கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label தலைவா. Show all posts
Showing posts with label தலைவா. Show all posts

16 August, 2013

தலைவா விஜய்யின் அதிரடி முடிவு..! தனுஷின் 25-வது படம்..!


தலைவா படம் வெளிவர உதவும்படி கோரிக்கையை முன்வைத்து நடிகர் விஜய் உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.



உண்ணாவிரதத்தில் பங்கேற்க நடிகர் சத்யராஜ், கதாநாயகி அமலா பாஅல் ஆகியோரும் இயக்குனர் விஜய்யும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

உண்ணாவிரதத்திற்கு பாதுகாப்பு அளிக்கும், அனுமதியும் அளிக்கும்படி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இயக்குனர் விஜய் மனு செய்துள்ளார்.

படம் ரிலீஸ் ஆகாவிட்டால் கடனாளி ஆகிவிடுவேன் என்று ஏற்கனவே தயாரிப்பாளர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கண்ணீர் கடிதம் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அந்தப் படம் ரிலீஸ் ஆகாவிட்டால் கடும் நஷ்டமடைவேன் என்று தயாரிப்பாளர் கண்ணீர் கடிதம் எழுதியுள்ளதையடுத்து நடிகர் விஜய் உண்ணாவிரதம் இருக்க முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.




**********************************


சுதந்திர தினமான நேற்று தனுஷின் 25வது படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்தார்கள். அதன் படி தனுஷின் படப்பெயர் நேற்று வெளியிடப்பட்டது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் உருவாகும் தனுஷின் 25வது படத்திற்கு ‘வேலையில்லாப் பட்டதாரி ‘ எனப் பெயரிடப்பட்டுள்ளது. 
 
கடந்த மாதம் தந்து 30வது பிறந்தநாளைக் கொண்டாடிய தனுஷ், அன்று தனது 25வது படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். அதில் தனது பொல்லாதவன், ஆடுகளம் மற்றும் 3 படங்களில் ஒளிப்பதிவாளாராக பணியாற்றிய வேல்ராஜின் இயக்கத்தில் தனது அடுத்தப் படம் எனத் தெரிவித்திருந்தார்.

இப்படத்தில் முதன் முறையாக தனுஷுடன் ஜோடி சேர்கிறார் அமலாபால். தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் இப்படத்தை தயாரிக்க உள்ளது.

படத்திற்கு இசை ‘கொலைவெறிப் புகழ்' அனிருத். இப்படத்தின் படப்பிடிப்புகள் வரும் 20ந்தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

படத்தில் அமலாபாலிற்கு அழகான் சென்னைப்பெண் கதாபாத்திரமாம். மொத்தத்தில் இப்படம் நல்ல குடும்பப்பாங்கான படமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

10 August, 2013

இப்படியும் படம்பார்த்தோம்...! தலைவா படம் பார்த்த என் அனுபவங்கள்


தலைவா படத்தை பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆவலாக இருந்தேன். அதற்கு காரணம் வெகுநாளாக கவிதைவீதியில் திரை விமர்சனம் எழுதாமல் இருந்தேன். ‌‌ கடந்த சில மாதங்களாக வெள்ளி சனி கி‌‌ழமைகளில் விடுமுறை இல்லை என்பதால் அந்த வாய்ப்பு இல்லாமல் போனது. ஆனால் இந்த வாரம் ரம்ஸான் புண்ணியத்தில் வரிசையாக மூன்று நாட்கள் விடுறை என்பதால் கண்டிப்பாக தலைவா படம் பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்து டிக்கெட்கூட வாங்கியாகிவிட்டது.


திருவள்ளூர் நகரில் கிருஷ்ணா மற்றும் லட்சுமி என இருதிரையரங்குகளில் படம் வெளியிடப்படும் என்பதால் படமட் பார்ப்பதில் எந்தபிரச்சனையும் இருக்காது என நினைத்தேன்.


ஆனால் கதை திருட்டு, வெடிகுண்டு மிரட்டல், அரசு தரப்பில் ‌மௌனம் என தலைவாவுக்கு வந்த தொடர் தொந்தரவுகளால் கடைசியில் தமிழில் படம் இல்லை என்றாகிவிட்டது.


(திரையரங்கில் வேடந்தாங்கல் கரண்
 

படம் பார்க்க போகிறோம் என்ற ஆவலில் தலைவா திரை விமர்சனத்திற்கு முன்... முழு விவரம்...  என்ற பதிவிட்டேன் ஆனால் வெள்ளிக்கிழமை படம் இல்லை என்ற பிறகு... தலைவா திரைவிமர்சம் மற்றும் சில நகைச்சுவைகள் என்று என் தலைவா ஆசையை பூர்த்தியாக்கிகொன்டேன்.


வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருவள்ளூர் சென்றேன். ஆனால் படம் எதுவும்போக மனமில்லை. மதிய உணவுக்கு ரம்ஸான் பிரியாணி வரும் என்ற ஆவலில் கொஞ்சம் இணையத்தில் உலவிக்ககொண்டிருந்தேன்.

1.00 மணிக்கு ‌திருவள்ளூர் ஆயிஷா டெக்ஸ்டைல்ஸ் ஓனர் இல்லத்தில் இருந்து இரண்டு பார்சல் பிரியாணி வந்தது. நண்பர் வேடந்தாங்கல் கருணை அழைத்து ஆளுக்கொரு பிரியாணி சாப்பிட்டோம். ஆந்திர மாநிலம் சத்திவேட்டில் தலைவா படம் வந்திருக்கிறது என்று தெரியவரை மொத்த பிளானும் மாறியது. அடுத்த 30 நிமிடங்களில் கரண் பைக்கில் இன்னோரு நண்பருடன் மூன்று பெரும் பயணமானோம்.



(விஜய் போஸ்டருக்கு பீர் அபிஷேகம்... பால் அபிஷேகம்)


சரியாக 2.00 மணிக்கு ஊத்துக்கோட்டை அடைந்தோம். அங்கு வந்த சில விஜய் ரசிகர்களை (தலைவா டி-சர்ட் அணிந்திருந்தார்கள்) விசாரித்ததில் தலைவா படம் இரு தியாட்டர்களில் போட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழில் படம் வரவில்லை தெலுங்கில் தான் ஓடுகிறது என்று கூறிவிட்டார்கள். (அடபாவிகளே விஜய் படத்தை முதல் நாள் பார்க்கும்போது சத்தத்தில் தமிழில் பார்த்தாலே ஒன்றும் புரியாது அது தெலுங்கில் வேறையா...?)

