கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label இசை. Show all posts
Showing posts with label இசை. Show all posts

16 September, 2013

இசையால் உலகை வென்றவர்....!


இன்று (16-09-2013) இசையால் இந்த உலகையே ஆண்ட எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா.. அவர்களின் 97-வது பிறந்த தினம்...

திரை உலகிலும், பின்னர் இசை உலகிலும் புகழ் பெற்று விளங்கிய எம்.எஸ்.சுப்புலட்சுமி 100 நாடுகளுக்கு மேல் அங்கம் வகிக்கும் ஐ.நா.சபையில் கச்சேரி நடத்தினார். ஐ.நா.சபையில் இசை நிகழ்ச்சி நடத்திய ஒரே தமிழ்ப்பாடகி எம்.எஸ்.தான். "சாவித்திரி" படப்பிடிப்புக்காக கல்கத்தா செல்லும் வழியில், நாகபுரியில் காந்தியடிகளை சுப்புலட்சுமியும், சதாசிவமும் சந்தித்து ஆசி பெற்றனர்.

அன்று பிரார்த்தனைக் கூட்டத்தில் சுப்புலட்சுமியைப் பாடும் படி கேட்டுக்கொண்டார்கள். எம்.எஸ். சில பக்திப் பாடல்களை பாடினார். பாடல்களைக் கேட்டு மகாத்மா நெகிழ்ந்து போனார். பிற்காலத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் புகழ் நாடெங்கும் பரவியது.

காந்தியடிகளின் மனைவி கஸ்தூரிபாய் மறைந்தபின், அவர் நினைவாக நிதி திரட்டப்பட்டது. அதற்கு எம்.எஸ். சில இசை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டிக் கொடுத்தார். அதற்கு நன்றி தெரிவித்து காந்தியடிகள் தமிழில் கையெழுத்திட்டு, தன் கைப்பட எழுதிய கடிதத்தை இன்றும் போற்றிப் பாது காத்து வருகிறார், எம்.எஸ். நாடு முழுவதும் எம்.எஸ். புகழ் பரவிக்கொண்டு இருந்த நேரத்தில், மக்களிடம் இறை உணர்வை வளர்க்கக்கூடிய இசைக்கு முக்கியத்துவம் இருக்கக் கூடிய படம் ஒன்றை தயாரிக்க டி.சதாசிவம் முடிவு செய்தார்.


"மீரா" கதையை படமாக்க முடிவு செய்யப்பட்டது. மீராவாக சுப்புலட்சுமியும், கணவர் ராணாவாக நாகையாவும் நடித்தனர். மீரா படப்பிடிப்பு 1944-ல் தொடங்கியது. மீரா பிறந்து வளர்ந்த ராஜஸ்தானத் திலேயே படப்பிடிப்பு நடந்தது. எல்லீஸ் ஆர்.டங்கன் டைரக்ட் செய்தார். "மீரா" படத்தில் பாடல்கள் அற்புதமாக அமைந்தன. "கல்கி" எழுதிய "காற்றினிலே வரும் கீதம்" என்ற பாடல், காலத்தைக் கடந்து இன்னும் வாழ்கிறது.

படம் நன்றாக இருந்தபோதிலும், "சகுந்தலை"யைப் போலவோ, "சாவித்திரி" போலவோ அது மெகா ஹிட் திரைப்படமாக அமையவில்லை. அதற்குக் காரணம் மீராவின் கதைதான். சிறுவயதிலேயே கண்ணனை கணவனாக மனதில் வரித்துக்கொண்டவர் மீரா. கல்யாணம் ஆன பிறகும் கணவனை ஏற்க மறுக்கிறாள்.


கண்ணனையே நினைத்துப் பாடிக்கொண்டு ஊர், ஊராகச் செல்கிறாள். கடைசியில், அவள் உயிர் கண்ணனுடன் ஐக்கியமாகிறது. வடநாட்டில் பிரபலமான இக்கதை, தமிழ் ரசிகர்களின் மனதை ஈர்க்கவில்லை. டி.சதாசிவம் இதைப் புரிந்து கொண்டார்.

"மீரா"வை இந்தியில் எடுத்தார். மீரா இந்திப் பதிப்பு மாபெரும் வெற்றி பெற்றது. வடநாட்டில் சக்கை போடு போட்டது. இந்தப் படத்தின் விசேஷ காட்சி டெல்லியில் நடந்தபோது, பிரதமர் நேரு வந்திருந்தார். படத்தைப் பார்த்து மிகவும் பாராட்டினார். பின்னர் எம்.எஸ்.சின் இசை நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, "நான் சாதாரண பிரதம மந்திரி. எம்.எஸ்.சுப்புலட்சுமியோ இசை உலகின் பேரரசி. பேரரசி முன் பிரதம மந்திரி எம்மாத்திரம்?" என்று புகழாரம் சூட்டினார்.



