வீடு வந்து
ஓய்வெடுக்கிறேன்
மனம் மட்டும்
இன்னும் பயணிக்கிறது...
என்னையே நான்
சமாதானம்
படுத்திக்கொள்கிறேன்
முடியவில்லை...
இனி
ஒவ்வொறு முறையும்
ரயில் ஏறும் போது
தண்டவாளத்தில்
அடிப்பட்ட உணர்வோடே
பயணிக்க வேண்டியிருக்கும்....
நேற்றைய
ரயில் பயணத்தில்
என்னை காயப்படுத்திய
நிகழ்வு....
நிலைய
படிக்கட்டுகளில்
வரிசைக்கட்டிய
விளம்பரங்கள்...
முன்பதிவை
உறுதிப்படுத்திய
பயணிகளின்
பட்டியல்...
பயணிகளின்
கவணத்திற்கு...
என்ற அழகு குரலின்
அறிவிப்பு...
செய்திகள்
தாங்கி நின்ற
மாலை இதழின்
தலைப்பிதழ்...
வழியனுப்பி
கலங்கிநின்ற
ஒரு அம்மாவின்
கண்ணீர்....
ஆய்வுக்காக
கால்கடுக்க
காத்திருக்கும்
பரிசோதகர்....
ஓசைப் படாமல்
உரசிவிட்டுப் போன
பயணப் பெண்ணின்
பார்வை...
ஜன்னலில் புகுந்து
மறு ஜன்னலில்
வெளியேறிய
பட்டாம்பூச்சி...
இன்னுமாய்...
பயணத்தின் போது
குறுக்கிட்ட
ஆறு... மலை, காடு...
வயல்வெளி கூட்டங்கள்...
இவைகளை எல்லாம் மீறி
என்னைத் துன்புறுத்தி
கொண்டுதான் இருக்கிறது...
பசிக்குகென்று
காசு கேட்டு
நான் அமைதி காத்த
வேளையில்
ஜன்னல் தாண்டி போன
அந்த ஏழைக் குழந்தையின்
பிஞ்சு முகம்....
(என் டைரியில் இருந்து... ஆகஸ்ட்-2004)
தங்கள் வருகைக்கும்.. கருத்துக்கும் மிக்க நன்றி...!
எல்லாருக்கும் இது நிகழும். கேட்கும் அத்தனை பேருக்கும் கொடுக்க நம்மால் ஆகாதே! அப்படிதான் சமாதானப்படுத்திக்கனும்
ReplyDeleteதங்களின் மனம் புரிகிறது நண்பரே
ReplyDelete