கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

06 June, 2018

சமைப்பவர்கள் இதை தெரிஞ்சிக்கனுமா..?


சப்பாத்தி செய்யும்போது, கோதுமை மாவை தண்ணீர் விட்டுப் பிசைவதற்கு பதில் பால்கலந்த நீரில் பிசைந்து செய்தால் சுவையாகவும் மென்மையாகவும் இருக்கும்.

**************************************

சமையலறை அலமாரிகளில் உலர்ந்த வெள்ளரிக்காய் தோலைப் போட்டு வைத்தால் எறும்புகள் வராது. 

பிரியாணி செய்யும்போது ஒரு எலுமிச்சையைப் பிழிந்து விட்டால் சாதம் உதிர் உதிராக இருக்கும்..

**************************************

நவராத்திரியின் போது வீட்டில் வாங்கி வைத்திருக்கும் பழங்கள், தாம்பூலத்துடன் வந்த மாதுளை, ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, வாழைப்பழங்கள் என நிறைய சேர்ந்துவிட்டதா? கவலையே வேண்டாம். எல்லாப் பழங்களையும் நறுக்கி, அதனுடன் உலர்ந்த திராட்சை, பேரீச்சை, டைமண்ட் கல்கண்டு, தேன், சர்க்கரை சேர்த்து ஃபுரூட் மிக்ஸ் செய்யுங்கள். அதை ஃபிரிட்ஜில் வைத்து, சிகரமாக ஐஸ்க்ரீம் சேர்த்து வீட்டில் உள்ளவர்களுக்குக் கொடுங்கள். பழப் பாத்திரம் பாராட்டுகளோடு காலியாகிவிடும்!

**************************************


பாத்திரங்கள் அடிப்பிடித்துவிட்டால், வெங்காயத்தை நறுக்கி பாத்திரத்தில் போட்டு, சிறிது நீர் ஊற்றி வேக வைத்து, பிறகு தேய்த்துக் கழுவினால் அடிப்பிடித்த சுவடே தெரியாது.

**************************************

புளியைப் போட்டு வைக்கும் பாத்திரத்தின் அடியில் கொஞ்சம் உப்பைப் போட்டு வைத்தால் கெடாமல் இருக்கும். 

கீரையைப் பருப்புடன் சேர்த்து செய்யும்போது, தக்காளி, புளி சேர்க்காமல் நெல்லிக்காயைத் துருவிச் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

**************************************

வடகத்துக்கான மாவில் எலுமிச்சைச்சாறு அதிகமாகக் கூடாது. வடகம் பொரிக்கும்போது சிவந்துவிடும். 

பித்தளைப் பாத்திரங்களைக் கழுவிய பிறகு, தோல் சீவிய உருளைக்கிழங்கை அந்தப் பாத்திரத்தின் மேல் தேய்த்தால், பளபளப்புக் கூடும்.

**************************************

லேசான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து உரித்தால், கண்கள் எரியாது. 

அரிவாள்மனை முனையில் சிறிய வெங்காயத்தை தோலை மட்டும் நீக்கிவிட்டு செருகி, வெங்காயத்தை அரிந்தாலும் கண்கள் எரியாது. 

**************************************

பாத்திரத்தின் விளிம்புகளில் எண்ணெய் தடவிவிட்டுப் 
பாலைக் காய்ச்சினால் பால் பொங்காமல் இருக்கும்.

**************************************


வத்தக்குழம்பு செய்யும்போது, கடைசியாக மஞ்சள், மிளகுத்தூளைக் கலந்தால் குழம்பு ருசியாக இருக்கும். 

வசம்பை அரைத்து, அதனுடன் உப்புத் தண்ணீரைக் கலந்து தெளித்தால் வீட்டில் ஈக்கள் வராது. 

வெண்டைக்காயை வறுக்கும்போது புளித்த மோரைச் சேர்த்தால் மொறுமொறுவென இருக்கும்.

**************************************

பூசணிக்காய் மீந்துவிட்டால் அடுத்த நாள் சமைக்க முடியாது. மீந்ததை நறுக்கிக் கொஞ்சம் உப்பைப் போட்டு வேக வைத்து, அப்படியே எடுத்து வைத்தால் அடுத்த நாள் வரை கெடாமல் அப்படியே இருக்கும். .

**************************************

வெண்பூசணியை நறுக்கி முக்கால் வேக்காடு வேக விடவும். துவரம்பருப்பைத் தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய், காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு வெடித்ததும், வேக வைத்த வெண்பூசணியைப் போட்டு அதனுடன் அரைத்த தேங்காய் விழுது, துவரம் பருப்பு, உப்புச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். சாப்பிட சுவையாக இருக்கும்.

**************************************


லட்டு பிடிக்கும்போது ஏதாவது பழ எசென்ஸ் விட்டுப் பிடித்தால், லட்டு சுவையாகவும் மணமாகவும் இருக்கும். 

பொட்டுக்கடலை உருண்டை பிடிக்கும்போது வறுத்த வேர்க்கடலை, 
பொடித்த முந்திரி சேர்த்துப் பிடித்தால் கூடுதல் சுவை!


**************************************

ஜாங்கிரி செய்யும்போது, பத்து ஜாங்கிரியை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு, மேலே தயிர் ஊற்றி, கொஞ்சம் உப்புப் போட்டு ஊற வைத்து சாப்பிட்டுப் பாருங்களேன்... சூப்பர் ருசி!

**************************************

0 comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...