கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label பேட்டி. Show all posts
Showing posts with label பேட்டி. Show all posts

11 August, 2013

இது இசைஞானி விடுத்துள்ள சவால்!



“லண்டனில் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி நடக்கும் இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையிலிருந்து நேராக இங்கே வருகிறேன். அன்றைக்கு அரை மணி நேரத்தில் ட்யூன் போட்டு, இரண்டு மணி நேரத்தில் இசையமைத்து ரெக்கார்டிங் செய்யப்பட்ட பாடல்களுக்கு இப்போது நோட்ஸ் எடுக்க ஒரு நாள், இரண்டு நாளாகிறது. 
 
இந்த ரிகர்சலில் பங்குபெறும் இசைக் கலைஞர்கள் எல்லோருமே… எப்படி இது முடிந்தது உங்களால்… போகிற போக்கில் இப்படிப்பட்ட மெட்டுக்களையெல்லாம் எப்படி உருவாக்க முடிந்தது? என்றெல்லாம் வியந்து போய் கேட்கிறார்கள்…

அது நானாக யோசித்து யோசித்து உருவாக்கிய இசையல்ல. தானாக வந்தது. நான் எவ்வளவு பெரிய இசையமைப்பாளர் என்று நினைத்து இசையமைத்திருந்தால் அந்த இசை மனதில் இறங்காது… தலையில் போய் உட்கார்ந்து தலைக்கனத்தை ஏற்றிவிடும்.

ப்ரியா படத்தில் 10 நிமிடங்கள் தொடர்ச்சியாக வசனங்கள் இல்லாமல் பின்னணி இசை மட்டுமே வரும்.. சிங்கப்பூர் பூங்காக்கள், பறவைக் கண்காட்சி, டால்பின் பார்க் போன்றவற்றில் ஹீரோ ஹீரோயின் வருவது போன்ற காட்சிகளை தொடர்ச்சியாக எடுத்திருந்தார்கள். 
 


இந்தக் காட்சிக்கான இசையை நானே கண்டக்ட் செய்தேன். அதற்கு முன் கோவர்தன் மாஸ்டர் செய்து பார்த்தார். ஒன்று, இசை காட்சியை மீறிப் போய்விடும்… அல்லது காட்சி முடிந்து இசை மீதமிருக்கும். இரண்டும் பர்ஃபெக்டாக பொருந்தி வரவில்லை. இதைப் பார்த்துக் கொண்டிருந்த நான், அண்ணா நீங்கள் உள்ளே சென்று மற்ற வேலையைப் பாருங்கள். நான் இதை கண்டக் செய்கிறேன் என கூறிவிட்டு ஒரே டேக்கில் செய்து முடித்தேன்.

உலகின் மிகச் சிறந்த இசையமைப்பாளர் என்று நீங்கள் யாரைக் கருதுகிறீர்களோ அவர்களிடம் போய் அந்த இசையை… படத்தில் பத்துநிமிடம் வரும் அந்த இசைக்கு நோட்ஸ் எடுக்கச் சொல்லுங்கள்… அவர்களுக்கு குறைந்தது சில மாதங்களாவது தேவைப்படும்…. நோட்ஸ் எடுத்து முடிக்கவே குறைந்தது இரண்டு மாதங்களாகும்!”

-இது சனிக்கிழமை நடந்த லண்டன் இசை நிகழ்ச்சிக்கான செய்தியாளர் சந்திப்பில் இசை பிதாமகன் இளையராஜா.

டிஸ்னி 1 : உலகின் சிறந்த இசையமைப்பாளரா… உங்களைத் தவிர யாருண்ணே அது… உள்ளூர் இசையையும் உலகத் தரமாக்கிய தவப் புதல்வர் அல்லவா நீங்கள்!

டிஸ்கி 2: லண்டனில் முதல் முறையாக வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி பிரமாண்ட ஓ2 அரங்கில் இசைஞானியுடன் 100 கலைஞர்கள் பங்கேற்கும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடக்கிறுது. 40 பாடல்கள் வரை இடம்பெறவிருக்கின்றன. நம் இசைஞானி குறைந்தது 10 பாடல்களாவது பாடுவார் என்ற நம்பிக்கையுடன் செல்லுங்கள்!

13 June, 2013

இளைராஜா மற்றும் மணிவன்னனின் அந்தரங்களை போட்டுடைத்த பாரதிராஜா... கொந்தளித்த ரசிகர்கள்...

இசைஞானி இளையராஜா சகோதரர்கள் வெறும் 10 ரூபாயோடு வந்தவர்கள் என்றும், இயக்குநர் மணிவண்ணன் ஒரு பிச்சைக்காரனைப் போன்றவர் என்றும் மிகக் கேவலமாகக் கூறி வெறுப்பைச் சம்பாதித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா. 
 
