படும்போது காதலியை குரூமாக இம்சிப்பதும் அதையும் தாண்டி கொலை செய்வதும் இன்றைக்கு அதிகரித்து வருகிறது. கடந்த இரு வாரங்களில் மட்டும் இதுபோன்ற மூன்று சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.


கண் இழந்த காரைக்கால் பெண்


காரைக்கால் நகரில் வசித்து வரும் வினோதினி சென்னையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரை ஒரு தலையாக காதலித்த சுரேஷ் தனது காதலை பலமுறை வினோதினியிடம் தெரிவித்தும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், தீபாவளி கொண்டாடுவதற்காக காரைக்கால் வந்த வினோதினியின் மேல் ஆசிட் வீசியுள்ளான். இதில் வினோதியின் முகம் சிதைந்து போய்விட்டது. கண் பார்வை முற்றிலும் பறிபோனது.

கோடாரியால் வெட்டிய குரூரம்


அரியானா மாநிலம் ஹிசாரில் குரு ஜம்பேஸ்வரர் பல்கலைக் கழகத்தில் பிடெக் படித்து வந்த மாணவி கீதிகா மேதாவும் அதே பல்கலை கழகத்தில் படிக்கும் பிரதீப் என்ற மாணவரும் நண்பர்களாக பழகியுள்ளனர். திடீரென கீதிகா மீது பிரதீப்புக்கு காதல் ஏற்பட்டது. இதனை கீதிகாவிடம் கூறியபோது அதற்கு கீதிகா மறுத்து விட்டார். இதன்பின்னர் பிரதீபிடம் பேசுவதில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர், சில தினங்களுக்கு முன் பல்கலைக்கழக வளாகத்திலேயே கீதிகாவை கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ளார். இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பிரதீப்.

 

பெங்களூரு சிறுமிக்கு கத்தி குத்து


பெங்களூர் தாவணகெரே தாவணகெரே பகுதியை சேர்ந்த 19 வயதான ஹைதர் அதே பகுதியை சேர்ந்த 13 வயதான செல்வியை ஒருதலையாக காதலித்துள்ளார். தனது காதலை பலமுறை தெரிவித்தும் அதனை ஏற்க செல்வி மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஹைதர் செல்வியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தற்கொலைக்கும் முயற்சி செய்தார் ஹைதர். இப்போது கொலை செய்த குற்றத்திற்காக கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

கழுத்தறுத்த காதலன்


இதேபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டிலும் அதிகம் நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டு வேலூரைச் சேர்ந்த லோகநாதன் இருங்காட்டுக் கோட்டையைச் சேர்ந்த சுமதியை காதலித்தார். இந்த காதலை சுமதி ஏற்கவில்லை. இதனால் கத்தியால் சுமதியின் கழுத்தை அறுத்தார் லோகநாதன். ரத்த வெள்ளத்தில் துடித்த சுமதியை மருத்துவமனைக்கும் கழுத்தறுத்த லோகநாதனை சிறைக்கும் அனுப்பிவைத்தனர் பொதுமக்கள்.
 
தனக்கு கிடைக்காத ஒன்று
 
தனக்கு கிடைத்த ஒன்று யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற எண்ணம் மேலோங்குவதுதான் இதுபோன்ற குரூரத்தை செய்யத்தூண்டுகிறது. தன்னால் நேசிக்கப்படும் நபர் எங்கிருந்தாலும் நலமாக இருக்கட்டும் என்று நினைத்த காலம் படிப்படியாக மலையேறி வருகிறது. நமக்கு இல்லாத ஒன்று இல்லாமலேயே போகட்டுமே என்ற எண்ணத்தில்தான் கொலை செய்யும் அளவிற்கு மனதில் குரூர எண்ணங்களை தோற்றுவிக்கிறது.

மனரீதியான பாதிப்புதான்


இது போன்ற கொலைக்கும், ஆசிட் வீச்சுக்கும் காரணம் மனரீதியான சிக்கல்கள்தான் காரணமாகிறது என்கின்றனர் மனநல நிபுணர்கள். நான் உன்னை காதலிக்கிறேன்... நீ என்னை காதலித்தால் சந்தோசம்... அதேசமயம் நீ என்னை காதலிக்காவிட்டாலும் வருத்தமில்லை. அதற்காக என்னுடைய காதல் பொய்யாகிவிடாது. நான் தொடர்ந்து காதலித்துக் கொண்டுதான் இருப்பேன் என்று கூறும் காதலர்களும் இன்றைக்கு இருக்கத்தான் செய்கின்றனர். உண்மையாக நேசிப்பவர்களுக்கு காதல் மீதான பார்வையே வேறாக இருக்கும். இதுபோன்ற பழிவாங்கல்களும், கொலை செய்யும் எண்ணமும் ஏற்படாது என்கின்றனர் மனநல மருத்துவர்கள். (தொகுப்பு நன்றி தட்ஸ் தமிழ்)
 