சரி மொழியில் என்ன இருக்கிறது என்று முன்னேறி சரியாக 3.30 மணிக்கு சத்தியவேடு அடைந்தோம்.  சத்தியவேடு முருகன் திரையங்கில் தலைவா தெலுங்கு பதிப்பு படம் போடப்பட்டிருந்தது. சாமூண்டீஸ்வரியில் தமி‌‌ழ் ஆனால் படம் வெளியாகவில்லை. அங்கு நாங்கள் கண்டகாட்சி எங்களாலே நம்ப முடியவில்லை. ஆம்  அந்த திரையரங்கமே பார்க்கதிருக்காத வகையில் சென்னை கூட்டம் நிரம்பி வழிந்தது. வழியெங்கும் சென்னை பதிவு வண்டிகள் நூற்றுக்கணக்கில் நின்றுக்கொண்டிருந்தது. 

 கற்பூரம் காட்டும் விஜய் ரசிகர்கள்


அடுத்த காட்சி மாலை 6.00 மணிக்கு என்று சொல்லிவிட்டார்கள். டிக்கெட் அப்போ‌தே வாங்கியாகிவிட்டது. 2 மணிநேரத்தை என்ன செய்வது என்று தெரியாமல் அங்கு பொழுதை போக்கவேண்டியதாகிவி்ட்டது. ஆனால் இதுவரை டாஸ்மார்ககை பார்த்த கூட்டம் ஆந்திரா ஒயின்ஷாப்பை பார்த்தவுடன் அனைத்து கூட்டமும் அங்குதான் நிறைந்து வழிந்தது.


பிறகு 5.30 மணிக்கு காட்சிக்கு சென்றால் கூட்டம் கட்டகடாங்கமால் இருந்தது. விஜய் போஸ்டருக்கு பீர் அபிஷேகம் பால் அபிஷேகம் நடந்தது... (எப்படி டெவலப் ஆயிருக்காங்க பாருங்க) பிறகு அடிச்சி பிடிச்சி உள்ளே சென்றால் வெறும் 500 இருக்கைகள் கொண்ட திரையரங்கில் 1500 பேர் பாதிபேர் நின்றே பார்க்கவேண்டிய நிலை எங்களுக்கு பெஞ்சி ஒரு ஓரம் இடம் இடைத்தது. இவ்வளவு கஷ்டப்பட்டு எந்தப்படத்தை பார்த்ததில்லை. கூட வந்த நண்பர் அவசர அழைப்பின் பேரில் படம் ஆரம்பித்த அரை மணிநேரத்தில் கிளம்பிவிட்டார் (பஸ் வழியாக).


நானும் கரணும் மட்டும் கடைசிவரை வேர்க்க விருவிருக்க பார்த்துவிட்டு இரவு 10.00 மணிக்கு கிளம்பினேன். வரும் வழிமுழுவதும் அடர்ந்த காட்டுப்பகுதி ‌என்பதால் பயந்துகொண்டே வந்தோம். இரவு 11.15 மணிக்கு வீட்டுக்குவந்தோம்.

எப்படியோ படம் பார்த்தாகிவிட்டது ஆனால் பார்த்தோம் என்றாகிவிட்டது. திரையரங்கில் கூட்டம் அதிகம் என்பதால் காற்றே இல்லை. படம் பார்த்த அனைவரும் வேர்த்துகொட்டித்தான் பார்த்தார்கள். படம் முழுக்க ஒரே சத்தம் ரசிகர்களின் ஆரவாரம் அடக்க முடியாமல் இருந்ததது.
 (சத்தியவேடு திரையரங்க வாசலில் அமர்களப்படுத்தும் சென்னை ரசிகர்கள்)

இவ்வளவு ரசிகர்களை விஜய் வைத்திருப்பது பெருமைக்குறிய விஷயம்தான் ஆனால் அத்தனை ரசிகர்களும் குடித்துவிட்டு ஆட்டம் பாட்டம் என அனைவரையும் முகம் சுளிக்க வைத்துவிடுவாதுதான் வேதனைக்கூறிய விஷயமாக இருக்கிறது.


தமிழகத்தில் இந்த படத்தை எதற்காக ‌வெளியிட தடைசெய்தார்கள் என்று புரியவில்லை ஒரு வேளை இந்த படத்தை பிரபலப்படுத்தும் முயற்சியா இது.
 
பார்ப்போம் படம் ஓடுகிறதா இல்லையா என்று...

தலைவா சினிமா விமர்சனம் / thalaiva movie review


மக்களே முதல் முதலாக ஒரு தமிழ்படத்தை தெலுங்கில் பார்த்துவிட்டு திரைவிமர்சனம் எழுதுகிறேன்.  அதற்காக எல்லாவார்த்தையிலும் “லு” சேர்க்க வேண்டியதுதானேன்னு சொல்லக்கூடாது.  படம் புரிந்து விட்டது ஆனால் சில வசனங்களைத்தான்  சரியாக ரசிக்கமுடியவில்லை.

(படம் பார்க்க சென்ற திகிலுட்டும் அனுபவங்கள் அடுத்த பதிவில்.. ஏன் ஆரூர் முனா செந்தில் மட்டும்தான் எழுதுவாரா?...)

முதலில் இந்த படத்துக்கு எதற்கு தலைவா என்று பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை. “அண்ணா” இதுதான் சத்தியராஜ் அவர்களின் திரைக்கதை பெயர். ஆந்திராவில் ஓடும் தலைவாவுக்கு “அண்ணா” என்றுதான் பெயர்... (அங்கிட்டு ஒருத்தர் சொன்னாருங்க). தமிழகத்தில் ஏன் இந்த பெயரை வைக்கவில்லை என்று நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.



