கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label பிரியாணி. Show all posts
Showing posts with label பிரியாணி. Show all posts

17 May, 2018

புட் டெக்கரேஷன் - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்

காய்ச்சல் வந்தால் கஞ்சியும் துவையலும், ஜலதோஷத்துக்கு மிளகு ரசம், வயிற்று வலிக்கு ஓமம் என உணவில் மருத்துவத்தை ஒளித்து வைத்திருந்தது நம் பாரம்பரியம். கூடவே, எந்த உணவை எதனுடன் சேர்க்க கூடாது என்றும் சொல்லித் தந்தனர். ஆனால், இன்று  ‘ஃபுட் காம்பினேஷன்’, ‘ஃபுட் டெக்கரேஷன்’ என்ற பெயரில் ஆரோக்கியமான உணவைக்கூட, பல நிறங்களைச் சேர்த்து, ஆரோக்கியமற்றதாக்குகிறோம்.

நம்முடைய உணவு, சுவை (ரச), தன்மை (குண), திறன் (வீரியம்), செரிமானம் (விபாக) மற்றும் செயல்பாடு (பிரபாவம்) ஆகிய குணங்களைக்கொண்டது. இத்தனை குணங்களும் சரியான அளவில் இருந்தால்தான், உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். இதனால்தான், எந்தெந்தக் காலத்தில் என்ன மாதிரியான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வரையறை செய்திருக்கிறது நம்முடைய பாரம்பரிய மருத்துவம்.

காலத்துக்கு ஏற்ற உணவுகள்
வெப்பம் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் பித்தம் நிறைந்த, காரம், புளிப்பு, எண்ணெய் போன்ற உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். இந்த உணவுகளால் பித்தமும், உடல் வெப்பமும் அதிகரிக்கும். இதனால், மூட்டுவலி, அரிப்பு, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், முகத்தில் கட்டி, உடல் வலி போன்றவை ஏற்படும்.
 கோடைக் காலத்தில், குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளான கேழ்வரகு, பச்சைப் பயறு, பாசிப் பருப்பு, நீர்க் காய்கள், கீரைகள், இளநீர், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்காத நீர் மோர் சாப்பிடலாம். குளிர் காலத்தில் செரிமான சக்தியின் ஆற்றல் அதிகமாக இருக்கும். பொங்கல், பூரி போன்ற எண்ணெய் நிறைந்த, செரிமானத்துக்கு நேரம் ஆகக்கூடிய உணவைச் சாப்பிட்டாலும் செரிக்கக் கூடிய ஆற்றல் உடலில் இருக்கும். நல்லெண்ணெய், பசு நெய் சேர்த்த உணவுகள் சாப்பிடலாம். இதனால் சரும வறட்சி இருக்காது. நீண்ட நேரத்துக்குப் பசிக்காத வகையில், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

வேளைக்கேற்ற உணவு 

காலை எழுந்தவுடன் திரவ உணவுக்குப் பிறகு, அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் காலை உணவைச் சாப்பிட்டுவிட வேண்டும். அன்றைய நாள் முழுவதற்கும் தேவையான ஆற்றல் கிடைக் கும்படி, கேழ்வரகு, கம்பு, சோளம், கோதுமை போன்றவற்றில் செய்த இட்லி, தோசை, பொங்கல், உப்புமா போன்ற ஏதேனும் ஒன்றை சாப்பிடலாம்.

காலை உணவு முடிந்து, நான்கு மணி நேரத்திற்குப் பிறகு, மதிய உணவைச் சாப்பிடுவது நல்லது. கீரைகள், பருப்பு, கைக்குத்தல், சிறுதானியங்களை சாப்பிடலாம்.

எளிதில் செரிமானமாகும் இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவுகள் இரவில்  சிறந்தவை. இரவு 7.30 மணிக்குள் சாப்பிட்டுவிடலாம். தூங்கும் முன், பாலில் பனங்கற்கண்டு, மிளகுத்தூள் சேர்த்துக் குடிக்கலாம். இரவில் கபத்தை அதிகரிக்கும் உணவுகளான தயிர், இனிப்புகள், கீரை உடலில் செரிமானப் பிரச்னைகளை உண்டாக்கும் என்பதால் தவிர்க்கவும்.

இடத்துக்கு ஏற்ற உணவுகள் 

எந்த இடத்தில் வாழ்கிறோமோ, அந்த இடத்தைச் சுற்றி விளையும் உணவுகளே உடல்நலத்திற்கு ஏற்றவை. பழங்களில் கொய்யா, நெல்லி, மாதுளை, திராட்சை, வாழை, சாத்துக்குடி, சப்போட்டா, கமலா, போன்றவையும், காய்களில் கத்திரிக்காய், தக்காளி, பரங்கிக்காய், வெண்டைக்காய், சுரைக்காய் எனப் பயன்படுத்தலாம்.