கடந்த மூன்று வாரங்களாக விகடன் மேடையில் வாசகர்கள் கேள்விக்கு தமிங்கிலீஷில் பதிலளித்து படுத்தி வருகிறார் பாரதிராஜா. 25 சதவீதம் தப்புத்தப்பான ஆங்கிலமும், மீதி தமிழுமாக 'கொன்னு கொலையெடுக்கின்றன' அவரது பதில்கள்! 
 
எதிர்ப்பார்த்தது போலவே பாரதிராஜாவிடம் அதிக அளவு இளையராஜா பற்றியே கேள்விகள் வருகின்றன. இது அவரை மகா கடுப்பாக்கியிருக்கிறது. இந்த வாரம், இளையராஜாவைத் தவிர உங்களுக்கு நெருக்கமான நண்பன் யார் என்ற கேள்விக்கு, 'இளையராஜாவின் அண்ணன் ஆர் டி பாஸ்கர்தான் என் நெருக்கமான நண்பன். 
 
 
 
அவன் மூலமாத்தான் ராஜாவே எனக்குப் பழக்கமாகி, என் நாடகங்களுக்கு மியூஸிக் பண்ணான். அப்புறம் நான் சென்னைக்கு வந்து தங்கி, சினிமா வாய்ப்புத் தேடிட்டு இருந்த சமயம், அப்படி இப்படினு காசை மிச்சம் பிடிச்சு நாடகம் நடத்த 270 ரூபாய் சேர்த்துவெச்சேன். 
 
திடீர்னு ஒருநாள் விடிகாலையில பாஸ்கர், ராஜா, அமரன் மூணு பேரும் என்னோட அறைக்கு வந்து கதவைத் தட்டினாங்க. 'உன்னை நம்பி வந்துட்டோம்பா... இதுதான் கையிருப்பு'னு ஒரே ஒரு 10 ரூபாய் தாளைக் கண்ல காமிச்சாங்க. அப்புறம் என்ன... நாடகத்துக்காகச் சேர்த்த பணமெல்லாம் நட்புக்காகச் செலவாச்சு. பிகாஸ்... பாஸ்கர் என் நண்பன்!," என்று கூறியுள்ளார். 
 
இதுவாவது பரவாயில்லை, இயக்குநர் மணிவண்ணன் பற்றி பாரதிராஜா கூறியுள்ள பதில் மகா கேவலமாக அமைந்துள்ளது. பல வாசகர்களின் கடுமையான வெறுப்பைச் சம்பாதித்துள்ளது. அவர் கூறியுள்ள பதிலின் ஒரு பகுதி... 
 
 
"மணிவண்ணனுக்குக் கல்யாணம் நடந்த கதை தெரியுமா? என் அம்மாவுக்குத் தெரிஞ்ச ஒரு பெண், மயிலாப்பூர்ல என் நண்பர் ஆறுமுகத்தின் வீட்டில் அவருடைய பாதுகாப்பில், என் கண்காணிப்பில் இருந்துச்சு. அந்தப் பெண்ணுக்கு நானும் ஆறுமுகமும் அவருடைய பிராமண சமூகத்தில் மாப்பிள்ளை தேடிட்டு இருந்தோம். 
 
ஒரு முறை மணிவண்ணனையும் அழைச்சுட்டு அந்த மயிலாப்பூர் வீட்டுக்குப் போயிட்டு கார்ல திரும்பிட்டு இருந்தோம். அப்போ அந்தப் பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் விஷயமாப் பேசிட்டே வந்தோம். அப்போ எங்க பேச்சுக்கு இடையில் குறுக்கிட்ட மணிவண்ணன், 'அந்தப் பெண்ணை நானே கல்யாணம் பண்ணிக்கிறேனே'னு சட்டுனு கேட்டுட்டான். அப்போதைக்கு நான் எதுவும் சொல்லாம, என் மனைவிகிட்ட இது சம்பந்தமா பேசினேன். 'ஒரு வருஷம் போகட்டுங்க. அப்பவும் அவர் இதே பிடிவாதத்தோட இருந்தா... அவருக்கே அந்தப் பெண்ணைக் கட்டிவெச்சுடலாம்'னு அவங்க சொன்னாங்க. 
 
ஒரு வருஷம் போனது. 'மணிவண்ணன் அந்தப் பொண்ணு ஞாபகமாவே இருக்கான். பேசாம கட்டி வெச்சிடுங்க'னு சித்ரா லட்சுமணன் என்கிட்ட வந்து சொன்னான். 'சரி'னு முடிவெடுத்து, அந்தப் பொண்ணுக்கு என் கைக்காசுல இருந்து பத்து பவுன் நகை போட்டு, அந்தப் பெண்ணுக்கும் மணிவண்ணனுக்கும் கல்யாணம் பண்ணிவெச்சேன். 
 