கதையா...? சரி சொல்றேன்... சிவா நடித்த தமி‌ழ்படம் மாதிரி தமிழில் வந்த டான் கதைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சம் காட்சிகளை எடுத்து ஒரு படத்தை கொடுத்துவிட்டார் இயக்குனர் விஜய்.


விஜய் ஒரு மும்மபைக்காரர். மும்மபையில் ஏற்படும் ஒரு கலவரத்துக்குபிறகு  சத்தியராஜ் விஜய்யை சிறு வயதிலே ஆஸ்திரேலியா அனுப்பிவைத்துவிடுகிறார். (இவங்க கம்முன்னு சென்னை செலைட் பண்ணியிருக்கலாம்.. அப்படி ஒண்ணும் ஆஸ்திரேலியாவை சுவாரஸ்யமாக காட்டியமாதிரி தெரியவில்லை)

விஜய் ஆஸ்திரேலியாவில் மினரல் வாட்டர் கம்பெனி நடத்திவருகிறார். இவருக்கு உதவியாக கொஞ்சம் நகைச்சுவைக்காக சந்தானம். (இப்பெல்லாம் சந்தானத்தின் தேதியை வாங்கிக்கொண்டுதான் ஹீரோவின் தேதியை வாங்குகிறார்கள்போல).
மினரல் வாட்டர் தொழில் மட்டுமில்லாமல் “தமிழ் பாய்ஸ்” (அங்க தெலுங்கு பாய்ஸ்) என்ற ஒரு டான்ஸ் குழுவை வைத்துக்கொண்டு ஆஸ்திரேலியாவில் கொஞ்சம் கொஞ்சமாய் பிரபலமாகிறார். இங்கு தான் ஹீரோயின் அமலாபாய் அறிமுகம் அப்படி இப்படின்னு விஜய்யுடன் சேர்ந்து நடனக்குழுவில் இணைந்து  அங்கு நடக்கும் நடனப்போட்டியிலும் வெற்றிப்பெறுகிறார்கள்.


அதுவரை கொஞ்சம் கலகலப்பாக சென்ற படம். திருமணம் செய்துக்கொள்ள அமலாபாலுடன் விஜய் மும்பை வந்தபிறகு கதை அப்படியே மாறிவிடுகிறது.


தன் அப்பா சாதாரன தொழிலதிபர் என்று  நினைத்த விஜய்க்கு தன்அப்பா மும்மையில் மிகப்பெரிய டான் என்று தெரியும் போது திகை்ததுப்போகிறார், மேலும் அப்போதே கைது செய்து.. ஒரு பாம் பிளாஸ்டில் கொள்ளப்படுகிறார்.


அமலாபால் ஒரு சிபிஐ ஆபிஸராம் சத்தியராஜை பிடிக்கத்தான் விஜய்யுடன் பழகுகிறார் என்பது அங்குதான் அம்பலத்துக்கு வருகிறது.

அதன் பிறகு தன் தந்தை விட்டஇடத்தை தானே நிரப்‌பவேண்டும் என்பதற்காக தானே டானாக மாறுகிறார். கொஞ்ச நேரம் பில்லா அஜித் போல டிப்டாப்பாக நடக்கவிட்டிருக்கிறார்கள். அதன்பிறகு மும்பையில் வாழும் மாஹி மக்களுக்கு உதவிகள் புரிந்து அங்கு நடக்கும் பிரச்சனைகளை, கலவரங்களை தடுத்துநிறுத்தி, தன் தந்தையை கொலை செய்தவர்களை கண்டுபிடித்து பழிவாங்கி... என இப்படி இழுத்து முடிக்கிறார்கள் படத்தை...

இடைவேளைக்கு பிறகு படம் நாயகன், பில்லா, பாட்ஷா, தேவர்மகன் எனபலபடங்களை நியாபகப்படுத்துகிறது அதானல் நீங்க அங்கேயே பார்த்துக்கங்க..


ஏன்னென்று தெரியவில்லை தற்போது கதையை எடுத்துக்கொண்டு மும்பை ஓடிவிடுகிறார்கள்.... மும்பை வீதிகளை அழகிய தமிழ்மகன், துப்பாக்கி, படத்திலேயே முழுசாக காட்டிவிட்டார்கள். எல்லோரும் தாராவியை காட்டுவதால், இவர்கள் கொஞ்சம் வித்தியாசமான வடமும்பையிலுள்ள மாஹிம் பகுதியைச் சுற்றி கதையமைத்துள்ளார்கள். (ஒருவேளை பாலிவுட்டை பிடிக்க விஜய் திட்டமிட்டுருக்கிறாறா?)
 
வழக்கமான விஜய் படத்தில் வரும் காட்சிகள்தான் இந்தப்படத்திலும் புதியதாக ஒன்றும் செய்யவில்லை. வித்தியாசமான காட்சி அமைப்பு‌களோ.. பரபரப்பான திரைக்கதையோ இல்லை... (ஒரு சில இடங்களில் மட்டும் கைதட்டலாம்)


படத்துக்கு படம் விஜய்யின் இளமை கூடிக்கொண்டே இருப்பதை மறுக்க முடியாது. மனிதர் ரொம்பவும் அழகாக காணப்படுகிறார். ஆனால் இயக்குனர்களோடு ஒட்டமறுத்து அப்பாவின் பேச்சைக்கேட்டுக்கொண்டு இருந்தால் விஜய்யின் எதிர்காலம் என்னவாகும் என்று தெரியவில்லை. (அனைத்தையும் விட்டுவிட்டு அரசியல் நடத்த வந்துவிடலாம்)

அமலா பால் முதல் பாதியில் ஹோட்டல் அதிபரின் மகளாக வந்து பின் விஜய்யுடன் இணைந்து “டான்ஸ்“ குழுவில் இணைத்து நடனத்தால் அசத்தியிருக்கரார்.. இரண்டாம் பாதியில் நான்கு காட்சியில் காக்கிச்சட்டையில் வந்து போகிறார் அவ்வளவுதான்.

இன்னும் சில காதாப்பாத்திரங்கள் தங்கள் பணியை செவ்வனவே செய்கிறார்கள். நிறைய முகங்கள் தமிழ் முகங்கள் அல்ல....