காதலில் உள்ள ஆழமும் அழுத்தமும் தான் அவர்களை இப்படி செய்ய தோன்றுகிறது. இதுஇப்படி இருக்க இன்னும் கள்ளக்காதல்கள் கொளைகளை தொகுத்தால் அவ்வளவுதான். காலை செய்திதாள்களை கள்ளக்காதல் கொளைகளும் காதல் தற்கொலைகள், பழிவாங்கள்கள் என பங்கங்களை ‌எல்லாம் நிரப்பி வருகிறது.  (இது ஒரு விழிப்புணர்வுக்காக)
 
புனிதமான காதலை நம் மண்ணைவிட்டு போகாமல் காப்போம். காதலில் மெண்மையை கையாள்வோம்... 

02 August, 2012

மதுபான கடை விமர்சனம்



கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் செய்தி என்னவென்றால் டாஸ்மாக் பற்றியதுதான். தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 15 அன்றோ அல்லது அக்டோபர் மாதம் 2-ந் தேதி காந்தி ‌ஜெயந்தி அன்றோ அரசு பூரண மதுவிலக்கை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பல்வேறு ஆய்வுகளையும் மற்றும் விவாதங்களும் மறைமுகமாக அரசு நடத்திக்கொண்டிருப்பாக ஊடங்களுக்கு நம்பத்தகுந்த தகவல்கள் வந்துக்கொண்டிருக்கிறது.


தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் வேண்டுமா அல்லது வேண்டாமா என்ற விவாதம் பல்வேறு தரப்பில் விவாதிக்கப்பட்டு வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக ராம்தாஸ் அவர்களும், மதிமுக வைகோ அவர்களும் தமிழத்தில் டாஸ்மாக் கடைகளை அறவேநீக்கி மதுவிலக்கை முழுமையாக கொண்டுவரவேண்டும் என்று வலியுருத்திவருகிறார்கள்.

அண்ணாவின் வாரிசுகள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் திமுக-வும், மற்றும் அதிமுக-வும்தான் போட்டி போட்டுக்கொண்டு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்து வருகின்றன. மதுவின் பிடியில் சிக்கி லட்சக்கனக்காக இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர்..



நாட்டில் நல்ல குடிமகன்களை உருவாக்க வேண்டிய அரசுகளே, வீதிகள்தோறும் மதுபான கடைகளை திறந்து “குடி“மகன்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.  தற்போது மதுவின் பிடியில் இருந்து மீள முடியாத அளவுக்கு பல இளைஞர்களை குடிகாரர்களாக்கியதுதான் தமிழகஅரசுகளின் சாதனைஇருந்து வருகிறது.

தமிழகத்தில் கிட்டதட்ட 6 ஆயிரத்திற்க்கும் இதிகமான டாஸ்மாக் கடைகள் இருப்பதாக தெரிகிறது. இந்த கடைகளை அரசே ஏற்று நடத்துவது என்பதான் இதுவரை யாராலும் சகித்துக்கொள்ள முடியாத விஷயமாக இருந்துவருகிறது.
இன்றை அனைத்து தவறுகளுக்கும் துவக்கமாக இருக்கும் இடம் இந்த மதுபானகடைதான். கடந்த சிலவாரங்களாக கூடுதல் மதுவிற்ற பலரை காவல் துறை கைதுசெய்து வருகிறது. குடிப்பதற்கு பணத்தேவைக்காகவே பல்வேறு திருட்டு சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துவருகிறது. சிறுமி, குழந்தைகளைக்கூட பலாத்காரம் செய்யும் ஈனத்தனம் இந்த குடித்தவர்களுக்கு மட்டுமே வருகிறது.


தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் வரக்கூடிய வருமானத்தை விட குடிப்பதால் ஏற்படுகின்ற விபத்துக்கள், நோய்கள், சமூக சீர்கேடுகள், சமூகக்குற்றங்கள் என இவைகளுக்கு அரசு அந்த வருமானத்தை விட அதிகமாக செலவு செய்கிறது.

கடந்த இந்த ஆறுமாதத்தில் தமிழக சாலைவிபத்துகளில் 73 சதவீத விபத்துக்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்றட்டதாகும் என்று காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.


