கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

29 November, 2013

இவைகளை பார்த்தும் சிரிக்கலாம்.. படித்தும் சிரிக்கலாம்...

 
நீதிபதி: 'நகைகளை திருடியதாக உன் மீது தொட‌ரப்பட்ட வழக்கில் நீ குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆயிடுச்சி. நீ போகலாம்'

குற்றவாளி: ' அப்படீன்னா திருடிய நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி?'
**********************************

பையன்: அம்மா ஸ்கூலில் இன்னக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி நடந்துச்சிம்மா.

அம்மா: நல்ல செய்திய மொதல்ல சொல்லு.

பையன்: ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மா

அம்மா: கெட்ட செய்தி

பையன்: வாத்தியாருங்க எல்லாம் தப்பிச்சிட்டாங்க

**********************************

நா‌ன் எழு‌தின கதை எ‌ப்படி இரு‌க்கு?
 
ரொம்ப சுமாராத்தான் இருக்கு உப்பு சப்பே இல்ல!
 
கதைய படிக்கக் கொடுத்தா உங்கள யாரு தின்னு பார்க்கச் சொன்னது
**********************************

மகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம்

அப்பா: ஓன்னுமில்லை

மகன்: பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில் மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான். ஒனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆவலியே.
 
அப்பா:...............

**********************************
 
நெஞ்சில் பண்ணவேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டீங்களே டாக்டர்"

"உங்களை யார் ஓரடி மேலே தள்ளிப்படுக்கச் சொன்னாங்க?

**********************************
 
ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!

எப்படி?

என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்
**********************************
ரசித்ததின் தொகுப்பு...

10 comments:

  1. படங்கள் ரசிக்க வைத்தன,...
    துணுக்குகள் சிரிக்க வைத்தன...
    மாமூல் ரொம்ப சூப்பர்...

    ReplyDelete
  2. வணக்கம்
    ஆகா...ஆகா...அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. நகைச்சுவைத் துணுக்குகள் வெகு சிறப்பு .வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  4. ரசிக்க வைத்த படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி சௌந்தர்

    ReplyDelete
  5. இன்னும் நிறைய எழுதுங்க. எழுதிட்டே இருங்க.

    ReplyDelete
  6. அனைத்தும் அருமை சௌந்தர்.

    ReplyDelete

  7. அம்மா: கெட்ட செய்தி

    பையன்: வாத்தியாருங்க எல்லாம் தப்பிச்சிட்டாங்க\\இது தப்பு.

    படங்கள் ரசித்தேன்...............

    ReplyDelete
  8. எண்ணி மகிழத் தக்க நகைச் சுவை!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...