எது எப்படியோ இயக்குனர் விஜய்க்கும்.. ஹீரோ விஜய்க்கும் சரியான கதைகளம் அமையவில்லை என்றே சொல்லவேண்டும்

A மற்றும் B சென்டரில் படம் டல்லடிக்கும் ஆகால் C சென்டர் மக்கள் இதை கண்டிப்பாக கொண்டாடுவார்கள்...

விமர்சகர்கள் கண்டிப்பாக இந்த படத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது என்னுடைய அபிப்ராயம்.

08 August, 2013

தலைவா திரை விமர்சனத்திற்கு முன்... முழு விவரம்...



தலைவா ஆகஸ்ட் 9 வெளியாகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பும், எதிர்ப்பும் கலந்து கட்டுகிறது. இருநாளும் இல்லாத திருநாளாக (பலி நாளாக...?) தலைவா திரையிடப்படும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கிறார்கள், பெயரைச் சொல்ல திராணியற்ற சில போக்கி‌ரிகள். தலைவா கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்ப்பதில் ஒரு கிக் இருக்கதான் செய்கிறது.

ஏ.எல்.விஜய் மதராசப்பட்டணத்தை முடித்திருந்த நேரம். படத்தைப் பார்த்த விஜய், மதராசப்பட்டணத்தை பாராட்டியதுடன், நாம் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம் என்று தெரிவித்தார். அன்று சொன்னது தலைவாவில் சாத்தியமானது.



தலைவாவை தயா‌ரித்திருக்கும் மிஸ்‌ரி புரொடக்சன் சந்திரப்பிரகாஷ் ஜெயின் பைனான்சியர். அர்ஜுன் நடித்த ஜெய்ஹிந்த் படத்தை தயா‌ரித்தவர். 
கடைசிப்படம் - தயா‌ரிப்பாளராக - ‌ரிக்சா மாமா. அதன் பிறகு படமே தயா‌ரிக்காமல் இருந்தவருக்கு விஜய் படம் கனவு புராஜெக்ட். அது கைகூடிய மகிழ்ச்சியில் இன்னும் திளைத்துக் கொண்டிருக்கிறார்

 
தெய்வத்திருமகள் படத்தில் அமலா பாலுக்கு சின்ன வேடம். வெயிட் பண்ணு, பெ‌ரிய ரோலாக தருகிறேன் என்று ஏ.எல்.விஜய் சொன்னதாகவும், அந்த பெ‌ரிய ரோல்தான் தலைவாவில் அவர் விஜய் ஜோடியாக நடித்திருப்பது என்பதாகவும் கோடம்பாக்கம் இன்னமும் முணுமுணுக்கிறது. இருந்தாலும், படத்தின் ஆரம்பத்தில் சமந்தா ரூத் பிரபு, யாமினி கௌதம் போன்றவர்களின் பெயர்களும் கதாநாகி ரோலுக்கு அடிபட்டது. 




ஆஸ்திரேலியாவில் ஆட்டம் பாட்டம் என்று ஜாலியான டான்ஸராக இருக்கும் விஜய், தனது தந்தையின் மரணம் காரணமாக தமிழகம் திரும்புவதாகவும், தந்தையின் மரணத்துக்கு காரணமான சக்திகளை முறியடித்து மக்கள் தலைவராக உருவெடுப்பதாகவும் தலைவா கதை பின்னப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது (கவனிக்க, கூறப்படுகிறது). 
விஜய்யின் தந்தையாக சத்யரா‌ஜ் நடித்திருப்பதாகவும் கூறுகிறார்கள். பொதுவாக மாஸ் ஹீரோக்களின் படத்தின் கதை என்று மீடியா கற்பனை செய்வதற்கும், நிஜ படத்துக்கும் ஆறு வித்தியாசம் நிச்சயம் இருக்கும். தலைவாவில் அப்படியிருந்தால்... வேறென்ன... திட்டாமல் மறந்திடுங்க.


அமலா பால் முதல்முறையாக இந்தப் படத்துக்கு சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருக்கிறார்.


விஜய் படம் ஒன்றுக்கு ‌ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பது இதுவே முதல்முறை. விஜய் படத்துக்கு இசையமைக்கிறோம் என்றதும் அவர் முதலில் முடிவு செய்தது, விஜய்யை பாட வைக்க வேண்டும். அந்தப் பாடல்தான் நீங்கள் கேட்கும் வாங்கண்ணா வணக்கங்கண்ணா.. பாடல்.




தலைவாவின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது. முடிந்தது ஆஸ்ட்ரேலியாவில்.

நடன கலைஞராக இதில் விஜய் நடித்திருக்கிறாராம். ஆஸ்ட்ரேலியாவில் நடந்த படப்பிடிப்பில் நிறைய நடனக் கலைஞர்கள் பங்கு பெற்றனர். சுமார் 300 பேர் என்கிறது தலைவா டீம்.

திருமண வேலைகள் காரணமாக ‌ஜி.வி.பிரகாஷால் பின்னணி இசை சேர்ப்பை முழுமையாக முடிக்க முடியவில்லை. அந்த கோடிட்ட இடங்களை இசையால் நிரப்பியவர் ரகு நந்தன்.

துப்பாக்கியிலும் புதிய வில்லனை அறிமுகப்படுத்தியது போல் இதிலும் அபிமன்யூ சிங் என்ற நடிகரை வில்லனாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இவர் ராம்கோபால் வர்மாவின் ரத்த ச‌ரித்திரம், அனுராக் காஷ்யபின் குலால் ஆகிய படங்களில் கலக்கியவர்.



இவர்கள் தவிர இந்தி டிவி நடிகை ராகினி நந்துவானியும் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். ஏ.எல்.விஜய்யின் அண்ணன் உதயாவும் நடித்திருக்கிறார்.

நா.முத்துக்குமார் படத்தில் இடம்பெறும் ஐந்து பாடல்களையும் எழுதியுள்ளார். ஒளிப்பதிவு நீரவ் ஷா. ஆண்டனி எடிட்டிங்.

படத்தில் மொத்தம் 4 சண்டைக் காட்சிகள். ஸ்டண்ட் சில்வா இதனை அமைத்துள்ளார்.