 
அப்புறம் 'காதல் ஓவியம்' படத்தின் வசனத்தை அவனை எழுதச் சொன்னேன். அந்தப் படத்தின் டப்பிங் வேலை நடந்துட்டு இருக்கும்போது அதுல கலந்துக்காம, என்னைத் தேடி வீட்டுக்கு வந்தான் மணிவண்ணன். 'நான் தனியாப் படம் டைரக்ஷன் பண்ணப்போறேன்'னு சொன்னான். உடனே, மனசார ஆசீர்வாதம் பண்ணி அனுப்பிவெச்சேன். 
 
மணிவண்ணன் நல்ல படிப்பாளி, சிறந்த அறிவாளி. என்ன ஒண்ணு... வாயைத் திறந்தா, எல்லாமே பொய் பொய்யாத்தான் கொட்டும். ஒரு ராஜா கதை இருக்குமே... வீதில கஷ்டப் பட்டுட்டு இருந்த ஒரு பிச்சைக்காரனை அரண்மனைல தங்கவெச்சான் அந்த ராஜா. 
 
ஆனா, அரண்மனையின் நளபாகவிருந்து அந்தப் பிச்சைக்காரனுக்கு அலர்ஜி ஆகிடுச்சு. 'இவன் பிச்சை எடுத்த தெருவுல இருக்குற பத்து வீடுகள்ல இருந்து சோறு வாங்கிட்டு வந்து இவனுக்குப் போடுங்க'னு சொன்னார் ராஜா. அப்படியே செஞ்சாங்க... பிச்சைக்காரனுக்கு உடம்பு சரியாப்போச்சு. அப்பிடி, மணிவண்ணனை அரண்மனைக்கு அழைச்சுட்டு வந்தது என் தப்புதான்!'' -இப்படிக் கூறியுள்ளார். 
 
சமீபத்தில் நடந்த அமைதிப் படை 2-இசை வெளியீட்டு விழாவில் பாரதிராஜா பற்றி பேசிய மணிவண்ணன், 'பாரதிராஜாவுக்கு தன்னைத் தவிர யாருமே இயக்குநர் இல்லை என்ற நினைப்பு உண்டு. அதனால் எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டார்," என்று கூறியிருந்தார். அதற்கு பதிலுக்கு பதில் தருவதாக நினைத்து இப்படிக் கூறியுள்ளார் பாரதிராஜா. (நன்றி சினிமா செய்திகள்)

20 February, 2013

கணவன் மனைவிக்குள் இருப்பது மட்டும் காதல் இல்லை ... குஷ்பு-வின் அடுத்த பரபரப்பு...!

காதலர்கள் ‘காதலர் தினம்’ கொண்டாடி முடித்துள்ள நிலையில், காதல் வாழ்வில் அவசியமனது என்றும், காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பு இயக்குனர் சுந்தர்.சி-யை காதலித்து மணந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் கூறியதாவது, கணவன் மனைவிக்குள் இருப்பது மட்டும் காதல் இல்லை. வாழ்வின் பல தருணங்களில் காதல் முக்கியமானது. காதல் என்பது அன்பு. நான் என் அண்ணன்கள் மேல் வைத்திருக்கும் அன்பு. என் புகுந்த வீட்டில் எனக்கு கொடுக்கும் அன்பு. நான் என் குழந்தைகள் மேல் வைத்திருக்கும் அளவுக்கு அதிகமான அன்பு என அனைத்தும் காதல் என்ற வார்த்தையில் அடக்கம்.

நானும் என் கணவரும் பல தடைகளை தாண்டியே காதல் திருமணம் செய்துகொண்டோம். முதலில் எங்கள் காதலுக்கு இருவீட்டாருமே எதிர்ப்பு தெரிவித்தார்கள். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் எதிர்ப்பு இருந்தது. 
 
நாங்கள் காதலிக்க தொடங்கும் நேரத்தில் சுந்தர்.சி-யின் முதல் படம் கூட வெளியாகவில்லை. நான் நகரத்தில் வளர்ந்தவள். அவர் கிராமத்தில் இருந்து வந்தவர் என எங்களுக்கு பல வேறுபாடுகள் இருந்தது. இருந்தாலும் வீட்டில் பேசி புரியவைத்து சம்மதம் வாங்கினோம்.

சொந்த வீடு வாங்கியதும் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன் என்று சுந்தர்.சி வாக்களித்தார். பிறகு ஆறு வருடங்களாக காதலித்து திருமணம் செய்துகொண்டோம். இவ்வாறு தன் காதல் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் குஷ்பு.

26 December, 2012

வடிவேலுவின் இளமைக்காலம்... அதிர்ச்சி பின்னணி...! மனம் திறக்கிறார் வடிவேலு....

