ஓ... பறவைகளே...!
சிறகுகளை சிதரடித்துவிட்டு கிடைக்கும்
ராஜ்யங்களை விட
வலிகொண்டு பறந்தெழும் சுதந்திர
வானமே அழகு...
கவிதை வீதி
ஓ...வண்ணத்து பூச்சிகளே...!மகுடங்களுக்கு ஆசைப்பட்டு
கருப்பு வெள்ளையில் வாழ்வதை விட
வாடிய பூவில் தேனைத்தேடினாலும்
வண்ணங்களே அழகு...
சுரங்களுக்கு கட்டுப்பட்டு
சுயநினைவின்றி வாழ்வதைவிட
ராகங்களை சுகமாகச் சொல்லும்
சோகங்கள் கூட அழகு...
கவிதைவீதி
ஓ...மலரினமே...!
வசந்தம் மாறாமல்
கொடியிலே வாடுவதைவிட
இன்பத்திலோ துன்பத்திலோ
அடைக்கலமாவதே அழகு...!
கவிதைவீதி
ஓ... மனிதமே...!
முகத்தில் மட்டுமே பூக்கும்
சிரிப்போடு சிலாய்ப்பதைவிட...
அகத்தில் மலர்ந்து அர்த்தப்படும்
நல்ல நட்போடு சிதைந்துபோவதுகூட அழகு....
நண்பர்களுக்கு வணக்கம்
வெகுநாளாக திருக்குறளை மையப்படுத்தி கவிதைகள் எழுத வேண்டும் என்ற ஆசையை தற்போது துவங்கியுள்ளேன். அதை பேராசையாக்குவது தங்களிடம்தான் உள்ளது.
இன்றைய கவிதைக்கு பயன்படுத்திய குறள்
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
கவிதை வீதி
ஓ... குயிலினமே...!சுரங்களுக்கு கட்டுப்பட்டு
சுயநினைவின்றி வாழ்வதைவிட
ராகங்களை சுகமாகச் சொல்லும்
சோகங்கள் கூட அழகு...
கவிதைவீதி
ஓ...மலரினமே...!
வசந்தம் மாறாமல்
கொடியிலே வாடுவதைவிட
இன்பத்திலோ துன்பத்திலோ
அடைக்கலமாவதே அழகு...!
கவிதைவீதி
ஓ... மனிதமே...!
முகத்தில் மட்டுமே பூக்கும்
சிரிப்போடு சிலாய்ப்பதைவிட...
அகத்தில் மலர்ந்து அர்த்தப்படும்
நல்ல நட்போடு சிதைந்துபோவதுகூட அழகு....
நண்பர்களுக்கு வணக்கம்
வெகுநாளாக திருக்குறளை மையப்படுத்தி கவிதைகள் எழுத வேண்டும் என்ற ஆசையை தற்போது துவங்கியுள்ளேன். அதை பேராசையாக்குவது தங்களிடம்தான் உள்ளது.
இன்றைய கவிதைக்கு பயன்படுத்திய குறள்
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
திருக்குறள் 786
தங்களுடைய கருத்துக்களை பதிவுச் செய்யுங்கள்..
முதல் விதை முளைத்ததே...
ReplyDeleteதிருக்குறளை மையப்படுத்தி கவிதை அருமை நண்பா
ReplyDeleteஇப் புது முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்..
ReplyDelete//அகத்தில் மலர்ந்து அர்த்தப்படும்
ReplyDeleteநல்ல நட்போடு சிதைந்துபோவதுகூட அழகு...
டச்சிங் வரிகள்
குறளுக்கு நீங்கள் தரும் புது அர்த்தம் படிக்க ஆவல்
தொடருங்கள் நண்பா வாழ்த்துகள்
அஹா ஓகோ .......
ReplyDeleteஒரு புது தொகுப்பு தயார் ஆகுது ...முதல் பிரதி எனக்கே எனக்கு
ReplyDeleteவானத்தில் வண்ணச்சிறகு விரித்துப் பறந்த அழகுக்கவிதைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeletethamizmanam???
ReplyDeleteகவிதையும் குறளும் சிறப்பு.
ReplyDeletekavithai super. vaalthukkal
ReplyDeleteஅந்த வீணாப் போனவுடன் சேர்ந்து திரிந்தால்
ReplyDeleteஉருப்படாமல் போய் விடுவாய் என்றார்...
என் அப்பா என் வீட்டில்..
என் நண்பன் வீட்டில் அவன் அப்பாவும்...
அன்பின் சௌந்தர் - நல்ல்தொரு முயற்சி - தொடர்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா ( இயன்ற வரை சந்திப்பிழை தவிர்க்கவும் )
ReplyDeleteகவிதை நாயகன் சவுந்தர் வாழ்க வாழ்க
ReplyDeleteஇன்பத்திலோ துன்பத்திலோ
ReplyDeleteஅடைக்கலமாவதே அழகு...!
>>
சரியான வரிகள். திருக்குறளை வத்து கவிதையா? புது முயற்சிக்கு வாழ்த்துக்கள். தொடருங்கள் சகோ.
ஓ... மனிதமே...!
ReplyDeleteஓகோ மனிதமே...! முத்து!
முயற்சித் திருவினை யாக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
very good concept. தொடர்ந்து அசத்துங்க....
ReplyDeleteஇதயத்தை இழுக்கிறது!!!