ஆஸ்ட்ரேலியாவில் கலர்ஃபுல் காஸ்ட்யூமில் கலக்கும் விஜய், தமிழகம் திரும்பிய பிறகு டைட் அரைக்கை சட்டை, டைட் பேன்ட், டக் இன் என்று யூனிஃபார்ம் கெட்டப்புக்கு மாறுகிறார்.



சத்யராஜுக்கு பெ‌ரியய்யா என்ற பவர்ஃபுல் வேடம். விஜய் கதாபாத்திரத்துக்கு திருப்புமுனை ஏற்படுத்துவதே சத்யரா‌ஜின் பெ‌ரியய்யா கேரக்டர்தான் என்கிறார்கள். 
தாடியுடன் வெள்ளை காஸ்ட்யூமில், தோளில் நீண்ட அங்கியுடன், சிவா‌ஜி கணேசனின் யாருக்காக... இது யாருக்காக... கெட்டப்பில் வருகிறார்.

சற்றே நீண்ட திரைப்படம். இரண்டு மணி ஐம்பது நிமிடங்கள் ஓடுகிறது.

சென்சா‌ரில் யுஏ சான்றிதழ்தான் கிடைத்தது. யுஏ என்றால் 30 சதவீத வ‌ரிவிலக்கு கிடைக்காது என்பதால் ‌ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பி யு சான்றிதழ் பெற்றனர். ‌ரிவைஸிங் கமிட்டியில் 4 இடங்களில் படம் கத்த‌ரிக்கப்பட்டது.




இதுவரை வெளியான விஜய் படங்களில் தலைவாவுக்கே அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சுமார் 2000 திரையரங்குகள். தமிழகத்தில் மட்டும் 450 திரையரங்குகள்



தலைவா என்ற டைட்டிலும், படத்தின் ட்ரெய்லரும், டைம் டு லீட் என்ற கேப்ஷனும் (தெலுங்கில் பார்ன் டு லீட்) இதுவொரு அரசியல் படம் என்ற தோற்றத்தை உருவாக்கியிருக்கிறது. 
படத்துக்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் தொந்தரவுகளுக்கு தலைவா அரசியல் படம் என்ற அனுமானம்தான் காரணம் என்று நினைத்ததால் இயக்குனர் விஜய்யும், இளைய தளபதி விஜய்யும் தொடர்ந்து, இது அரசியல் படம் இல்லை என அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள்.



லேட்டஸ்ட் தகவல், தலைவா திரையிடப்பட உள்ள திரையரங்குகளுக்கு வந்துள்ள வெடிகுண்டு மிரட்டல். வெத்துவேட்டு மிரட்டல் என்று தெரிந்தாலும் பொறுப்புணர்ச்சி காரணமாக போலீஸில் புகார் செய்து டிக்கெட் ‌ரிசர்வேஷனை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இந்த எதிர்மறை விமர்சனங்கள் படத்தின் விளம்பரத்துக்கே பெ‌ரிதும் உதவி செய்கின்றன.

மிஸ்‌ரி புரொடக்சன் தயா‌ரித்துள்ள படத்தை வேந்தர் மூவிஸ் தமிழகத்தில் வெளியிடுகிறது. ஆந்திராவில் அண்ணா என்ற பெய‌ரில் தெலுங்கில் வெளியாகிறது. கேரளாவில் தலைவா என்ற அதே பெய‌ரில் தமிழிலேயே வெளியாகிறது.

தொலைக்காட்சி உ‌ரிமையை வாங்கியிருப்பது சன். 15 கோடிகள் என்கிறார்கள்.

ச‌ரி, படத்தைப் பற்றிய ‌ரிசல்ட் என்ன? முதல் பகுதி சுமார், இரண்டாம் பகுதி பரவாயில்லை (சூப்பர் என்றும் சிலர் சொல்கிறார்கள்). ராம்கோபால் வர்மாவின் சர்க்காரை ஞாபகப்படுத்துவதாகவும் கமெண்ட் வந்துள்ளது.




இன்னும் ஒரு நாள்தானே. திரையரங்கில் நேரடியாகவே தெரிந்து கொள்வோம். 

டிக்கெட் வாங்கியாச்சி நாளை  தலைவா சினிமா விமர்சனத்தோடு சந்திக்கிறேன்....

11 July, 2013

இஸ்லாமியர் வேடம்...! மீண்டும் சர்ச்சைக்குள் விஜய்..!


விஜய் நடித்துள்ள தலைவா திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு இருந்த பரபரப்பு சமீபத்தில் தான் அடங்கியது. டிரெய்லர் வெளியீடு, பாடல் வெளியீடு என எல்லாம் முடிந்து ஆகஸ்டு 9-ஆம் தேதியன்று தலைவா ரிலீஸ் ஆகிறது என ஐங்கரன் நிறுவனம் அறிவித்துவிட ‘தலைவா... தலைவா...’ என மகிழ்ச்சி ஆரவாரம் செய்துவருகின்றனர் விஜய் ரசிகர்கள்.




இந்நிலையில் விஜய் அடுத்ததாக நடிக்கும் ஜில்லா திரைப்படத்தின் ஒரு ஃபோட்டோ வெளியாகி தலைவா திரைப்படத்தின் பரபரப்பை அப்படியே தன் பக்கம் திருப்பிக்கொண்டது. அந்த ஃபோட்டோவில் விஜய் அடர்த்தியான தாடியுடன், இஸ்லாமியர் போல் உடையணிந்துள்ளார்.சமூக வளைதளங்களில் இந்த படம் வேகமாக பரவ, விஜய் ஜில்லா திரைப்படத்தில் இஸ்லாமியராக நடிக்கிறாரா? என்ற கேள்வி ரசிகர்களையும், திரையுலகத்தையும் பரபரப்பாக்கிவிட்டது.


சென்ற வருடம் துப்பாக்கி படம் ரிலீஸான போது ஏற்பட்ட பிரச்சனையில் சுமூக முடிவு கண்ட பின் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ‘விஜய் இஸ்லாமியர்கள் சகோதரர்களாகவே நினைக்கிறார். இப்போது ஏற்பட்ட இந்த பிரச்சனைக்கு பிராய்ச்சித்தமாக விஜய் ஒரு திரைப்படத்தில் இஸ்லாமியராகவே நடிப்பார்’ என்று கூறியிருந்தார்.