எப்படி சாப்பிடக் கூடாது?
பிரியாணி சமைக்கும்போது, தயிர் அல்லது பால் சேர்க்கக் கூடாது. இதனால் தோல் பிரச்னைகள் வரக்கூடும். பிரியாணி சாப்பிட்டதும், குளிர்பானம் குடித்தால் உடனடியாகச் செரிமானம் ஆகும் என்பது தவறு. பிரியாணி சாப்பிட்ட பின்,  செரிமானமாக சூடாக இஞ்சி டீ குடிக்கலாம்.

புளிப்புச் சுவையுடன் பால் சேர்த்துக் குடிக்கக் கூடாது. வைட்டமின் சி பழங்கள், சிட்ரஸ் பழங்களுடன் ஐஸ்கிரீமை சேர்க்கக் கூடாது.

மாதுளை, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, தர்பூசணி போன்ற பழங்களுடன் பால் சேர்த்து மில்க் ஷேக்காக சாப்பிடக் கூடாது.  அதிக செரிமான சக்திகொண்டவர்கள், ஆப்பிள் மற்றும் வாழைப்பழ மில்க் ஷேக் அருந்தலாம்.

பிரெட் டோஸ்ட் செய்யும்போது, பிரெட்டை பாலில் நனைத்து, முட்டையில் பிரட்டி டோஸ்ட்செய்து, அதில், காய்கறிக் கலவையை வைத்துக் கொடுக்கின்றனர். இது வயிற்றுக் கோளாறை உருவாக்கும்.
மஞ்சள், நல்லெண்ணெய், வெந்தயம், பூண்டு தட்டிப் போட்டு பருப்பை வேகவைக்க வேண்டும்.

மது அருந்திய பிறகு அகத்திக் கீரை சாப்பிடக் கூடாது.  இரண்டு எதிர்வினைகள் உடலில் ஒன்றாக சேரும்போது வேதி மாற்றம் உடலில் நடைபெறும்.

‘ஜெனரல் டயட்’ எனப்படும் பொதுவான உணவுமுறை எல்லோருக்கும் பொருந்தாது. ஆதலால் மருத்துவரின் ஆலோசனைப்படி தனக்கான உணவுமுறையை பின்பற்றலாம். 

20 December, 2013

பிரியாணி சினிமா விமர்சனம் / briyani movie review

ஒரு சினிமா ரசிகனை கவர பல்வேறு வியூகங்களை அமைத்து செயல்படுகிறது. கதை, திரைக்கதை, இசை, வடிவமைப்பு, புதுமை என எதையாவது வித்தியாசப்படுத்தினால்தான் இந்த மண்ணில் அந்த சினிமா நிலைக்கமுடியும்... இன்று வரை அப்படிப்பட்ட சினிமாக்களைதான் மக்கள் கொண்டாடிவருகின்றனர்.. 

இப்படி ஏதாவது ஒரு வித்தியாசம் அல்லது புதுமை ஏதும் இல்லாத எத்தனையோ பெரிய பட்ஜெட் படங்கள் கூட குப்பைக்குச் சென்றிருக்கிறது. படம் எடுக்கும் அத்தனை இயக்குனர்களும் இதை மனதில் நிறுத்துவதுமட்டுமின்றி அதை செயலிலும் காட்டினால் நல்ல படைப்பாளியாக இங்கு வெற்றி கொடி நாட்டலாம்...

பிரியாணி....

ஒரு படத்தின் தலைப்பு அந்த படத்தின் கதை அல்லது கதாநாயகன் அல்லது கதாநாயகி பெயரிலோ அல்லது ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்தோ அல்லது கேட்டவுடன் கவரும் வகையிலோதான் அமைக்கப்படுகிறது... இந்தபடத்தின் தலைப்பு ரசிகர்களை கவரவே...!

படத்தின் கதை...

ஒரு செல்வந்தரின் மகளை காதலித்து அந்த சொத்தை அடைய நினைக்கிறது ஒரு கும்பல். அந்த செல்வந்தர் மறுக்கவே அவரை கொலைசெய்து அந்த சொத்துக்களை அடைய நினைக்கிறது...

இப்படி கொலைச்செய்யப்படும் செல்வந்தரின் கொலையில் அப்பாவிக்கள் இருவரும் மாட்டிக்கொள்கிறார்கள்... மாட்டிய இவர்கள் இந்த கொலையில் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை...