ReplyDeletepl change the yellow colour in the beginning. it will be pleasant to read. kavithai muyarchi sirappu
ReplyDeleteபின்றீங்க. சத்தியமா நமக்கெல்லாம் இது வரவே வராது.
ReplyDeleteமிகவும் நன்றாக உள்ளது பாஸ் ...
ReplyDeleteவணக்கம் மாப்ளே, வித்தியாசமான முயற்சியோடு ஒரு கவிதையினைப் படைத்திருக்கிறீங்க.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ஓ...மலரினமே...!
ReplyDeleteவாசந்தம் மாறாமல்
கொடியிலே வாடுவதைவிட//
வசந்தம் என்று வந்தால் அழகாக இருக்கும் அல்லவா.
நட்பின் முக்கியத்துவத்தை, வாழ்க்கைப் பாடத்திற்கான அர்த்தத்தினை உங்களின் கவிதை நச்சென்று தாங்கி வந்துள்ளது.
ReplyDeleteNice
ReplyDeleteமுயற்சிக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஓ நண்பரே..
ReplyDeleteபதிவு நன்றாக உள்ளது..
நல்ல முயற்சி.அற்புதமான குறளுக்கு அருமையான கவிதை.வாழ்த்துக்கள் சௌந்தர்.உங்கள் முயற்சி தொடரட்டும்.
ReplyDeleteநட்பு ஒரு மனிதன் மதிக்க முடியும் என்று மிகவும் விலைமதிப்பற்ற விஷயங்கள் உள்ளது. ரஜினி விட யார், அதன் முக்கியத்துவத்தை விளக்க வேண்டும். மேலும் அறிய இங்கே சொடுக்கவும்
ReplyDeletehttp://bit.ly/n9GwsR
வித்தியாசமாக திருக்குறளை மையப்படுத்தி எழுதியிருக்கிறீர்கள்... நன்றாகவிருக்கிறது
ReplyDeleteதிருக்குறளை மையப்படுத்தி எழுதியிருக்கும் முயற்சி வெற்றி வாழ்த்துக்கள், கவிதைகள் மிக அருமை,
ReplyDeleteஅப்புறம் நம்ம ப்ளாக் பக்கமும் வாங்க
முதல் விதையே முத்து.
ReplyDeleteதொடர்ந்து விதையுங்கள்.
ஆஹா திருக்குறளை தொட்டிருக்கிறீர்கள்..நன்றி இந்த முயற்சி பாராட்டதக்கதே...வாழ்த்துக்கள்
ReplyDeleteமிகச் சிறந்த நட்பு வரிகளில் இதுவும் ஒன்று.........மிகவும் நன்று !
ReplyDeleteநல்லாயிருக்கு
ReplyDeleteராகங்களை சுகமாகச் சொல்லும்
ReplyDeleteசோகங்கள் கூட அழகு...
அருமையான வரிகள் சகா. . .
கவிதையும் அருமை படங்களும் அருமை
ReplyDeleteபடங்களுடன் கூடிய கவிதை சூப்பர்!!
ReplyDeleteஉங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்(அப்பாடி.. பேராசையை தூண்டி விட்டாச்சு)..
ReplyDeleteகவிதை மிக அழகு..நட்பு சிதைக்காது..சேர்க்கும்...
நட்புடன்,
ரங்கன்
நல்லா இருக்குது...தொடருங்கள்....
ReplyDeleteதளத்தின் பெயரும் எனது பெயரும்..........
கவிதையும் அருமை ...படங்களும் அருமை ....
ReplyDeleteஅருமை AHAA ஆஹா
ReplyDeleteநல்ல முயற்சி சௌந்தர்.கவிதையின் ஒவ்வொரு வரியும் அர்த்தத்தோடு...அதுவும் கடைசியாக மனிதனைப் பற்றிச் சொன்னது
ReplyDeleteஅற்புதம் !
குறளுக்கு கவிதை எழுதிய விதம், அருமை.
ReplyDeleteவான் புகழ் வள்ளுவனுக்கு கவிதை ஆறாம்
படைத்திருக்கிறீர்கள்.
தொடரட்டும் உங்கள் பயணம்....
அற்புதமான முயற்சி நண்பா, இதை புத்தகமாக வெளியிடும் வகையில் செய்ய வேண்டும் என்பது என் வேண்டுகோள்.....!
ReplyDelete////////
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]
அற்புதமான முயற்சி நண்பா, இதை புத்தகமாக வெளியிடும் வகையில் செய்ய வேண்டும் என்பது என் வேண்டுகோள்.....!
////////
கண்டிப்பாக தங்கள் வேண்டுக்கோள் நிறைவேற்றப்படும்....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
''...மனிதமே...!
ReplyDeleteமுகத்தில் மட்டுமே பூக்கும்
சிரிப்போடு சிலாய்ப்பதைவிட...
அகத்தில் மலர்ந்து அர்த்தப்படும்
நல்ல நட்போடு சிதைந்துபோவதுகூட அழகு......''
நல்ல முயற்சி. வாழ்வியல் குறள் என்று நானும் எழுதுகிறேன் வந்து பாருங்கள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
நல்லமுயற்சி. இருவரிகளைக் கருவாய்க் கொண்டு எழும் கவித்தரு அருமை. தொடரட்டும் திருக்குறள் கவிதைகள்.
ReplyDelete