எனவே ஜில்லா திரைப்படத்தில் விஜய் இஸ்லாமியராக நடிக்கிறாரா? என விசாரித்தபோது “திரைப்படத்தின் ஒரு முக்கியமான காட்சியில் மட்டும் விஜய் இஸ்லாமியர் போன்ற தோற்றத்தில் நடிக்கிறார்” என்று கூறியிருக்கிறது ஜில்லா படக்குழு.

இப்படத்தில் அப்படி இஸ்லாமிய வேடத்திலோ அல்லது வசனங்களிலோ அல்லது காட்சிகளிலோ எந்தவிதமான சர்ச்சைகளிலும் சிக்காமல் இருந்தால் நல்லது...!

06 July, 2013

ஸ்டாலின் திமுக -வில் இருந்து விலக்கப்படுவாரா..? சுயநல கலைஞர் என்ன செய்வார்...!


"ஸ்டாலின் தான் அடுத்த தலைவராகி, கட்சியை வழி நடத்த வேண்டும். அவருக்குத் தான் தகுதி உண்டு. கட்சியில், வேறு யாருக்கும் அந்த தகுதி இல்லை' என, மதுரையில், ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க., நிர்வாகிகள் பேசியுள்ளனர். 

காலச்சக்கரம் சுழல்கிறது... இன்று, ரத்தக் கண்ணீர் விடுகிறார் கருணாநிதி. அன்று, 1972-ல், "எம்.ஜி.ஆர்., தான், எங்கள் தலைவராகி கட்சியை வழி நடத்த வேண்டும். அவருக்குத் தான் தகுதியுண்டு. கட்சியில் வேறு யாருக்கும், அந்த தகுதியில்லை' என்று, ஒட்டு மொத்த உடன்பிறப்புகளும் உரக்க உரைத்தனர். 

இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், "என்னிடமே கணக்கு கேட்கிறார் எம்.ஜி.ஆர்.,' என்று சீறி, அவரை, தி.மு.க.,விலிருந்து விலக்கினார் கருணாநிதி. அதற்கு, கடுந்தண்டனையாக, 13 ஆண்டுகள், கருணாநிதி மூலையில் முடங்கி கிடந்ததை, மறப்பதற்கில்லை. 

அடுத்து, 1995-96ல், "வைகோ தான் எங்கள் தலைவர். அவர் தான் அடுத்த முதல்வர். இதை, எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது' என்று, தி.மு.க.,வின் இரண்டாம் கட்ட தலைவர்கள், கருணாநிதி கடு கடுக்கும்படி பேசினர். 

உடனே, விடுதலைப் புலிகளைத் தூண்டி விட்டு, "மனித வெடிகுண்டு மூலம், என்னை படு துண்டுகளாக, துடி துடிக்க, சாகடிக்கத் துடிக்கிறார் துரோகியான வை.கோபால் சாமி' என்று, கொலைப் பழி கூறி, வைகோவை தி.மு.க.,விலிருந்து விரட்டியடித்தார், 

கருணாநிதி. இன்று, "ஸ்டாலின் தான் எங்கள் தலைவர். அவர் தான், அடுத்த முதல்வர். கட்சியில் வேறு எவருக்கும், அந்தத் தகுதி இல்லை' என்று, பல கதைகளைக் கூறி, தி.மு.க., நிர்வாகிகள் பேசியதை அறிந்து, எம்.ஜி.ஆர்., - வைகோ இருவரையும் நீக்கியது போல், ஸ்டாலினை தி.மு.க.,விலிருந்து, "டிஸ்மிஸ்' செய்வாரா கருணாநிதி? 

இந்தக் கேள்வியை, முத்து, செல்வி, அழகிரி, தமிழரசு, ராசாத்தி, ராஜா, குஷ்பு ஆகியோர் படு ஆவேசமாகக் கேட்கின்றனர். என்ன செய்யப் போகிறார் கருணாநிதி? 

22 June, 2013

அரசியல் நெருக்கடி... அப்பாவின் கோவம்... நெருக்கடியில் விஜய்யின் தலைவா

நடிகர் விஜய்யின் 39-வது பிறந்தநாளுக்கான ஏற்பாடுகள் தமிழகம் முழுவதும் வெகு தீவிரமாக நடந்துவந்தது. சமீபத்தில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் நடத்தப்படவிருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.


ரசிகர்கள் ஏற்பாடு செய்திருக்கும் எந்த நிகழ்ச்சியிலும் இன்று (22.06.13) விஜய் கலந்துகொள்ளவில்லையாம். இதுபற்றி விசாரித்தபோது, ஏற்கனவே திட்டமிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ரத்து செய்யப்பட்டது விஜய்யை மிகவும் பாதித்துள்ளதாம். எனவே விஜய் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளமல் மற்ற நாட்களைப் போன்று சாலிக்கிராமத்தில் நடந்துகொண்டிருக்கும் ஜில்லா படப்பிடிப்பிற்கு செல்கிறாராம்.

தனிப்பட்ட முறையில் அரசியல் செல்வாக்கு இருப்பவர்கள் யாரையும் வளரவிடக்கூடாது என்பதில் தற்போதைய அரசாங்கம் தனிகவனம் செலுத்திவருவதாக பேசப்படுகிறது.(சென்ற ஆட்சியிலும் விஜய்க்கு இதுபோன்ற நெருக்கடிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது)மிகவும் எதிர்பார்ப்புடன் நேற்று(21.06.13) நடந்த தலைவா இசைவெளியீட்டு விழாவிலும் விஜய் அதிகம் பேசவில்லை.

விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் துப்பாக்கி படஇசைவெளியீட்டு விழாவின்போதே ‘என் மகனின் கால்ஷீட் எனக்கே கிடைக்கவில்லை, ஒரு வழியாக கால்ஷீட் வாங்கி துப்பாக்கி துவங்கினேன். துப்பாக்கி பட பட்ஜெட் எகிறியதும் படம் தாணு கைக்கு மாறியது” என்று கூறியிருந்தார். 
 