தற்போது 16 வயது நிரம்பிய கிட்டதட்ட 80 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் குடிபழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று அதிர்ச்சி தரக்கூடிய செய்திகள் சமூக ஆர்வளர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

ஆகையால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வந்தால் அதை தமிழக மக்கள் அனைவரும் பாரபட்சமின்றி வருவேற்கவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

வணக்கம் மக்களே...! மதுபானகடை விமர்சனம் என்று உங்களை அழைத்ததின் உள்நோக்கம் ஏதோ ஹிட்ஸ் எடுக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது தற்போதைக்கு தமிழகத்தில் விவாதிக்க வேண்டிய பிரச்சனை இது என்பதால்தான்.  எனவே தங்களுடைய கருத்தை விரிவாக தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

15 January, 2012

நாடு முழுதும் இது தொடர வேண்டும்...



 நேற்று செய்திதாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்த ஒரு சம்பவம் அது தங்களது எதிர்ப்புகளையும் மீறி சுரங்கம் தோண்ட அனுமதி அளித்ததால் ஆத்திரமடைந்த மலைவாழ் மக்கள் ஆந்திர மாநில தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏவை அடித்து விரட்டிய சம்பவம். அதைப் பார்க்கும் போது இப்படி நாடுமுழுவதும் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்...

ஆந்திர மாநிலம் அரக்கு தொகுதி சட்டசபை உறுப்பினர் சிவேரு சோமா. இவர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். இத்தொகுதிக்குட்பட்ட சயாரி கிராமத்தில் சைனா களிமண் சுரங்கம் தோண்ட அனுமதி தரப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பணிகளுக்கான காண்டிராக்ட் ஒரு பெண்ணுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கத்திற்கு இப்பகுதி மலை வாழ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்தவும், அமைதிப்படுத்துவதற்காகவும் அங்கு ஒரு சமாதானக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தில் சோமா கலந்து கொண்டார்.

அப்போது மலைவாழ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் பதட்டமான நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கூட்டம் ரத்து செய்யப்பட்டது. சோமா அங்கிருந்து வேகமாக கிளம்பினார்.

ஆனால் அவரை மலை வாழ் மக்கள், குறிப்பாக பெண்கள் முற்றுகையிட்டு அடிக்க ஆரம்பித்தனர். அவரை கீழே தள்ளி விட்டனர். இதனால் அவர் வேகமாக தனது காரை நோக்கி நடக்க ஆரம்பித்தார். ஆனாலும் விடாத பெண்கள் அவரை தலை, தோள்பட்டை, முதுகு ஆகியவற்றில் தாங்கள் வைத்திருந்த நீண்ட கம்புகளாலும், கையாலும் குத்தி தள்ளி விரட்டினர்.

இதையடுத்து எம்.எல்.ஏவுடன் வந்திருந்த அவரது ஆதரவாளர்கள் சோமாவை பத்திரமாக காருக்குக் கூட்டிச் செல்ல முயன்றனர். அப்போது அவர்களையும் பெண்கள் தாக்கினர். கார்களையும் தாக்கி கண்ணாடிகளை உடைத்தனர். இதையடுத்து தப்பித்தோம், பிழைத்தோம் என்று எம்.எல்.ஏவும், அவருடன் வந்தவர்களும் அங்கிருந்து ஓடி உயிர் தப்பினர். (செய்தி)

இப்படித்தான் நாடு முழுவதும் பல்வேறு 
எம்.எல்.ஏ க்கள் அளவுக்கு மீறி சொத்துக்களை சேர்த்துக் கொண்டு, அரசாங்க நிலங்களை ஆக்கிரமித்து கொண்டு தன்னுடைய சங்கதியினரை வளர்த்துக் கொண்டிருக்கிறனர். எல்லா மக்கள் மனதிலும் இது போன்று தவறு செய்பவர்களை தண்டிக்க எண்ணமிருக்கிறது. ஆனால் மக்கள் அவர்களின் பணபலம் ஆள்பலம் பார்த்து பயந்துவிடுகின்றனர்.

பொதுமக்களிடம் ஓட்டு வாங்கி வெற்றி பெற்றுவிட்டு அதன் பிறகு எந்த பிரச்சனைகளையும் தீர்க்காத, தொகுதிப்பக்கம் வராத தவறுசெய்யும் ஆட்களையும், அளவுக்கு அதிகமாக சொத்து குவிக்கும் ஆட்களையும் இப்படி விரட்டினால் நாடு கண்டிப்பாக செழிக்கும்.

பொதுமக்கள் விழித்துக்கொண்டால் நம் நாடு வல்லரசுதான். அப்போது வாங்கிய சுதந்திரம் தூக்கி நிறுத்தப்படும்.

நண்பர்களே இது என்னுடைய சொந்த கருத்து அதற்காக நான் வன்முறையை கையில் எடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. சில பிரச்சனைகளுக்கு தீர் வு இதில்தான் இருக்கிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...