1966_ம் ஆண்டில், அமெரிக்காவில் பல நாட்டு பிரதிநிதிகளும் கூடியிருந்த ஐ.நா. சபையில் இசை நிகழ்ச்சி நடத்தினார், எம்.எஸ். இந்த நிகழ்ச்சியில் பாடுவதற்கென்றே ஆங்கிலப் பாடல் ஒன்றை ராஜாஜி எழுதித்தந்தார். ஆங்கில இசையில் வல்லவரான ஹாண்டல் மானுவெல், அந்தப் பாடலுக்கு இசை அமைத்துக் கொடுத்தார்.

ஐ.நா.சபையில் எம்.எஸ். நடத்திய இசை நிகழ்ச்சி அற்புதமாக அமைந்தது. அவர் புகழ் உலகம் முழுவதும் பரவியது. பொதுப்பணிகளுக்காக பல்லாயிரக்கணக்கான இசை நிகழ்ச்சிகளை நடத்திய எம்.எஸ்.சுப்புலட்சுமி, அந்த நிகழ்ச்சிகளில் வசூலான கோடிக்கணக்கான ரூபாய்களை அப்படியே அந்த பொதுப்பணிகளுக்கு வழங்கினார்.


திருப்பதி ஏழுமலையானை துதித்து எம்.எஸ். பாடிய வெங்கடேச சுப்ரபாதம், அதிகாலை நேரத்தில் இன்று பல்லாயிரக்கணக்கான வீடுகளில் ஒலிப்பதைக் கேட்கலாம். விற்பனையில் பெரும் சாதனையை நிகழ்த்தியது இந்த ஆடியோ கேசட். இதன் மூலம் கிடைக்கும் வருவாய் எல்லாம் திருப்பதி கோவிலுக்குச் சென்று கொண்டிருக்கிறது.

இசை மூலம் இமாலய புகழ் பெற்ற எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு கல்கத்தாவில் உள்ள ரவீந்திர பாரதி பல்கலைக்கழகமும், டெல்லி பல்கலைக்கழகமும் "டாக்டர்" பட்டம் வழங்கி கவுரவித்தன. ஆசியாவின் நோபல் பரிசு என்று கருதப்படுகிற பிலிப்பைன்ஸ் நாடு வழங்கும் "ரமான் மக்சாய்" விருது எம்.எஸ்.சுக்கு 1974_ல் வழங்கப்பட்டது.

இந்தியாவின் மிக உயர்ந்த விருதான "பாரத ரத்னா" விருதை எம்.எஸ்.சுக்கு 1998_ல் மத்திய அரசு வழங்கி கவுரவித்தது. 1997_ல் சதாசிவம் காலமானார். வாழ்க்கையில் தாயாக, தந்தையாக, ஆசானாக, தோழனாக விளங்கிய சதா சிவத்தின் மறைவினால், சிறகொடிந்த பறவை போலானார் எம்.எஸ். அதன் பிறகு அவர் கச்சேரி செய்வதை நிறுத்தி விட்டார்.


ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா" என குழந்தைகளுக்கு இதமான பாடலை பாடினார் மகாகவி பாரதியார். அவ்வாறே ஒரு சிறுமி தன் தாயார் மேடையில் வீணை இசைக்கச்சேரி செய்து கொண்டிருந்த போது வெளியில் சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். திடீரென மகளின் ஞாபகம் வரவே அவளைத் தேடி அழைத்து வருமாறு தாய் பணித்தாள்.

வியர்வை முத்துமுத்தாக அரும்ப சிறுமி மேடைக்கு ஓடி வந்தாள். தாய் வியர்வையைத் துடைத்து விட்டு "பாடு" என கண்டிப்பான குரலில் கூற, சிறுமி அற்புதமாகப் பாடினாள். மக்கள் கரகோஷம் செய்து "இவள் தாயை மிஞ்சி விடுவாள்" என்றார்கள். அது போலவே நடந்தது. சிறுமிக்கு கரகோஷத்தைப் புரிந்து கொள்ளும் வயதல்ல ஆகையால் திரும்பவும் சென்று விளையாட வேண்டும் என்ற என்ணம் தான் இருந்தது.



அந்தச் சிறுமி தான் இசையுலகம் போற்றும் இசையின் இமயம், இசையின் ராணியான எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள். மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்பதன் சுருக்கமே எம். எஸ். சுப்புலட்சுமி ஆகும். காலம் கடந்தும் இவர்களின் புகழ் வாழும்.

11 August, 2013

இது இசைஞானி விடுத்துள்ள சவால்!



“லண்டனில் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி நடக்கும் இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையிலிருந்து நேராக இங்கே வருகிறேன். அன்றைக்கு அரை மணி நேரத்தில் ட்யூன் போட்டு, இரண்டு மணி நேரத்தில் இசையமைத்து ரெக்கார்டிங் செய்யப்பட்ட பாடல்களுக்கு இப்போது நோட்ஸ் எடுக்க ஒரு நாள், இரண்டு நாளாகிறது. 
 