 
தலைவா இசைவெளியீட்டு விழாவில் சந்திரசேகர் “தலைவா திரைப்படத்தின் கதை எனக்கே தெரியாது. நானும் உங்களைப் போலத்தான் படத்தைப் பார்க்க காத்துக்கொண்டிருக்கிறேன்” என்று பேசியதும், விழா நடந்துகொண்டிருக்கும்போதே அவர் கிளம்பிவிட்டதும் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

விஜய்க்கு வரும் கதைகளை சந்திரசேகர் தான் கேட்டு ஒப்புதல் சொல்வார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தலைவா இசைவெளியீட்டு விழாவில் நடந்த நிகழ்ச்சிகள் அவர்களுக்குள் கருத்துவேறுபாடுகள் இருக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் உண்டாக்கிவிட்டது. அதன் பிறகு பேசிய விஜய்யும் அதிகம் பேசவில்லை.

தலைவா படக்குழுவிற்கு நன்றி சொன்னதோடு “படம் நன்றாக இருக்கிறது தியேட்டருக்கு சென்று பாருங்கள்” என்று முடித்துவிட்டார். ரசிகர்கள் கேட்டதும் அலட்டிக்கொள்ளாமல் பாட்டு பாடும் விஜய், நேற்று ரசிகர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் பாடாமல் மைக்கை வைத்துவிட்டு சென்றுவிட்டார். அப்பாவின் கோபத்திற்கும், அரசியல் நெருக்கடிகளுக்கும் சம்மந்தம் இருக்குமா? இல்லையென்றால் ‘தலைவா’ விஜய் ஏன் மூட்-அவுட்டில் இருக்கிறார் என்ற கேள்விகளை ரசிகர்கள் தங்களுக்குள்ளே பரிமாறிக்கொள்கின்றனர்.

20 June, 2013

தலைவா பாடல்கள் - Thalaiva MP3 Songs

 
விஜய் நடித்துள்ள தலைவா படத்தின் இசை நாளை வெளியாகிறது. நாளை மறுதினம் விஜய் பிறந்த தினம் என்பதால், நாளை இசை வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தவிருக்கிறார்கள். 
 
இயக்குநர் விஜய்யும் - நடிகர் விஜய்யும் முதன் முதலாக கைகோர்த்த படம் தலைவா. ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். 
 
சத்யராஜ் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீடு நாளை மாலை சென்னையில் நடக்கிறது. தாஜ் கோரமண்டல் நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் விஜய், அமலா பால், சத்யராஜ் உள்பட பலரும் கலந்து கொள்கின்றனர். 
 
 
தலைவா படத்தில் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. விஜய் பாடும் வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடல் வெளியீட்டுக்கு முன்பே பிரபலமடைந்துள்ளது. இந்தப் படத்தின் விற்பனை உரிமை பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது. வேந்தர் மூவீஸ் இதனை வெளியிடுகிறது.
 
நாளை முதல் தலைவா பாடல்கள் (Thalaiva MP3 Songs) கண்டிப்பாக தமிழகத்தை கலக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

15 June, 2013

ம்... ரஜினி படம் சிவாஜியை விஞ்சிய விஜய் தலைவா / பீட்ஸ்வுக்கு பின் ஜிகர்தண்டா

தினம்தோறும் புதுப்புது தொழில்நுட்பங்கள் சினிமாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. சினிமா பார்க்கும் அனுபவத்தை இந்த தொழில்நுட்பங்கள் மேம்படுத்துகின்றன என்பதுடன் அது மிகப்பெரிய தொழிலாகவும் மாறியிருக்கிறது.

உதாரணமாக முன்பு இளையராஜh மேiஜயில் மியூஸிக் போட்டு காண்பித்ததாகச் சொல்வார்கள். ஆனால் இன்று ஒரு நபர் சினிமாவில் இசையமைக்க விரும்பினால் பல லட்ச ரூபாய்க்கு இசை சார்ந்த உபனரணங்கள் - கணினி உள்பட வாங்கிய பின்தான் யாரையும் சந்திக்கவே முடியும். 

தொழில்நுட்பத்தின் உதவியுடன் துல்லியமாக அமைக்கப்படும் இசையை அதே துல்லியத்துடன் கேட்க நாமும் பல ஆயிரங்கள் செலவளித்து உபகரணங்கள் வாங்க வேண்டியிருக்கிறது. இசையை பிரமோட் செய்யும் நிறுவனங்கள் பெரும்பாலும் இசைக்கருவிகளை தயாரிக்கும் நிறுவனமாக இருப்பதை காணலாம்.


சிவாஜி படத்தில் டால்பி அட்மஸ் என்ற சவுண்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினர். ஆனால் அந்த தொழில்நுட்பத்தில் அப்போது எந்தத் திரையரங்கும் மாற்றி அமைக்கப்படவில்லை. அதனால் அந்த தொழில்நுட்பத்தை நம்மால் அனுபவிக்க முடியாமல் போனது. இந்நிலையில் டால்பி நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ள சத்யம் சினிமாஸ் டால்பி அட்மஸ் சவுண்ட் தொழில்நுட்பத்துக்கு திரையரங்குகளை மாற்றி அமைக்கிறது.

அவசரமாக இந்த கூட்டணி நிகழக் காரணம் விஜய்யின் தலைவா படத்தையும் இந்த புதிய தொழில்நுட்பத்தில் வெளியிடுகிறார்கள்.

சத்யத்தில் இந்த தொழில்நுட்பத்தில் படம் பார்த்தவர்கள் வேறு திரையரங்கு பக்கம் செல்ல மாட்டார்கள். ஆக, மற்றவர்களும் இந்த புதிய தொழில்நுட்பத்துக்கு மாறியாக வேண்டும், டால்பி நிறுவனத்துடன் கூட்டணி போட்டாக வேண்டும். 

நாளையே டால்பி அட்மஸைவிட நவீன தொழில்நுட்பத்தை டால்பி அறிமுகப்படுத்தினால் இதனை துhக்கிப் போட்டு அதற்கு மாற வேண்டும். டால்பி நிறுவனமும் ஒவ்வொரு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் போதும் பல படிகள் வளரும்.
******************************



பீட்சா படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் தனது புதிய படத்துக்கு ஜிகர்தண்டா என பெயர் வைத்திருக்கிறார். இந்தப் பெயரே படம் மதுரை பின்னணியை கொண்டது என்பதை தெரிவித்துவிடுகிறது.