கதை‌யொன்றும் புதிதில்லை.. அதலபழசுதான்.. ஆனால் திரைக்கதை சபாஷ் போடவைக்கிறது.. யூகிக்கமுடியாத காட்சி நகர்வு... விருவிருப்பான திரைக்கதை... என படத்தின் முடிவுவரை ஒரு ரசிகனை பொறுமையாக அமரவைத்ததில் கைதட்டல் வாங்கிறார்.. வெங்கட் பிரபு...

கதைப்படி கார்த்தியும் பிரேமும் நெருங்கிய நண்பர்கள்... இருவருக்கும் வேலை பெண்களை சுற்றிவருவதுதான்... ஒரு டிராக்டர் நிறுவனத்தில் சேல்ஸ் பிரிவில் வேலை செய்யும் இவர்கள் தங்கள் இடத்தில்  பிளேபாயாக வலம்வருகிறார்கள்...

 

கார்த்தியும் பிரேம்ஜியும் ஆம்பூரில் நடக்கும் நிறுவனத்தின் ஷோரூம் கிளை திறப்புவிழாவுக்கு வருகிறார்கள். அந்த நி‌கழ்வில் தன்னுடைய துடிப்பான நடவடிக்கையால் அந்த நிறுவனத்தை துவக்கிவைக்க வரும் நெம்பர் ஒன் செல்வந்தர் நாசருக்கு கார்த்திகை பிடித்துவிடுகிறது... (தன் பெண்ணை மணமுடிக்கலாம் என்று எண்ணும் அளவுக்கு)

இதற்கிடையில் ஆம்பூரில் இருந்து சென்னை கிளம்பு வழியில் ஆம்பூரில் பிரியாணி சாப்பிட்டே ஆகவேண்டும் என்று தேடி அலைந்து ஒரு கடையில் பிரியாணி சாப்பிடுகிறார்கள்... அங்கு பிரியாணி சாப்பிட வரும் மாண்டி தாக்கா-வின் (மாயா) அழகில் மயங்கி அவ‌ரை பின்தொடர்ந்து அவருக்கு உதவிசெய்து அவருடைய ரூமுக்கே சென்று குடித்து கும்மாளமடிக்கிறார்கள்...

விடிந்து தெளிந்து பார்த்தபின்தான் தெரிகிறது... அங்கு ஒரு கொலை நடந்திருப்பது.. அதுவும் கொலைசெய்யப்பட்டிருப்பது நாசர் தான்... இந்த கொலையில் கார்த்தியும் பிரேமும் தேவையில்லாமல் மாட்டிக்கொள்கிறார்கள்...

இந்த கொலையில் இருந்து எப்படி தன்னை காப்பாற்றிக்கொள்கிறார்.. இந்த கொலையில் உண்மையான பிண்ணனி என்ன... அவர்களை எப்படி கண்டுபிடிக்கிறார்... என்பதுதான் பிரியாணியின் மீதிக்கதை...

கார்த்தி....

கார்த்தி இந்த படத்தில் ப்ளேபாய் வேடம்... இதற்கு முன்னால் படங்களில் பார்த்தமாதிரியே இருக்கிறது. முதல்பாதில் பெண்களிடம் வழியும் இவர்... இடைவேளைக்குபிறகு ஓரளவுக்கு தன்னுடைய திறைமையை வெளிப்படுத்தியிருக்கிறார்...

சிறுவயதுமுதல் தற்போது வரை தான் செய்யும் தவறுகளுக்கு பிரேம்ஜியை மாட்டிவிடுவது இவருடைய வேலையாக இருக்கிறது... பெண்களை நம்பவைக்க இவர் செய்யும் சேட்டைகள் ‌கொஞ்சம் ரசிக்க வைத்து கொஞ்சம் முகம்சுழிக்க வைக்கிறது..

கார் சேசிங்... வில்லன்களை விரட்டுவது... தன்னுடைய அக்கா கடத்தப்படும்போது துடிப்பது.. தன்மீது விழுந்த கொலை பழியை தீர்க்க குற்றவாளிகளை கண்டுபிடிக்க முனைவது... சண்டைகாட்சிகள் என ஒரு சில இடங்களில் தன் திறமையை காட்டி அசத்துகிறார்... (ஆனால் பழைய படத்தின் சாயல் அங்கங்கு வருகிறது).