இந்த ரிகர்சலில் பங்குபெறும் இசைக் கலைஞர்கள் எல்லோருமே… எப்படி இது முடிந்தது உங்களால்… போகிற போக்கில் இப்படிப்பட்ட மெட்டுக்களையெல்லாம் எப்படி உருவாக்க முடிந்தது? என்றெல்லாம் வியந்து போய் கேட்கிறார்கள்…

அது நானாக யோசித்து யோசித்து உருவாக்கிய இசையல்ல. தானாக வந்தது. நான் எவ்வளவு பெரிய இசையமைப்பாளர் என்று நினைத்து இசையமைத்திருந்தால் அந்த இசை மனதில் இறங்காது… தலையில் போய் உட்கார்ந்து தலைக்கனத்தை ஏற்றிவிடும்.

ப்ரியா படத்தில் 10 நிமிடங்கள் தொடர்ச்சியாக வசனங்கள் இல்லாமல் பின்னணி இசை மட்டுமே வரும்.. சிங்கப்பூர் பூங்காக்கள், பறவைக் கண்காட்சி, டால்பின் பார்க் போன்றவற்றில் ஹீரோ ஹீரோயின் வருவது போன்ற காட்சிகளை தொடர்ச்சியாக எடுத்திருந்தார்கள். 
 


இந்தக் காட்சிக்கான இசையை நானே கண்டக்ட் செய்தேன். அதற்கு முன் கோவர்தன் மாஸ்டர் செய்து பார்த்தார். ஒன்று, இசை காட்சியை மீறிப் போய்விடும்… அல்லது காட்சி முடிந்து இசை மீதமிருக்கும். இரண்டும் பர்ஃபெக்டாக பொருந்தி வரவில்லை. இதைப் பார்த்துக் கொண்டிருந்த நான், அண்ணா நீங்கள் உள்ளே சென்று மற்ற வேலையைப் பாருங்கள். நான் இதை கண்டக் செய்கிறேன் என கூறிவிட்டு ஒரே டேக்கில் செய்து முடித்தேன்.

உலகின் மிகச் சிறந்த இசையமைப்பாளர் என்று நீங்கள் யாரைக் கருதுகிறீர்களோ அவர்களிடம் போய் அந்த இசையை… படத்தில் பத்துநிமிடம் வரும் அந்த இசைக்கு நோட்ஸ் எடுக்கச் சொல்லுங்கள்… அவர்களுக்கு குறைந்தது சில மாதங்களாவது தேவைப்படும்…. நோட்ஸ் எடுத்து முடிக்கவே குறைந்தது இரண்டு மாதங்களாகும்!”

-இது சனிக்கிழமை நடந்த லண்டன் இசை நிகழ்ச்சிக்கான செய்தியாளர் சந்திப்பில் இசை பிதாமகன் இளையராஜா.

டிஸ்னி 1 : உலகின் சிறந்த இசையமைப்பாளரா… உங்களைத் தவிர யாருண்ணே அது… உள்ளூர் இசையையும் உலகத் தரமாக்கிய தவப் புதல்வர் அல்லவா நீங்கள்!

டிஸ்கி 2: லண்டனில் முதல் முறையாக வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி பிரமாண்ட ஓ2 அரங்கில் இசைஞானியுடன் 100 கலைஞர்கள் பங்கேற்கும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடக்கிறுது. 40 பாடல்கள் வரை இடம்பெறவிருக்கின்றன. நம் இசைஞானி குறைந்தது 10 பாடல்களாவது பாடுவார் என்ற நம்பிக்கையுடன் செல்லுங்கள்!

20 June, 2013

தலைவா பாடல்கள் - Thalaiva MP3 Songs

 
விஜய் நடித்துள்ள தலைவா படத்தின் இசை நாளை வெளியாகிறது. நாளை மறுதினம் விஜய் பிறந்த தினம் என்பதால், நாளை இசை வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தவிருக்கிறார்கள். 
 
இயக்குநர் விஜய்யும் - நடிகர் விஜய்யும் முதன் முதலாக கைகோர்த்த படம் தலைவா. ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். 
 
சத்யராஜ் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீடு நாளை மாலை சென்னையில் நடக்கிறது. தாஜ் கோரமண்டல் நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் விஜய், அமலா பால், சத்யராஜ் உள்பட பலரும் கலந்து கொள்கின்றனர். 
 
 
தலைவா படத்தில் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. விஜய் பாடும் வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடல் வெளியீட்டுக்கு முன்பே பிரபலமடைந்துள்ளது. இந்தப் படத்தின் விற்பனை உரிமை பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது. வேந்தர் மூவீஸ் இதனை வெளியிடுகிறது.
 
நாளை முதல் தலைவா பாடல்கள் (Thalaiva MP3 Songs) கண்டிப்பாக தமிழகத்தை கலக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...