அரசியலுக்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய வைகைப்புயல் வடிவேலு முதல்முறையாக தன் மனதை புழுங்கிக்கொண்டிருக்கும் இளமைக்கால வாழ்க்கையில் சினிமாவுக்கு முன் செய்த வேலைகளைப் சொல்கிறார். 

“காலேஜெல்லாம் போய் படிக்கணும்.... பெரிய வேலைக்கு போகணும்னு சின்ன வயசில ரொம்ப ரொம்ப ஆசைப்பட்டேன், ஆனா பள்ளி படிப்பையே முழுசா என்னால படிக்க முடியல. அதற்கு காரணம் எங்களுடைய குடும்பம் ரொம்ப ஏழ்மையான குடும்பம். 

நாங்க உழைச்சாத்தான் எல்லோரும் சாப்பிடமுடியும்ங்கிற ஏழை குடும்பம் மட்டுமல்ல, பெரிய குடும்பமாகவும் இருந்ததால் அப்பா ஒருத்தர் வருமானத்தில் வாழ முடியாத நிலை. அதனால நானும், என்னுடைய சகோதரர்கள் மூவரும் சின்ன வயசிலேயே வேலைக்குப் போக ஆரம்பிச்சோம். 


ஒரு கண்ணாடிக் கடையிலேயே தினக்கூலி வேலைக்கு சேர்ந்தோம். கண்ணாடிகளை எல்லாம் குறிப்பிட்ட அளவில் அறுக்கிற வேலை. எங்கப்பாவும் அந்த கண்ணாடிக் கடையில்தான் வேலை பார்த்தாரு. ஆனா எங்கள வேற ஒரு கடையில சேத்து விட்டாரு. ‘கண்ணாடி வேலை ரெம்ப கஷ்டமான வேலை, தன் கண் முன்னால பிள்ளைங்க கஷ்டப்படக் கூடாது’ ன்னு அவருக்கு நினைப்பு.

கண்ணாடிய அறுக்கிறது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. ‘சர்க்கஸ்’-ல கரணம் தப்பினா மரணம்”னு செர்ல்ற மாதிரி. இதில் கத்தி வெட்டு, லேசா தப்பினா ரணம் தான். 

கண்ணாடி சில்லு குத்தியதால நானும் என் சகோதர்களும் நிறைய தடவ ரத்தம் சிந்தியிருக்கோம். என் உடம்பில் கூட நிறைய வடுக்கள் இன்னும் இருக்கு. கண்ணாடி கடை வேலையில் கிடைச்ச மொத்த சம்பளம் எவ்வளவுன்னு சொல்லலியே



2 ‘குரோஸ்’ கண்ணாடி (240 துண்டு) அறுத்தா 40 ரூபா. நாங்க நாலு வேரும் காலையில ஏழு மணிக்கு வேலைக்குப்போயிட்டு வீடு திரும்ப அவ்வளவு உழைச்சாத்தான் 2 குரோஸ் அறுக்க முடியும். 

வழக்கமா வேலை முடிஞ்சிதான் எல்லாரும் சம்பளம் தருவாங்க. நாங்க காலையிலேயே ‘அட்வான்ஸ்’ மாதிரி பத்து ரூபாயோ, இருபது ரூபாயோ வாங்கி வீட்டில் குடுத்திடுவோம். அந்த பணத்தை வச்சித்தான் அரிசி வாங்கி உலை கொதிக்கணும்.

சில சமயங்கள்ல ‘காட்போர்ட்’ அறுத்து கண்ணாடியப் பொருத்தர வேலையும் தருவாங்க. ‘காட்போர்டு’ அறுத்து அதோட தூளு மூக்கு வழிய உடம்பில் போய் என்னோட தம்பி ஒருத்தன் நிரந்தர ஆஸ்துமா நோயாளி அயிட்டான். 
ஒரு வருஷம் இல்ல, ரெண்டு வருஷம் இல்ல. பதிமூணு வருஷம் கண்ணாடி கடையில நாங்க வேலை பார்த்திருக்கோம். ஒரு நாள் வேலைக்கு போகலைன்னா, அடுப்பில் பூனை தான் படுத்து உறங்கும்.

உடம்பில் நோவுன்னாக் கூட மாத்திரை சாப்பிட்டுட்டு மாங்கு மாங்குன்னு கண்ணாடிய அறுப்போம். இன்னைக்கு நான் நல்ல நெலமையில இருக்கிறேன். என்னைக்கும் மதுரையில நான் பார்த்த கண்ணாடி வேலையை மறக்கவே மாட்டேன்.” 

என்று தான் நடிக்க வரும் முன் பார்த்த கடைசி வேலையைப் பத்தி சொல்லுகிறார் வடிவேலு.

Related Posts Plugin for WordPress, Blogger...