ஹன்சிகா மேத்வானி... ஒரு டிவி தொகுப்பாளர்.. நேரடிக்காட்சிகளை தொகுத்து வழங்குபவர்... கார்த்தியின் காதலி... இவருக்கு படத்தின் அதிக வேலையில்லை... கார்த்தியிடம் கோபித்துகொள்வது மீண்டும் இணைவது தான் இவருடைய வேலை...

பிரேம் ஜி... என்ன கொடுமை இது... படம் முழுக்க வந்தாலும் ஏதோ ஒருசில சீன்களில்தால் சிரிக்க வைக்கிறார்... அண்ணன் இயக்குனர் என்பதால் ஒட்டிக்கொண்டாரா.. என்னவோ தெரியவில்லை... தனக்கு ஒரு பெண்ணுகூட கிடைக்கமாட்டேங்குது என்று ஏங்கும்போதம் தனக்கு கிடைக்கும் பெண்களை கார்த்தி கவர்ந்துவிடுவதும்... கார்த்தி செயும் தவறுகளுக்கு தான் பலியாடாகுவதும் ரசிக்க வைக்கிறது...

நாசர்... ஒரு பெரிய செல்வந்தராக நடித்திருக்கிறார்... தனக்கு எந்த கதாப்பாத்திரம் கெர்டுத்தாலும் அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளும் திறன்மிகுந்த நடிகர்களில் இவரும் ஒருவர்... இவர்தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்...

ராம்கி.. நாசரின் மருமகன்... சபாஷ்... வில்லன்போல் ‌தெரிந்தாலும் வில்லனில்லாத கேரட்டர்... இப்படம் கண்டிப்பாக அவருக்கு நிறைய வாய்ப்புளை பெற்றுதரும் என்பதில் சந்தேகமில்லை.. நல்லதொரு நடிப்பு..  கார்த்தியுடன் வரும் ஒரு சண்டைகாட்சி நன்றாகவே வந்திருக்கிறது.

மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை உமா ரியாஸ்கான்... கடைசி அரைமணிநேர படத்தை தனதாக்கிவிட்டார்... வில்லி கேரட்டர்... கார்த்தியுடன் ஒரு சண்டைக்காட்சியில் அசத்தல்.. நல்லதொரு நடிப்பை கொடுத்திருக்கிறார்...

மேலும் படத்தில் கார்த்தியின் மாமாவாக சுப்பு பஞ்சு.. போலீஸ் ஆபிராக ஜெயபிரகாஷ், சிபிஐ-யாக சம்பத், என நிறைய நடிகர் பட்டாளம் படத்தில் இருக்கிறது...

யுவன்சங்கர் ராஜா இந்த படத்துக்கு இசை... அவ்வளவு ஒன்றும் பிரமாதம் இல்லை... ஓரளவுக்கு பரவாயில்லை.... 100-வது படம் என்ற பெருமையை தக்கவைக்க பாடலுக்கு அதிக சிரமப்பட்டிருக்கிறார்... பிண்ணனி இசை பராயில்லை... புரியும்படியான பாடல்கள் இல்லாதது தோய்வுதான்...

பாடல்கள் சுமார்... இரண்டு பாடல்கள் செம கிளாமர்... மாண்டி தாக்கா கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார்.. அரைமணிநேரம் மக்களை கவர்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்கிறார்... படம் முழுக்க தண்ணியடிக்கும் காட்சி நிறைந்திருக்கிறது.. இவைளை தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

வெங்கட்பிரபு... புதுசாக ஏதோ சொல்லவந்து கொஞ்சம் சொதப்பி சில இடங்களில் இவரின் பழைய படங்களை ஞாபகப்படுத்தி பின் தன்னுடைய திறமையான திரைக்கதையினால் பிற்பாதியில் சபாஷ் பெறுகிறார்... ஒரு சில குறைகளை தவிர்த்து இன்னும் மெருகேற்றியிருந்தால் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக வந்திருக்கும்... 


படத்தை குழப்பத்தோடு முடிக்கிறார் என்று எழுந்தால் இன்னும் கொஞ்சுநேரம் உட்கார வைத்து குழப்பங்களை தீர்த்துவிடுகிறார்... இரண்டாது கிளைமேக்ஸ்போல...

நாசர் கொலை எப்படி நடக்கிறது.. உண்மையில் குற்றவாளி யார்... ராம்கி நல்லவரா கெட்டவரா... கார்த்தி-ஹன்சிகா காதல் என்னவாயிற்று போன்ற விஷயங்களை வெள்ளித்திரையில் காண்க...

பிரியாணி.... இன்னும் மசாலாவை சேர்த்திருக்கலாம்...!
Related Posts Plugin for WordPress, Blogger...