ஜிகர்தண்டாவின் படப்பிடிப்பு நேற்று முறைப்படி தொடங்கியது. சித்தார்த் ஹீரோ, லட்சுமி மேனன் ஹீரோயின். சந்தோஷ் நாராயணன் இசை.

பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிம்கா, கருணா ஆகியோரும் நடிக்கிறார்கள். பீட்சா மாதிரி எதிர்பாராத களத்தில் ஜிகர்தண்டாவும் பயணிக்குமாம். 
************************** 
இன்று உலக காற்று தினம்
காற்று மாசை தடுப்போம்...
தூய்மையான காற்றை சுவாசிப்போம்...!

29 April, 2013

விஜய்-க்கு அதிர்ச்சி கொடுத்த அஜீத்... பரபரப்பில் தலைவா படக்குழு...

விஜய்யின் தலைவா படப்பிடிப்பு அஜீத் குமார் திடீர் என்று வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தாராம். விஜய், அமலா பால் நடித்துள்ள தலைவா படத்தின் படிப்பிடிப்பு மும்பையில் நடந்தது. 
 
அதன் பிறகு ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டது. தற்போது தலைவா படப்பிடிப்பு முடிந்துள்ளது. 
 
மும்பையில் தலைவா படப்பிடிப்பு நடந்தபோது அஜீத்தின் வலை படப்பிடிப்பும் நடந்தது. அப்போது நடந்த சுவாரஸ்யமான நிகழச்சி குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.
 

விஜய்யின் தலைவா படப்பிடிப்பு தன் படப்பிடிப்புக்கு அருகில் நடப்பதை அறிந்த அஜீத் குமார் அங்கு திடீர் விசிட் அடித்துள்ளார். திடீர் என்று அஜீத் வந்தது விஜய் உள்பட மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்துள்ளது.

அஜீத் விஜய்யுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தாராம்.

தலைவா படத்தில் விஜய் பாடியுள்ள பாடலை கேட்டுள்ளார் அஜீத். பாட்டை கேட்டு முடித்ததும் இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்களில் உங்கள் பாடலும் ஒன்று என்று தளபதியிடம் தெரிவித்துவிட்டு கிளம்பியுள்ளார்.

26 March, 2013

கோடையைவிட்டு தள்ளிபோன டாப் 5 தமிழ்படங்கள்...

பொதுவாக கோடை விடுமுறையில்தான் பிரபல ஹீரோக்களின் பெரிய பட்ஜெட் படங்களைப் போட்டுத் தாக்குவார்கள் கோடம்பாக்கத்தினர். ரஜினி, கமலுக்கு இது பொருந்தாது. காரணம் அவர்களின் படங்கள் எப்போது வந்தாலும் கோடை விடுமுறை எஃபெக்ட்தான்! 
 
அஜீத், விஜய், சூர்யா போன்றவர்களின் படங்களுக்கு இந்த கோடை விடுமுறை மிகப் பெரிய வசூல் வாய்ப்பு. ஆனால் இந்த ஆண்டு, கோடையில் அப்படி ஒரு பெரிய படம் கூட வெளியாகாத சூழல் உள்ளது. காரணம் ஒன்று, ஐபிஎல். இன்னொன்று படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் முடியாமல் இழுத்துக் கொண்டிருப்பது. 
 
இப்படங்கள் இந்த ஆண்டில் கலக்ககூடிய படங்களாக இருந்தாலும் தற்போது இல்லாமல் தள்ளிப்போகிறது என்ற வருத்தம் ரசிகர்களிடத்தில் இருக்கிறது.
 

கோச்சடையான் 
இந்த ஆண்டு கோடை விடுமுறை ட்ரீட்டாக ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்தது சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சைடையான் படத்தை. இந்தப் படம் இந்திய சினிமாவுக்கே புதிய அனுபவம். 3 டி மட்டுமல்ல, மோஷன் கேப்சரிங் எனும் புதிய தொழில்நுட்பத்தில் இந்தப் படம் எப்படி இருக்கும் என்பதைக் காண ஆவலாக இருக்கிறார்கள். ஏப்ரல் 14-ம் தேதி வரும் என எதிர்ப்பார்த்தனர். ஆனால் இப்போது ஜூலை இறுதிக்கு தள்ளிப் போய்விட்டது.
சிங்கம் 2 
சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம், விவேக் நடித்துள்ள படம் சிங்கம் 2. ஹரி இயக்கியுள்ள இந்தப் படம் ஏப்ரல் 14-ல் வெளியாகும் என்றார்கள். ஆனால் இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை. எனவே ஜூனுக்கு தள்ளிப் போய்விட்டதாகக் கூறுகிறார்கள்.
 
வலை 
வலை என்ற தற்காலிக தலைப்புடன் தயாராகிவரும் அஜீத் படமும் இந்த சம்மருக்குத்தான் வெளியாகும் என்று சொல்லி வந்தார்கள். ஆனால் இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை. படம் ஜூனிலாவது வெளியாகுமா என்று தெரியவில்லை.

தலைவா 
துப்பாக்கியின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியைத் தக்கவைக்க, மீண்டும் அதே மாதிரி கெட்டப்புடன், விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தலைவா படத்தை மேயில் வெளியிடத் திட்டமிட்டனர். ஆனால் ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு இன்னும் நடந்து வருகிறது. எனவே ஜூலை அல்லது ஆகஸ்டுக்குப் போய்விட்டது படம்.
ஐ 
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ஐ படம் கிட்டத்தட்ட 100 கோடி பட்ஜெட். சம்மரில் வந்தால்தான் இந்தப் படத்தின் பட்ஜெட்டை வசூலிக்க முடியும் என்ற நிலை. ஆனால் 55 சதவீதம்தான் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது என ஷங்கர் சொல்லியிருக்கிறார். ஒருவேளை அடுத்த சம்மருக்கு இலக்கு வைத்திருக்கிறார்களோ என்னமோ...!
Related Posts Plugin for WordPress, Blogger...