கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

18 April, 2018

வாரியார் நகைச்சுவையும்... உலக பாரம்பரியமும்...



*********************************


உலகப் பாரம்பரிய நாள்

நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள் (International Day for Monuments and Sites) ஆண்டு தோறும் ஏப்ரல் 18ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகப் பண்பாட்டு மரபின் பல்வகைமைத் தன்மை தொடர்பிலும், அவற்றைக் காப்பாண்மை செய்தல் மற்றும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

1982 ஆண்டில் துனீசியாவில் நடைபெற்ற நினைவுச்சின்னங்களுக்கும் களங்களுக்குமான அனைத்துலக அவையின் கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

1983 நவம்பரில் நடைபெற்ற யுனெஸ்கோ பொதுச் சபையின் 22 ஆவது கூட்டத் தொடரில், ஏப்ரல் 18 ஆம் நாளை, நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான நாள் என அறிவிப்பது பற்றி ஆலோசிக்கும்படி அதன் உறுப்பு நாடுகள் கேட்டுக்கொள்ளப்பட்டன.

*********************************



கிருபானந்த வாரியார் திருமணம் ஒன்றிற்குத் தலைமை 
தாங்கச் சென்றிருந்தார். அங்கே நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் 
வந்திருந்தார். 

இருவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்க திருமண 
பேச்சுக்கு இடையே நடிகவேள் தனது வழக்கமான 
கிண்டலுடன், “சாமி. முருகனுக்கு ஆறு தலைன்றானுங்கோ, 
ராத்திரி தூங்கும் போது எப்படி ஒரு பக்கமா படுப்பாரு.? 
கூடி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க.. வாரியாருடன் 
வந்தவர்கள் தர்மசங்கடத்துடன் நெளிந்தார்கள். 
வாரியார் புன்சிரிப்புடன், திருமண ஏற்பாடுகளை பார்த்துக் 
கொண்டு இருந்த மணமக்களின் தந்தையரை அழைத்து 
அவர்களிடம் கேட்டார், “நேத்து தூங்கினீங்களா?” 

அவர்கள் இருவரும் “இன்னைக்குக் கல்யாணத்தை 
வச்சுக்கிட்டு எங்க சாமி தூங்கறது” என்றார்கள். 
வாரியார், நடிகவேளைப் பார்த்துச் சொன்னார். 
ஒரு குழந்தையின் வாழ்க்கையை நடத்தி வைக்க நினைச்ச 
இவங்களுக்கேத் தூக்கம் வரவில்லை… உலக மக்கள் 
அனைவரும் எம்பெருமானோட குழந்தைகள். 
அவருக்கு எப்படி தூக்கம் வரும்? அவருக்குத் தூங்கறதுக்கு 
நேரம் ஏது?” என்றார். 

********************************* 


வாக்கியம் தேவையில்லை...

0 comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...